குரல் கள்வன்...!


என் குரல் இனிமையானது  மிக மிக இனிமையானது
என் குரலை வெல்வதற்கு  இந்த அற்ப உலகில் யாரும் கிடையாது


நான் பேச ஆரம்பித்தால் எல்லோரும் மௌனமாகிவிடுவர்
நான் பாட ஆரம்பித்தால் மலைகளும்,விலங்குகளும், புற்களும்
மான் கூட்டமும், பறவை கூட்டமும்,வாய்பிளந்து
என் பாட்டை ரசித்து மெய் மறந்துவிடுவார்கள்.

ஆயிரம் முயல்களும்,இன்னுமாயிரம் யானைகளும்
கன்னி பிரசவ வலியை மறந்து என் குரலொலியை ரசித்துக் கொண்டன
பெருமை என்னை ஆட்சி செய்ய ஆயிரம் சந்தர்ப்பங்கள் இருந்தன
தந்திரம் பேசுபவைகளும்...மானத்துக்காய் உயிர்விடுபவைகளும்
எனக்குச் சமமே... எல்லோரும் எனக்குச் சமமே

பல விருதுகளை ராஜாக்களும் பல விருதுகளை மனிதர்களும் கொடுத்தனர்
சிறிசுகளிடமும் பெரிசுகளிலுடமும் அன்பாகவே பழகினேன்
விருதுகளென்னை கர்வம் கொள்ளச் செய்யவில்லை.
மனிதர்களின் உறவு எனக்கு மேலும் உற்சாக்கத்தையளித்தது.

எனக்கு எங்கு செல்வதற்கும் அனுமதியளித்தது அரசு
சுதந்திரமாய் பல நாடுகள் கண்டங்கள் என என் கச்சேரிக்காய் நான்...
நிற  குல சாதி பேதங்கள் எதுவும் எனக்கு எதிராயில்லை
மனதில் எந்த ஐயமுமில்லை கவலையுமில்லை.

ஆயிரம் வருடங்கள் வாழ்வாய் என வாழ்த்தியது வௌவால்
என் குரலிற்கு அழிவே கிடையாது என்றது மழலை மான் குட்டி
எந்த கச்சேரிக்கும் முகம்சுழியாமல் நடனமாடிய மயில்கள்
நீயொரு அதிச பிரவி என்று தோல்களில் வைத்து என் வீடு சேர்த்தது.

எனக்கென்று வீடுயில்லை, எல்லா வீடுகளும் என் வீடுகளே
எனக்கென்று உறவுயில்லை, எல்லா வீட்டிலும் செல்லப்பிள்ளை நானே
நானாக நானிருக்கும் போது என் நிறமெனக்கு குறையாகவில்லை.
குயில்கள் தான் எனது விளையாட்டு நண்பர்கள்

மரமுமில்லா காற்றுமில்லா ஒரு இரகசிய இடத்தில் எனக்கென பாராட்டுவிழா
ஆசையாய் அழைத்தனர் ஆறுதலாயிருந்த ஆமைகள்
பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தனர் ஒட்டகச் சிவிங்கிகள்
செங்கம்பளத்தில எனை கூட்டிச் சென்றனர் செம்பேறியாடுகள்.

விழாவில் பக்கத்து நாட்டு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
எனக்கென மட்டுமே அவ்விழா ஏற்படுத்தப் பட்டிருந்தது.
சிட்டுக்குருவிகளும் தங்களுக்குள் பேசியும் சிரித்தும் கொண்டன
குயில்கள் தான் உணவுகளை பரிமாரிக் கொண்டிருந்தன.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை என் நண்பர்களே எனக்குத் தெரிந்தனர்
எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது எல்லோரும் சந்தோஷமாயிருந்தனர்.
என்னை உணவுண்ண அழைத்தனர் குயில்கள் ஆனாலும் எனக்குள் சந்தோஷம்
குயிலினத்தில் எல்லோரும் வந்திருந்தனர் அனைத்தினக் குயில்களும்.

