Looking For Anything Specific?

ads header

YELLOW இல்லை மச்சான் மஞ்சள்...?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் தவறு செய்யக்கூடியவந்தான்.அவன் செய்யக்கூடிய தவறுகளில் சிலதை மன்னிப்பு கேட்பதன் மூலம் திருத்திக் கொள்கிறான் இன்னும் சிலவற்றிற்க்கு சேவைகள் செய்வதன் மூலம் பாவ மீட்சி பெற்றுக் கொள்கிறான்.

ஆனால் நாம் எல்லோரும் செய்கிற ஒரு தவறு இருக்கிறது இந்த தவறிற்கு நாம் யாரும் யாரிடமும் மன்னிப்புக்கேட்பது இல்லை.இந்த தவறு செய்து விட்டு மன்னிப்புக் கேட்டால் அந்த மன்னிப்பு நமக்கு ஆப்பாகவே வந்து விழுந்துவிடும். அப்படி என்ன தவறு என்று சிந்திக்கிறீர்களா?

அட விடுங்கப்பா அத சொல்லுறத்துக்குத்தானே காந்தித் தாத்தா ஸ்டைல்ல இந்த அறிமுகத்த கஸ்டப்பட்டு எழுதியிருக்குறோம்...:)


இந்த தவற  இது தவறுதான் என்று தெரிந்து கொண்டு நாம் யாரும் செய்வதில்லை.அது நம்முடனேயே ஒட்டிப்பிறந்த ஒன்றாகத்தான் இருக்கிறது.
என்னைப் பொருத்தவரையில் இந்த தவறை அதிகமானவர்கள் செய்துவிட்டு அவமானப்ப்ட்டிருக்கின்றனர் ஆனால் இந்த தவறுக்காக அவர்கள் ஒரு போதும் வருந்தியிருக்க மாட்டார்கள். அதனை அவர்கள் மீட்டுப் பர்த்தாலும் அது ஒரு வகையில் இன்பமாகத்தான் இருக்கும்.

இந்த தவறுகள் சில பேரிட்க்கு ஞாபகச் சின்னங்களாகவும் மறக்க முடியாத அனுபவங்களாகவும் இருக்கும்.என்னுடைய நண்பர்களில் அதிகமானவர்கள் அதிகமான தடவைகள் இந்த தவறினைச் செய்துள்ளனர்.அவற்றினை நாங்கள் அடிக்கடி ஞாபகப்படுத்தி அந்த தவறு செய்தவரை கேளிபன்னுவோம்.

இவ்வளவு மேட்டர் சொல்லியும் இன்னும் அந்த தவறு என்னவென்று உங்களுக்கு புரியவில்லையா? சரி இனிமேலும் என்னால அறிமுகத்த நீட்டிக்கொண்டு போக ஏலாது....அந்த தவறு இதுதான்>>>>>>>>>>>>>> நாம் அன்றாடம் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தாரிடமோ கதைக்கும் போது எம்மையும் அறியாமல் நாம் சொல்லும் வார்த்தைகள்??????

இன்னும் சொல்லப் போனால் ஒரு விடயம் பற்றி ஒருவருடன் கதைக்கும் போது அந்த விடயத்தை சொல்லும் ஆவலில் எம்மால் விடப்படுகின்ற,வெளிப்படுத்தப்படுகின்ற ஒரு சில தவறான வார்த்தைகள்.தவறான வார்த்தைகள் என்றவுடன் நீங்க வேறமாதிரி சிந்திக்க வேண்டாம் நான் கீழே சொல்லப் போவது அந்த வார்த்தைகளைப் பற்றித்தான்.

