Looking For Anything Specific?

ads header

காக்கா......... பிடிக்க சில ஐடியாக்கள்.

தலைப்பைப் பார்த்து நீங்க ஏமாந்திடக் கூடாது என்பதற்காக முன்னாடியே சொல்லிவிடுறன் இது கா...கா.....கா...என கத்தும் காக்காய் புடிக்கிறது பத்தியதில்ல இது வே........................ற
தயவு செய்து காக்காய் புடிச்சு ஐந்து ரூவா காக்க பிரியாணி போட்டு பாய் கடைக்கு ஆப்புவைக்கும் நோக்கத்தோட இங்க வந்தவங்க அந்த நோக்கத்தை இப்போதே மறந்திடுங்க...

காக்க புடிக்கிறது பத்தி நான் இங்க விளங்கப்படுத்த தேவையில்ல என்னு நினைக்கிறன் ஏன்னா இங்க நிறையப்பேர் நிறையப்பேர காக்க புடிச்சு வச்சிருக்கிறாங்க....புது ப்ளாக்குக்கு போய்..ஆஹா....ஓஹோ...என்னு கமண்ட் போடுவதும் அந்த வகையத்தான் சேரும் என்னு நான் சொல்லவா வேனும்.

நேரடியாவே விசயத்துக்கு வாரன்

இப்ப நாம நம்மட ஒரு மேட்டர் ஆகவேண்டியிருந்தா பல பேர சந்திக்க வேண்டியிருக்கும்.நம்ம வேல வைத்தியத்தோட தொடர்புபட்டிருந்தா அந்த துறை சார்ந்தவங்கள சந்திப்போம். இல்ல  படிப்போட தொடர்புபட்டிருந்தா அது தொடர்புபட்டங்கள சந்திப்போம்.

இங்க நான் என்னத்த சொல்ல வாரன் என்னா.......

நம்ம காரியம் ஆகனுன்னா நாலு பேர சந்திக்க தான் வேனும் அப்பிடீன்னு நீங்க அவசரப் பட்டீங்கன்னா நான் சொல்லவந்த விசயத்த சொல்லாமப் போயிடுவன்.

இங்க நான் என்னத்த சொல்ல வாரன் என்னா.......
யோவ் சீக்கிரமா சொல்லித்தொலைய்யா...:))))

சில மேலதிகாரிங்கள பார்த்து இந்த அதிகாரிங்கிட்ட எல்லாம் நாம தொடர்பு வச்சிருந்தா நம்ம இமேஜ்க்கு கொஞ்சம் தூக்கலா இருக்கும்... மேலும் இவனுகள்ட்ட வச்சிருக்கிற தொடர்புகளால நம்மட வேலைகளை சீக்கிரம் முடிச்சுக்கலாம் என்னு எல்லாருமே ஆசைப்பட்டிருப்போம்.அந்த அதிகாரிகளுக்கிட்ட நாம எப்பிடி லேசா தொடர்ப ஏற்படுத்துற என்னு நான் ஐடியா சொல்லுறன்.


முதல்ல ஒரு அலுவலகத்துக்கு போனோம்னா அங்க நிறைய அதிகாரிங்க இருப்பாங்க அவனுங்க யாரும் நம்மல கண்டுக்க மாட்டானுகள் ஏன்னா நம்மளத்தான் அவனுகளுக்கு தெரியாதே........:)))அவனுகள்கிட்ட போய் பேசவும் தயக்கமா இருக்கும் எந்த நேரமும் சீரியசா எதையோ கதச்சிட்டு இருப்பானுகள் ஆனா அங்க சீரியஸ் என்னு ஒன்னுமே இல்ல வெரும் ஊர்வம்புதான் கதைக்கிறானுகள் என்னு கிட்ட போய் பார்த்தாத்தான் விளங்கும்.

இந்த டைம்ல தான் நாம புத்திய பயன்படுத்த வேணும்........??? அந்த அலுவலகத்தில இருக்கும் வாச்மேன் அல்லது பியோனுக்கிட்ட போய் நம்ம மேட்டரச் சொல்லி அவனுட பாக்கட்டுக்குள்ள சில தாள்களை தள்ளிவிடனும் இப்ப நம்ம மேட்டர் முடிஞ்சு போனமாதிரிதான்.

ஆகவே தான் நம்மட வேலை ஒன்னு சீக்கிரமா முடியனும்னா நம்மட பணம் கொஞ்சம் செலவாகத்தான் வேனும் அத நாம நேரடியா அதிகாரிங்கிட்ட கொடுத்து நம்மட வேலைய முடிச்சுட்டோம் எண்டா அடுத்த தடவ நாம அதிகாரிய சந்திக்கும் போது நம்மள அவர் ஞாபகம் வைச்சிருக்க வாய்ப்பில்லை.ஏன்னா நம்மள போல நெறையப்பேர அவர் தினம் தினம் சந்திக்கிறார்.


