அதிகமான விவாகரத்துகளுக்கு பெற்றோர்களே காரணம்

வீட்டுல பருவ வயதை அடைந்த ஒரு பெண்பிள்ளை இருந்தால் அந்த பிள்ளையை எவ்வாறு ஒருத்தன் கையில பிடித்து கொடுப்பது என்று பெற்றோர்கள் சிந்திக்கின்றனர்.
பொதுவாக எல்லா பெற்றோர்களுடைய மனநிலையும் இப்படித்தான் இருக்கும்.

ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவன் பருவயதை அடைந்ததும் இவ்வாறு சிந்திப்பது குறைவு. மேலும் அவன் எப்படி நம்மளையெல்லாம் வைத்து கண்கானிப்பான் என்று பெற்றோர்கள் கனவு காண்கிறார்கள். பொதுவாக ஆண்கள் வழிகெட்டு தன் எதிர்கால வாழ்க்கைக்கு பிரயோசனமற்ற வழிகளில் செல்ல ஆரம்பிக்கும் போது அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கான திருமணத்தை நடாத்த ஏற்பாடு செய்கின்றனர்.ஒரு சில திருமணங்கள் இவ்வாறுதான் இடம்பெறுகின்றன.

அறிமுகமில்லாத இருவர் திருமணமான தினத்திலிருந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு புதிய உறவுகளை ஆரம்பிக்கின்றனர். நீண்ட காலமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில்  நிச்சயிக்கப்பட்ட தினத்திலேயே உறவுகளுக்கு அத்திவாரமிடுகின்றனர் மணமக்கள்.

நிச்சயிக்கப்பட்ட திருமணமோ அல்லது காதல் திருமணமோ  எதை எடுத்துக் கொண்டாலும் திருமணத்தின் பின் பெற்றோர்கள் பெரியதொரு பெருமூச்சு விடுகின்றனர். அப்பாடா எப்படியோ திருமணத்தை முடித்தாகிவிட்டது என்று தங்களுக்குள் பெருமை பேசிக் கொள்கின்றனர்.இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறிக் கொள்கின்றனர்.

திருமணத்தின் பின் புதுத்தம்பதிகளுக்கு மத்தியில் என்ன விடயங்கள் நடக்கின்றன என்பதனை பெரும்பாலான பெற்றோர்கள் அறிவதற்கு விருப்பம் கொள்வதில்லை. இது தற்கால விரைவான உலகத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

மாப்பிள்ளையின் பெற்றோர் என்னுடைய மகன் எவ்வாறு நடந்துகொள்கின்றான் என மணமகளிடமோ...மணமகளின் பெற்றோர் என்னுடைய மகள் எவ்வாறு நடந்துகொள்கிறாள் என்று மாப்பிள்ளையிடமோ கேட்பது பொதுவாக எம் பெற்றோர் மத்தியில் விரைவாக குறைந்துவரும் நல்ல செயற்பாடுகளில் ஒன்றாகவுள்ளது.

மாப்பிள்ளையிடம் தன் மகள் பற்றி கேட்கும் போது என்ன நாம் கொடுத்த சீதனம் போதாது என்று மருமகன் கூறிவிடுவாறோ என்ற பயத்தில் சில பெற்றோர்கள் இவ் விடயத்தை கேட்காமலும் இருப்பதினை இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

சாதாரணமாக ஒரு வேலையினை அல்லது ஒரு செயற்திட்டத்தினை செயற்படுத்தும் போது அச் செயற்திட்டம்/ வேலை முடிந்த பின் மக்கள் மத்தியில்  எவ்வாறு பிரயோசனமாக இருக்கிறது என்பதினை அறிவதற்காக   திட்டத்தினை நடைமுறைப்படுத்தியோர் ஒரு சில அதிகாரிகளை  நியமித்திருப்பார்கள். இலாபமோ அல்லது நட்டமோ தரக்கூடிய ஒரு அற்ப திட்டத்திற்கு இவ்வாறு செய்யத்துணியும் நாம் மிகப்பெரும் வாழ்க்கைத்  திட்டத்தினை உருவாக்கக் கூடிய திருமணத்தின் பின் அதனை கண்கானித்து அவர்களின் குறைகளை சரி செய்வதற்கு தயங்குவதென்பது புதினமாக இருக்கிறது.

முன்னொரு காலத்தில் கிராமப் புறங்களில் வீடுகளில் இருக்கும் பெரியவர்களை புதுத் தம்பதிகளின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துவிடுவர்கள். இது நல்லதொரு செயற்பாடுதான். தன் புருஷன் வேலைக்கோ அல்லது வெளியில் எங்காவது சென்றபின் அவ் மணமகள் தன்னுடைய குறை நிறைகளைப் பற்றி அப் பெரியவரிடம் முறையிடுவார். எவ்வாறான வகையிலும் ஆரம்பகாலங்களில் இருந்த இந்த நடைமுறை மிகவும் பிரயோசனமான ஒன்றாவே என்னால் கருதப்படும்.

திருமணமாகி ஆறு வருடங்கள் கழிந்த நிலையில் தன் தூரத்து உறவுக்காற பையன் ஒருவனை ஒரு பெரியவர் சந்தித்தார். 
என்னப்பா கல்யாணமெல்லாம் முடிஞ்சுபோச்சு வாழ்க்கை எப்பிடி நல்லாத்தானே போகுது  என்று கேட்டிருக்கிறார் அந்த பெரியவர்.
என்ன மாமா... தந்தவனும் என்னவென்று கேக்கல்ல பெத்தவனும் என்னெவெண்டு கேக்கல்ல என்று தன் வயிற்றெரிச்சலை  பெரியவரிடம் கூறினான் பையன்.

நீண்ட உறையாடலின் பின் பெரியவருக்கு புரிந்தது இது தான். மணமகளுக்கு ஏதோ ஒரு வியாதி (உடலுறவு தொடர்பான) இதுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒன்றாக உறங்கியது இல்லையாம். இந்த விடயங்கள் பற்றி இருவருடைய பெற்றோர்களும் ஒன்றும் கேட்கவில்லை. கௌரவத்துக்காகவும் சமூகத்தின் சில கிண்டல்களுக்கு முகம் கொடுக்கப் பயந்தும் வைத்திய சாலையும் வீடுமாக அலைகின்றனர் அந்த புதுத் தம்பதியினர்.

இவ்விடத்தில் அந்த தம்பதியினர் தங்கள் குடும்பங்களிலிருந்து பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோர்களோ இவற்றினை சாதாரண விடயமாக கருதி அலட்சியமாக இருந்துள்ளனர்.

இவ்விடத்தில் விவாகரத்து இடம்பெறுவதுக்கு அதிகமான சாத்தியப்பாடுகள் இருக்கின்றது என்பது உண்மை. ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்தில் திருப்திகரமான உறவினை உணரவில்லையாயின் அங்கு விவாகரத்து இடம்பெற வாய்ப்புக்கள் இருக்கின்றன. சமூகத்தினையும் கௌரவத்தினையும் அஞ்சிக்கொள்ளும் ஒரு சிலரைத்தவிர.

தினம்தினம் திருமணங்கள் நடக்கின்றன அதனை விட வேகமாக விவாகரத்துகள் அதிகரித்து செல்கின்றன என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சீனாவில் தினமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான திருமண முறிவுகள் ஏற்படுத்தப் படுகின்றன.

திருப்திகரமான காரணங்கள் இல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் இப்போது விவாகரத்து பெறுவதென்பது வாடிக்கையாகிவிட்டது.சின்ன சின்ன காரணங்களால் ஏற்படுத்தப்படும் விவாகரத்துகளினால் அதிகளவான நன்மைகளை பெறக்கூடியவர்கள் தம்பதிகளை விட வக்கீல்கள் தான்.