ஒரு முறை நானும் என் ப்ரண்ட்டு ஒருத்தனும் ஒரு ஒரு வேல விசயமா???( ஐயோ வேல எண்டா தொழில் என்னு நீங்க யோசிக்க வேனாம் எங்க லவர்ஸ் ஸ பார்க்கப் போறதுதான் எங்க வேலயே) பக்கத்து தெருவுக்கு போகிட்டு இருந்தோம்.ஒரு வீட்டுக்கு முன்னாடி ஒரு அழகான கார் அந்த காருக்குள்ள ஒரு புதிய நபர் ஒருவரும் இருந்தார். எனக்கு சந்தேகம் வரவே நான் என் ப்ரண்டுக்கிட்ட அந்த கார் பத்தியும் அந்த ஆள் பத்தியும் கேட்டேன்...உடனே அவன் இவனத்தெரியாவாடா??? இவந்தான்  கனேஷ் ரைவர்ர கார் லோயர் என்னு சொல்லிப்புட்டான்....எனக்கு ஒரே சிரிப்பு...பிறகு அவனும் சிரிச்சான் அவன் சொல்ல வந்தத தப்பா சொல்லிவிட்டான் என்று அவனுக்கும் புரிந்துவிட்டது.அவன் சொல்ல வந்தது இதுதான் கனேஷ் லோயர்ர கார் ரைவர் என்னு.

நாங்க படிக்கிறப்போவே இருந்து இப்படித்தான்....? எடக்கு முடக்கா பேசிக்கிட்டே இருப்போம்.என் ப்ரன்ட்ஸ்ல கொஞ்ச பேர் இருக்குறானுகள் யாராவது ஏதாவது தப்பா பேசிட்டா அந்த வார்த்தைய அவனுக்கு பட்டப் பெயரா சூட்டிடுவானுகள்.

இது தெரிஞ்சிதான் நான் அவனுகள்கிட்ட அளவோட பேசி மேட்டர முடிச்சுடுவன்.


அப்பிடித்தான் நாங்க எல்லோரும் சீரியஸா ஒரு மேட்டர் பத்தி கதச்சிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவன் வேகமாக வந்தான் வந்தவன் சந்திரன் போடியார் வயலுக்குள்ள இருக்கும்போது பாம்புல நடந்து வரம்பு கொத்திட்டாம் இப்ப கொஸ்பிட்டல்ல இருக்கிறார் வாங்கடா போய் பார்ப்போன் என்றான். 

எங்களுக்குள்ள ஒரே சிரிப்பு திருவிழாக்கு வெடிக்கிற பட்டாசுமாதிரி விடாமலே சிரிச்சுக்கிட்டு இருந்தோம் அவனுக்கு ஒன்னுமே புரியல்ல....எங்களுக்கு அவன் சொல்லவந்த செய்தி ஏற்கனவே தெரிஞ்சு போச்சு ஆனா அவன் அந்த செய்திய படபடக்க வந்து சொன்ன விதமும் அப்போது அவனுடைய வார்த்தைகள் தவறியதையும் அவன் இன்னமும் உணராமல்தான் இருந்தான்.


பின்பு நான் மச்சான் வரம்புல போகும் போது பாம்பு கடிச்சதா..? இல்ல  பாம்புல போகும் போது வரம்பு கடிச்சதா என்று கேட்டேன்.
ஆனா அவன் கடைசிவரைக்கும் நான் சரியாத்தான் சொன்னன் என்னுக்கிட்டே இருந்தான்....நான் இப்பவும் அந்த சம்பவங்கள ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பேன்.ஏன்னா இப்போ அவன் எங்ககூட இல்ல தொழில் விடயமா மத்திய கிழக்கு போய்ட்டான்.


நாங்க ஏன் சிரிச்சோம்னா அவன் சொல்ல வந்த விசயத்தைப் பத்திதான் நாங்களும் கதச்சிட்டு இருந்தோம் ஆனா அவன் சொல்ல வந்த விசயத்தை சரியா சொன்னானோ இல்லயோ நல்ல காமடி ஒன்னு சொன்னான்.


நண்பர்கள் தான் இப்படியெண்டா... நாம வேலை செய்யிற Office ல இருக்குறவனுகளும் அப்படித்தான்.நமக்கெண்டு வந்து மாட்டுறானுகள் பாரு.


