இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் அற்புதமே....

இறைவனின் படைப்புக்களில் அனைத்துமே பிரம்மிக்கத் தக்கவைதான் அவற்றில் சிறிது கூட பிழைகள் இல்லாமல் மிக அழகாக நேர்த்தியான தோற்றத்தில் ஒவ்வொன்றையும் படைத்துள்ளான்.
இறைவனின் படைப்புக்களில் மிகவும் அழகான படைப்பாக மனிதன் இருந்து கொண்டிருக்கிறான். எம்மை மிகவும் அழகாக படைத்த இறைவனுக்கு நன்றி  தெரிவிப்பதற்குக் கூட நாம் கஞ்சத்தனக் காட்டுகிறோம்.

உலகித்திலே மிகப்பெரிய கஞ்சன் யாரென்று எனைக் கேட்டால் செய்த உதவிக்கும் படைத்த இறைவனுக்கும் நன்றி சொல்லாதவையே கூறுவேன்.

சரி இறைவனுக்கு நன்றி தெரிவித்தல் என்றால் எவ்வாறு என அலசுவோமேயானால் நாளாந்தம் நாம் செய்யும் செயற்பாடுகளில் அதிகமான செயற்பாடுகளை நன்மையான செயற்பாடுகளாக செய்தோமேயானல் அவை நன்றி செலுத்தலுக்குள் அடங்கிவிடும்.

நன்மையான செயற்பாடுகள் இதில் எதனை கருத்தில் கொள்ளவேண்டும் சிலரின் தவறான புரிதல்கள் என்னவெனில் நன்மையான செயற்பாடுகள் எனும் போது அதனை மிகவும் பெரிய செயற்பாடாக கருதுவதாகும். சிலர் பல கூட்டங்களைக் கூட்டி பல நன்மையான செயற்பாடுகளை செய்துவிட்டு பெருமைப் படுகின்றனர், இன்னும் சிலர் தன்னுடைய செயற்பாடுகளில் பல குடும்பங்கள் நன்மை பெற வேண்டும் என்று நினைப்பது சொல்லப் போனால் இவைகளும் நன்மையான செயற்பாடுகளில் ஒன்றுதான். இதற்கென்று  அதிகளவான பணத்தையும் நேரத்தியும் செலவிட வேண்டியுமுள்ளது.

ஆனால் இங்கு நான் சொல்லப் போவது பணமோ நேரமோ அதிகம் செலவு செய்யப்படாத ஆனால் மிகவும் அதிகளவான நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய நல்ல செயல்களைப் பற்றி இவற்றை நாம் நம் நாளாந்த செயற்பாடுகளில் செய்தோமேயானால் இதுவே மிகப் பெரிய நன்றி செலுத்துதலுக்கு வித்திட்டுவிடும்.

அடிக்கடி நாம் மறக்கும் புன்னகைத்தல் என்பது இங்கு பிறரைப் பார்த்து புன்னகைப்பதும் நன்மையானதே....பாதையில் கிடக்கும் பிறருக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய பொருட்களை அகற்றுவதும் நன்மையே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உதவுவதும் நன்மையே... மேலும் தமது பக்கத்து வீட்டார்களுக்கு தொல்லை கொடுக்காமலிருப்பதுவும் நன்மையானதே...தினமும் நாம் சமைக்கும் உணவுகளில் சிறிதை பக்கத்து வீட்டாருடன் பகிர்ந்து கொள்வதும் நன்மையானதே

தம்முடைய தேவையை பிற்படுத்தி பிறருடைய (சகோதரன் தாய் தந்தை இன்னும் உறவுகள் ) தேவையை முற்படுத்தி செய்வதுவும் நன்மையானதே சிறுவர்களிடத்தில் அன்பாக பழகுவதும் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவதும் நன்மையானதே இன்னும் எவ்வளவோ சின்னச் சின்ன விடயங்கள் இருக்கின்றன நான் மீண்டும் சொல்கிறேன் இவற்றுக்கெல்லாம் அதிக பணமோ அதிகளவான நேரமோ செலவாகுவதில்லை கிடைக்கக் கூடிய சொற்ப நேரங்களில் இவற்றை செய்துமுடிக்கலாம். அதுவுமில்லாமல் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அவசியமாக மனம் விரும்பியும் செய்து கொடுக்க வேண்டும்.

