Looking For Anything Specific?

ads header

கவியாகிய எழுதுகோல்கள்...!

 
கவியாகிய எழுதுகோல்கள்...!
 
 
காகிதங்கள் பல கொண்டு கவி எழுத ஆசைகொள்கிறேன்
காகிதங்களில் கிறுக்க எழுதுகோல் தேடினேன் 
பூமியின் கதவோரத்தில் எழுதுகோல்கள் தீர்ந்து விட்டதாக ஒரு அட்டை
 அருகிலிருக்கும் நிலாவிற்கு செல்கிறேன் எழுதுகோல் பெற்றுவர
நிலாவின் வாயிற்காப்போன் லஞ்சமாக என் காகிதங்களை கேட்கிறான்...
 
காகிதங்களை கொடுக்க மனமின்றி திரும்பிவிடுகிறேன்
பலயிடங்களில் அலைந்தும் எழுதுகோல்கள் கிடைக்கவில்லை
எனக்கான எழுதுகோலை நானே தயாரிக்க முடிவெடுத்தேன்
பிரமாண்டமாக அடுப்பினை தயாரித்து அதனுள் பொன்னையும் -
வைரத்தையும் இட்டு நீண்ட நாட்களாக காய்ச்சுகிறேன்
 
நீண்ட நாட்களாக அவைகள் ஒன்றாக இருந்ததனால் அவைகளுக்குள்
காதல் அரும்பிவிட்டது என் கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்துவிட்டன
அவைகளுக்குள் பிறந்த குழந்தைகளை  சாட்சியாக சொல்லி
தங்களை விட்டுவிடுமாறும்  மன்றாடின என்னிடம்...
 
 அவைகளை எழுதுகோல்களாக மாற்றினால் என் கவிதைகள் உயிரில்லா
கவியாகிவிடும் என்பதனால் அவைகளை விட்டுவிட்டேன் 
காகிதங்கள் மட்டும் தான் என் கைகளில் இப்போது
 எழுதுகோல்கள் தேடி  நான் வனங்களை நோக்கி செல்கிறேன் அவைகள்
சொல்லிச் சென்ற ஆலோசனைக்கு உயிர்கொடுக்க...

பலகோடி மைக்களுக்கப்பால் ஒரு வனத்தை அடைகிறேன் - பிரமாண்டமான
வனமாக அது காட்சியளிக்கிறது - இங்கு தான் பல கவிஞர்கள்
தங்கள் எழுதுகோல்களை வடிவமைத்துக் கொண்டதாக வழி நெடுகிலும் கிசுகிசுக்கள் -   வனத்தினுள் நுழைகிறேன் மிக அழகாக வடிவமைக்கப் 
பட்டுள்ளது - இன்னும் அழகூட்டல் பணிகளில் பட்டாம் பூச்சிகள்...
 
இருவர் வந்து எனை அழைத்துச் செல்கின்றனர் வன ராஜாவிடம் - பல
 கவிதைகள் தொங்கவிடப்பட்டு ராஜாவின் அறை அலங்கரிக்கப் பட்டிருந்தது...
சேமம் சேகரித்தபின் வந்த நோக்கம் நோக்கப்பட்டது என்னிடம் 
நோக்கத்தை சொல்லிமுடிக்க இருவரின் காதுகளில் ஏதோ சொல்லி அனுப்பி
வைத்தார் வன ராஜா, பின்  மின்னல் போன்ற புன்னகை ராஜாவிடமிருந்து எனை நோக்கி...
 
குற்றங்களுக்கு சுமக்கும் சிலுவையாய் ஒரு பெரிய மரத்தினை
மிகவும் சிரமப்பட்டு சிலர் ராஜாவிடம் கொண்டுவருகின்றனர்...
எனை நோக்கிய ராஜா இதுதான் உம்முடைய எழுதுகோல் என்றார்...
என்னால் இதனை நம்பமுடியவில்லை இவ்வளவு பெரிய எழுதுகோலா...?
எனக்குள் சிறிய சந்தேகம் எழ ராஜாவிடம் ...
 
