Looking For Anything Specific?

ads header

2016 இல் உலகம் டிங் டிங் டிங்...?

இன்றைய தொழில்நுட்ப உலகில் வியப்பில் ஆழ்த்தக் கூடிய பல விடயங்களை தற்கால தொழிநுட்பவியல் அறிஞர்கள் வெளியிடுவது அண்மைக்காலமான அடிக்கடி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதன் மிகப் பெறிய சாதனையாகத்தான் அண்மையில் நாசாவினால் அனுப்பப் பட்ட கியூரியாசிட்டி என்ற ஆளில்லா வின்கலம் வெற்றிகரமான முறையில் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இதன் மூலம் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தொழிநுட்பவியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதே போன்றதொரு வித்தியாசமான முயற்சியில் தற்போது ரஷ்யாவும் இறங்கியுள்ளது. சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றினை வின்வெளியில் நிறுவுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2016 இல் சுற்றி வரும் தொழில்நுட்பம் என்ற பெயரில் முதலாவது வணிக நோக்கம் கொண்ட விண்வெளி ஹோட்டலினை நிறுவவதுக்கு திட்டமிட்டு அதற்கான பணிகளினையும் தற்போது ஆரம்பித்து விட்டனர்.

சகல வசதிகளையும் கொண்ட நான்கு படுக்கையறைகள் மற்றும் ஏழு விருந்தினர் அறைகளைக் கொண்டு பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் இவ் ஹோட்டல் நிறுவப் படவுள்ளது. 

வின்வெளியில் மிதந்தவாறு நாம் விரும்பிய வகையில் நித்திரை கொள்ளக் கூடிய வசதியையும் கொண்டுள்ளதுடன் மட்டுமில்லாமல் அங்கிருந்தவாறே தொலைக்காட்சி மற்றும் இணையப் பாவனையையும் மேற்கொள்ளவும் முடியும். ஐந்து நாட்கள் கொண்ட பயண தொகுப்புக்கு சுமார் ஒரு மில்லியன் டொலர் பணம் செலவாகும் எனத் தெரிவிக்கப் படுகிறது. ஆனாலும் மதுப் பிரியர்களுக்கு இங்கே ஏமாற்றம் தான் கிடைக்கும் போல தெரிகிறது மதுப் பாவணையை கண்டிப்பாக தடை செய்துள்ளார்கள் பொருத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன வசதிகளையெல்லாம் செய்கிறார்கள் என்று.






Post a Comment

29 Comments

  1. படங்களுடன் விளக்கங்களுடன்
    பதிவு மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விண்ணில் ஓட்டலா!
    நன்று.

    ReplyDelete
  3. விஞ்ஞான வளர்ச்சி! படமும் பதிவும் அருமை!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
  4. ஆடம்பரமான ஹோட்டலா....?? ஏதோ ஏர்பஸ் கழிப்பிடம் போல் உள்ளது...
    சிட்டுக்குருவி... தவறான படத்தைப் போட்டுவிட்டீர்களா...?

    ReplyDelete
  5. படங்களே வியக்க வைக்குதே...ஆனால் சாத்தியமான விஷயம்தான் !

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி... விளக்கம் அருமை...

    படங்கள் இணைத்தது சிறப்பு...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

    ReplyDelete
  7. ஏதோ 2012ல உலகம் அழியுதாமே??

    ReplyDelete
  8. தெளிவான பயனுள்ள பதிவு அருமை.....

    த.ம 5

    ///2016 இல் சுற்றி வரும் தொழில்நுட்பம் என்ற பெயரில் முதலாவது வணிக நோக்கம் கொண்ட விண்வெளி ஹோட்டலினை நிறுவவதுக்கு திட்டமிட்டு அதற்கான பணிகளினையும் தற்போது ஆரம்பித்து விட்டனர்.////

    வருத்தத்துக்குரிய விடயம் தோழரே பூமியில் மனிதனில் பலர் அடிப்படை வசதி அற்று இருக்கும் போது எப்பேர்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியும் மனதை மகிழ்வுற செய்யவில்லை ... வீதி எங்கும் பசித்த தாண்டவமாட அண்ணாந்து அண்டத்தின் அதிசயங்களை பார்க்க மனமேனோ வரவில்லை...


    ReplyDelete
  9. படங்கள் ஈர்க்கின்றது !ம்ம் போகலாமோ!ஹீ ஓசியில்!

    ReplyDelete
  10. அப்போ 2012 டிஷம்பரில டிங் டிங் இல்லயா?:)) டெக்னிக்கல் பிரப்புளம் என்பது உண்மைதானாக்கும் சாமீஈஈஈஈஈ:))

    ReplyDelete
  11. அசத்தலான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  12. வணக்கம்.இன்று தான் தளம் வர முடிந்தது.நேத்த தந்த புரியாணியோட இதை மறந்தே போயிட்டன்.
    புதிய தகவல் படங்களுடன் அருமை.உலகத்தில என்ன என்னமோ எல்லாம் நடக்குது..நாம்மட உச்சபட்ச முயற்சியும் அடைவும், ரோட்டு போடுறது மட்டும் தான்!!!சீக்கிரமே அங்க தான் குடியேறனும் போல!

    வாழ்த்துக்கள் நண்பா பதிவிற்காய்!சந்திப்போம்.

    ReplyDelete
  13. @ Ramani

    படங்களுடன் விளக்கங்களுடன்
    பதிவு மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    ///////////////////////

    சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  14. @ சென்னை பித்தன்

    விண்ணில் ஓட்டலா!
    நன்று.
    //////////////

    ஆமா ஐயா விண்ணில் ஓட்டலும் உண்டு ஹோட்டலும் உண்டு
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  15. @ s suresh

    விஞ்ஞான வளர்ச்சி! படமும் பதிவும் அருமை!
    ////////////////////

    அழகான பின்னூடத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  16. @ AROUNA SELVAME

    ஆடம்பரமான ஹோட்டலா....?? ஏதோ ஏர்பஸ் கழிப்பிடம் போல் உள்ளது...
    சிட்டுக்குருவி... தவறான படத்தைப் போட்டுவிட்டீர்களா...?
    /////////////////////////

    என்னாது....! கழிப்பிடம் போல இருக்கா இல்லியே எனக்கெறா ஹோட்டல் மாதிரிதான் இருக்குது.... நான் சுட்ட இடத்த்லயும் ஹோட்டல் என்னுதானே போட்டிருந்தாங்க...... :(

    ReplyDelete
  17. @ ஹேமா

    படங்களே வியக்க வைக்குதே...ஆனால் சாத்தியமான விஷயம்தான் !
    /////////////////////////

    ம்ம்ம்ம்ம்ம்ம் சாத்தியமும் ஆகலாம் 2016 வரை இருந்தால் தெரிந்து கொள்ளலாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  18. @ திண்டுக்கல் தனபாலன்

    தகவலுக்கு நன்றி... விளக்கம் அருமை...

    படங்கள் இணைத்தது சிறப்பு...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)
    ////////////////////
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  19. @ ஹாலிவுட்ரசிகன்

    ஏதோ 2012ல உலகம் அழியுதாமே??
    ////////////////////////

    ஆமா அப்பிடித்தான் ஊருக்குள்ள கதைக்கினம் உண்மையோ என்று உங்களுக்கும் பயமோ...அதெல்லாம் வதந்தி நண்பா

    ReplyDelete
  20. @ இடி முழக்கம்

    தெளிவான பயனுள்ள பதிவு அருமை.....
    வருத்தத்துக்குரிய விடயம் தோழரே பூமியில் மனிதனில் பலர் அடிப்படை வசதி அற்று இருக்கும் போது....
    /////////////////////////////

    அழகான சிந்திக்கக் கூடிய ஆழமான எதிர்கால சிந்தனை கொண்ட பின்னூட்டம் நண்பா. என்ன செய்வது எல்லாம் நிறைந்ததுதான் உலகமாச்சே.....

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. @ தனிமரம்

    படங்கள் ஈர்க்கின்றது !ம்ம் போகலாமோ!ஹீ ஓசியில்!
    /////////////////////

    ஹி ஹி நானும் உங்க கட்சிதான் ஓசியில எண்டா ஒரு நாளைக்குள்ள உலகத்தையே சுற்றிடுவேன்..

    ReplyDelete
  22. @ athira

    அப்போ 2012 டிஷம்பரில டிங் டிங் இல்லயா?:)) டெக்னிக்கல் பிரப்புளம் என்பது உண்மைதானாக்கும் சாமீஈஈஈஈஈ:))
    //////////////////////////

    ரொம்பத்தான் குஷியா இருக்காதேங்கோ...இன்னும் 2-3 மாசம் இருக்கு அதுக்குள்ள பிரப்புளம் சரியானாலும் ஆகலாம்......

    ReplyDelete
  23. @ Sasi Kala
    அசத்தலான படங்களுடன் சிறப்பான பகிர்வு.
    //////////////////

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  24. @ Athisaya

    வணக்கம்.இன்று தான் தளம் வர முடிந்தது.நேத்த தந்த புரியாணியோட இதை மறந்தே போயிட்டன்.
    ////////////////////////////

    ஹி ஹி நாங்களும் இண்டைக்குத்தான் இந்தப் பக்கம் வந்தோம் அது சை புரியாணில கொஞ்சமாச்சும் மிச்சம் வைக்காம சாப்பிட்டீங்களே நல்லா வருவீங்க........

    ReplyDelete
  25. அட இப்படியெல்லாம் நடக்குதா?

    ReplyDelete
  26. //ஹாலிவுட்ரசிகன்

    ஏதோ 2012ல உலகம் அழியுதாமே??//

    இல்லையே நேற்று நான் வாங்கின ஜாம் பாட்டில்.ல எக்ஸ்பயரி டேட் 2014 னு போட்ருக்காங்களே ஹி ஹி

    ReplyDelete
  27. @ ஹாரி பாட்டர்

    அட இப்படியெல்லாம் நடக்குதா? /
    //////////////////

    ஆமாம் நண்பா இப்பிடி நடக்குதான் நானும் கேள்விப்பட்டதுதான்


    இல்லையே நேற்று நான் வாங்கின ஜாம் பாட்டில்.ல எக்ஸ்பயரி டேட் 2014 னு போட்ருக்காங்களே ஹி ஹி
    ///////////////////////////////

    ஆஹா இப்பிடி எத்தின பேர் கிளம்பியிருக்கிறீங்க..

    ReplyDelete