அதனால தான் சொல்லுறன் நம்ம கொடுக்குற லஞ்சத்த பியோன் அல்லது வாச்மேன் கிட்ட இருந்து ஆரம்பிச்சோம் எண்டா அது நமக்கு அடுத்த தடவ அங்க போகும் போதும் பயன்படும் இந்த முறை லஞ்சத்தொகை குறையும்.


ஐயோ நான் சொல்லவந்தது லஞ்சத்தைப் பத்தி இல்லீங்க..........நீண்ட நாளாக இந்த பதிவு என் டேஷ்போர்ட்ல கிடக்கிறதால எத நினைச்சு இந்த தலைப்ப போட்டன் என்னு எனக்கு ஞாபகம் இல்லீங்க...அதனால சும்மா சும்மா நெனவுக்கு வந்ததெல்லாம் எழுதுறன் கோவிச்சுடாதோங்க...

அதிலவும் ஒரு விசயம் இருக்கு லஞ்சத்துக்கு அடைப்படையே நாமதான்....நாம லஞ்சம் கொடுக்குறத்துக்கு அடிப்படையே இந்த வாச்மேனும் பியோனும்தான் ஆக லஞ்சத்தை எதிர்ப்பவர்கள் முதல்ல இந்த டுபாக்கூர்களை வேலைய விட்டு தூக்குங்க அப்புறமா....?? என்ன வேனாலும் செய்யுங்க..( நான் சொன்ன கெட்டகெரில உள்ளவங்க யாராச்சும் இத படிச்சா ....?ஏசிட்டு போகட்டும்....ஹா...ஹா...ஹா)

ஆஆஆ.....இப்ப ஞாபகத்துக்கு வருகுது.........


ஒரு அரசாங்க அலுவலகத்துகு நாம போகும் போது முதல்ல நம்மள கடுப்பேத்துறவனுகள் இந்த வாச்மேன்களாத்தான் இருப்பானுகள்...என்னத்துக்கு வந்த...? யார பார்க்கனும்....? அவர் இன்னும் வரல்ல கொஞ்சம் இவடத்த நில்லு...இப்பிடி ஆயிரத்து எட்டு ....:::))) கேள்வி கேப்பானுகள்...

அதுக்கடுத்து பியோன் பயலுகள் ஆபிசர் ரூம் முன்னாடி நின்னோம்னா அவனுகள்ர தொல்ல தாங்க முடியல்ல யோவ்....அய்யா வார நோரமாகுது கொஞ்சம் தள்ளி நில்லு என்னு நமக்கிட்ட அவனுகள் பாஸ்..ஆகிடுவானுகள்.


அதனால தான் நான் முன்னாடியே சொல்லிட்டேன் நம்ம காரியம் ஒரு மேலதிகாரிக்கிட்ட முடியவேண்டியிருந்தா நாம முதல்ல அந்த அதிகாரிட வாச்மேனையும் பியோனையும் கைக்குள்ள போட்டுக்கனும் அப்படி அவனுகள காக்கா புடிச்சாத்தான் மேலதிகாரிய நாம காக்கா புடிக்கலாம்..


சபா......எப்பிடியோ இந்த பதிவை எழுதி முடிச்சிட்டன் முக்கியமான ஒரு மேட்டர் இவ்வளவு விசயமும் நான் சொன்னது சாதாரண ஒரு குடிமகனுக்கு தான். சமூகத்துல இருக்குற முக்கிய புள்ளிங்க இந்த ஐடியாக்கள பின்பற்ற வேனாம் அவங்களுக்கு வேற டிப்ஸ் வைச்சிருக்கிறேன் தனியா நம்மள கவனியுங்க....அப்பதான் உங்களுக்கு டிப்ஸ் கிடைக்கும்.

மேட்டர்... சும்மா சும்மா சும்மா...எழுதினன் ... மொக்கையா இருந்தா..? திட்டிட்டு போங்க..::(

Post a Comment

26 Comments

  1. எனக்கொரு சந்தேகம்... எதுக்கு காக்கா பிடிப்பதெனச் சொல்லோணும்? ஏன் சிட்டுக்குருவி பிடிக்கிறது, கிளி பிடிக்கிறது இப்படிச் சொன்னால் என்ன?

    என் சந்தேகத்தைத் தீர்த்துப்போட்டுத்தான் அடுத்த தலைப்பு போடோணும்:)))

    ReplyDelete
    Replies
    1. ஐயோ.......இப்பிடி திடீர்னு கேட்டுப்புட்டா எப்பிடி பதில் சொல்லுறது........?

      எல்லாரும் அப்பிடித்தான சொல்லுராங்க....கா...க்...கா...புடிக்கிறது என்னு...இனி நாம அத மாத்திக்குவோம் சிட்டு குருவி புடிக்கிறது என்னு ...