சரி இவற்றையெல்லாம் செய்யும் போது அது எப்படி இறைவனுக்கு நன்றி செலுத்துதலாகின்றன என்ற சந்தேகம் வரலாம் ...இது ஒன்றும் பெரிய விடயமல்ல நாம் ஒவ்வொரு செயற்பாட்டை செய்யும் போது அதனை பிறர் காண வேண்டும் தன்னைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதாவது நோக்கத்துக்காகவோ செய்யாமல் இதனை இறைவனுக்காக செய்தேன் என்று மனதில் நினைத்துக் கொண்டால் மட்டுமே அது இறைவனுக்கு நன்றி செலுத்துதலுக்கு ஒப்பானதாக மாறிவிடும். நோக்கம் இறைவனைத் திருப்திப் படுத்துவதாக இருந்தால் மட்டுமே இது முழுப் பிரயோசனமாக அமையும்.
44 கருத்துரைகள்

நல்ல கருத்துக்களை அருமையா சொல்லி உள்ளீர்கள் நண்பா... பாராட்டுக்கள்.... விரும்பிப் படித்தேன்...
(த.ம. 1)

Reply

அற்புதம்...


வாழ்த்துக்கள்..

Reply

சிறுவர்களிடத்தில் அன்பாக பழகுவதும் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவதும் நன்மையானதே இன்னும் எவ்வளவோ சின்னச் சின்ன விடயங்கள் இருக்கின்றன நான் மீண்டும் சொல்கிறேன் இவற்றுக்கெல்லாம் அதிக பணமோ அதிகளவான நேரமோ செலவாகுவதில்லை கிடைக்கக் கூடிய சொற்ப நேரங்களில் இவற்றை செய்துமுடிக்கலாம். அதுவுமில்லாமல் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அவசியமாக மனம் விரும்பியும் செய்து கொடுக்க வேண்டும்.
வாழ்வியலுக்கு அவசியமானதை அழகா சொல்லீட்டீங்க . படங்களும் அருமை.

Reply

அழகான அருமையான அவசியம் அனைவராலும்
பணம் காசு செலவில்லாமல்
செய்யக்கூடிய விஷயங்க்களை
மிக அழகாக்ப் பதிவு செய்துள்ளீர்கள்
அந்த அழகிய மயிலகளைப்போலவே
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்

Reply

நீங்கள் சொன்னது போல் நடந்தால் இறைவனின் மனத்தைத் திருப்தி படுத்துகிறோமோ இல்லையோ... நம் மனம் நிச்சயம் திருப்தி அடையும் சிட்டுக்குருவி.

(சிட்டுக்குருவிகளுக்கு ரெண்டு நெல்லு போட்டாக் கூட எனக்கு சந்தோசமாக இருக்கும்)

நல்ல கருத்து. வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.

Reply

சிந்திக்க வேண்டிய அருமையான கருத்துக்கள்!

Reply

மிகவும் தேவையான கருத்துக்கள்! மயில் படங்கள் அழகு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in

Reply

நல்ல கருத்துக்கள். :)

அந்தக் கடைசி மயில்...சூப்பர் ஷாட்.

Reply

அழகு படங்களும் கருத்துகளும்...

Reply

சூடான வருகைக்கும் அழகான உற்சாக மூட்டும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

நீண்ட இடைவெளிக்கும் பின்னான உங்கள் வருவு மிகவும் சந்தோஷமளிக்கிறது சார்...
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

நீண்ட இடைவெளிக்குப் பின்னான உங்கள் வரவு சந்தோஷமளிக்கிறது சகோதரி...

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

அழகான கருத்தை சொல்லியுள்ளீர்கள் சார்.....மனதுக்கு சந்தோஷமாக இருக்குறது உங்களைப் போன்றவர்களின் இப்படியான உற்சாகமளிக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது........

வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

நிச்சயமாக எமது திருப்தியில் இறைவனின் பொருத்தமும் கிடைக்கலாம் அதனால் நல்ல விடயங்கள் செய்ய சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஆசையுடனும் ஆர்வத்துடனும் செய்ய வேண்டும்........

உங்களுடைய நெல்லுக்கும் நெல்லுப் போடும் மனதுக்கும் என் பாராட்டுக்களும் நன்றிகளும்

Reply

அழகாகச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே....
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

அழகான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே....
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

நீண்ட இடைவெளியின் பின்னர் பின்னூட்டம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி ரசிகா,,,,
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

அழகான ஒற்றை வரியிலான கருத்துக்கும் நீண்ட இடைவெளியின் பின்னரான வரவுக்கும் மிக்க நன்றியை சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன் சகோ

Reply

அருமையான பதிவு நண்பா!!

Reply

வணக்கம் சொந்தமே.இனிமையான விடயங்கள் எளிமையான நடையில் வாழ்த்துக்கள் பாஸ்.படங்கள் அருமை.மயிலுக்கு பல்லு விளக்கப்போறேன்னு பக்கத்துவீட்டுப்பையனுக்கு பொய் தானே சொன்னீங்க...பாருங்க பல்லையெ காணம்.....மன்னிப்பு கேளுங்க மறக்காம....:)

Reply

நல்ல விடயத்தைச் சொல்லும் பதிவு அந்த மயில் படங்கள் எல்லாம் அருமை சகோ!

