Looking For Anything Specific?

ads header

பொய்யாகிய பொய்கள் ...


பொய்யாகிய பொய்கள்...
கவிதை பிடிக்குமென்று 
அடம்பிடித்தாய்
கவிஞனிடம் சென்றேன் 
கவிதை யாசிக்க...
பொய்களில்லாக் கவி பொன்னாகாது
கவிஞன் சொன்னான்...

பொய்கள் தேடியலைந்தேன்
உன் அழகில் மயங்கிய
மரமே மறுத்தது உனைப் பற்றி
பொய்யுரைக்க...
பின் எங்கே மந்திரியிடம் செல்வது...

யுகங்கள் பல கரைத்து
யுத்தங்கள் துச்சித்து கண்ட
ஒற்றைப் பொய்யும் பொய்யாகிப்
போகிறது தூரமாய் நின்று
 மழலையுடன் கொஞ்சும்
 உனை பார்க்கும் போது...


Post a Comment

47 Comments

  1. புரியுது ஆனா புரியல

    ReplyDelete
  2. முடிவில் பொய்யாகி விட்டதே...

    நன்றி... (TM 1)

    ReplyDelete
  3. பொய்யும் பொய்யானதா...அடடே.

    ReplyDelete
  4. அட சிட்டுக்குருவியும் கவிதை பாடுகின்றதே..!

    ReplyDelete
  5. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ....:(கவிதை மிகவே அருமை.!

    யுகங்கள் பல கரைத்து
    யுத்தங்கள் துச்சித்து கண்ட
    ஒற்றைப் பொய்யும் பொய்யாகிப்
    போகிறது தூரமாய் நின்று
    மழலையுடன் கொஞ்சும்
    உனை பார்க்கும் போது...
    அழகு!

    ReplyDelete
  6. ஆஆஆஆஆ இப்பவெல்லாம் சிட்டுவுக்கு
    கவித.கவித யா வருதே...

    பீச்சில போயிருந்தாலே கவித கொட்டுமே சிட்டு:)

    ReplyDelete
  7. //பொய்களில்லாக் கவி பொன்னாகாது
    கவிஞன் சொன்னான்...//

    நிஜமான பொய்கள்.. சே... உண்மைகள்... இதைத்தான் கவிஞர் வைரமுத்துவும் சொல்லியிருக்கிறார்ர்.... கவிதைக்குப் பொய்யழகு:))..

    பூஸுக்கு மெய்யழகூஊஊஊ...
    சிட்டுவுக்குக் கவிதையழகூஊஊஊஉ..

    சீயா மீயா:).

    ReplyDelete
  8. அருமையான “பொய்“ கவிதை சிட்டுக்குருவி.

    (பொய்யே இல்லாக் கவிதைகளை நம் முப்பாட்டன் திருவள்ளவர் எழுதியிருக்கிறார் சிட்டு)

    ReplyDelete
  9. பொய்யில்லாக் கவிதை சொல்லப்போய் கவிதையையே கைப்பிடித்தீர்களோ.அருமை !

    ReplyDelete
  10. சிறப்பான காதல் வரிகள்! வாழ்த்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  11. நல்ல கவிதை!

    புதிய பின்புல அட்டை நன்றாக இருக்கிறது நண்பரே!

    ReplyDelete
  12. எங்ன ராசா போய்ட???

    ReplyDelete
  13. பொய்... அருமை நண்பா...

    ReplyDelete
  14. AthisayaAugust 10, 2012 8:16 PM
    எங்ன ராசா போய்ட???////

    வேற எங்க?:)Beach க்குத்தான்:).

    ReplyDelete
  15. @ ஹாரி பாட்டர்

    புரியுது ஆனா புரியல
    /////////////
    ஹா ஹா ஹா.....பெரிய பெரிய கவிஞனெல்லாம் எழுதுற கவிதை புரியாதாமே....
    எழுதின எனக்கே புரியெல்ல அவ்வளவு சீக்கிரமா உங்களுக்கு புரிஞ்சுடுமா என்ன..........

    ReplyDelete
  16. @ தொழிற்களம் குழு

    தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    உங்கள் முயற்சி தொடரவும் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  17. @ திண்டுக்கல் தனபாலன்

    முடிவில் பொய்யாகி விட்டதே...