      Delete
    2. குருவி பிடிப்பது, கொக்கு பிடிப்பது என்றெல்லாம் சொல்லாமல் காக்கா பிடிக்கறதுன்னு ஏன் பேர் வந்துச்சு தெரியுமா? தெரிஞ்சுக்க இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க....
      http://www.rahimgazzali.com/2010/12/blog-post_17.html

      Delete
    3. ஆஹா... படித்தேன் அருமையான விளக்கம்... மிக்க நன்றி ரஹீம். என் சந்தேகம் தீர்ந்து போச்ச்ச்ச்ச்...

      சிட்டு நீங்க இனி அடுத்த தலைப்புப் போடலாம்:)))

      Delete
  2. //சும்மா சும்மா சும்மா...எழுதினன் ... மொக்கையா இருந்தா..? திட்டிட்டு போங்க..::(//

    இது கரீட்டு:))

    ReplyDelete
    Replies
    1. என்னாது கறிக்கு உப்பு கானாவா.:)))

      Delete
  3. குருவி பிடிப்பது, கொக்கு பிடிப்பது என்றெல்லாம் சொல்லாமல் காக்கா பிடிக்கறதுன்னு ஏன் பேர் வந்துச்சு தெரியுமா? தெரிஞ்சுக்க இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க....
    http://www.rahimgazzali.com/2010/12/blog-post_17.html

    ReplyDelete
    Replies
    1. ஐயோ உங்க திறமைய நான் என்னவெண்டு சொல்லுவது...உண்மையில உங்க பதிவ பாத்த பிறகுதான் காக்காட உண்மை வேஷம் புரிந்தது ரொம்ப நன்றி நண்பா

      Delete
  4. /////////////////புது ப்ளாக்குக்கு போய்..ஆஹா....ஓஹோ...என்னு கமண்ட் போடுவதும் அந்த வகையத்தான் சேரும் என்னு நான் சொல்லவா வேனும்.////////////

    சரி இப்போ நாங்க கருத்து போடுறதா வேண்டாமா ஹி ஹி ஹி, தொழில் ரகசியத்தை இப்புடி புட்டு புட்டு வச்சா எப்புடி தலைவா ஹி ஹி ஹி ஹி ..!

    ReplyDelete
    Replies
    1. ஐயோ அவசரப்பட்டு ரகசியத்த அவுட்டாக்கிட்டேமே.....? இப்ப நான் என்ன பண்ணுறது..:(

      Delete
  5. என்னத்தை சொல்லுறது...?
    ஏதாவது எழுதினா... கா.கா.. பிடிக்கிறதா நெனச்சிட்டா...
    ஏன் எனக்கு வம்பு.
    நான் பின்னோட்டம் இடாமலேயே போறேன் சிட்டுக்குருவி

    (நாளைக்கு வெண்புறா பிடிக்கிறது எப்படின்னு எழுதுங்குளேன்...
    எனக்கு வசதியா இருக்கும்.ஹி ஹி ஹி...)

    ReplyDelete
    Replies
    1. என்னது நம்ம டிப்ஸ யூஸ் பண்ணி புறா சூப்பு போடப்போறயளா...?

      Delete
  6. இந்தா பாருங்க உங்களுக்கு கொமன்ற் பண்ணுறது சிட்டுக்குருவி பிடிக்கத்தான். புரிஞ்சுதா?????????

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப புரிஞ்சுது நண்பா....

      Delete
  7. மொக்கை...மொக்கை...மொக்கை...மொக்கை...மொக்கை...அப்படீன்னு நான் சொல்லமாட்டேன்...-:)

    ReplyDelete
    Replies
    1. அது தானே இத எப்பிடி உங்களால மொக்கை என்னு சொல்ல முடியும்...?:))))000

      Delete
  8. சரி விடுங்க பாஸ்...மன்னிச்சு விட்டுறேன்..:))))))))))))))))))

    ReplyDelete
  9. சிட்டுக்குருவியை எந்த பீயோன் காக்கா பிடிக்க வழி சொன்னான்! ம்ம்ம் இப்படி இல்லாட்டியும் சில வேலைகளை செய்ய முடியாது இருக்கே பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அததானே நானும் சொல்லுறன் காக்கா புடிச்சு வையுங்க கப்பல்ல போகும் போது பயன்படும்

      Delete
  10. பயனுள்ள பதிவு
    நகைச்சுவையுடன் சொல்லிச் சென்றவிதம்
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தமிழ்மணம் 4 நானே.. அது நானே..

    ReplyDelete
  12. கா...கா...கா....இந்தக் கா...கா வேற.இது மொக்கைப் பதிவில்ல.உண்மையா காக்கா பிடிக்கேல்ல குருவியாரே !

    ReplyDelete
  13. காக்கா பிடிப்பது ஒரு கலை!எல்லோராலும் முடியுமா!

    ReplyDelete
  14. i !!கொக்கு தலையில் வெண்ணை !

    ReplyDelete