Looking For Anything Specific?

ads header

2012 இல் இணைய சாதனைகள் நிகழ்த்தியோர்...

உலக சாதனைகள் நிகழ்த்துவதற்கு இப்போது பெரிய பெரிய மலைகளை உடைத்தோ அல்லது தன் மேல் பிரமாண்டமான இயந்திரங்களை ஏற்றியோ சாதனைகள் புரியத் தேவையில்லை
என்பதனை இணையத்தளம் எமக்குச் சொல்லித் தருகிறது... இனிமேலும் எதிர் வரும் காலங்களில் நாமும் ஒரு உலக சாதனையாளராக திகழலாம் என்பதற்கு எந்த ஐயமுமில்லை...

(ஜஸ்ட் வெயிட் நான் என்னை போன்ற பிரபலங்கள பற்றி சொல்லிக்கிறேன்)
   
அதிக எண்ணிக்கையில் ட்விட்டர் பின்பற்றுனர்களைக் கொண்டவர்

அதிக ட்விட்டர் பின்பற்றுனர்களைக் தன்னகத்தே கொண்டு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் லேடி ககா என்று சொல்லப்படக் கூடிய ககா கோச்சா ட்விட்டர் உலகில் இவரை ட்விட்களின் ராணி எனவும் செல்லமாக அழைக்கின்றனர்.

முதல் ஐந்து இடங்களில் ஜொலிக்கும் ட்விட்டர் நட்சத்திரங்கள்
  • Lady Gaga (Gaga Gotcha)    26,823,122 Followers  ஜூலை 2012 வரை
  • Justin Bieber`s Paltry           24,687,443 Followers
  • Katy Perry                           22,869,592 Followers
  • Rhianna                               22,232,112 Followers
  • Britney Spears                     22,232,112 Followers
அனைத்துன் ஜூலை வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலாகும் இங்கு ஆறாவது இடமாக ஜொலிக்கும் டிவிட் நட்சத்திரம் அமெரிக்காவின் அதிபதி பராக் ஒபாமாவாகும் (17,381,203). இதில் இன்னுமொரு விடயத்தினையும் சொல்லிக்கொள்ளலாம் அதாவது முதல் பத்து நட்சத்திரங்களுள் ஜொலிக்கும் ஆண் நட்சத்திரங்களாக ஜெஸ்டின் மற்றும் அமெரிக்காவின் அதிபர் ஆகியோர் திகழ்கின்றனர்.

யூ டியூபில் அதிகமாக ரசிக்கப் பட்ட காணொளி

Justin Bieber டிவிட் உலகில் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்ட ஜெஸ்டின் யூ டியூபில் முதலாவதாக எப்போதுமே யாராலுமே எட்டமுடியாத அளவுக்கு தன் பாடலொன்றுக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

இவரின் Speaking of babies என்னும் இடைவிடாத பொப் பாடல் இதுவரை 755,479,979 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வரிடையில் இரண்டாமிடத்தை பெற்றிருக்கும் காணொளி Charlie Bit My Finger எனும் இரண்டு மழலைகளின் காணொளியாகும் இது இதுவரை 464,588,601 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.



மிகப் பழமையான இணையத்தளம்


1985 மார்ச் 15 ஆம் திகதி Symbolics Computer Corporation தனது முதலாவது இணையத்தள முகவரியை பதிவுசெய்தது. இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதலாவது இணைய முகவரியுமாகும். ஆரம்ப காலங்களில் மிகவும் குறைவான பார்வையாளர்களைக் கொண்ட இத் தளம் இன்றுவரைக்கும் 192 மில்லியனுக்கும் அதிகமான இணையத்தள முகவரிகளை வழங்கியும் 2.1 பில்லியனுக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்டும்  யாராலும் எட்ட முடியாத சாதனை படைத்துள்ளது. 
இதில் முக்கியமான பங்களிப்பைச் செய்திருப்பது ஆசியா கண்ட நாடுகளேயாகும்


பூமியில் மிகவும் உயர்ந்த வெப் கெமரா


இந்த உலகத்தில் கண்கானிக்கப் படாத இடமே இல்லையென்று சொல்லுமளவிற்கு தொழிநுட்பம் மிகவும் வளர்ந்து காணப்படுகின்றது. அதிலும் அதிகமாக சர்ச்சைக்குள்ளாகுவது துணிக்கடைகளினால் பொருத்தப் பட்டிருக்கும் வெப் கெமராக்களினால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்வதில் தவறில்லை எனலாம்.
அந்த வகையில் 5643 மீட்டர் உயரத்தில் ஒரு வெப் கெமராவைப் பொருத்தியுள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள்.இதுவே உலகில் மிக உயரத்தில் பொருத்தப் பட்ட கண்கானிப்பு கருவியாகக் கொள்ளப்படுகிறது.