    நன்றி... (TM 1)
    //////////////

    ஆமா பொய்யாத்தான் போச்சு சார்......
    வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. @ Sasi Kala

    பொய்யும் பொய்யானதா...அடடே.
    /////////

    இங்க சில பேர் உண்மையையே பொய்யாக்கிறார்கள் இது ரொம்ப ஈஸி யான விடயமாச்சே....

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  19. @ காட்டான்

    அட சிட்டுக்குருவியும் கவிதை பாடுகின்றதே..!
    ///////////

    வாங்க மாம்ஸ் ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பக்கம்...
    தம்பி மாம்ஸூக்கு ஒரு டீ சொல்லு

    நீண்ட நாளின் பின் உங்கள் பின்னூட்டம் கண்டு ரொம்ப மகிழ்சி

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. @ Athisaya

    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ....:(கவிதை மிகவே அருமை.!
    ///////////

    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கவிதையா இப்ப இப்பிடியெல்லாமா கவிதை எழுதுறாய்ங்க....

    எங்ன ராசா போய்ட???
    ////////////

    ஐயோ அதுகல ஏன் கேக்குறீங்க கொஞ்ச நேரம் ரொம்ப பிஸியாகிட்டேன்...

    பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  21. @ HOTLINKSIN.COM திரட்டி

    டச்சிங்கான கவிதை
    ////////
    டச்சிங்கான கவிதை தேடிப் போயித்தான் டச்சா இருந்தவள் மிஸ்பன்னிட்டேன்....:(

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. @ athira

    ஆஆஆஆஆ இப்பவெல்லாம் சிட்டுவுக்கு
    கவித.கவித யா வருதே...

    பீச்சில போயிருந்தாலே கவித கொட்டுமே சிட்டு:)
    //////////////////

    கவிதை கவிதையாத்தான் வரும் கட்டுரையாவெல்லாம வராது........

    பீச்சிக்குப் போனா கவித கொட்டுதோ இல்லயோ...பாக்கட்டுல இருக்கிற பணம் கொட்டுறது மட்டும் உறுதி....:0

    ReplyDelete
  23. @ athira

    கவிதைக்குப் பொய்யழகு:))..
    பூஸுக்கு மெய்யழகூஊஊஊ...
    சிட்டுவுக்குக் கவிதையழகூஊஊஊஉ..

    சீயா மீயா:).
    //////////////
    பூசுக்கு மெய்யழகு ... சத்தியமா மெய்ய(மேனி ) சொல்லல்லியே....

    சரி நான் எழுதுற கவிதை நல்லா இருக்கெண்டு சொல்லுறாங்கதான் அதுக்காக சீயான் என்றெல்லாம் பாராட்டப்படாது....விக்கிரம் கோவிச்சுக்குவாரு (சீயான் மீயான் )

    ReplyDelete
  24. @ AROUNA SELVAME

    அருமையான “பொய்“ கவிதை சிட்டுக்குருவி.

    (பொய்யே இல்லாக் கவிதைகளை நம் முப்பாட்டன் திருவள்ளவர் எழுதியிருக்கிறார் சிட்டு)
    /////////////

    ஐயோ அவர் கவிதைக்கு நம்ம கவிதை பக்கத்துல போயி நிற்கவும் மாட்டாதே....
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  25. @ ஹேமா

    பொய்யில்லாக் கவிதை சொல்லப்போய் கவிதையையே கைப்பிடித்தீர்களோ.அருமை !
    ////////////

    கவிதை கைக்கிட்ட பிடிபட வந்துச்சு பட் முடியல்ல....
    ஏன்னா எனக்குத்தான் பொய் தெரியாதே மீ ரொம்ப நல்ல பையன்

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  26. @ s suresh

    சிறப்பான காதல் வரிகள்! வாழ்த்த்துக்கள்!
    ///////////////
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  27. @ வரலாற்று சுவடுகள்

    நல்ல கவிதை!

    புதிய பின்புல அட்டை நன்றாக இருக்கிறது நண்பரே!
    /////////////

    மிக்க நன்றி சார் அழகான அட்டையைத் தேர்ந்தெடுத்து கருத்துக்கு பதிலலுதும் வசதியை இழந்துவிட்டேன் போல....

