எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு

நாங்களும் ப்ளாக் வச்சி அதிலயும் விசித்திரங்கள் என்னு ஒரு லேபலும் வச்சிருக்கிறோம் ஆனா ஒன்னு...(அது சரி ஆனா தான் ஒன்னு ஆவென்னா தான் ரெண்டு என்னு சொல்லி கடுப்ப
கிளப்பிடாதேயுங்கோ.. )விசித்திரங்கள் லேபல்ல போடுற பதிவுகள் என்னவோ குறைவாத்தான் இருக்கு அதுக்காகத்தான் இந்த பதிவு. ஒரு ப்ளாக்ல இருந்து எடுத்து போட்டிருக்கிறன் பதிவின் இறுதியில ப்ளாக்கின் லிங்கும் தந்திருக்கிறேன் ஏதும் பிரச்ச்னைகள் என்றா எனக்கிட்ட வம்பிழுக்காம அந்த லிங்குக்கு போய் வம்பிழுங்க (ஹி...ஹி...ஹி...அங்க இருந்து ஒரு சவுண்டும் வராது)


புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிறைய எதிரிகள் இருக்கின்றன. மனிதர்களைவிட பிராணிகள், பூச்சியினங்களின் வாழ்க்கைதான் போராட்டக் களமாக உள்ளது. இந்தப் பூச்சிகளுள் சிலந்தி, தன் இரையை மிகவும் தந்திரமாகப் பற்றுகிறது.

வலையைப் பின்னிவிட்டு, எப்போது பூச்சி மாட்டிக்கொள்ளும் என்று சிலந்தி காத்திருக்கும். பின்னிய வலையில் பூச்சி வந்து மாட்டிக்கொண்டதும் ஒருவகை சிலந்தி, கப்பென்று பாய்ந்து கடித்து விடும். இந்த அவசர வகை சிலந்திக்கு `நெபிலியா’ என்று பெயர். சிலந்தி வலையில் அடிக்கடி அகப்பட்டுக் கொள்வது ஒரு வகைச் சில்வண்டு தான். சிலந்திகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த வண்டுகளுக்கு ஒருவகை ஆற்றலை இயற்கை அளித்திருக்கிறது. இந்த வண்டுகளை `குண்டு வெடிக்கும் வண்டு’ என்று கூறுகிறார்கள்.

இந்த வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில் ஒரு வேதித் திரவமும், பிராண வாயுவும் சுரக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. சிலந்தி வலையில் இந்த வண்டு மாட்டிக்கொண்டதும், நெபிலியா வகைச் சிலந்தி அதைத் தின்ன உடனே பாய்ந்து போய் கவ்வும். ஆபத்தை அறிந்த வண்டு, தன் வயிற்றுப் பாகத்தைச் சிலந்தியின் பக்கம் திருப்பி, குறிபார்த்துச் சுரப்பியை வெடிக்கச் செய்யும். அந்த வெடிச் சத்தத்தை சிலந்தியால் தாங்க முடியாது. மேலும் காரமான ஒரு திரவமும் அதன் மீது பீய்ச்சப் படும். வெடிச்சத்தம், திரவ முழுக்கில் இருந்து சிலந்தி மீள்வதற்குள் அந்த வண்டு தப்பித்துப் போய்விடும்.


இந்த வகை ஆற்றல் இருப்பதால் `குண்டு வெடிக்கும் வண்டு’க்கு ஆபத்தோ, எதிரிகளோ அதிகம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இதற்கும் ஓர் எதிரியை இயற்கை படைத்திருக்கிறது. இந்த வண்டை அவசரப்படாமல் சாமர்த்தியமாகப் பிடிக்கும் தன்மை கொண்ட இன்னொரு வகைச் சிலந்தி இருக்கிறது. அதற்கு `அர்கோபி’ என்று பெயர்.

இந்த செய்திய நான் ஒரு ப்ளாக்கில் இருந்துதான் பெற்றுக் கொண்டேன் அதன் லிங்குக்கு இங்கு கிளிக் செய்யவும்

30 கருத்துரைகள்

காணொளி அருமை
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

Reply

கண்டேன் காணொளி! அருமை!விண்டேன் மறுமொழி!(த ம ஓ 2)

சா இராமாநுசம்

Reply

நல்ல தகவல் பதிவு/வாழ்த்துக்கள்/

Reply

உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் உங்கள் வருகை தொடரட்டும்....

Reply

மிக்க நன்றிசார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டளிப்புக்கும்

Reply

ஐயா உங்கள் கருத்தினை கவிதையாக சொல்லி சென்றுவிட்டீர்கள் உண்மையில் நீங்கள் சிறந்த கவிஞர்தான்

வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டளிப்புக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

Reply

சிட்டுக்குருவி...
இப்படி வண்டெல்லாம் தப்பிப் போய்விட்டால்
சிலந்தி எதைச் சாப்பிடும் சிட்டுக்குருவி....?

(அந்த சிலந்தியை நைசாக சிட்டுக்குருவி
சாப்பிட்டுவிடு்ம் என்பதை ஏன் சொல்லவில்லை...?
நாங்கள் தவறாக நினைக்க மாட்டோம்...)

Reply

என்ன நண்பா சிலந்து பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி விட்டீர்களா, அடுத்த குறும் படதிர்ககவா


படித்துப் பாருங்கள்தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்

Reply

காணொளி அருமை நண்பா...

Reply

மனிதனை சாப்பிடாமல் விட்டால் சரிதான்...:)

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

இல்லப்பா சும்மா கண்ணுல பட்டிச்சு..உங்களோட பகிரலாம் என்னு தோனிச்சு அவ்வளவுதான்
வருக்கைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

வாங்க நண்பா வருக்கைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி...:)

Reply

விசித்திரமான தகவல் தான்.!

Reply

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுஅன்றோ!

Reply

//நாங்களும் ப்ளாக் வச்சி அதிலயும் விசித்திரங்கள் என்னு ஒரு லேபலும் வச்சிருக்கிறோம்//

நிஜமாவோ? நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்ன்... வண்டைப் பார்க்கப் பபபபபபயம்மா இருக்கே:)

Reply

புளுப் பூச்சி யின் கதை அருமை... சிட்டு.

Reply

வாங்க நண்பா கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

Reply

ஐயாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

அட அடிச்சி சொல்லுரன் நம்புங்கப்பா....:(

இதுக்கெல்லாம் பயப்பட்டா பின்னாடி எப்பிடி....?

Reply

புளு பூச்சியின் கதையா....இங்க என்ன படமா காட்டுறாங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Reply

adengappaaaa......!

arumai!

Reply

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா...:)

Reply

வித்தியாசமான தகவல் நன்றி நண்பா

Reply

சொந்தமே...ரொம் லேட் மன்னிக்கவும்..வண்டுப்பதிவு அச்சா.....:)
இப்போ இப்படியா பாஸ் எஸ்கேப் ஆகிறிங்க???

Reply

எஸ்கேப் எல்லாம் ஆகல்ல.....:)

எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான்....
மீண்டும் சந்திப்போம் சொந்தமே...

Reply

அருமையான காணொளியை வெளியிட்டுள்ளீர்கள் நண்பரே. நான் வலைப்பூவிற்கு புதியவன். அருமையான பதிவை வெளியிட்டமைக்கு வாழ்த்துகள்...

எனது வலைப்பூவில் வரும் கருத்துரைக்கு என்னால் பதிலளிக்க இயலவில்லை. உதவி செய்ய இயலுமா...

http://tamilvetrivel.blogspot.in/

Reply

சிட்டுக் குருவியாரே எனது மின்னஞ்சல் முகவரி tamilvetrivel@gmail.com
எனது பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்...

tamilvetrivel.blogspot.com

Reply

Post a Comment