காதலர்கள் இப்படித்தானோ...?

"காதல்" இதற்கு வரைவிலக்கணம் கூறச் சொல்லி காதலிப்பவர்களை கேட்டால் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளியாகுவதற்கு சிரமப்படும் காதலைப் பற்றி பெருமையாக
சொல்லுவதற்காக எதையெதையோ உதாரணமாகச் சொல்லுவார்கள்.

காதலிக்காத ஒருவனிடம் காதலைப் பற்றி கேட்டால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவான் அது முட்டாள்களின் செயல் என்று காரணம் கேட்டால் பல சொல்லுவான் பணத்துக்கான காதல் சிலரிடம்,உடலுக்கான காதல் சிலரிடம்,பெருமைக்கான காதல் சிலரிடம் எனச் சொல்லிக்கொண்டே போவான்.ஆனால் அவனிடம் காதல் பற்றிய ஒரு நல்லெண்ணம் இருக்கத்தான் செய்யும் அதும் உண்மைக்காதல் பற்றிய நல்லெண்ணம்.

காதலிக்காத எவனும் காதலைப் பற்றி எல்லாநேரமும் தவறாக சொல்லமாட்டான்.எப்போதாவது உண்மையான காதலர்களை  சந்திக்கும் போது அவர்களுடைய காதலுக்காக வாழ்த்து சொல்லுவதன் மூலம் அவனுடைய காதல் பற்றிய நல்லெண்ணத்தை உலகுக்கு தெரியப்படுத்துகிறான்.என்னடா இவன் சீரியஸ்ஸான விசயமெல்லாம் கதைக்கிறான்..லவ்வுல மாட்டிட்டானோ..? என்னு நீங்க உங்க உள் மனதுல நினைக்கிறது எனக்கு சத்தமாவே இங்கு கேட்குது...:). 

உண்மைக்காதலை சிலர் பிரியும் போதுதான் புரிந்துகொள்வார்கள் என்பதினை காலா காலமாக நாம் புத்தகங்களிலும் ப்ளாக்குகளிலும் படித்து வருகிறோம்.அப்படி நான் படித்த ஒரு விடயத்தை தான் இன்னைக்கு உங்க கூட பகிர்ந்துக்கப் போறன்.இத நான் படிச்சது என் நண்பன் ஒருவனுடைய முக நூல் பக்கத்தில படிச்சவுடனே மனசில ஒரு...........உணர்ந்தேன் (இடைவெளிய நீங்களே நிரப்பிக்கோங்க)

இதுதான் அந்த கதை உங்களில் எத்தனை பேர் இதனை படித்திருப்பீர்களோ எனக்குத்தெரியாது ஆனா இது எனக்குப் பிடிச்சிருக்கு அதனை உங்களுடன் பகிர்ந்துக்கிறேன்

ஒரு இளம் பெண் அவள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள் வைத்தியர்களும் இன்னும் சில மாதங்களில் அவள் இறந்துவிடுவாள் என தெரிவித்து விட்டனர்.

பெற்றோர்களும் அவளை அவளுடைய போக்கில் விட்டுவிட்டனர். அப் பெண் சீடி கடையில் வேலை செய்யும் ஒருத்தனை காதலித்தாள்.தினமும் சீடி கடைக்கு சென்று சீடிக்களை வாங்கி வருவாள்.

பின் சில மாதங்களின் பின் அப் பெண் இறந்துவிட்டாள். அப் பெண்ணின் தாய் அந்த சீடி கடையில் வேலை செய்யும் இளைஞனிடம் அவள் அவனை காதலித்தது பற்றியும் அவளுடைய அறையை வந்து பார்க்குமாறும் கூறினாள்.இளைஞனும் சம்மதித்து அவளுடைய அறையை சென்று பார்வையிட்டான்.

என்ன ஆச்சரியம் அவள் வாங்கிச் சென்ற சீடி க்கள் அனைத்தும் ஒன்றுமே பிரிக்கப்படாமல் அவளுடைய அறைமுழுவதும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதனைப் பார்த்த இளைஞன் அழுதவாறே இந்த சீ டி க்களில் ஒன்றையாவது நீ பிரித்துப் பார்க்கவில்லையே....நான் ஒவ்வொரு சீடி க்களிலும் நானும் உன்னைக் காதலிப்பதாக கடிதம் எழுதி வைத்திருந்தேனே...! என்று புலம்பிக்கொண்டேயிருந்தான்.

இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது என்பதை சொல்லிவிட்டு செல்லுங்கள்.


45 கருத்துரைகள்

அருமையான காதல் கதை
முன்னுரையுடன் படிக்க மிக்க சுவாரஸ்யமாய் இருந்தது
வாழ்த்துக்கள்

Reply

//இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது என்பதை சொல்லிவிட்டு செல்லுங்கள்.
//

நீங்க ஓவரா facebook படிப்பிங்கனு தெரியுது

Reply

காதல் வந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே சொல்லிவிடனும்ன்னு புரியுது...

சிட்டுக்குருவி....
சொன்னதும் ஏத்துக்குவாங்களா...?
நிறைய பிகு பண்ணிக்கிறாங்கப்பா...
என்ன பண்ணுறதாம்...?

Reply

நெஞ்சம் நெகிழ்ந்த காதல் கதை!
அருமை!

த ம ஓ 3

சா இராமாநுசம்

Reply

அருமையான காதல் கதை...

//இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது என்பதை சொல்லிவிட்டு செல்லுங்கள்.//

இதுக்கு மேல புரிஞ்சுதான் என்ன ஆகப்போகுது...ம்ம்ம்ம்ம்..

Reply

எதுவுமே சொல்லத் தோன்றவில்லை.ஒரு இனம் புரியாத சோகம் மனதை அழுத்தியது.

Reply

வணக்கம் சொந்தமே..
தங்களின் வழமையான சிந்தனை ஓட்டத்திலிருந்து மாறுபட்டுள்ளது..!உங்களுக்கும் ஏதாவது???இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது என்பதை சொல்லிவிட்டு செல்லுங்கள்ஃஃஃஃஃ
குருவி நல்லா பேஸ்புக் பாக்குதுங்கோ..!
அருமை சொந்தமே..சந்திப்போம்.!

Reply

காதலின் அருமை புரிகிறது நண்பா ,,,

கதிர்

Reply

எதையும் சரியா செய்யணும் என்று புரிகிறது .
த.ம .5

Reply

செத்தாலும் பொண்ணுங்க நல்ல பையன் லவ் லைட்டரை படிச்சுக் கூட பார்க்க மாட்டங்கன்னு நல்லாவே புரியுது :(

Reply

நண்பா!
அருமையான காதல் கதை!

எல்லோருக்கும் காதல் வாய்ப்பதில்லை!///

Reply

உடன் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

அப்பிடியா............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இனி தெரியாமத்தான் பேஸ்புக் பார்க்க வேனும்...:)

Reply

வருகிறேன் நண்பா

Reply

நல்லா புரிஞ்சது உங்களுக்கு...

பிகு பண்ணுறாங்கதான் குறைவா பண்ணினா சாவுறத்துக்கு முதல் காதல சொல்லிக்கலாம்..:)

Reply

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..:)

Reply

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா..

என்ன ஒரு மாதிரியா சொல்லுரீங்க...:)

Reply

நிச்சயமாக அந்த சோகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவினை பதிவிட்டேன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

வாங்க உறவே..

ஐயோ நம்மளுக்கு அப்பிடியெல்லாம் இல்ல என்னு சொல்லல்ல....நம்மலை எல்லாம் யாரு அந்த மாதிரி பார்ப்பாங்க என்னுதான் சொல்லுறேன்.

Reply

வாங்க நண்பா கதிர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

வாங்கோ அக்கா

சரியா செய்யனும் என்பது சரிதான் என்னு நான் சரியா சொல்லுறனோ இல்லையோ நீங்க சரியா சொல்லிட்டீங்க

அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி

Reply

நண்பா மேட்டருக்குள்ள வந்துட்டீங்களே...:)

Reply

வாங்க நண்பா..

ஏன் நீங்க காதலிச்ச பொண்ணு உங்கள கைகழுவிட்டாளா..?

Reply

எதையும் சொல்லும் வழி தெரிந்து சொல்லனும் எடுத்தமா கவுத்தமா என்று இருக்கக்கூடாது சகோ!!

Reply

நல்ல இருக்குயா உங்க கதை

ம்

Reply

காதல் சிலசமயம் கண்மூடியபடிதான் காதலைத் தேடிக்கொண்டிருக்கு.காதல் ஒருசமயம் அமிர்தம்.பலசமயம் விஷம் !

Reply

காதலர்கள் இப்படித்தானோ...?
//

எப்பூடி?:))

Reply

//இதனைப் பார்த்த இளைஞன் அழுதவாறே இந்த சீ டி க்களில் ஒன்றையாவது நீ பிரித்துப் பார்க்கவில்லையே....நான் ஒவ்வொரு சீடி க்களிலும் நானும் உன்னைக் காதலிப்பதாக கடிதம் எழுதி வைத்திருந்தேனே...! என்று புலம்பிக்கொண்டேயிருந்தான்.


இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது என்பதை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

////

கதவைத் தட்டாத காரணத்தால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன...

Reply

நான் 3 கொமெண்ட்ஸ் போட்டால் 30 கொமெண்ட்ஸ் போட்டமாதிரியாம் எனச், சிட்டுக்கு ஒருக்கால் சொல்லிடுங்கோ...:)))

Reply

எனக்கு ஏதேதோ புரியுது இம்ரான் நான் எதைச்சொல்லுறது... சொல்லாக்காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேரும் என்பார்கள் அதால அந்த பெண் சொர்க்கம் சென்றாரோ?.....

இல்லை தனக்கானவரென்று நினைத்தவரிடம் பதிலேதுமில்லையென்று குமுறியே ஏக்கத்தில் செத்தாரா?

இல்லை சுவடுகள் சகோ சொன்னது போல அவரோட எண்ணம் புரியாமையே புற்றில் இறந்தாரா?

ஜயா ராசா எதுனாலும் தீர்ப்ப நீயே சொல்லிப்போடு..... பதிலுக்கு காத்திருக்கிறேன்........ மீக்கு எதுக்கு இறந்தாங்கன்னு தெரிஞ்சாகனும் :)

Reply

இது சூப்பர் ஐடியா இத நானே கொப்பி பண்ணிக்குறேன் உங்க அனுமதி அவசியம் இல்ல என்னு நினைக்கிறேன்

Reply

என்னா பாஸ் இது என் கதை இல்ல...//நான் லவ் பன்னுற பொண்ணு அவ்வளவு சீக்கிரமா மண்டயப் போடனும் என்னு நினைக்கிறீங்களா...மீ பாவம் ....

Reply

அமிர்தமா உணர்ந்தவங்க ஜெயிக்கிறாங்க...விஷமா உணர்ந்தவங்க வேறு தவறான வழிகளில் தங்களை ஈடுபடுத்துகிறாங்க..

நல்ல கருத்து

Reply

அதத்தானே நானும் கேக்குறேன்....:(

Reply

நிஜம்...

நானும் எவ்வளவோ விஷயங்களுக்கு இறுதி வரை சென்றுவிட்டு இறுதியி யோசிப்பேன் செய்வோமா வேண்டாமா என அவ்வாறு நிறைய இழந்துமுள்ளேன் பெற்றுமுள்ளேன்...

எல்லாம் சின்ன சின்ன மேட்டர்கள்ல தான்...:)

Reply

என்னாது மூனு பார்த்தா முப்பது பார்த்தமாதிரியா...? அவ்வளவு சீரியசாவா தனுஷ் நடிச்சிருக்கிறாரு...:)

Reply

ஐயோ நான் அந்த பொண்ண சாகவைக்கல்லப்பா...விட்டா நம்மலயே கொலகாரன் ஆக்கிவிடுவீங்க போல...

Reply

அதுதான் அந்த பொண்ணுக்குக் ஏதோ சரிபண்ண முடியாத வியாதியாமே....அதனாலதான் மண்டய போட்டாவாக்கும்...மீக்கு அவ்வளவுதான் தெரியும்

Reply

Door to Door படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி தன் கதையாக சொல்லி இருக்கிறார் போலும். இந்த படத்தில் எத்தனையோ முறை அவனிடம் அவள் மனம் விட்டு கேட்டும் தனது தாழ்வு மனட்பாண்மையால் வேண்டாம் என்று விட்டுவிடுவான். பிறகு அவள் இறந்ததும் அவனுக்கு என்று ஒரு கடிதம் இருக்கும். படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்ன சொல்கிறேன் என்று.

அன்புடன்,
பனிமலர்.

Reply

பனிமலர் உங்கள் வருகை நல்லதாகட்டும்...
இது என்னுடைய சொந்தக் காதை கிடையாது என்பதை முன்மே சொல்லிவிட்டேன்


மேலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெய்யர்த்த ஒரு கதைதான் இது.

வருகைக்கும் கருத்துக்க்கும் மிக்க நன்றி

Reply

என்னன்னு சொல்வது.. சோகம்தான்

Reply

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...

Reply

எதையாவது குடுத்த கிழி கிழின்னு கிழிக்கணும்னு தெரியுது

Reply

Post a Comment