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  28. @ இரவின் புன்னகை

    பொய்... அருமை நண்பா...
    ////////
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  29. @ athira

    AthisayaAugust 10, 2012 8:16 PM
    எங்ன ராசா போய்ட???////

    வேற எங்க?:)Beach க்குத்தான்:).
    ////////////

    ஆமா பீச்சுப்பக்கம் பெரிய அண்டங் காக்காவக் கண்டு இவ்வளவு நேரமும் குழி ஒன்னுல பதுங்கிட்டு இருந்தேன்.......பதிலெழுதெல்யாம் என்னு பி பி சி ல சொன்னாங்க காக்கா தூக்கினாலும் பரவால்ல என்னு ஓடி வந்துட்டேன்...)

    ReplyDelete
  30. குழந்தையைக்கொஞ்சும் சுகமே தனியானது தாய்மைக்கு அழ்கான கவிதை சகோ!

    ReplyDelete
  31. கவிதை நன்றாக உள்ளது. தொடர்ந்து படித்து கருத்து கூறுகிறேன், எனது தளத்துக்கும் வாருங்கள். பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள். நன்றி....
    http://varikudhirai.blogspot.com/2012/07/buddha-makes-afraid.html

    ReplyDelete
  32. ஆமாப்பா எல்லாமே பொய்யாகத்தான் இருக்கு

    ReplyDelete
  33. @தனிமரம்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  34. நண்பா எனக்கு உருது தெரியாது தமிழில் சொல்லு ....

    ஹ ஹ ஹ தூய தமிழ் புரிகிறது ஆனால் புரியவில்லை

    ReplyDelete
  35. நண்பா புதிய டெம்ப்ளேட் சூப்பர்

    ReplyDelete
  36. // மழலையுடன் கொஞ்சும்// நிதர்சனம் நண்பா மிகவும் பிடித்த வரி

    ReplyDelete
  37. அழகான வரிகள் ரசித்தேன்... மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றது...

    ReplyDelete
  38. @ SeeniAugust 11, 2012 6:15 AM

    aaahaaaa...///////

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  39. @ கிராதகன்August 11, 2012 6:26 AM

    ஆஹா கவித கவித
    ///////

    வருகைக்கும் எண்ணத்தில் உதித்த கருத்தினை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ
    முதல் வருகை என நினைக்கிறேன் தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

    ReplyDelete
  40. @ Arunprasath VarikudiraiAugust 11, 2012 7:23 AM

    கவிதை நன்றாக உள்ளது.
    /////////

    வருகைக்கும் எண்ணத்தில் தோன்றியதை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ...நிச்சயமாக உங்களின் தளத்திற்கு வருகிறேன்

    ReplyDelete
  41. @ மனசாட்சி™August 11, 2012 8:55 AM

    ஆமாப்பா எல்லாமே பொய்யாகத்தான் இருக்கு
    //////////

    என்னா பாஸ் வாழ்க்கையே வெறுத்த மாதிரி ஒரு கருத்த சொல்லிட்டு போயிருக்கிறீங்க...
    கவலைப் படாதீங்க எல்லாம் நல்லாத்தான் நடக்கும்

    ReplyDelete
  42. @ asa asathAugust 11, 2012 7:12 PM

    நண்பா எனக்கு உருது தெரியாது தமிழில் சொல்லு ....

    ஹ ஹ ஹ தூய தமிழ் புரிகிறது ஆனால் புரியவில்லை
    ///////////

    இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் இன்னும் புரியாது நண்பா....

    நண்பா புதிய டெம்ப்ளேட் சூப்பர்
    /////////

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  43. @ சீனுAugust 11, 2012 8:02 PM

    // மழலையுடன் கொஞ்சும்// நிதர்சனம் நண்பா மிகவும் பிடித்த வரி
    ////////////

    அழகான எண்ணத்தை எழுத்தாக மாற்றிச் சென்றமைக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  44. @ Fathima Inshaff

    அழகான வரிகள் ரசித்தேன்... மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றது...
    ///////
    ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.....

    ReplyDelete