ஒரு முறை நான் Office ல இருக்கும் போது என்னுடைய தொண்டர்களில் ஒருவன் சேர்...? (நம்மளையும் ஒருவன் சேர் என்கிறான்) நல்லா சோளம் விளைஞ்சுகிடக்கு தோட்டத்துக்குப் போய் சோளம் அவிப்போமா ?அங்கேயே எல்லா வசதியுமிருக்கு  சேர் என்றான்.


மழை பெய்து இரண்டு நாள் இருக்கும் என்றபடியால் பீல்ட் ஆரம்பிக்க முடியாத காரணத்தாலும்  சோளம் சாப்புடுற ஆசையியாலும் சரி போவோம் என்னு சொல்லி இன்னும் சில தொண்டர்களையும் கூட்டிக்கொண்டு எனக்கு தந்த வாகணத்தை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு புறப்பட்டோம்.

போகும் போது தேவையில்லாத பேச்சுக்கள் எல்லாம் எங்களுக்குள்ள வந்து வந்து போச்சு...பின் சோளம் சாப்பிட்ட கூப்பிட்டவனுக்கிட்ட அவனோட ப்ரண்டு அவனோட லவ்வர பத்தி விசாரிச்சான். 
மச்சான் ஒன் ஆள எனக்கு நீ இன்னும் காட்டள்ளயடா..? என்றான் நண்பன்

அதுக்கு அவன் அடேய் அன்னைக்கு  கோயில்ல நான் காட்டினேனடா நீ பார்க்கல்லியா..? என்றான்.


எதுடா அந்த YELLOW கலர் சுடிதார் போட்டிருந்தவள்தானே என்றான் நண்பன் அதற்கு அவன் உடனே...:)))


அடே YELLOW இல்ல மச்சான் மஞ்சள் கலர் சுடிதார் போட்டவடா எண்டான் பாரு...:))) வாகணம் முழுக்க ஒரே சிரிப்பொலிதான்.எல்லோருடைய கண்களிலையும் ஆனந்த கண்ணீர் வருமளவுக்கு சிரித்துவிட்டோம். நமக்கு ஒரு ஆள் மாட்டினா போதுமே அவர வச்சி ஒரு மூனு நாள ஓட்டியிருப்போம்...செம..செம.. காமடியா இருந்திச்சு..

அவன் சொல்ல வந்தது YELLOW இல்ல வேற ஒரு கலர ஆன அது என்ன கலர் என்னு கடைசி வரைக்கும் அவன சொல்ல விடாலே ஆக்கிப்பொட்டோம்.


அப்புறம் சோளம் எல்லாம் வடிவா தோட்டத்துல முறிச்சி உடனுக்குடன் அடுப்புள போட்டு சாப்பிட்டோம் ரொம்ப ருசியா இருந்திச்சு..என்ன வாயால தண்ணி வருகுதா...?

மேட்டர்: சொல்ல வந்த விடயத்தை பேச்சு வழக்கு சொல்லில் சொல்ல முயற்சித்ததால் ஏதாவது அசௌகரியங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால்தயவு செய்து மன்னிச்சூ.................சூசூ


அடுத்து சம்பந்தபட்டவர்களின் உண்மைப் பெயர்களை இப் பதிவினுள் உள்வாங்கவில்லை ஒரு சில நன்மைக்காக.

யப்பா........இப்பிடி உங்களுக்கும் நடந்திருக்கும் வெக்கப்படாம கீழால  சொல்லிட்டு போங்கப்பா.......

Post a Comment

18 Comments

  1. சிட்டுக்குருவி....

    நண்பர்கள் சொன்னதை மட்டு்ம் போட்டுட்டீங்க.
    நீங்க சொன்னதை போடவேவேவேவே இல்லையே....

    இது சரியில்லை சிட்டுக்குருவி.

