Looking For Anything Specific?

ads header

விடுதலையறியா விம்பங்கள்

விடுதலையறியா விம்பங்கள்


விடுதலையறியா விம்பங்கள் இன்னும் உறங்கவில்லை...
அவைகள் உறங்கியே பல நாட்களாம் இல்லை பல வருடங்களாம்
சிந்தனையில் ஆழ நனைந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில்...
அவைகளுக்குள் ஏன் இந்த காரிருள் சோகம்...

மிகைப் படுத்தப்பட்ட இரவுகள் அவைக்காய் -அவைகளிலும்
இமையசைக்க மறந்த விம்பங்கள் இன்னும் அங்குண்டு...
அவைகளின் சோகம் தீர்க்க யாருமில்லை
சோகம் தீரும் நாளையும் அவைகள் அறியவில்லை

 யாரையும் தோழனாய் நோக்கியதில்லை அவைகள்
தோழனாய் இருக்க அவைகளுக்கும் பிரியமில்லை போலும்
தோழனால் தோற்கடிக்கப் பட்டவைகளா...? இல்லை
தோழனையே தேற்கடித்தவைகளா...? அவைகளுக்கு தெரியவில்லை 

 ஒரு நாளில்... ஒரே ஒரு நாளில்... அவைகள் ஒன்றாய் சங்கமிக்கும்
அன்றுதான் வார்த்தைகளின் அழகினை இரசிக்குமவைகள்
நீண்ட நீண்ட பொழுதுகள் அவைகளுக்காய் -அன்று மட்டும்தான்...
அவைகளின் வதனங்களில் அம்புலியின் பிரகாசம் கிடைக்கும்

விடுதலை கிடைத்ததனால் வெளிப்பட்ட வெளிச்சமா அது...?
விடுதலை என்ற சொல்லை பிறப்பிலேயே தொலைத்துவிட்டனவே அவைகள்
பின் எதனால் ஏற்பட்ட பிரகாசமது...? - அதற்காகத்தான் இந்த
துயில்துறப்பும் தோழமையிழப்பும்...

இரவுகளின் இரசனையை மறந்து - பின்னிருள்
துயிலின் இன்பத்தை மறந்து - பிரகாசம் போய்விடுமோவென அஞ்சி
இமைக்காமல் காத்திருக்கின்றன
யாரோ -எப்பவோ- என்றோ சொன்ன பிரகாசத்துக்காய்...




Post a Comment

29 Comments

  1. ஆஆஆஆஆ நான் தான் இண்டைக்கு 1ஸ்ட்டு... பறவுங்கோ சிட்டு சே..சே.. நில்லுங்கோ படிச்சிட்டு வாறன்:).

    ReplyDelete
    Replies
    1. ஆ........இன்னைக்கு சுட சுட வந்திருக்கிறீங்க....

      இருங்க ஒரு ஸ்பெசல் கிப்ட் தாரேன்......

      Delete
  2. Replies
    1. எது நண்பா........வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. வித்தியாசமாக இருக்கு கவிதை. படங்கள்தான் ஒரு மாதிரி இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. தூக்கிடுவோமா.........படத்த சொன்னன்...

      Delete
  4. பிரகாசம் போய்விடுமோவென அஞ்சி
    இமைக்காமல் காத்திருக்கின்றன
    யாரோ -எப்பவோ- என்றோ சொன்ன பிரகாசத்துக்காய்...///

    நல்ல வசனம், நம்பிக்கையான எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிடாமல் இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்............அப்ப பேசாம சினிமாவுக்கு வசனம் எழுதப் போகட்டா........:)

      அழகான கருத்துக்களை சொல்லி சென்ற அன்பு பூஸாருக்கு மிக்க நன்றிகள்

      Delete
  5. சோகம் தீரும் நாளையும் அவைகள் அறியவில்லை

    யாரையும் தோழனாய் நோக்கியதில்லை அவைகள்
    தோழனாய் இருக்க அவைகளுக்கும் பிரியமில்லை போலும்
    தோழனால் தோற்கடிக்கப் பட்டவைகளா...? இல்லை
    தோழனையே தேற்கடித்தவைகளா...? அவைகளுக்கு தெரியவில்லை /////////

    siddu kuruwe....amazing lins dr

    ReplyDelete
    Replies
    1. ஆங்.............அவ்வளவுக்கு நல்லாவா எழுதியிருக்கிறேன்.

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சொந்தமே...

      Delete
  6. சிட்டுக்குருவி... ஏன் இந்தச் சோகம்....?

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஒரு ......இது....க்குத்தான்

      எதுக்கின்னு மட்டும் கேட்டுடாதீங்க...

      Delete
  7. இது புது பரிணாமமா ? சிட்டுக்குருவியை இப்படிப்பார்த்ததில்லை...அழகு..

    ReplyDelete
    Replies
    1. ஐயோ நிஜமாவா........புதுசுதான் ஆனா....:( சொல்ல மாட்டேன்

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  8. நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்......உங்கள் வருகை தொடரட்டும்

      Delete
  9. //இமைக்காமல் காத்திருக்கின்றன
    யாரோ -எப்பவோ- என்றோ சொன்ன பிரகாசத்துக்காய்...//

    நல்ல நல்ல வார்த்தைப் பிரயோகம் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா......

      Delete
  10. Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  11. ம்ம்ம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம்வேதனையை மட்டும் தந்து செல்கின்றது !

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.....

      Delete
  12. ஃஃஃஃஇரவுகளின் இரசனையை மறந்து - பின்னிருள்
    துயிலின் இன்பத்தை மறந்து ஃஃஃஃ

    நன்றாக இருக்கிறது சகோ... ஒரு முறை பிளேக்கின் கவிதைகளை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிளேக் பற்றி தெரியவே தெரியாது.....:(
      இனிமேல் தெரிந்து கொள்கிறேன்

      அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாஸ்...

      Delete
  13. சந்தர்ப்பம் கிடைத்தால் படித்துப்பாருங்கள சகோ.... அவரது பெரும்பான்மையான கவிதைகளில் ஒருவித புரட்சியும் அதை புனைபவனின் இயலமை ஏக்கமும் ஒன்று சேர பிரதிபலிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அதற்கென குறிப்பிட்ட கொஞ்ச நேரத்தை ஒதுக்குகிறேன்.......

      அவர் தொடர்பான லிங்குகள் இருந்தால் எனக்கு தந்தால் பிரயோசனமாக இருக்கும்...

      நன்றி சகோ...

      Delete
  14. மன்னிக்கணும் சகோ தேடிப் பார்த்தேன் விக்கிபீடியாவில் அவர் கட்டுரை மட்டுமே இருக்கிறது அவரது முழுப் பெயர் வில்லியம் பிளேக்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
      நானும் தேடிப்பார்த்தேன் விக்கிபீடியாதான் முன்னால வந்தது...
      விக்கியில் சில உசாத்துணை லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளில் சென்று படித்துக் கொள்கிறேன்.

      மிக்க நன்றி சகோ...

      Delete
  15. விடுதலையறியா விம்பங்கள் இன்னும் உறங்கவில்லை...
    அவைகள் உறங்கியே பல நாட்களாம் இல்லை பல வருடங்களாம்
    சிந்தனையில் ஆழ நனைந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில்...
    அவைகளுக்குள் ஏன் இந்த காரிருள் சோகம்...-----///////////////////////////////////////////பாஸ் நீங்க எங்கயோ போயிட்டிங்க அருமையான வரிகள் ரூம் போடாமலே யோசிச்சு இருக்கிங்க

    ReplyDelete