சொர்க்க உணவுகளை எனக்காக வரவழைத்திருப்பதாய் பேசிக் கொண்டனர்
உணவுகளும் ஒரு வித்தியாசமான சுவையினை தந்தது...
என் வாழ்நாளில் இப்படியான ஒரு உணவினை நான் சுவைத்தது கிடையாது.
அனைத்தையும் சாப்பிட்டேன் சிறிதும் வைக்கவில்லை...

சாப்பாட்டின் பின் பிரதான உரையினை நிகழ்த்த எனையழைத்தனர்
எங்கும் ஒரே கைதட்டலாகயிருந்தது மண்புழு கூட எட்டியெட்டி பார்த்ததெனை
கைகளையசைத்து அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு பேசினேன்
மேடையெங்கும் ஒரே கற்களாக வந்து குவிந்தன...என்னயாச்சு இவர்களுக்கு...

ஒரு நிமிடம் நிதானமாகி என் குரலை நானே கேட்டுப் பார்த்தேன் 
சகிக்கவில்லை என்னால் என் குரலை ரசிக்க முடியவில்லை
அருவருப்பான சத்தம் என்னிலிருந்து என் குரலிலிருந்து...
என்னயாச்சு எனக்கு சாப்பிடும் முன் வரை நன்றாகத்தானிருந்தேனே...

சிந்தித்தேன்...ஆழ்ந்து சிந்தித்தேன்...குயில்களை நோக்கினேன்..
பெரிய மலைகளை பெயர்த்து சிறு சிறு கற்களாக்கிக் கொண்டிருந்தன குயில்கள்
புரிந்து கொண்டேன் உணவிலே எனையேமாற்றி என் குரலை பறித்து விட்டனர்
இந்த மேடைதான் என் இறுதி கச்சேரியாயிருக்குமென்பதை நான் உணர மறந்துவிட்டேன்.

குயில்களுக்கு என் மேல் ஏன் அவ்வளவு கோபம்...பொறாமை
இவையெல்லாம் மனிதர்களிடமிருப்பதாகவே கேள்விப்பட்டேனே
ஆசைக் குயில்களை கோபமாயழைத்து திட்டினேன்...
மனதுக்கு நிம்மதியில்லை மீண்டும் மீண்டும் திட்டினேன்...சபித்தேன் 
மீண்டும் மீண்டும் சபித்தேன்...என் சாபம் பலித்து விட்டது

குயில்கள் என்னிடம் பேசமுடியாமல் தவித்தன...அவைகள்
என்னிடம் மன்னிப்பு கேட்க எத்தனித்தன ஆனால் முடியவில்லை அவைகளால்...
அவைகளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூ...கூ...கூ...என என் காதில் ஒலித்தது

நானும் மன்னிப்பு கேட்க எத்தனித்தேன் அவைகளிடம் என் சாபம் பலித்தையெண்ணி...
ஆனால் என்னாலும் அவைகளிடம் பேச முடியவில்லை...என் குரல் அவைகளின் காதுகளில்....கா...கா....கா....எனவேயொலித்தது...
34 கருத்துரைகள்

ஒரு புறாவுக்கு அக்கபோறா என்பது போல் காகத்திற்கு இவளவு பில்ட் அப் ஆ இருந்தும் சூப்பர் நண்பா

Reply

காகத்தைப் பற்றி அற்ப்புத படைப்பு...

Reply

என்னாச்சு சிட்டுவுக்கு?:)

அழகாகத்தான் இருக்கு கவிதை.. ஆனா இது எதுக்கோ எழுதப்பட்டதுபோல இருக்கே எனக்கேதும் புரியவில்லை...

Reply

எழுத்துப் பிழைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கே இம்முறை.. கவனியுங்க.

முடிவு + இல்லை = முடிவில்லை.