    ReplyDelete
    Replies
    1. அது நல்லாவே இருக்காதுங்க............:)

      Delete
  2. வணக்கம் பாஸ்..
    நினைவுகளை மீட்டியதோடு, தவறுகளைத் திருத்திக்க உதவும் அருமையான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

    சொல்ல வரும் விடயம் பதட்டம் காரணமாக தவறிப் போக, வார்த்தைகள் முண்டியடித்து நழுவிக் கொள்ளும் நிலையினை உணர்த்தும் அருமையான பதிவினை கொடுத்திருக்கிறீங்க.

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  3. தவறுகளைத் திருத்தி முடியிறதுக்கிடையில வாழ்க்கையே ஒரு பக்கமா போயிடுது.நீங்கள் சொன்ன தவறுகளெல்லாம் சின்னதாகத் தெரிஞ்சாலும் அந்தச் சமயத்தில எங்களையறியாமலே வந்திடும்.நினைச்சுத் திருத்தவும் முடியாது.இயல்பா எதார்த்தமா வந்து விழும் தவறுகள்....மன்னிக்கப்படும் !

    ReplyDelete
    Replies
    1. ஐயோ நான் இந்த தவற திருத்திக்கோனும் என்னு கட்டாயப்படுத்தல்ல...:)

      எல்லோருக்கும் இப்படியான தவறுகளுக்கு உள்வாங்கப்பட்டவர்கள்தான் அவர்களுடைய இந்த தவறுகளையும் இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொஞ்ச நேரம் சந்தோசமாக இருக்கலாம் என்னுதான் நினைச்சன்

      Delete
  4. Mr.Perfect ஆக இருக்க ஆசை தான்...அப்பப்பம் யாரும் பார்க்காத நேரம் குட்டியா பெரிய தவறுகள் நடந்திர்றது தலைவா..

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்யிறது...தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் தானே மனிதன் பிறந்துள்ளான்

      Delete
  5. பதிவு சூப்பர் பாஸ்..உங்க தொண்டர்களே இப்பிடி என்றால் தலைவர் தலைவர் சார் உங்க திறமை எப்பிடி இருக்கும்..மறைச்சிடீங்களே.......!

    ReplyDelete
    Replies
    1. அது தானே தலைவர் திறமை எப்பிடி இருக்கும்....:)

      Delete
  6. இப்பிடி உங்களுக்கும் நடந்திருக்கும் வெக்கப்படாம கீழால சொல்லிட்டு போங்கப்பா....

    ஆமா அப்பத்தானே அடுத்த பதிவை நம்மள வச்சு ஓட்டலாம்

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ஓட்டுறதா..என்னப்பா ஒருக்கா பசங்க படம் பாரு ஓட்டுறத பத்தி தெளிவா சொல்லிய்இருக்குறாங்கள்...நன்றி நண்பா

      Delete
  7. நல்ல அழகாகச் சொல்லிட்டீங்க... ஆனா, எனக்கு ஒன்றும் சொல்ல வரல்ல ஷை ஷை ஆ வருது:))

    ReplyDelete
    Replies
    1. அட இங்க பார்ரா யாருக்கு ஷை....வருகுது என்னு...:)

      Delete
  8. எல்லாவற்றையும் வாசித்தபின் என் கண்களிலும் கண்ணீர்...ஆனந்தத்தில்......இது போல் சம்பவங்கள் பல நடகும்போது வரும் அதிக சிரிப்பு, பின் மற்றவரிடம் விளக்கும்போது சுவாரசியம் குறைந்துவிடும்...ஆனால் அதையும் நீங்கள் சுவைபட, கண்களில் நீர் வருமளவு எழுதிவிட்டீர்கள்...

    நானும் ஒரு தடவை சிக்கனில் கிச்சன் இருக்கு என்று சொல்லிவிட எங்க வீட்டில் கலாய்த்து விட்டார்கள்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete