Looking For Anything Specific?

ads header

வரலாறு மறந்த இரண்டு பெண்கள்....!

இப்பதிவு முன்னர் நான் பதிவிட்ட தாஜ்மஹால் காதலின் சின்னமா...? என்ற பதிவின் தொடர்ச்சியாகும் அந்த பதிவினை ரசிக்க விரும்பியோர் லிங்கில் கிளிக் செய்து ரசித்துவிட்டு வாருங்கள். 


இதனுடம் தொடர்புடைய கடந்த பதிவில் மொகாலய அரசின் மிகப் பெரும் புள்ளியாக இருந்து பின்னர் எல்லோராலும் மறக்கடிக்கப் பட்ட தாஜ்மஹாலின் அமைவுக்கு பெரும் உரமிட்ட ஜஹானாரா வினைப் பற்றிப் பார்த்தோம். அதே போன்று தாஜ்மஹால் நிலையாக இருப்பதற்காக தன்னை அர்ப்பணித்த இன்னுமொரு மங்கையான ஜெப்உன் நிசாவைப் பற்றித்தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் என்பது போலதான் ஜெப்உன்நிசாவின் வாழ்க்கையும் ஜஹானாரா வாழ்க்கையும் உள்ளது. ஒரு வேளை தனது அத்தையின் பாதிப்புதான் ஜெப்உன்நிசாவினை இப்படி ஆக்கியதோ என்னவோ? சொந்தச் சகோதரனைக் கொன்ற கொடுங்கோலன், பிள்ளைகளிடம்கூட அன்பு செலுத்தாத தந்தை என்று அடையாளம் காட்டப்படும் ஒளரங்கசீப்பின் விருப்பத்துக்குரிய மகள் ஜெப்உன்நிசா. இந்த ஒரு விஷயத்தில் ஒளரங்கசீப் தனது தந்தை ஷாஜகானைப் போலவே நடந்துகொண்டார். மகள் மீது இவருக்கும் தீராத பாசம் இருந்திருக்கிறது.

ஜெப்உன்நிசா 1667-பிறந்தார். பெர்ஷியா, அரபி, உருது மொழிகளைக் கற்றுத்தேர்ந்து, 14 வயதிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கினார். உஸ்தாத் பயஸ் என்ற அவரது ஆசிரியர் தந்த ஊக்கத்தால் கவிதைகள் எழுதினார். நிசாவின் 21 வயதில் ஒளரங்கசீப் நாட்டின் மாமன்னர் ஆனார். தனது ஆட்சிக் காலத்தில் ஜெப்உன்நிசாவை தனது அரசுப் பணிகளை உடனிருந்து கவனிக்கச் செய்ததோடு, முக்கியப் பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து நியமிக்கும் உரிமையை அவளுக்கு வழங்கி இருந்தார்.




நீதி, வரி வசூல், கொடைகள், அண்டை நாடுகளின் உறவு போன்றவற்றைப் பற்றி விவாதிக்கும்போது தன்னுடன் ஜெப்உன்நிசாவை ஒளரங்கசீப் வைத்துக்கொண்டதோடு அவளது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். தனது அத்தையைப் போலவே இவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.


கலைகள், வானவியல், மொழி, தத்துவம், மெய்யியல் என்று ஆழ்ந்து பயின்ற ஜெப்உன்நிசா சிறந்த கவிஞராக விளங்கினார்.

'நீர்வீழ்ச்சியே
உனக்கென்ன துயரம்,
எந்த வேதனை என்னைப்போல
கல்லில் தலை மோதி இரவெல்லாம்
உன்னையும் இப்படி விம்மியழச் செய்கிறது?’
-
என்ற ஜெப்உன்நிசாவின் கவிதையில் வெளிப்படும் கவித்துவம் எவ்வளவு அழகாக இருக்கிறது!


ஒளரங்கசீப் தீவிரமான மதப் பற்றாளர். ஆனால், அவரது ஒழுக்க நெறிகளின் கடுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் திறந்த மனதோடு அனைத்து மதக் கருத்துக்களையும் தனதாக்கிக்கொண்டாள் ஜெப்உன்நிசா. ஒளரங்கசீப்புக்குக் கலைகளில் ஈடுபாடு கிடையாது. 'இசை கேட்பது காலத்தை விரயம் செய்யும் வேலை’ என்று கடிந்து சொல்லக்கூடியவர். ஆனால், ஜெப்உன்நிசா கலையிலும் இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சூபி இசை மரபு தொடர்வதற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.