Reply

என் குரல் இனிமையானது மிக மிக இனிமையானது
என் குரலை வெல்வதற்கு இந்த அற்ப உலகில் யாரும் கிடையாது//

கரீட்டு:)

Reply

//நான் பேச ஆரம்பித்தால் எல்லோரும் மௌனமாகிவிடுவர்
//

வேறு வழி?:)))))

Reply

//என் குரல் அவைகளின் காதுகளில்....கா...கா....கா....எனவேயொலித்தது...//

அது 1ஸ்ட் இம்பெரெஷனாக இருக்குமோ?:)) முதல் முதல் நடப்பதை, மாற்றி எடுப்பது கொஞ்சம் கஸ்டமாச்சே:))

Reply

என்னதான் காக்காவை காக்கா பிடிச்சாலும் சனிதேஷம் விட்டுப் போகாதே..ஹ ஹ ஹ ஹா...வித்தியாசமான சிந்தனைதான்.வாழ்த்துக்கள் சகோ.

Reply

சூடான வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
ஏதோ வடிவேல் பாணில ஒரு கவிதை சொல்லுவமே என்னுதான் இப்பிடி...:)

Reply

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

ஐயோ.....பூஸாருக்கு புரியெல்லையாம்...
கவிதையெல்லாம் புரியாது என்னு சொல்லுவாங்க...
அப்போ நான் எழுதினது கவிதையா....:0000

Reply

எழுத்து பிழையா....யாரோ எனக்குத் தெரியாம என் பதிவுல திருவிளையாடல் பண்ணிட்டான்
யாராச்சும் போலீச கூப்பிடுங்க...இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்த்திடனும்..

எனக்கு புரியவில்லை எவ்விடத்தில் எழுத்துபிழையென....:(

Reply

மடக்கி மடக்கி காக்கா மேல லவ்ஸ்...

Reply

அட இதுக்கும் பதில் எழுதனுமோ....

Reply

அதுதானே...போன பதிவுல நான் ரவுடியாகிட்டேன் என்னு எனக்கு பதவியுயர்வு தந்தாங்களே....

Reply

ஆஹா.........
காக்கா புடிக்க எங்களுக்கே ஐடியாவா...:)))
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ..

Reply

நல்லதொரு வார்த்தையை பதிந்தமைக்கு மிக்க நன்றி பாஸ்

Reply

அட உண்மைய சொல்லாதீங்கப்பா.....
எனக்கு வெட்கம் வெட்கமா வருகுது....:)))

Reply

காக்கா கவிதை சூப்பர் நண்பா.....!நம்மளயும' அப்பப்போ இப்படித்தான் அன்பாய் அழைக்கிறார்கள்..!

Reply

ada daa!

nalla padaippu nanpaa!

nantri!

Reply

நல்லா புடிக்க ச்சே படிக்க வச்சிங்க காக்கா..

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

அட......உண்மையான பெயர அடிக்கடிதான் கூப்பிடுறாங்களா...
ரொம்ப குசும்புக்காரங்க போல

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

ஹஹஹா சூப்பர் எங்க பாஸ் கோப்பி அடிச்சிங்க எங்களுக்கும் கொஞ்சம்

சொல்லி குடுங்க

Reply

வித்தியாசமா வகையில் எழுதி இருக்கிறீர்கள். சிறிய விஷயத்தை அருமையாக கற்பனை செய்து வடித்திருக்கிறீர்கள்.

Reply

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

ஆஹா....இன்னமுமா காக்கா புடிக்கிறீங்க...

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

எங்க பாஸ் கோப்பி அடிச்சிங்க////

கோப்பி குடிச்சிப்போட்டு தான் இந்த பதிவ எழுதினன் பாஸ் எப்புடி கண்டுபுடிச்சீங்க...

Reply

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

சிட்டுக்குருவி.... என்னாமாதிறி எழுதிட்டீங்க போங்க....

Reply

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி......சகோ..

Reply

Post a Comment