அதிகமான பணங்களை செலவுசெய்து செய்கின்ற திருமணத்தின் பின் தம்பதிகள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று அறிந்து  கொள்வதற்கு பெற்றோர்கள் அவசியம் அவர்களிடம் ஒவ்வொரு நாளும் இல்லாவிட்டாலும் வாரத்தில்  ஒரு தடவை அல்லது மாதத்தில் ஒருதடவை அவர்களின் வீடு சென்று அவர்களிடம் இல்லற வாழ்கை தொடர்பான பேச்சுக்களை தொடுக்க வேண்டும்.

இல்லா விட்டால் விவாகரத்து என்பது தம்பதிகள் மத்தியில் மிகவும் மலிவான ஒன்றாகவே கருதப்படும். விவாகரத்து எனும் போது அங்கு தம்பதிகளால் பல காரணங்கள் முன்வைக்கப்படும். தன்னுடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் தம்பதிகளின் விடயத்தில் அக்கரை கொள்ளாததனாலும் மேலும் தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லித்தர பெரியவர்கள் முன்வராததனாலும் அவர்கள் வக்கீலையும் நீதிபதியையும் நாடிச்சென்று தங்களதுபிரச்சனைகளை முன் வைக்கின்றனர்.

விவாகரத்து கிடைத்த பின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட்டு என்ன பிரயோசனம் கிடைக்கப் போகிறது.பிரச்சனைகளின் போது கருத்துச் சொல்ல முன்வர தைரிமற்றவர்கள் நீதிபதிகளிடம் சென்று பிரச்சனைக்கு தீர்வு கண்டபின் கவலைப்படுவதென்பது...?

ஆகவே தான் சொல்கிறேன் திருமணம் செய்து முடித்துவிட்டோம் இனி அவர்களாச்சு அவர்களுடைய குடும்பமாச்சு என இரு தரப்பு பெற்றோர்களும் புதுத் தம்பதிகள் விடயத்தில் அலட்சியமாக இருந்து விடாமல் குறிப்பிட்ட ஒரு காலம் வரை அல்லது ஆயுள் முழுக்கவும் அவர்களுடன் இருந்து அல்லது அடிக்கடி அவர்களை சந்தித்து அவர்களது இல்லற வாழ்க்கை பற்றிய கருத்துக்களை கேட்பதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன பிரச்ச்னைகளுக்கு தீர்வு கண்டு நல்லதொரு சந்தோசமான குடும்பத்தினை  உருவாக்குவதற்கு முயற்சி செய்வார்களானால் அதுவே  அதிகளவான விவாகரத்துக்களை குறைப்பதற்கு காரணமாக அமைந்து விடும்.

நிறைய விடயங்களை இதில் சுட்டிக்காட்டலாம் பதிவின் நீளம் கருதி அவற்றினை தவிர்த்துவிடுகிறேன்.

இது  அடியேனின் தாழ்மையான கருத்து.36 கருத்துரைகள்

UNMAITHAAN SAKO...!

Reply

உண்மைதாங்க பெற்றோகள் உணர்ந்தால் சரி .

Reply

//அதிகமான விவாகரத்துகளுக்கு பெற்றோர்களே காரணம் //

தலைப்புக்கு கொடுத்த விளக்கம்.....சர்தான்

Reply

பயனுள்ள அருமையான பதிவு
பெற்றோர்களும் காரணம் என்கிற
முறையில் பதிவிட்டிருக்களாமோ எனத் தோன்றியது
பகிர்வுக்கு நன்றி

Reply

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா....:)

Reply

பெற்றோர்கள் உணர்வுது ஒரு புறமிருக்க பெற்றொர்களிடம் தங்கள் பிரச்சனைகளை தம்பதிகள் சொல்வதற்கு தயாராக வேண்டும்..இதுவும் நான் பதிவில் கூற வேண்டிய விடயம்தான் நீளம் கருதி விட்டுவிட்டேன்

Reply

அப்படியா.............:) கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

உங்கள் கருத்தும் சரியாகத்தான் இருக்கிறது...ஆனாலும் பெற்றோர்கள் ஆரம்பத்தில் விடும் தவறுகள் தான் பின்னர் சுனாமியாக உருமாற்றம் பெறுகிறது..