அரண்மனையைச் சேர்ந்த பெண்கள் பொது விவாதங்களில், இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி கறுப்பு நிற உடை அணிந்து தனது கஜல் பாடல்களை இலக்கிய விழாக் களில் பகிர்ந்துகொண்டார் ஜெப்உன்நிசா. இவர் பாடிய 400 கஜல் பாடல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே தொகுப்பாக வெளியானது. தனது ரசனைகொண்ட கவிஞர்கள், ஞானிகளைச் சந்தித்து உரையாடுவதற்காக தனி சபை ஒன்றை அமைத்திருந்தார். அந்தச் சபையில் நாட்டின் அத்தனை முக்கியக் கவிஞர்களும் வந்து பாடியிருக்கிறார்கள்.


நிசாவுக்கு நான்கு சகோதரிகள். அவர்களில் ஜீனத் என்ற தங்கையோடு நிசா மிகுந்த நெருக்கமாக இருந்தார். இருவரும் மாறி மாறிக் கவிதைகள் பாடுவது வழக்கம். அகில் கான் ராஷி என்ற கவிஞரை நிசா காதலித்தாள் என்றொரு கட்டுக் கதை உண்டு.


அரண்மனையில் ஒரு நூலகம் அமைத்து, சித்திர எழுத்துகளை எழுதுவோர்களை உடன்வைத்துக் கொண்டு அழகான புத்தகங்களை தானே வடிவமைப்பதும், அரிய புத்தங்களை மொழியாக்கம் செய்துவைப்பதுமாக வாழ்ந்திருக்கிறாள் நிசா. தனது சேமிப்பில் இருந்து ஆண்டுக்கு நான்கு லட்ச ரூபாயை மக்கா செல்பவர் களுக்கு உதவிப் பணமாகத் தந்திருக் கிறாள். பிரதி எடுப்பதற்காக காஷ் மீரில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதங் களைக்கொண்டு தினமும் காலை நேரங்களில் தனக்குப் பிடித்தமான கவிதைகளை எழுதுவாள் நிசா.


பிரபலமான கவிஞர்கள் பலரும் தங்களது கவிதைத் தொகுப்புகளை, அவளது மதிப்பீட்டுக்காக அனுப்பி இருக்கின்றனர். அப்படி, அவள் ரசித்த கவிதைகளுக்கு சன்மானமாக முத்துக் களையும் தங்கப் பாளங்களையும் அனுப்பி கவிஞர்களை சிறப்பித்து இருக்கிறாள். இன்று பெண்கள் அணியும் குர்தா, துப்பட்டா ஆகிய வற்றை வடிவமைத்தது நிசாதான். தனக்காக அவள் பிரத்யேகமாக உருவாக்கிக்கொண்ட அந்த ஆடைதான், இந்தியாவில் இன்று பிரபலமாக விளங்குகிறது.


ஒளரங்கசீப் - ஜஹானாரா ஆகிய இருவருக்கும் இடையில் அதிகார அரசியல் காரணமாக உருவான விலகல் போலவே, ஒளரங்கசீப்பின் நான்காவது மகனான முகமதுவுக்கும் அவரது சகோதரியான ஜெப்உன்நிசாவுக்கும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த பிரச்னை உருவாகி இருந்தது. அப்பாவை எதிர்த்து தன்னைத்தானே, 'அரசன்’ என்று முகமது கூறிக்கொண்டதை நிசா கண்டித்தார். ஆனால், அவளுக்கு உள்ளூற முகமது மீது தீராத பாசம் இருந்தது. தங்களுக்கு இடையே உள்ள பிணக்கைத் தீர்த்துவைத்து அன்பு செலுத்தும்படியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்து இருக்கிறாள். 


அக்பரோடு சேர்ந்துகொண்டு தனக்கு எதிராக செயல்படுகிறாள் என்று நினைத்த ஒளரங்கசீப், நிசாவைத் தனிமைச் சிறையில் அடைத்து இருக்கிறார். வெற்றுச் சுவரைப் பார்த்தபடியே மனத் துயரில் கவிதைகள் பாடியபடியே நாட்களைக் கழித்து இருக்கிறார் நிசா.


இந்த இரண்டு பெண்களுமே தந்தையை அதிகமாக நேசித்து இருக்கிறார்கள். அவர்கள் பொருட்டு தங்களது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து இருக்கின்றனர். கலைகளும் ஆன்மிக ஈடுபாடும்தான் அவர்களின் உலகமாக இருந்து இருக்கிறது. சிற்றின்ப வாழ்வைவிட, மெய்ஞான பேரின்ப வாழ்வே பெரியது என்று தேடி இருக்கிறார்கள். அரண்மனையில் கோடானகோடி செல்வங்களும் சுகங்களும் இருக்க, அதை உதறி வெளியே வந்து எளிய மனிதராக வாழ்வது ஒரு சவால். அதை இருவருமே தங்கள் வாழ்நாளில் செய்து காட்டியிருக்கின்றனர்.





பதவி ஆசை சொந்தச் சகோதரர்களைக் கொன்று குவித்தபோது, 'நல்லவேளை நான் ஆணாகப் பிறக்கவில்லை. இல்லாவிட்டால், என்றோ நான் பிணமாகி இருப்பேன்!’ என்று ஜஹானாரா சொன்னது 100 சதவீதம் உண்மை. 


தனிமையும் வெறுமையுமாக வாழ்ந்து 1701-ம் ஆண்டு நிசா இறந்தாள். அழகான நீருற்றுகள்கொண்ட தோட்டத்தின் நடுவே அவளது கல்லறை உருவாக்கப்பட்டது. டெல்லியின் புதைமேடுகளுக்குள் இரண்டு இளவரசிகளும் புதைந்துபோய்விட்டார்கள். வரலாறு அவர்களின் நினைவுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் பெர்ஷியக் கவிதைகள் மீது ஆர்வமான யாரோ ஒரு ரசிகன் கை நிறைய ரோஜாப் பூக்களை அள்ளி வந்து அந்தக் கல்லறைகளில் தூவிக் கவிதைகளைப் பாடிவிட்டுப் போகிறான்.


டெல்லியின் ஏதோ ஒரு வீதியில் ஒரு பக்கீர் தன்னை மறந்து அவர்களின் பாடலை பாடிக்கொண்டே இருக்கிறான். அந்தக் குரலின் வழியே கவிஞர்களாக வாழ்ந்த இரண்டு பெண்களும் நினைவுகொள்ளப்படுகிறார்கள். அவர்களை அறிந்த நிலவு வானில் பழைய நினைவுகளுக்குள் புதைந்தபடியே டெல்லியைப் பார்க்கிறது. விசித்திரங்களின் நீருற்றைப் போல வரலாறு தன் இயல்பில் கொந்தளிப்பதும் உள் அடங்குவதுமாக இருக்கிறது.

From Jv by Ramakrishnan and K R Vijayan
நன்றி : TAFAREG


Post a Comment

39 Comments

  1. // , 'நல்லவேளை நான் ஆணாகப் பிறக்கவில்லை. இல்லாவிட்டால், என்றோ நான் பிணமாகி இருப்பேன்!’ // ஏனோ எல்லா அரசர்களும் தங்கள் பிள்ளைகளைக் கூட ராஜா துரோகியாகப் பார்த்திருக்கிறார்கள். எனக்கு சுத்தமாக வரலாறு தெரியாது அமைச்சரே, ஏதோ கொஞ்சம் கொஞ்சம் உங்கள் புனியத்தல் தெரிந்து கொண்டேன் .

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. சூடான வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சகோ....

      ஐயோ நான் 23ம் புலிகேசி நடிக்கல்லிங்கோ....

      Delete
  2. சரித்திரம் சரித்திரம்.....நினைவு கூறிய பகிர்வுக்கு நன்றி குருவி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி பாஸ்...:)

      Delete
  3. சரித்திரம் சொல்லும் கவிதாயினிகள் வரலாறு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  4. நீங்கள் வரலாற்றுடன் போட்டி போடுகிறீர்கள்...என் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. போட்டியெல்லாம் போடுறனா...?
      எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்
      அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  5. புதியதாக ஒரு சரித்திர தகவலை அறிய வைத்தமைக்கு நன்றி! இண்டிலியில் பரிந்துரைக்கிறேன்! அருமையான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. உற்சாக மூட்டிச் செல்லும் அழகான கருத்துக்கும் பரிந்துரைக்கும் மிக்க நன்றி தொடருங்கள்

      Delete
  6. வரலாறு மறந்த இரண்டு பெண்கள்....!
    //

    என்னாது இரு பெண்கள் மட்டும்தான் மறந்தவையோ? உஸ்ஸ்ஸ் அப்பா இப்பத்தான் நிம்மதியா இருக்கு:).
    பதிவு நல்லாயிருக்கும்போல இருக்கு, படிக்க பின்பு வாறேன்ன்ன்

    ReplyDelete
    Replies
    1. எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு அமைதியா ஆறுதலா வந்து படியுங்கோ..

      நிறையப் பெண்கள் இருக்கிறாங்க போல...சொல்லித் தாங்க அவர்களைப் பற்றியும் பதிவு போட்டுடுவோம்

      Delete
  7. வரலாற்றில் பதித்திடுக
    என நினைவுபடுத்தும் அழகிய பதிவு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்...:)

      Delete
  8. நிறைய ஈடுபாடு வந்திருக்கே.....அழகு..தொடருங்கள் சிட்டுகுருவி..!
    சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்த்னை பதிந்து உற்சாகமூட்டியுள்ளீர்கள்....
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  9. Replies
    1. அழகான கருத்துக்கும் வருகைக்குக் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்...

      Delete
  10. ஆஆ வரலாற்றுக் கதை, இப்பத்தான் படித்து முடித்தேன். சகோதரிகளின் கதை நெகிழச் செய்யுது.

    ReplyDelete
  11. Replies
    1. ஆறுதலா படிச்சிட்டீங்களா.....
      டி குடிச்சுன்னு படிச்சீங்களா இல்ல வழமை மாதிரி பூஸார பக்கத்துல வச்சிக்கொண்டு படிச்சீங்களா..? சும்மா.......

      அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பூஸார்

      Delete
  12. நல்ல இருக்கு பாஸ் ,உங்கள் கிறுக்கல் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  13. அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி. ஆட்சியாளர்களை மட்டுமே நினைவில் கொள்ளும் மக்களுக்கு இத்தகைய தகவல்களையும் கண்டிப்பாக சேர்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளிர்கள் நண்பரே..
      உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  14. sako!

    nalla thakaval enakku theriyaathathu!

    melum neengal Aurangaseep patriya muzhuvathumaaka
    theriya "varlaatru velichathil aurangaseep"se.thivaan ezhuthiya puththakam-
    vaangi padiyungal!

    pakirvukku nantri!

    ReplyDelete
    Replies
    1. புத்தகத்தினை கண்டால் நிச்சயமாகப் படிப்பேன்

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  15. இதுவரை நான் அறியாத வரலாறு! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  16. தெரியாத வரலாற்று தகவல்களையும் மனிதர்களையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  17. மென்மேலும் இதுபோன்ற சிறப்பான ஆக்கங்களைத் தொடர
    வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
      முதல் வருகை என நினைக்கிறேன் தொடருங்கள் உங்கள் வருகையை

      Delete
  18. டெல்லியின் ஏதோ ஒரு வீதியில் ஒரு பக்கீர் தன்னை மறந்து அவர்களின் பாடலை பாடிக்கொண்டே இருக்கிறான். அந்தக் குரலின் வழியே கவிஞர்களாக வாழ்ந்த இரண்டு பெண்களும் நினைவுகொள்ளப்படுகிறார்கள். அவர்களை அறிந்த நிலவு வானில் பழைய நினைவுகளுக்குள் புதைந்தபடியே டெல்லியைப் பார்க்கிறது. விசித்திரங்களின் நீருற்றைப் போல வரலாறு தன் இயல்பில் கொந்தளிப்பதும் உள் அடங்குவதுமாக இருக்கிறது./


    /இறுதி பத்தியில் தென்படும்
    கவிதைக்கேயுரிய மென்மையையும்
    ஆழத்தையும் கண்டு மெய்சிலிர்த்துப்போனேன்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. Replies
    1. உற்சாக மூட்டிச் செல்லும் கருத்துக்கும் வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  20. நீர்வீழ்ச்சியே
    உனக்கென்ன துயரம்,
    எந்த வேதனை என்னைப்போல
    கல்லில் தலை மோதி இரவெல்லாம்
    உன்னையும் இப்படி விம்மியழச் செய்கிறது?

    எவ்வளவு அழகான வரிகள்....
    கலக்கல் கட்டுரை...

    ReplyDelete
  21. ஒரு சரித்திர தகவலை அறிய வைத்தமைக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  22. ஒரு சரித்திர தகவலை அறிய வைத்தமைக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete