புரியாமல் புரிகிறது....!


விழியுனுள் விழியாக உனைவைத்து
உன் விழிநீர் சிந்தாமல் பார்த்திட
காத்திருக்கிறேன் இன்னுமொரு
முடிவில்லா வாழ்க்கையை எதிர்பார்த்து

முடிவில்லா வாழ்க்கைதேடி 
மூலதனமாய் என் வாழ்வையிட்டு
முழு வாழ்வையும் இழந்துவிட்டேன்
கிடைக்கவில்லை முடிவில்லா வாழ்க்கை

இனிமேலும் இழப்பதற்கு 
எதுவுமற்றவனாய் திரும்புகிறேன்
கதவோரத்தில் காத்திருக்கிறாய்
உன் வாழ்வுதந்து எனை மீட்க

எனக்காக உயிரையே தருவதாக
கூறிச் செல்கிறாய்
உன்னுயிர் என்னிடமிருக்க
புரிந்துகொண்டேன்
நீ புலம்புவது பொய்யென

நானேதும் உனக்காக செய்ததில்லை
நீயோ எனக்காக எதனையும் செய்கிறாய்

சொல்லிவிடு நீ யார்...?  காதலியா...?
இல்லை என் அன்னையா...?


34 கருத்துரைகள்

படம் + வரிகள் = அசத்தல்...

Reply

நானேதும் உனக்காக செய்ததில்லை
நீயோ எனக்காக எதனையும் செய்கிறாய்
சொல்லிவிடு நீ யார்...? காதலியா...?
இல்லை என் அன்னையா...?//

அருமை அருமை
தெளிவாகப் புரிகிறது
தொடர வாழ்த்துக்கள்

Reply

eppudi sir!

asathideenga...!

Reply

// எனக்காக உயிரையே தருவதாக
கூறிச் செல்கிறாய்
உன்னுயிர் என்னிடமிருக்க
புரிந்துகொண்டேன்
நீ புலம்புவது பொய்யென//

அருமை! இவள் காதலியல்ல! அன்னை தான்.

சா இராமாநுசம்

Reply

த ம ஓ 2 சா இராமாநுசம்

Reply

ஐ.. கவிதை.. காதல் கவிதை

Reply

குருவியாரே

கவிதை நல்லா இருக்கு பிடிச்சிருக்கு - வாழ்த்துக்கள்

Reply

///////////நானேதும் உனக்காக செய்ததில்லை
நீயோ எனக்காக எதனையும் செய்கிறாய்
சொல்லிவிடு நீ யார்...? காதலியா...?
இல்லை என் அன்னையா...?////////
அருமை

Reply

சூடான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...

Reply

அழகான அருமை என்ற வார்த்தையில் அனைத்து சந்தோசத்தையும் அள்ளித்தந்த உங்களுக்கு நன்றிகள்

Reply

உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

நன்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

ஐயா உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் தான் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உற்சாகமூட்டுகிறது...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

நோ இது ஐ கவிதை இல்லை.....மை கவிதை....:)

வருகைகும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

வாங்க சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Reply

உங்கள் வருகை முதல் வருகை என்று நினைக்கிறேன் அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி..
தொடர்ந்தும் உங்கள் வருகை தொடரட்டும்...:)

Reply

அன்னைக்கான வரிகள் அற்புதம் .

Reply

அருமை கவிதைங்க சிட்டுக்குருவி.

Reply

உங்கள் வாக்கு அன்னைக்கு விழுந்துள்ளது...:)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ...

Reply

கவிதையில் அனுபவமிக்க உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Reply

நிச்சயம் அன்னைதான் சிட்டுக்குருவி ம்ம் ரசித்தேன் கவிதையை கொண்டுவந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய் தாய்தான் !ம்ம் மனோகரா வசணம் ஞாபகம் வருகின்றது!

Reply

நல்ல கவிதை சிட்டுக்குருவி தொடருங்கள் இலக்கிய வானில் பொத்துவில் இன்னொரு கவிஞன் எங்கள் சிட்டுக்குருவி என்று கொண்ட்டாட! வாழ்த்துக்கள்§

Reply

// உன்னுயிர் என்னிடமிருக்க
புரிந்துகொண்டேன்
நீ புலம்புவது பொய்யென//

ஹா ஹா நல்ல சிந்தை அய்யா உமக்கு. நீரும் பெரிய கவிஞர் ஆகி விடீரோ


படித்துப் பாருங்கள்

வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

Reply

அன்னைக்கு மறுபடியும் வாக்கு....:) உண்மையில் அன்னைக்கு இணை யாருமில்லை இந்த உலகத்தில்

Reply

அட அவ்வளவுக்கு நல்லாவா இருக்கு ....:0

Reply

நம்மல் உசுப்பேத்தி உசுப்பேத்தி கவிஞனாகவே மாற்றிவிடுவாங்க போலிருக்கே....:) அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி பாஸ்

Reply

இனிமேலும் இழப்பதற்கு
எதுவுமற்றவனாய் திரும்புகிறேன்
கதவோரத்தில் காத்திருக்கிறாய்
உன் வாழ்வுதந்து எனை மீட்ஃஃஃ

சிட்டு கலக்குற பாஸ்........
அற்புதம்...அம்மா◌ா◌ா

Reply

ஆஹா...... நீங்க வேற....:)....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..தொடர்ந்தும் உங்கள் வருகை தொடரட்டும்

Reply

கட்டாயமாய் வருவேன்.

Reply

அசத்திவிட்டீர் சிட்டுக் குருவியாரே...

Reply

Post a Comment