Looking For Anything Specific?

ads header

அதிசய படைப்பு காளான்கள்...

காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைதாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.
இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டு உள்ளனர். சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன.
 
நச்சுத் தன்மையான காளான்களை இனங்காணல்

  • வளையப்புடைப்பு, இணையம் என்பன காணப்படும்.
  • கடுமையான நிறம் கொண்டதாகக் காணப்படும்.
  • துர்நாற்றம் வீசும்.
  • பூச்சிகளால் கவரப்படாததாகக் காணப்படும்.
  • நறுக்கிய வெங்காயத்துண்டுகளுடன் பிசையும் போது ஊதா நிறம் தோன்றும்.
காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவு வரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக்காளான், பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகை ஆகும்

காளான்களில் பச்சையம் இல்லாததால் ஒளிச்சேர்க்கை இல்லாமலே தங்களுக்கு வேண்டிய உணவைப் பெறக்கூடியனவாக உள்ளன. எனவே, இவை ஊணவிற்குப் பிற உயிர்களைச் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. அதனால் காளான் ஒட்டுண்ணியாகவும் சாருண்ணியாகவும் உள்ளது. மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துக்களை உறிஞ்சி அவைகள் பட்டுப்போகவும், காய்கறிகள் முதலானவை அழுகிப் போகவும் காரணமாக உள்ளவை நச்சுக் காளான்கள் ஆகும். இவற்றை அழிக்க " காளான் கொல்லி" என்ற வேதியற்பொருள் பயன்படுத்தப்படுகிறது

காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.

காளான்களின் சில பயன்கள்

  • மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
  • உணவுக்காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
  • பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.
  • மதுபானங்கள் செய்யப் பயன்படுகின்றன.
  • ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.
இதயத்துக்கு பலம் சேர்க்கவும் உடல் எடையைக் குறைப்பதகாகவும் நாடூ பூராகவும் விஸ்தரிக்கப் பட்டிருக்கும் பல உணவகங்களிலும் மற்றும் உணவு நகரங்களிலும் ( பூட் சிட்டி ஹி..ஹி..ஹி ..நாங்களும் மொழிபெயர்ப்போமில்ல..)  காளான்கள் பொதி செய்யப் பட்டும் சமைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன.

அரியவகை காளான்கள் சில உங்களுக்காக...   

காளான் - 01
காளான் - 02
காளான் - 03
காளான் -04
காளான் - 05
காளான் -06
காளான் - 07
காளான் -08
காளான் -09
காளான் - 10
காளான் -11

காளான் -12
காளான் -13
காளான் -14
காளான் - 15
காளான் - 16
காளான் - 17
காளான் - 18
காளான் -19
காளான் - 20
காளான் - 21
      

Post a Comment

34 Comments

  1. நண்பா போட்டோ கலோக்சன் எல்லாம்

    நல்ல இருக்கு ஆமா எப்பொதும் பக்கம் பக்கமா தானா

    இருக்கும் பதிவு என்னைக்கு என்ன ஆச்சு

    ReplyDelete
    Replies
    1. சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா....
      எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான் பிறகு அது பாட்டுக்கு சரியாகிடும்

      Delete
  2. காளான்களின் இத்தனை வகைகளா படங்கள் கண்டேன் அதன் சிறப்புகள் அறிந்து கொண்டேன் - பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி குருவி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்.....

      Delete
  3. காளானைப் பற்றி முழுத் தகவல்கள்... நன்றி நண்பரே...

    உடலுக்கு மிகவும் பயன் தருபவை...
    காளான் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்க....
    மற்ற பிரியாணி எல்லாம் பிடிக்காமல் போய் விடக் கூடும்...

    அட்டகாசமான படங்கள்... ஜொலிக்கிறது நண்பரே...
    நன்றி (த.ம.1)

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரை காளானின் சிறு தூண்டும் கூட சாப்பிட்டது கிடையாது நண்பர்கள் சாப்பிட்டு விட்டு சொல்லுவார்கள் அவ்வளவுதான்...பார்ப்போம் இனிமேலும்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  4. நான் உங்கள் பதிவிற்கு கருத்து எழுதிக் கொண்டிருக்கும் போது...
    என் பதிவிற்கான உங்களின் கருத்து வருகிறது...
    என்ன ஒரு நிகழ்வு பாருங்கள்... நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. அரிதான நிகழ்வுதான்......நமக்குள்ள ஏதோ இது இருக்குபோல...அதுதான் இது..

      Delete
  5. நல்ல தகவல் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  6. நான் அடிக்கடி காளான் கறி சமைப்பதுண்டு.சலட் லயும் சேர்த்துக்கொள்ளுவன் !

    ReplyDelete
    Replies
    1. அடுத்த தடவை வரும்போது காளான் கறி எடுத்துக் கொண்டுதான் வரவேண்டும் நான் இன்னும் சாப்பிடவே இல்ல....

      இப்ப பிரியா இருக்கிறீங்க போல பதிவெல்லாம் எழுதுறீங்க அத வச்சி சொன்னன்

      Delete
  7. காளான்களைபற்றிய அருமையான தகவல்கள்! நன்றி!
    இன்று என் தளத்தில் தெருக்குடிமக்கள்! கவிதை! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
      உம்முடைய தளத்தினை ஆரம்பத்தில் தேடினேன் கிடைக்கவில்லை இப்போது லிங்க் கொடுத்துள்ளீர் ஒரு கை பார்த்திடுவோம்

      Delete
  8. காலான் சூப் எனக்கு ரொம்ப
    பிடிக்கும் சிட்டுக்குருவி.
    படங்கள் எல்லாம் மிகவும் அருமைங்க.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆ....காளான்ல சூப் எல்லாம் செய்யலாமா ..
      இதுல இருக்குறத்துல ஒரு ஐட்டத்த கொண்டு போய் சூப் செய்யுங்கோ பணமெல்லாம் வேண்டாம்...:)

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  9. அடடா இத்தனை காளான்களா வியந்தேன்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா...உங்கள் வருகை தொடரட்டும்

      Delete
  10. காளான் சாப்பாடு நல்லம் எனக்கும் பிடிக்கும் சிட்டுக்குருவி இங்கே அதன் தனித்துவம் அதிகம்!

    ReplyDelete
    Replies
    1. நானும் கேள்விப்பட்டது மாத்திரம் தான் சாப்பிட்டது கிடையாது.....

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  11. காளான பற்றியெல்லாம் சொல்றீங்க...பெரிய விஞ்ஞானியா வருவீங்க பாஸ்.அருமையான தகவலும் அதற்கொப்ப படங்களும்.அருமை.சந்திப்போம்.


    காட்சிப்பிழைகள்......! ..!!!!

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசில எங்க ஆத்தா சொல்லுவா நீ பெரிய விஞ்ஞானியா வருவாய்டா பேராண்டி என்னு இப்பதான் அது உண்மையாகும் போலிருக்கு

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சந்திப்போம்

      Delete
  12. thakavakal arumai!

    padangal!

    iraivanin aththaatchikal!

    mikka nantri!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  13. அருமையான தகவல்கள் மற்றும் படத் தொகுப்பு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா உங்க தளத்தின் பக்கம் என் வருகை மிகக் குறைவாகவேயுள்ளது வேலைகள் பல விரைவில் திரும்புகிறேண்

      Delete
  14. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்....
    பார்க்கிறேன் உங்கள் தளத்தையும்

    ReplyDelete
  15. படம்+பாடம்= பிடித்தது...

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கருத்தினை சொல்லிச் சென்றதுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ...

      Delete
  16. சூப்பர் நண்பா.. நல்ல பதிவு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  17. காளான் பற்றிய தகவல்கள் அருமை!
    இந்த பச்சை நிறக் காளான் படம் போட்டோ சொப்போ???
    காளான் பொதுவாக நிலத்துக்கு மேலே தெரிவது, இங்கு ஒரு வகைக் காளான் நிலத்துள் 2 - 3 அங்குல ஆழத்தில் செந்தூர(Oak ) மர அடியில் பழக்கப்பட்ட நாய், பன்றி அல்லது அதைத் தேடிச் செல்லும் ஒருவகை இலையானைக் குறிவைத்து, அது குந்துமிடத்தைக் கிளறி எடுப்பார்கள்.
    இதை TRUFF (Truffe champignon)என பிரெஞ்சில் அழைப்பார்கள். அசப்பில் இராசவள்ளிக் கிழங்கு போல் இருக்கும். கிலோ 2000 யூரோவிலிருந்து விற்பனையாகும். உணவில்
    கிராம் கணக்கில் சேர்ப்பார்கள், பணக்காரரே வாங்குவார்கள். இணையத்தில் இதன் விபரங்கள் படங்கள், யுருயுப்பில் இதைத் தேடியெடுப்பது என்பவற்றை கட்டாயம் நீங்கள் பார்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பச்சை நிறக் காளான் படம் போட்டோ சொப்போ???//////
      இல்லை ஒரு சில நுண்ணிய கருவிகளைக் கொண்டு பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை.......

      ஆலோசனைக்கு மிகவும் நன்றி

      முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி உறவே வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம் ஆயிரம்

      Delete
  18. கலர்கலராகக் குடைகள்:)

    காளான் பற்றி நிறைந்த தகவல்கள்.

    ReplyDelete