வருகைக்கு கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்...

Reply

சிட்டுக்குருவி வணக்கம்.அவசியமான அதுவும் இப்போதுள்ள நிலமைக்கு மிக அவசியமான கருத்து.பாத்துமா...கவனமா நிதானமா பேசிக்கோங்க பாஸ்...சந்திப்போம் சொந்தமே

Reply

வணக்கம் நண்பரே...
பெற்றோர்களும் ஒரு காரணம்
என்று தான் சொல்லலாமே ஒழிய
பெற்றோர்களே காரணம்
என ஒரே அடியாக சொல்லிவிடமுடியாது
நண்பரே..
நீங்கள் இங்கே பகிர்ந்திட்ட காரணங்கள்
நீங்கள் கூறிய தலைப்புக்கு
ஒத்துவரலாம்
ஆனால் அதையும் தாண்டி தாம்பத்ய வாழ்வில்
நிறைய இருக்கிறது அல்லவா...
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து....

Reply

பாத்துமா..+ எங்க ஊர்ல பாத்திமா வ இப்படித்தான் அழைப்பாங்க...

வருகைக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

நான் தாம்பத்தியம் என்ற ஒன்றுக்குள் இன்னும் நுழையாதவன் அனுபவப்பட்ட உங்களைப் போன்றவர்கள் கூறும் காரணங்கள் பொருத்தமானதாகத்தான் இருக்கின்றன.

இருந்த போதிலும் தாம்பத்தியத்தில் ஏற்படும் பிணக்குகளுக்கும் பெற்றோறால் தீர்வு சொல்ல முடியும். இதற்கு அவர்கள் பெற்றோர்களை மதிக்கும் தம்பதிகளாக இருக்க வேண்டும்.திருமணத்தின் பின் மாமனாரை அல்லது பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பக் கோடிய தம்பதிகளிடத்தில் இக் கூற்றினை முன் வைக்க முடியாது.

எந்த பிள்ளையும் ஒரு கணமாவது தன் பெற்றோரின் பேச்சுக்களுக்கு மரியாதை செய்பவனாகத்தான் இருக்க முடியும்.

அழகிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

Reply

சிட்டுக்குருவி...

“அதிகமான விவாகரத்துகளுக்கு பெற்றோர்களே காரணம்“
என்ன சிட்டுக்குருவி இப்படி சொல்லிவிட்டீர்கள்....
தப்பான தலைப்புங்க.
திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் இவர்கள் சீக்கிரம் பிரிந்துவிடனும்ன்னு எந்த பெற்றொரும் நினைப்பதில்லை.
குழந்தைப் பருவம் என்பது வேறு
திருமணப்பருவம் என்பது வேறு
முதல் பருவத்தில் பெற்றோரின் அவசியம் தேவையானது.
ஆனால் திருமணம் ஆனப்பிறகு தம்பதிக்குள் வரும் பிரட்சனையை அவர்களே முடிந்தவரை பேசி முடிக்கனும். அப்படி முடியாத பட்சத்தில் பெற்றோர்களிடம் அவர்களே விசயத்தைக் கூறலாம்.
அப்படிக் கூறியும் பெற்றோர்கள் அனாவசியப் படுத்தினால் அது தவறு. நீங்கள் சொன்ன தலைப்புடன் ஒத்து போகும்.
ஆனால் எந்த பெற்றோரும் அப்படி அனாவசியமாக விடமாட்டார்கள்.

அதனால் நான் உங்கள் தலைப்புக்கும் கருத்திற்கும் முரண்படுகிறேன் சிட்டுக்குருவி.

Reply

முழுமையாக பெற்றோர்களை மட்டுமே குறைகூறிடமுடியாது..இந்த காலத்தில் யார் பெற்றோர் சொல் கேட்கிறார்கள்... அவர்களும் பெற்றோர் ஆன பின் தன் பெற்றோர் சொல் கேட்பதை கவுரவ குறைச்சலாக அல்லவா பார்க்கிறார்கள்?! இதுதான் என் கருத்தும்.

