முன்னுதாரண இலக்கியவாதி கவிஞர் அஸ்மின்...

சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லோரும் சரியாக பயன்படுத்துவதுமில்லை,சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டவன்
தன் இலக்கில் தளம்பாது உறுதியாக இருந்து வெற்றியினை கண்டுகொள்வான்.

எதுக்கு இப்ப மூஞ்சிய உம்ம்ம்ம்ம்ம்ம் என்னுவச்சிக் கொண்டு இந்த சீரியஸ் மேட்டர சொல்லுர என்னு கேக்குரீங்களா...:) பின்னாடி வாசிச்சிகிட்டே வாங்க எல்லாம் தானா புரியும்

நான் ஒன்பதாவது படிக்கிறப்போ என்று நினைக்கிறேன் ஸ்கூல் காலைக்கூட்டத்தில எங்க ஸ்கூல் பிரின்சிபல் உரையாற்றும் போது எங்க ஸ்கூல் மாணவன் ஒருவன் கவிதைப் போட்டியில அகில இலங்கை ரீதியா முதலாமிடம் பெற்று ஜனாதிபதி விருதினை தன் வசப்படுத்தி எங்கள் பாடசாலைக்கும் எங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார் என்று கூறியது எனக்கு இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

இத மட்டும் சொல்லிவிட்டு காலைக் கூட்டத்த முடிக்காம இன்னுமொரு விசயத்தையும் பிரின்சிபல் சொன்னார்......நான் உங்க எல்லோருக்கிட்டயும் ஒன்னு சொல்லுறன் எல்லோரும் படிப்புல நல்ல திறமையா இருக்கிறயல் என்னு எனக்கு தெரியும் அதே போல் ஏனைய பிற செயற்பாடுகளிலும் உங்கள் திறமைகளை வெளிக்காட்டி இந்த மாணவனைப் போல் அகிலம் போற்றக் கூடிய மாணவர்களாக நீங்களும் மாறவேண்டும். என்று கூறினார்.


அப்பவே இந்த கவிஞன் எங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்தார்.

அந்தக் கவிஞன் வேறு யாருமில்லை இன்று ஈழத்து இணையத்தளங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் மக்கள் மனதை சுவீகரிக்கும் அளவுக்கு கவிதைகளைப் படைத்து, பல விருதுகளையும் சர்வதேச ரீதியில் பல பாராட்டுக்களையும் பெற்று நான் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினி உலகுக்கு பாடலாசிரியராக அறிமுகமாகும் கவிஞன் பொத்துவில் அஸ்மின் தான்.

கல்லூரி காலங்களின் போதும் கவிகளை படைத்து அன்று கல்லூரிகளில் நடைபெற்ற வருடாந்த விழாக்களிலும் தன் கவித் திறமையைக் காட்டி பல ஆசிரியர்களின் பாராட்டுக்களை பெற்றவர் இன்று உலகம் போற்றும் கவிஞனாக மாறியிருப்பதில் எனக்கும் மனம் நிறைந்த சந்தோசம்.

"என்ன தவம் செய்தாயோ" இது தான் இந்த கவிஞனை எனதூரிலிருந்து பிரித்துச் சென்ற கவிதை. 2000ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ம் திகதி வெளியான  தினக்குரல் பத்திரிகையின் மூலம் இந்த கவிதைக்கு முதல் அங்கிகீகாரம் கிடைத்தது.

விடைதேடும் வினாக்கள் (2002),விடியலின் ராகங்கள் (2003) எனும் இரண்டு பொக்கிஷங்களை நூல் வடிவில் இந்த உலகிற்கு தந்தார் கவிஞன் அஸ்மின்.மீசை அரும்ப தொடங்கிய அந்த பள்ளிப் பருவத்தில் கண்ணுக்கு காதலியாக தெரியும் பெண்ணின் முன் நல்ல பெயர் எடுப்பதற்காக விடியலின் ராகங்களை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் பொறுப்பை நானாகவே ஏற்றுக்கொண்டேன்...:)

