Looking For Anything Specific?

ads header

கனவுக் கடன்...!



கனவுகளைத் தொலைத்துவிட்டேன் - காலையில்
கனவின் உரிமையாளனிடம் கடன்காரனாய்  நான்
வதைக்கும் கேள்விகளுக்கு விடையரியாமல்
விழிபிதுங்கி விம்மியழுகிறேன் யார் தருவார் கனவுகளை


முதலாளியின் கனவினுள் முத்தாய் நீயிருப்பதை - முதலில்
அறிந்திருந்தால் முன்னேற்பாடாய் விழித்திருப்பேன் முப்பொழுதும்...
கனவு காண பிரியம் கொண்டது  என் தவறா ? இல்லை உன்
மாய வார்த்தைகளுக்கு மயங்கியது என் தவறா...?

 பல கோணங்களில் பலர் எனை நோக்க பாவியெனக்கு
தண்டனை தர பாவமாய் பார்க்கின்றனர் - பகல் முழுதும்
தேடியும் கனவினை திருப்ப முடியவில்லை...
கனவினை கூட கடனாக பெறும் நிலையில் நான்...
என்னிலை எண்ணி புலம்புகிறேன் பைத்தியமாய்...

பைத்தியத்துக்கு வைத்தியமாய் நீ வருவாயென
காத்திருந்த பொழுதுகள் ஆயிரமாயிரம், இன்னும் ஆயிரமாயிரம்
உதிரம் தந்து உருமாற்றினேன் கனவுகளிலும் நிறமாய் உனைக்கான
உன் நிறம் வியந்து என் கனவினை திருடிச் சென்றவளே...!
எப்போது வருவாய் என் பைத்தியம் தீர்க்க.........




Post a Comment

38 Comments

  1. haa haa !
    paithiyam nalla kavithai tharuthe!

    thirumpi vanthu vittal kavithai ......!?

    nalla
    karpanai..

    ReplyDelete
  2. Replies
    1. இது சும்மா பைத்தியமில்ல நண்பா வெறி டேஞ்சரஸ் கவணமா பழகிக்கோணும்...ஹா...ஹா...ஹா

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  3. விரைவில் வந்து குருவியின் இன்னல் தீர்க்கட்டும்! நல்ல கவிதை நண்பா!

    ReplyDelete
    Replies
    1. குருவி மீது நல்லதொரு அக்கறை கொண்டு கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பா

      Delete
  4. ஹாய் குருவி....கவிதையில கலக்கிறியேப்பா......!வாழ்த்துக்கள்.வந்ததும் எங்களுக்கு
    சொல்லுங்கோ:)
    சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம்ம் யாரிட்டயும் சொல்ல மாட்டேன் பிறகு அவ அழகுல நீங்க மயங்கி மறுபடியும் கிட்நாப் பண்ணிட்டீங்கன்னா...........:(

      மீ வெறி உஷார்

      Delete
  5. முதலாளியின் கனவினுள் முத்தாய் நீயிருப்பதை - முதலில்
    அறிந்திருந்தால் முன்னேற்பாடாய் விழித்திருப்பேன் முப்பொழுதும்... ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
    :(வரிகள் அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. டச்சிங் டச்சிங்கோ....... விடமாட்டோம்
      வருகைகும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி சந்திப்போம்

      Delete
  6. மிக அருமையான வரிகள். இந்த சப்ஜெக்ட்டில் நானெல்லாம் கொஞ்சம் வீக்கு.

    ReplyDelete
    Replies
    1. நாங்க பாஸ் பண்ணின சப்ஜெக்டே இது ஒன்னுதான் இடையில அதுவும் வீக்குக்குப் போகுது போல தென்படுகுது எதுக்கும் உஷாரா இருப்போம்

      அழகான கருத்திடலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  7. நல்ல வரிகள் நண்பா...
    சீக்கிரம் வருவாங்க... கவலைப்படாதீங்க...
    நன்றி... (த.ம. 2)

    ReplyDelete
    Replies
    1. நல்ல உள்ளங்களின் ஆசிக்கும்
      வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  8. வந்து.... பைத்தியம் தீர்ந்தா சரி....!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தீர்ந்தா சரிதான் அதுதான் எப்ப நடக்கப் போகுதோ...
      ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க

      Delete
  9. நான் இந்த பாடத்தில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்...
    வந்து பைத்தியம் தீர்த்தால் மறக்காமல் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பா இந்த பாடத்துல இல்ல ஸ்கூல் பாடங்கள்ளையும் நீர் தேர்ச்சி பெற வில்லையமே......பி பி சி.....தகவல்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  10. சிறப்பான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!
    இன்று என் தளத்தில் சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!
    http:thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிய கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  11. எப்போது வருவாய் என் பைத்தியம் தீர்க்க.........//

    தீர்ந்துவிடும்னு நினைக்கிறீங்களா? -:)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்குது பொருத்திருந்தி பார்ப்போமே......
      பொருத்தார் உலகார்வார் என்று AR ரகுமான் சொல்லியிருக்காராமே.... :))

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  12. சிட்டுக்குருவி...

    அவள் வர வேண்டாம் ...

    இன்னும் கொஞ்சம் பைத்தியம் பிடித்து உளருங்கள்.....!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...இதுவல்லவோ நட்பு
      இந்த நட்பு பெற என்ன தவம் செய்தேனோ..
      உங்களுக்கிட்ட வேறயாரும் நண்பர்களிருந்தா என்னையும் அறிமுகப்படுத்தி வையுங்கோ...என் உளரலை கேட்க நீங்கள் மட்டும் போதாது..:)

      அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      Delete
  13. ஆரணங்கு வருவாள்
    அல்லிமலர் மாலை தருவாள்
    சொல்லி செல்லும் வார்த்தையதை
    கிள்ளையாய் மொழிபயில்வாள்..

    கனவு ஈடேற வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. அழகான கவியில் ஆழமான ஆறுதல் வார்த்தைகளல்லவோ.....
      பெரியவங்க பெரியவங்க தான்

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  14. ஆஹா வந்திடிச்சு.. சிட்டுக்கும் வந்திடிச்சூஊ.. நான் கனவைச் சொன்னேன்:).

    இப்பவெல்லாம் ஒரே கவிதையாக எழுதுறீங்களே என்ன காரணம் சிட்டு?
    அப்படி இருக்குமோ?:))..
    இல்ல இப்படி இருக்குமோ?:))..

    எதுக்கும் வெயிட் அண்ட் சீயா:))...

    கவிதை அழகாக இருக்கு சிட்டு.

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியும் இல்ல இப்பிடியும் இல்ல....... இது வேற மாதிரி...:)
      /////ஒரே கவிதையாக எழுதுறீங்களே என்ன காரணம் சிட்டு?//////

      நான் கவிதையெல்லாம் எழுதல்லப்பா பதிவு எழுதுறன் பின்னாடி அது கவிதையா மாறுது என்ன செய்ய யாரும் ஏது செஞ்சிப்போட்டாங்களோ தெரியல்ல...

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி மெடம்

      Delete
  15. வருவா...வருவா.....!

    ReplyDelete
    Replies
    1. அவள் வருவாளா..? ஆமா வருவா வருவா
      இதுவல்லவோ நம்பிக்கையூட்டம் வார்த்தைகள் இருங்க கடைக்குப் போயி சக்கரை வாங்கி வாரேன்.....

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி மெடம்

      Delete
  16. என்னன்னு சொல்றது,......

    ஏய் குருவி சிட்டு குருவி என் ஜோடி எங்கே??

    நல்லாத்தான் எழுதுறீக கவித வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ நான் யாருடைய ஜோடியையும் ஆட்டையப் போடல்ல பாஸ்

      உங்க ஜோடி எங்கயாவது சினிமாவுக்குப் போயிருக்கும் முதல்ல தேடிப் பிடியுங்கோ

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  17. #கனவினை கூட கடனாக பெறும் நிலையில் நான்...#
    மிக அருமை. வாசித்து பிரமித்துப் போனேன். வாழ்த்துக்கள். சந்திப்போம். அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போகலாமே?
    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தொடர் வருகையாக இருந்தால் சந்தோஷம்..

      அப்படியே உடம்பு பூரா புள்ளரிக்கிறமாதிரி கருத்து சொல்லி சென்றமைக்கு மிக்க நன்றி

      கட்டாயம் உங்க பக்கம் வருகிறேன்

      Delete
  18. கட்டாயம் வருவா அவ மட்டும் இல்ல அவ தங்கச்சியும் கூட்டிட்டு வருவா கவலை படாத நண்பா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.....நீ தான் பாஸு நண்பன் எனக்கு இப்போ அவ வரவே தேவையில்ல அவ தங்கச்சி இருக்கிற இடத்த மட்டும் சொன்னாப் போதும்...ஹி ஹி ஹி

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  19. என்ன ஒய் இப்போ எல்லாம் ஒரே லோவ் சாங்காத்தான் தான் கேக்கத் தோணுதோ

    ReplyDelete
    Replies
    1. காதுல ரீங் ரீங் என்னு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துச்சு நான் காதுக்குல்ல ஏதாவது போயிட்டோ என்னு பயந்து போயிருந்தேன் இப்பதான் புரியுது அது ஜவ்வுல கேட்ட மியூசிக்கு என்னு......ஹி ஹி

      அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete