Looking For Anything Specific?

ads header

கவிதைகள் படைக்கிறேன்....

 நான் மனிசன் நீங்க பெரிய மனிசனாக விரும்பினா என்னை மன்னியுங்கோ.....காரணம் கேக்கப்படாது.இங்க ஒரு சிலருக்கு காரணம் தெரியும் அப்படி காரணம் அவசியமானவங்க அந்த ஒரு சிலரிடமும் கேட்டு தெரிஞ்சிக்கோங்க.



இது ஒரு புதிய பகுதியாகும் என்னுள் உதிக்கக் கூடிய உணர்வுகளை மொழிபெயர்த்து கவிதை வடிவில் இப்பகுதியில் தரவிருக்கிறேன்.
பொதுவாக கவிதை எழுத பிடிக்கும் ஆனால் எனக்கு கவிதை வருவதென்பது இப்படியும் சொல்லலாம் கவிதை உதிப்பதென்பது மிக மிக மிக கஷ்ட்டமான விடயம்.ஆகவே அப்படி கஷ்டப்பட்டு வரக்கூடிய கவிதைகளை அப்பப்போது இந்த பகுதியூடாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உங்கள் ஆதரவை எப்போதும் போல் தந்து வாழ்த்தா விட்டாலும் விமர்சித்துவிட்டாவது போய்விடுங்கள்.


கவிதைகள் படைக்கிறேன்....

என்னுள் எழும் எதுவொன்றோ
என்னையுமறியாமல்
விதையாகி விளைகிறது
நிறமறியாக் கனவுகளில்...

தன் பிறப்பில் குறைகண்டு
காலைச்சூரியனுக்கு
வேதனையுடன் விடைகொடுக்கும்
பனித்துளிகள்...

பனித்துளிக்கு ஆறுதல் மொழிந்து
சூரியனுக்கு தண்டனை கொடுக்க
கனவுகளுக்கு நிறம் கொடுக்கிறேன்
வாவில்லிம் கடன்வாங்கி.

கனவுகள் நிறம்பெற்று
கவிதையாய் மாறுகிறது
கவிதைகள் படைக்க
கற்றுத்தந்த பனித்துளிக்கு...
கடமைப்படுகிறேன்...

தன்குறை போக்க
தரணியில் யாருமின்றி...
தவிக்கிறது பனித்துளிகள்...

 

Post a Comment

36 Comments

  1. சிட்டுக்குருவி..புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..உங்களின் கவி படைப்புக்களைக் காண மிகமிகவே ஆவல்...

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.... அப்படியே ஆவலா இருங்கோ...:)

      Delete
  2. முயற்சித் திருவினையாக்கும் என்பார்கள்
    நல வாழ்த்துக்கள்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா..உங்களின் வாழ்த்துக்களும் கருத்துகளும் தான் எங்களுக்கு ஒரு உற்சாகத்தை தருகிறது.

      Delete
  3. ஆங்.., கவிதை நல்லாத்தான் இருக்கு நண்பா ..!

    ReplyDelete
  4. சிட்டுகுருவி சார் இந்த கவிதையை தானே அன்னைக்கு பதிவில போட்டுட்டு பின்ன நீக்கிட்டேங்க?....

    பனித்துளி வைத்து எழுதிய முதல் கவிதைக்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. ஐயோ சாரா....? ஓவரா இல்ல..

      பதிவின் ஆரம்பத்திலே கேட்டுவிட்டேன்...நீங்க பெரிய மனிசனா..?

      கருத்துக்கு நன்றி

      Delete
  5. உங்களுக்கே கவிதை வருவது கஷ்டமா? அப்போ எங்களை எல்லாம் என்ன சொல்வது. கவிதை மிக அருமையாகவே இருக்கிறது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ....:) ரொம்ப நன்றி சார்...