இங்கு தொங்கவிடப்பட்ட கவிதைகளை எழுதியவர்கள் இப்படியான
எழுதுகோல்களினால்தான் எழுதினார்களா...? என்று கேட்டேன்
புன்னகையுடன் ஆமாம் விருந்தாளியே என்றார் ராஜா...
வியப்புடன் விடைபெற்றுச் சென்றேன் எழுதுகோலை அங்கேயே விட்டுவிட்டு
கவிதை எழுதுவதில் உள்ள சிரமம் புரிந்தவனாக...!
 
  



Post a Comment

43 Comments

  1. நண்பா எனக்கு ஓரு சந்தேகம் பதிவு எல்லாம் நீ எழுதுகிறத இல்ல கோப்பி பேஸ்ட் எனக்கு தெரிஞ்சுக்கணும் ------கோவம் படாத கவிதை எல்லாம் சூப்பரா இருக்கு அது தன் கேட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சூடான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
      என்னப்பா இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுட்ட நானாத்தான் எழுதினன் வேணும்னா என் பக்கத்து வீட்டுக்காரன் ஸ்கைப் ஐடி தாறன் கேட்டுப்பாரு நண்பா..........சும்மா :D

      Delete
  2. /////////வியப்புடன் விடைபெற்றுச் சென்றேன் எழுதுகோலை அங்கேயே விட்டுவிட்டு
    கவிதை எழுதுவதில் உள்ள சிரமம் புரிந்தவனாக/////////
    மிக அருமை நண்பா,......

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா.......முதல் வருகை என நினைக்கிறேன் உங்கள் வருகை தொடர ஆசைப்படுகிறேன்

      Delete
  3. திகட்டாத நடையுடன் தெவிட்டாத கவிதை அருமை..

    கவி எழுதுவது கடினம் என்று சொல்ல கடினமான ஒரு கவிதையை எளிமையாக எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  4. ada daa!

    poomi-
    nilavu-
    vaanam!

    sentru irukkeenga!

    nalla kavithai!

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  5. இந்த கவிதை எழுதுபவர்களைக் கண்டாலே எனக்கு பொறாமையில் கோபம் கோபமாய் வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. என்னப்பா கோபப் படுகிற அழவுக்கு அசிங்கமாவா எழுதியிருக்கிறேன் ஓ....பொறாமையில் கோபம் வருகுதா அப்ப அவ்வளவு நல்லாவா எழுதியிருக்கிறேன்........

      அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  6. சிறுகதை போன்ற ஒரு கவிதையாக உணர்ந்தேன்.
    முதல் தடவை வந்துள்ளேன்.
    நல்வாழ்த்துக் கூறிச்செல்கிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..

      முதல் வருகை தொடர்ந்தால் மேலும் உற்சாகமாகயிருக்கும்

      Delete
  7. அடடடா....
    ஒரு கவிதையே
    கவிதை வரைந்திருக்கிறது.

    வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ....

      Delete
  8. நண்பா அருமை...ஆனாலும் இப்பிடி விட்டிட்டா எப்பிடி???சிலுவையோ சிறகோ எழுதித்தான் பாருங்களேன்.பின்னாளில் சிறகாகும்....நம்மளுக்கும் ஒரு பாட்னர் கிடைச்சதா இருக்கும்.சூப்பர்மா...தொடர்நது எழுதுங்க.சந்திப்போம் சொந்தமே!!.

    ReplyDelete
    Replies
    1. நாங்க என்ன அவ்வளவு சீக்கிரத்தில விட்டுடுவோமா என்ன........ஒரு கை பார்த்துட்டுதான் விடுவோமில்ல......
      அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி உறவே......

      Delete
  9. அருமையான கவிதை பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாஸ்.....

      Delete
  10. அருமை பாஸ். சிரமத்தை சொன்னாலும் எழுதுகோலை எடுத்து வந்து விட்டதாக தெரிகிறதே.

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாஸ்...
      அட நமக்குள்ள எதுக்குப்பா மன்னிப்பு எல்லாம்...இதெல்லாம் சகஜம் தானே...

      Delete
  11. நல்ல கவிதை... தொடர்ந்து எழுதுங்கள்...
    வாழ்த்துக்கள்...(த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. அழகான உற்சாகமூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்
      வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் கூட நன்றி சார்

      Delete
  12. ஏம்ம்பா கவிதை எழுதுவது என்ன அம்புட்டு சிரமமா???? என்னமோ சொல்றீங்க

    ReplyDelete
    Replies
    1. நண்பா மறுபடியும் மறுபடியும் நமக்குள்ள பிரச்சனையாத்தான் இருக்கு.....புரியல்ல..? ஸ்பேம்...கமண்ட்..

      வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  13. அருமையான கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.....

      Delete
  14. ஓ..நீங்க அந்த மூஸாவா....சிட்டுக்குருவி.....நான் ரசிச்ச கவிதை.ஒரு கவிதை கருக்கொண்டு பிரசவமாகும் சிரமம்.அருமை அருமை !

    ReplyDelete
    Replies
    1. நான் தான் நானே தான் அந்த கூசா சீ.....மூஸா...
      அழகான கருத்துச் சொல்லி சென்றுள்ளிர்கள்
      நீண்ட நாட்களின் பின்னான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா......

      Delete
  15. வணக்கம்...

    என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_13.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் சிட்டு......!

    ReplyDelete
  17. அழகான கவிதை... அருமையான வரிகள்.. என் வலைக்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

    ReplyDelete
  18. அன்பின் சிட்டுக் குருவி

    கவிதை எழுதுவதில் உள்ள சிரமம் - பழகப் பழகச் சரியாகிவிடும். எளிதாக எழுத வரும். இக்ல்கவிதையே அழகாக அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. அற்ப்புதம்

    ReplyDelete
  20. @ திண்டுக்கல் தனபாலன்

    வணக்கம்...

    என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_13.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ///////////////////////

    அழகான ஒரு செய்தியை சொல்லிச் சென்றுள்ளீர்கள் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  21. @ Athisaya

    வாழ்த்துக்கள் சிட்டு......!
    /////////////
    மிக்க நன்றி சொந்தமே.......

    ReplyDelete
  22. @ Ayesha Farook

    அழகான கவிதை... அருமையான வரிகள்.. என் வலைக்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி
    ///////////

    அழகான கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.... முதல் வருகை இன்னும் தொடர்ந்தால் நெஞ்சத்தில் இன்னும் சந்தோச மின்னல்கள் தோன்றும்

    ReplyDelete
  23. @ cheena (சீனா)

    அன்பின் சிட்டுக் குருவி

    கவிதை எழுதுவதில் உள்ள சிரமம் - பழகப் பழகச் சரியாகிவிடும். எளிதாக எழுத வரும். இக்ல்கவிதையே அழகாக அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
    ///////////////////////

    ஐயோ உங்களைப் போன்ற அனுபவசாலிகள் பெரியவர்களின் வருகையால் என் தளம் மேலும் அழகு பெறுகிறது சார்.......

    உங்களின் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் சார்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  24. @ Gnanam Sekar

    அற்ப்புதம்
    ////////////

    அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ......
    முதல் வருகை இன்னும் தொடர்ந்தால் மிக்க சந்தோஷம்

    ReplyDelete
  25. மனகண்ணில் தோன்றாத கற்பனைகள்.. அருமையான கவிதை.............. வாழ்த்துகள் தோழரே...

    ReplyDelete
  26. வலைப்பக்கம் மூலம் என் முதல் வருகை ...

    ///காகிதங்கள் மட்டும் தான் என் கைகளில் இப்போது///


    ஏனோ என் மனதை கனமாக்கிய வரிகள் ...

    ReplyDelete
  27. @ இடி முழக்கம்

    மனகண்ணில் தோன்றாத கற்பனைகள்.. அருமையான கவிதை.............. வாழ்த்துகள் தோழரே...
    //////////////////////
    முதலாவது வருகைக்கும் உற்சாகமூட்டிச் செல்லும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தோழா.....
    முதல் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

    ReplyDelete
  28. @ ஜெயசரஸ்வதி.தி

    வலைப்பக்கம் மூலம் என் முதல் வருகை ...

    ///காகிதங்கள் மட்டும் தான் என் கைகளில் இப்போது///

    ஏனோ என் மனதை கனமாக்கிய வரிகள் ...
    //////////////////////////

    அழகான உற்சாகMஉட்டிச் செல்லும் பின்னூட்டத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.......
    முதல் வருகை இன்னும் தொடர்ந்தால் மிக்க சந்தோஷம்

    ReplyDelete