Reply

இன்று இதுதான் எங்க ஊர் பிரபல ஆங்கிலப்பத்திரிக்கையின் தேசிய செய்தி. இந்த 10வருடங்களில் முப்பத்துமூவாயிரம் பேர் விவாகரத்துக்கோரி மனு செய்துள்ளார்களாம். இது மனு செய்த கணக்கெடுப்புத் தகவல்.. மனு செய்யாமல், வேலையைப் பார்த்துக்கிட்டு போ’ன்னு விரட்டி விட்ட கேஸ்களும் நிறைய உண்டு சகோ. அலசல்களுக்கும் ஆய்வுகளுக்கு பகிர்விற்கும் நன்றி.

Reply

விவாகரத்து பெற்றவர்களும் நாங்கள் எதிர்வரும் காலங்களில் விவாகரத்ட்து பெறுவோம் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்வதில்லை.

தாம்பத்திய வாழ்க்கையில் எந்த வித அனுபவமும் இல்லாத புது தம்பதிகள் தங்களுக்குள் எழும் சிறிய சிறிய குடும்ப பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்று அறியாமல் தடுமாறுகிறார்கள் இந்த நிலைமையில் அவர்களுக்கு தேவை ஆறுதலான சில வார்த்தைகளும் அரவணைப்பும் தான்.

திருமணம் செய்தவர்கள் தாங்கள் குடும்ப வாழ்க்கைக்கு தாயர் என்று எண்ணித்தான் திருமணம் செய்கின்றனர்.இங்கு அவர்கள் எந்தளவில் தயாராகி இருக்கிறார்கள் என்பதினை அறிய வேண்டும். உடல் ரீதியாக தயாராகி விட்டார்களா..அல்லது மனதளவில் தயாராகி விட்டார்களா என்பதினை அறிய வேண்டும்.

தம்பதிகளுக்கு இடையில் எழும் பிரச்சனைகளை தீர்க்க தெரியாமல்தானே அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

இங்கு தாம்பத்திய வாழ்வில் அனுபவம் மிக்க ஒருவர் அவர்களுடன் இருக்கும் போது அவர் தம்பதிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார் அல்லது தீர்வுக்கு வழி சொல்லுவார்.

விவாகரத்துகள் பெற்றவர்களின் அதிகளவானவர்களை நோக்கும் போது அவர்கள் தனிக்குடித்தன்ம் செய்தவர்களாக காணப்படுகிறார்கள்.தனிக் குடித்தனம் எனும் போது தான் இங்கு பிரச்ச்னைகள் ஆரம்பிக்கின்றன.

தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தைகளை பார்ப்பதற்கு யாருமில்லை.வேலைக் களைப்புடன் வருபவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது தவறும் வார்த்திகளால் கூட விவாகரத்துகள் இடம்பெறுகின்றன.

இவ்விட்டத்தில் ஒரு பெரியவர் அவர்களை வழிநட்டாத்துபவராக இருப்பரெனில் பிரச்சனைகள் குறையும்

இது முழுவதும் எனது சிந்தனைக்கு பட்டதுகளாகும்.

Reply

அப்படி பார்ப்பதனால் தானே பிரச்சனை உருவாகிறது. தாம்பத்திய வாழ்வில் அனுபமிக்கவர்களின் அறிவுறைகளுக்கு இடம் கொடாமல் வாழ்க்கையை கட்டியெழுப்புவதென்பது முட்டாள்தனம்.

இவர்களுக்கு முன் ஒரு 3 வருடத்துக்கு முதல் திருமணம் செய்து கொண்ட இவரின் நண்பர் ஏதாவது குடும்ப வாழ்வு தொடர்பான அறிவுரைகளை கூறும் போது கேட்கும் அவர்களுக்கு பெற்றோர் சொல் மந்திரமாக தெரிவது புதுமையாகவுள்ளதா...?

என்னதான் இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் புது உறவுகளில் அக்கரை செலுத்துதல் என்பது அவசியமான ஒன்றாகவுள்ளது என்னை பொருத்தவரையில் இவ் வேகமான உலகுக்கு இது மிகவும் அவசியம்

Reply

விவாகரத்துக்கள் அதிகரிப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது....என்ன செய்வது சகோ...

மிகப் பெறுமதியான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

Reply

அன்பரே!
சமீப காலங்களில் விவாகரத்துக்கள் அதிக
மாகிவிட்டன என்பது மிகவும் கவலைத்தரும்
ஒன்றே! ஆனால் பெற்றோரும் ஒரு காரணமாக இருக்கலாம்.
காரணங்கள் ஒன்றல்ல! பலவாகும்

த ம ஓ 2

சா இராமாநுசம்

Reply

அப்ப பாருங்களேன;....ரொம்ப காரசாரமா விவாதம் நடக்கிற போல இருக்கு..பெற்றோர்களும் காரணம் என்ற தலைப்பு மிகப்பொருத்தமாயிருக்கும் சொந்தடம..சழறழய சொந்தத்தின; கருத்தில் தவறிருப்பின் பொநுத்தருள்க...:)

Reply

மிகவும் சரியான பதிவு !!! பிடிக்கவில்லை எனில் பிரிந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இப்படி செய்கின்றார்கள் .. பெற்றோர்களே அதற்கு ஊக்கம் தருகின்றார்கள். சரி பிரிந்த பின் இன்னொரு மணம் செய்தால் அதுவும் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் விவாகரத்து .. எனத் தொடரும் .. விட்டுக் கொடுத்து வாழவும், மன்னிக்கும் மனோபாவமும் இல்லாமல் போய்விட்டது ..

Reply

// விவாகரத்து கிடைத்த பின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட்டு என்ன பிரயோசனம் கிடைக்கப் போகிறது//

உண்மை தான் நண்பா, விகாரத்து பற்றி இவ்வளவு பெரிய பதிவா என்று ஆரம்பிக்கும் முன்பு நினைத்தேன் படித்து முடித்த பொழுது அதற்குள் முடிந்தது போல் இருந்தது, இந்தக் காலத்திற்கு தேவையான பதிவு

படித்துப் பாருங்கள்

வாழ்க்கைக் கொடுத்தவன்

Reply

வாங்க ஐயா உங்கள் வருகை நலவாகட்டும்....

பல காரனங்கள் இருக்குதான் அதில் பிரதானமானது பெற்றோர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது அவ்வளவுதான்

Reply

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
நான் பெற்றோர்கள் ஊக்கமளிக்கிறார்கள் என்பதனை இங்கு கூறவில்லை மாறாக பெற்றோர்களே காரணமாக அமைகிறார்கள் என்றுதான் சொல்கிறேன் நண்பா

அதை பெற்றோர்கள் அறிகிறார்களா இல்லையா என்பது புதிராகத்தான் இருக்கிறது.

Reply

நீண்ட நாட்களின் பின் வருகை தந்திருக்கிறீர்கள் நலம் தானே நண்பா..

நிறைய விடயங்களை சொல்லலாம் என்றுதான் எண்ணினேன் நீளம் கருதி குறைத்து விட்டேன்..

Reply

பெரும்பாலும் தவறான புரிதல். இது போன்ற விஷயங்களை ஒரு மாமியார் மருமகளிடம் கேட்பதை இக்காலத்துப் பெண்கள் விரும்புவதில்லை. செக்ஸ் என்கிற விஷயம் அன்றைய கால கட்டம் மாதிரி இல்லாம, இப்போ நிறைய மாறி இருக்கு. செக்ஸ் தொடர்பான விவரங்கள் ஓரளவுக்கு யூத்திற்கு தெரிந்திருக்கு. அந்த நண்பர் கூட மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று வருகிறார். அவர் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது. என்ன அவர் கூட மனசு விட்டு ஆறுதலா பேச ஒரு ஆள் தேவை. அப்படின்னா...அவரே அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி இருக்கலாமே ? ஏன் சொல்லல?

அதுமட்டுமல்ல, பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களில், இது போன்ற குறைகள் இருந்தால் உடனே தெரிஞ்சிடும்.

சரி, இதுல பெற்றோர்கள் என்ன செய்ய முடியும். ஏன் பா உன் பொண்டாட்டிக்கு ஏதோ பிரச்சினையாம், எனக்கு பேரன் பேத்தி பெத்துக் கொடுக்க மாட்டியான்னு கேக்காம இருக்குறது தான் பெரியவர்கள் செய்யும் மிகப் பெரிய உதவி. இதை வச்சு சொந்த பந்தங்கள் ஆயிரம் திரிப்பு சொல்லாமல் இருத்தலே நல்லது.

எதுக்கெடுத்தாலும் பெற்றவர்களைக் குறை சொல்லும் பிள்ளைகள் உண்மை அறிந்து தெளிவு பெற வேண்டும்.

Reply

முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ..

இதுல ஒரு விடயத்த நீங்க புரிஞ்சிக்கோனும் செக்ஸ் மட்டும் குடும்பவாழ்வு இல்லை. தொடர்ந்து இடப்பட்ட் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள் ஒரு முறை.

செக்ஸுக்காகவே திருமணம் செய்தால் அந்த திருமணமும் இறுதியில் விவாகரத்தில் தான் சென்று முடியும். செக்ஸுக்கும் அப்பால் பட்ட பல விடயங்கள் குடும்ப வாழ்வில் இருப்பதாக நான் அறிகிறேன் காரணம் நான் இன்னும் குடும்ப வாழ்வினுள் நுழையாதவன்.

இருவரும் தொழில் புரிபவர்களாக இருந்தால் தொழில் புரியும் இடத்தில் ஏற்படும் மனக்கசப்புகளை மாறிமாறி பரிமாறிக்கொள்வதால் வாழ்க்கை வெறுத்துவிடும். குழந்தைகளை கவணித்தல் சமைத்தல் இன்னும் பல குடும்ப வேலைகள் இருக்கின்றன.வீட்டு வேலைகளுக்கு தனியான ஒரு நபரை வைப்பதற்கு எடுக்கும் சம்பளம் போதவில்லை வேலை முடிந்து வந்து மேற்படி வேலைகளை செய்யும் போது ஏற்படும் சிறிய சிறிய மனக் கசப்புகளால் இன்று ஏறாளமான விவாகரத்துகள் இடம்பெறுகின்றன.

இவற்றி தவிர்க்கவே பெற்றோர்கள் திருமணத்தின் பின்னும் பிள்ளைகளுடன் இருந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அடிக்கடி கூறிக்கொள்வதால் அதிகளவான பிரச்னைகளில் இருந்து பாதுகாப்புப் பெறலாம்.

Reply

வருகைக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் மிக நன்றி சகோ...

Reply

வாங்க ஐயா...என்ன பல்பு என சொல்ல வந்தீர்களோ...:)

Reply

அழகான அலசல்... சிட்டுவிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை... சிட்டுவா எழுதியதென ஆஆஅச்சரியமா இருக்கு..

நல்ல அறிவுரைகள்தான்.

Reply

இதுக்குத்தான் நான் சீரியஸ் பதிவெல்லாம் எழுதுறத்துக்கு தயங்கினேன் ....இதுல என்ன சந்தேகம் மெடம் நான் தான் எழுதினன் வாடகைக்கு ஆள்வச்சி ப்ளாக் நடத்தவா முடியும்...:) சும்மா...சும்மா..

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி..

Reply

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

Reply

தெளிவாக கூறியுள்ளீர்கள் சிட்டுக்குருவியாரே... ஆனால் பெற்றோர்களும் ஒரு காரணம்..

Reply

Post a Comment