எனதூரில் மூத்த கவிஞர்கள் பலர் இருக்கின்றனர் இருந்த போதும் அவர்களால் வெளியிடப் பட்ட கவிதை நூல்களைவிட விடியலின் ராகங்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதை அஸ்மின் அறிந்திருக்காவிட்டாலும் எனக்கு நன்றாகத் தெரியும்.அப்போதே பலர் என்னிடம் விடியலின் ராகங்கள் பற்றி பலவாராக பேசியுள்ளனர்.என்னையும் ஒரு கவிஞன் என கருதிவிட்டனர் போல..:( பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது என்று இதைத்தான் கூறுவார்கள் போல...:)

இதற்கிடையில் மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்தமாக அஷ்ரப் ஞாபகார்த்த இலக்கிய மன்றம் ஒன்றினை உருவாக்குவதற்கான பணிகளில் அஸ்மின் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார் இந்த காலப்பகுதியில் நான் உயர்தர கல்வியினை கற்றுக் கொண்டிருந்தேன் என்னுடைய பங்கிற்கு அஸ்மினிடமிருந்து பெற்ற மன்றத்தின்  அங்கத்துவப் படிவத்தினை என்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களையும் அங்கத்துவர்களாக சேர்த்துக் கொண்டோம் .

ஏனோ சில பல காரணங்களினால் தொடர்ந்தும் மன்றத்தினை நடாத்த முடியாமல் போய் விட்டது. பிரதானமாக காரணமாக இந்த காலப் பகுதியில் அஸ்மினுக்கு சுடர் ஒளியில் கவிதை பகுதிக்கு ஆசிரியராக பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததினை கூறலாம்.

இருவரும் ஒரே தெருவில் வசித்தாலும், முக்கிய தினங்களில் மாத்திரமே சந்திக்கக் கூடியதாகத்தான் சந்தர்ப்பங்கள் அமைந்தன.

சுடர் ஒளியில் ஆசிரியராக பணியேற்றதிலிருந்து அஸ்மினின் இலக்கியப் பயணம் புதுப்பாதையினை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.குறிப்பாக சக்தி தொலைக்காட்சியின் மூலம் நடாத்தப்பட்ட இசை இளவரசர்கள் போட்டியில் பாடலாசிரியராக போட்டி போட்டு  பாடலாசிரியருக்கான அங்கீகாரத்தையும் சக்தி தொலைக்காட்சியின் மூலம் பெற்றுக் கொண்டதினை குறிப்பிடலாம்.

பின் இசை இளவரசர்கள் குழுவில் இவரோடு சேர்ந்து பாடகராக போட்டியிட்ட  கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் அஸ்மினின் பாடல் வரிகளில் இடம்பெற்ற காந்தள் பூக்கும் தீவிலே...பாடலுக்கு கிடைத்த அங்கீகாரத்தினை சொல்வதில் எந்திவித ஐயமும் கொள்ளத்தேவையில்லை.

அதன் பின் அஸ்மினுக்கு கிடைத்த விருதுகளும் பாராட்டுக்களையும் இங்கு சொல்லப்போனால் பதிவு நீண்டுகொண்டே போகும் அதனால் அவற்றினை மொத்தமாக தொகுத்து தரலாம் என நினைக்கிறேன்.குறிப்பாக மலேசியாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் மலேசியத் துணையமைச்சர் டத்தோ சரவணினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டதினை இவ்விடத்தில் கூறாமல் விட்டுவிட முடியாது.

இவற்றுக்கெல்லாம் மேலாக கவிஞர் அஸ்மினுக்கு கிடைத்த மிகப் பெறும் அங்கீகாரம்தான் தென்னிந்திய சினிமாத்துறையில் பாடலாசிரியராக பணியாற்றுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை குறிப்பிடலாம். இதற்கு முன்னரும் இயக்குனர் கேசவராஜனின் பனை மரக்காடு எனும் திரைப்படத்துக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளமையும் இவர் பாடல் எழுதுவதில் கொண்ட அனுபவத்துக்கு உதாரணமாக சொல்லலாம்,

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தான் நான்.இதில் இசையமைப்பாளர் விஜய் புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தான் இசையமைத்த மெட்டுகளுக்கு ஏற்றவாறு யார் பாடல் எழுதுகிறார்களோ அவர்களின் பாடல்களை தன்னுடைய படத்தில் சேர்த்துக் கொள்வதாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். 

போட்டிக்கு வந்த பாடல்களைப் பார்த்து இசையமைப்பாளர் திகைத்துப் போய் பின் எப்படியோ ஒரு பாடலை தெரிவுசெய்துவிட்டார். அந்த பாடலை எழுதி போட்டியில் வெற்றிபெற்று திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமாகும் வாய்ப்பினை கவிஞர் அஸ்மின் பெற்றுக் கொண்டது இலங்கையின் இலக்கியத்துறைக்கும் எனதூரின் இலக்கியவாதிகளுக்கும் அவர் செய்த கௌரவமாகவே என்னால் கருதப்படும்.

இந்த உலகுக்கு அஸ்மினால் விரைவில் கொடுக்கப்படவுள்ள படைப்புக்கள்

 • ரத்தம் இல்லாத யுத்தம் (கவிதை)
 • ஈழநிலாவின் உணர்வுகள் (சுடர் ஒளி வாரவெளியீட்டில் 50வாரமாக பிரசுரமான உணர்வுகள்)
 • நிலவு உறங்கும் டயறி (சிறுகதை)
 • கவிஞர் அஸ்மின் பாடல்கள்.
இதுவரை இவர் பெற்ற விருதுகள்


 • ஜனாதிபதி விருது (2001)
 • சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (2010)
 • சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (2011)
 • இசை இளவரசர்கள் விருது (2008)
 • அகஸ்தியர் விருது (2011)
 • கலைமுத்து விருது (2011)
 • கலைத்தீபம் விருது (2011)
 • 6வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவ விருது (2011)
 • அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத்தின் கௌரவ விருது (2011)
 • ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய பேரவையின் கௌரவவிருது (2011)
 • பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் (2003)
 • லக்ஸ்டோ ஊடக அமைப்பின் 'தங்கப்பதக்கம்' (2011)


இவர் கௌரவிக்கப் பட்ட இடங்கள்


 • மலேசியாவில் 2011 இல் நடைபெற்ற 6வது உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை பாடினார். மலேசியத் துணையமைச்சர் டத்தோ சரவணன் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.
 • இலங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 26.6.2011 அன்று பொன்னாடை போர்த்தப்பட்டு அகஸ்தியர் விருதும் கலைத்தீபம் பட்டமும் வழங்கப்பட்டன.
 • லக்ஸ்டோ ஊடக அமைப்பினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 26.6.2011 அன்று 'தங்கப்பதக்கம்' வழங்கப்பட்டு கலைமுத்து பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டார்.
எனதூர் மக்களினால் கௌரவிக்க பட்ட போது

இன்னும் பல பரிசில்களையும் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் அவற்றினை இவ்விடத்தில் பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். 

எனதூரில் இலை மறை காய்களாக இருக்கும் ஏறாளமான கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக கவிஞர் அஸ்மின் இருக்க வேண்டும்.அதே போன்று இலங்கையில் உள்ள இளம் கவிஞர்களுக்கு நல்ல கருத்துக்களையும் கவிதைகளையும் கொடுத்து இலக்கிய உலகில் புதிய மைல்கல்லை எட்டவேண்டும், என்பதுடன் அவர்களுக்கு தேவையான அறிவுறைகளையும் வழங்கி எமது நாட்டினில் சிறந்த படைப்பளிகளை உருவாக்க உதவிசெய்ய வேண்டும் என்பது எனது அவா.

இதில் முக்கியமாக ஒரு விடயத்தை சொல்ல வேண்டும், மரபுக் கவிதைகளை எழுதுவதினையே தனது சிறப்பம்சமாக கொண்டுள்ள அஸ்மின் தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பாணியாற்றுகிறார்.

அஸ்மினுக்கு வாழ்த்துப்பாட என்னால் அவரைப்போல் கவி எழுத தெரியாது.என்னால் முடிந்த சிறிய வாழ்த்தாகத்தான் இந்த பதிவினை பதிவிடுகிறேன்.


வித்தியாசமான நிறங்களில் காட்டப்பட்டிருப்பவற்றில் சிலவற்றிற்கு லிங் கொடுத்துள்ளேன் அவசியப் படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உதவியது. விக்கிபீடியா மற்றும் கவிஞரின் இணையத்தளங்கள்.

புகைப்படங்களின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.22 கருத்துரைகள்

கவிஞர் அஸ்மின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் - மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தகவலை பகிர்ந்து பதிவு செய்த நண்பர் சிட்டுகுருவிக்கு நன்றி

Reply

maasha allaah!

oru vairathai enakku arimukam-
seytha ungalukku mikka nantri!

Reply

உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா...

Reply

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

அஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்////

Reply

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

Reply

கவிஞர் அஸ்மின்னைப் பற்றி
பெருமிதத்துடன் பதிவிட்ட
சிட்டுக்குருவிக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.

Reply

சிறப்பான ஒரு அறிமுகத்துக்கு நன்றி.
கவிஞருக்கு வாழ்த்துகள்.

Reply

கவிஞருக்கும், அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள் பல...

Reply

VOW...He has flown under the radar...இவ்வளவு நாள் தெரியலையே...கவிஞர் அஸ்மின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...தங்களுக்கும்...

Reply

ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com

Reply

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Reply

உங்களைப்போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்களை கவிஞர் பார்ப்பாரேயானால் மிகவும் சந்தோசப்படுவார்....கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

Reply

உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...:)

Reply

மிக்க நன்றி சகோ..அழகிய பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும்

Reply

யப்பா சம்பந்தமில்லாம நம்மலுடன் சண்டைபிடிக்கிற என்னாப்பா....சரி நீங்க தந்த லிங்குகளுக்கு போய் பார்க்கிறேன் என்னா மேட்டர் நடந்திருக்கென்று....

Reply

வணக்கம் சொந்தமே...!ஓஓஓஓஓஓஓ ஒரே பாடசாயலையில் தான் கற்றீர்களா??தங்கள் கிர◌ாமத்தின் பெயர் பார்த்தவுடனே கேட்க நினைத்தேன்.பின்பு மறந்து விட்டேன்.அழகாகத் தொகுத்து பதில் தந்துள்ளீர்கள்.
அருமையான படைப்பு..சந்திப்போம் சொந்தமே

Reply

ஆஹா...வந்துட்டீங்களா...?

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....மீண்டும் சந்திப்போம்..:)

Reply

சிறந்த அறிமுகம். கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

Reply

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா...:)

Reply

எமது மண்ணின் சாதனையாளனை பற்றி www.pottuvil.net இல் கட்டுரை ஒன்றை எழுதுவதெற்கு சில தகவல்களை நானும் சேகரித்து வைத்தேன் முடிவதற்குள் நீங்கள் கொடுத்துவிட்டீர்கள் . மிக்க சந்தோசம். சகோதரரே உங்களை போன்று என்னால் ‌அழகாக எழுத முடியாது அவ்வளவுக்கு இலக்கியம் தெரியாது.. உங்களின் ஒவ்வொரு ஆக்கங்களும் துல்லியமானது மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. என்பதில் ஐயமில்லை இப்படியான அஸ்மினைப்போன்ற நிறைய படைப்பாளிகள் இடமின்றி நிற்பதை நிறையவே கண்டுள்ளேன் அவர்களும் ஏதாவது சந்தர்பத்தை வழங்க பிராத்தித்தவனாக.


பொத்துவிலில் பிறந்ததற்காக நானும் பெறுமைப்படுகிறேன்.

வலைத்தளம் பிரமாதம்..

Reply

இள நிலைப்பள்ளியிலே முது கலைப்பாடம் கொண்டான். முது நிலை கொண்டோர் முன்னே முழுவதும் தன்னே கொண்டான். -கிராமத்தானின்-வாழ்த்துக்கள் !

Reply

Post a Comment