      Delete
  6. கன்னிக்கவிதையோ சிட்டு? கலக்கிட்டீங்க... உண்மையிலேயே நன்றாக இருக்கு.. கீப் இட் அப்...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ...:) மிக்க நன்றி மெடம்

      Delete
  7. ////காலைச்சூரினுக்கு ///

    ஆஆஆஆ றீச்சர் ஓடிவாங்கோ..ஸ்பெல்லிங் மிசுரேக்கு:)))

    ReplyDelete
    Replies
    1. நாங்கெல்லாம் காலைக்கு அடுத்ததா..சூ..வ கண்டாலே காலைச்சூரியன் என்னுதான் வாசிப்போம்..//

      அவ்வளவு டீப்பாவா படிக்கிறீங்க....அவ்வ்வ்வ்வ்

      Delete
    2. சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி திருத்திவிடுகிறேன்

      Delete
  8. அட.. கவிதை நல்ல சொல்றீகளே

    வாழ்த்துக்கள் உங்களின் கவிக்கும் புதிய பகுதிக்கும்

    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ்...உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  9. சிறிய வேண்டுகோள்

    கலர்கலரா போடுங்க தப்பே இல்லைங்கோ - அந்த மஞ்சள் நிற எழுத்து தெரியலைங்கோ அத என்னன்னு கொஞ்சம் பாருங்கோ

    ReplyDelete
    Replies
    1. நீங்கெல்லாம் இப்படி சுட்டி காட்டினாத்தானே எதிர்காலத்துல இந்த தமிழ் உலகம் மிகப்பெரிய ஒரு கவிஞசனை பெற்றுக்கொள்ளும்.//

      திருத்திவிடுகிறேன்

      Delete
  10. அறிமுகம்தான் முதல் முயற்சி என்கிறது
    கவிதையில் முதிர்ச்சி தெரிகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்....

      Delete
  11. பனி நீர் பிறப்பித்த கவிதை,அப்பனிநீர் போல் மறையாத கவிதை.நன்று.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா...தொடர்ந்தும் உங்கள் ஆதரவைத்தாருங்கள்

      Delete
  12. இனிக் கவிதைகளும் பிரசவிப்பார் சிட்டுக்குருவியார்.வாழ்த்துகள்.முடியும் என்றால் எதுவும் முடியும் !

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ...கவிதையில பிரபலமானவங்க நீங்க..உங்க கவிக்கும் எங்க கவிக்கும் வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்...

      ரொம்ப நன்றி

      Delete
  13. கவிதைக்ள்லாம் பிரமாதம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ...உங்க கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  14. கைய குடுங்க..கலக்கிட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கிட்ட கைய தந்தா நீங்க அப்பிடியே ஆட்டைய போட்டீங்கன்னா என்னபன்றது நான்..

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  15. சிட்டுக்குருவி....
    பிரயாணம் போகணுமின்ன முதல் அடி எடுத்து வைத்துத் தான் ஆகவேண்டும்.
    அப்படித் தான் கவிதை எழுதுவதும்.
    அடிவெடுத்து வைத்து விட்டீர்கள்.
    தொடர்ந்து நடங்கள். நீங்கள் போக வேண்டிய இடம் தானாக வரும்.

    வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ...இவ்வலவு பெரிய உதாரணத்தோட வந்து கருத்து சொல்லியிருக்கிறீங்க ரொம்ப நன்றிங்க...தொடர்ந்தும் உங்கள் ஆதரவைத்தாருங்க..

      Delete
  16. பனித்துளி கவிதை ரசிப்புமிக்கது தொடருங்கள் கவிஞரே சிட்டுக்குருவிக்கு இல்லை கவிதை தட்டுப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

      Delete
  17. உங்கள் கவிதையைப் படிக்கும் பொழுது, இது உங்களின் முதல் கவிதை போல் தோன்றவில்லை.சூப்பர்.............

    தன்குறை போக்க
    தரணியில் நீங்கள்
    இருப்பதை எண்ணி
    பனித்துளிகள்
    தன் கண்ணீர் துடைத்தன ........

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அழகான கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ப்ரோ...

      Delete