Reply

நல்ல படங்கள்.நல்ல் கட்டுரை,வாழ்த்துக்கள்.

Reply

படங்கள் அனைத்தும் அழகோ அழகு.

எந்த விட சுயநலமும் இல்லாமல் செய்யும் எந்த செயலுமே இறைவனையே சேரும்.

Reply

அருமையான சிந்தனை

படங்கள் அழகு - ரசித்தேன் - பகிர்வுக்கு நன்றி நண்பா

Reply

sako!
nalla kootru!

nalla padangal!

Reply

அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

அடியாத்தி படம் கொஞ்சம் நல்லா இருக்கே என்னு போட்டே கடைசில அது நமெக்கே ஆப்பா வருகுது என்னா ஒலகம் டா இது......

மன்னிப்பு தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை...எப்புடி
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சந்திப்போம்

Reply

நல்லதொரு சந்தோஷமான கருத்து சகோ...
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

நீண்ட இடைவெளியின் பின்னான உங்கள் கருத்து கண்டு மிக்க சந்தோஷம் சார்.....
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

நல்லதொரு கருத்து.....மிக முக்கியம் சுய நலம் என்பது இல்லாமல் இருக்க வேண்டுமென்பது......
அழகாக ஞாபமூட்டிச் சென்ற கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சார்

Reply

அழகை ரசிப்பதற்கு வருகை தந்தமைக்கும்
நல்லதொரு கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

நல்லதொரு கருத்தை சொல்லிச் சென்றமைக்கு மிக்க நன்றி நண்பா

Reply

#உலகித்திலே மிகப்பெரிய கஞ்சன் யாரென்று எனைக் கேட்டால் செய்த உதவிக்கும் படைத்த இறைவனுக்கும் நன்றி சொல்லாதவையே கூறுவேன்.#


நூறு சதவீதம் உண்மை....

Reply

அழகிய மயில் படங்கள் நண்பரே..
மழைமேகம் இல்லாமலேயே என் மனம்
நடமாட தொடங்கிவிட்டது...

Reply

என்ன ஒரு அழகு.இறைவன் படைப்பே அதிசய அழகுதான் !

கஞ்சனைப்பற்றிய விளக்கம்....உண்மை !

Reply

அழகான கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா.
வருகை தொடர்வதில் இன்னும் சந்தோஷம்...:)

Reply

நண்பரின் அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி....

Reply

அழகான கருத்திட்டு சென்றமைக்கு மிக்க நன்றி சார்....
ம்ம்ம்ம்ம்ம்ம் மழைமேகம் கண்டு மயில்கள் நடனமாடுவது பாரம்பரிய மழைக்கான அறிகுறிகளில் இன்னும் குன்றிப்போகாத ஒன்றுதான்

Reply

அழகான கருத்தினை செதுக்கிச் சென்றமைக்கு மிக்க நன்றி அக்கா.....

Reply

:)...கலக்கிட்டப்பா...சாரி...மழுப்பிட்டப்பா

Reply

உலகித்திலே மிகப்பெரிய கஞ்சன் யாரென்று எனைக் கேட்டால் செய்த உதவிக்கும் படைத்த இறைவனுக்கும் நன்றி சொல்லாதவையே கூறுவேன்.


வாழும் போது நேருக்கு நேர் ஒருவன் செய்த உதவியையே மறந்துட்டு போற காலமிது, கடவுளுக்கா நன்றி சொல்லிடப்போரோம் ஆனாலும் அழுத்தமான வரிகளால் பதிவை பின்னியிருக்கேங்க ரொம்ப அழகான பதிவு அதவிட தோகை விரித்தாடும் இந்த வண்ண மயில்கள் கூடுதல் அழகு சேர்க்கிறது என்றே சொல்லலாம் :)

Reply

@ ரேவா

வாழும் போது நேருக்கு நேர் ஒருவன் செய்த உதவியையே மறந்துட்டு போற காலமிது, கடவுளுக்கா நன்றி சொல்லிடப்போரோம் ஆனாலும் அழுத்தமான வரிகளால் பதிவை பின்னியிருக்கேங்க ரொம்ப அழகான பதிவு அதவிட தோகை விரித்தாடும் இந்த வண்ண மயில்கள் கூடுதல் அழகு சேர்க்கிறது என்றே சொல்லலாம் :)

////////////////////////////////

ம்ம்ம்ம்ம் அதனால் தான் சொல்கிறேன் நன்றி சொல்ல மறந்தவர்கள் மிகவும் கஞ்சனுகள் என்று..... ரொம்ப நாளைக்கப்புறமான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி....
சந்திப்போம்

Reply

Post a Comment