Post a Comment

30 Comments

  1. ஹி ஹி ... நாமளும் நம்ம ப்ளாக்க வச்சி ஏதாச்சு சாதனை பண்ண ட்ரை பண்ணுவோம். :) :)

    ReplyDelete
    Replies
    1. சூடான வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி ரசிகா......
      ட்ரை பண்ணலாம் தான்.... கடைசில சாதனை சோதனையா போகிடுமோ என்னு பயமாயிருக்குது

      Delete
  2. வித்தியாசமான கோணத்தில் - தகவலுக்கு நன்றி குருவி

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான கோணமா இதுக்கே இப்பிடியென்றா பின்னாடி என்ன சொல்லப் போறீங்க பாஸ்.......
      வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  3. நல்ல தகவல் நன்றி குருவியாரே!

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாக மூட்டக் கூடிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  4. சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!
    இன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணிக் கட்டுரை! அறிஞகளின் பொன்மொழிகள்!
    http://thalirssb.blogspot.com.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  5. அறியாத அரிய தகவல்கள்
    பகிர்வுக்கு நன்றி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அட நாமளும் ஏதாவது முயற்ச்சி செய்வோம்!ஹீ!

    ReplyDelete
    Replies
    1. செய்வோம் செய்வோம்...விடாம முயற்சி செய்வோம்...
      பிழைக்கத் தெரிந்த பயலுகள் என்று பல பேர் எம்மைப் போற்றட்டும்.....

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  7. அழகான உற்சாக மூட்டக் கூடைய கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்....

    ReplyDelete
  8. முக்கியமான விசயத்த உட்டுட்டீங்களே தலைவா? உலகத்துல மிகக் குறைவான வாசகர்களைக் கொண்ட வலைப் பதிவு நம்மலோடதில்ல?
    http://newsigaram.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. ஏன் தல அப்பிடி சொல்லுறீங்க.....விரைவில் மிக விரைவில் நீங்களூம் பிரபலமாகலாம் உங்களின் தளத்தின் மூலம்....எப்பிடி என்னு கேக்குறீங்களா
      எதுக்கும் ஒரு ஐம்பது ரூபா மணியோடர் அனுப்பி வையுங்க சொல்லுறன்

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  9. வணக்கம் சொந்தமே,சிட்டு!வாழ்த்துக்கள்.அப்ப வாங்களேன்.எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்வோம்.!ப்ளீஸ்பா.........

    ReplyDelete
    Replies
    1. என்னாது சிவாஜி படத்துல ரஜனிசார் பழகிப் பார்க்கலாம் வாங்கோ என்று சொல்லுறமாதிரி இருக்கு உங்க கதை....
      இது உலக சாதனை விசயம் கூட்டு வச்சா தப்பாகிடும் அதனால யாரையும் சேர்த்துக்க மாட்டேன்.........முன்னாடியே சொல்லிப் போட்டன்

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  10. தேடித் தந்த சிட்டுக்குருவிக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. ஓடி வந்து கருத்திட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இது எப்பிடி

      Delete
  11. ஹ்ம்ம் நாமளும்தான் ஏதாவது சாதனை பண்ணலாம்னு பார்த்தா முடியுமாட்டேங்குதே!!

    ட்விட்டர்ல எனக்கும் 250 Followers இருக்காங்க என்னையும் அந்த லிஸ்டுல சேர்த்துக்க முடியாதா?

    Charlie Bit My Finger.. very funny video

    ReplyDelete
    Replies
    1. என்னையும் கொஞ்சம் கவணிச்சா உங்களையும் அந்த லிஸ்ட்டுல போட்டுக்கிறேன் பொளச்சிப் போகச் சொல்லி............

      அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  12. அறியாத தகவலை அறிய வைத்தமைக்கு நன்றி நண்பா...

    (த.ம. 2)

    ReplyDelete
    Replies
    1. புதிய தகவலை அறிந்து கொண்டமைக்கு நன்றி சொன்ன உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் நண்பா..

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி

      Delete
  13. சிட்டு..... பார்வையாளர்கள் வருவது தெரியுது...

    ஆனால் அவர்கள் என்னவெல்லாம் போட்டு பிடிச்சாங்க என்பதை போடலையே குருவி.
    கேட்டு பார்த்து வந்து என்கிட்ட மட்டும் சொல்லனும் என்ன...

    நான் ஒனக்கு புழு பூச்சியெல்லாம் பரிசா தர்றேங்க...

    ReplyDelete
    Replies
    1. பரிசெல்லாம் குடுக்கிறீங்களா.......
      அப்போ உங்களுக்குத்தான் எல்லா ரகசியத்தையும் நான் சொல்லப் போறன்..
      வெயிட் பன்னுங்கோ பக்கத்துல இரண்டு ____ இருக்குதுகள் அனுப்பிட்டு வாரேன்

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  14. ஆச்சரியமான தகவல் நண்பா

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க இருந்து டீ குடிச்சிட்டு போயிடுங்க....:)

      Delete
  15. அருமையான தொகுப்பு ,நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  16. வணக்கம்
    அறிய வேண்டிய தகல்வல்கள்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ....
      உங்களின் தளத்தின் பக்கம் அவசியம் வருகிறேன்
      முதல் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

      Delete