கவிதைகள் படைக்கிறேன்....

 நான் மனிசன் நீங்க பெரிய மனிசனாக விரும்பினா என்னை மன்னியுங்கோ.....காரணம் கேக்கப்படாது.இங்க ஒரு சிலருக்கு காரணம் தெரியும் அப்படி காரணம் அவசியமானவங்க அந்த ஒரு சிலரிடமும் கேட்டு தெரிஞ்சிக்கோங்க.இது ஒரு புதிய பகுதியாகும் என்னுள் உதிக்கக் கூடிய உணர்வுகளை மொழிபெயர்த்து கவிதை வடிவில் இப்பகுதியில் தரவிருக்கிறேன்.
பொதுவாக கவிதை எழுத பிடிக்கும் ஆனால் எனக்கு கவிதை வருவதென்பது இப்படியும் சொல்லலாம் கவிதை உதிப்பதென்பது மிக மிக மிக கஷ்ட்டமான விடயம்.ஆகவே அப்படி கஷ்டப்பட்டு வரக்கூடிய கவிதைகளை அப்பப்போது இந்த பகுதியூடாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உங்கள் ஆதரவை எப்போதும் போல் தந்து வாழ்த்தா விட்டாலும் விமர்சித்துவிட்டாவது போய்விடுங்கள்.


கவிதைகள் படைக்கிறேன்....

என்னுள் எழும் எதுவொன்றோ
என்னையுமறியாமல்
விதையாகி விளைகிறது
நிறமறியாக் கனவுகளில்...

தன் பிறப்பில் குறைகண்டு
காலைச்சூரியனுக்கு
வேதனையுடன் விடைகொடுக்கும்
பனித்துளிகள்...

பனித்துளிக்கு ஆறுதல் மொழிந்து
சூரியனுக்கு தண்டனை கொடுக்க
கனவுகளுக்கு நிறம் கொடுக்கிறேன்
வாவில்லிம் கடன்வாங்கி.

கனவுகள் நிறம்பெற்று
கவிதையாய் மாறுகிறது
கவிதைகள் படைக்க
கற்றுத்தந்த பனித்துளிக்கு...
கடமைப்படுகிறேன்...

தன்குறை போக்க
தரணியில் யாருமின்றி...
தவிக்கிறது பனித்துளிகள்...

 

36 கருத்துரைகள்

சிட்டுக்குருவி..புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..உங்களின் கவி படைப்புக்களைக் காண மிகமிகவே ஆவல்...

Reply

முயற்சித் திருவினையாக்கும் என்பார்கள்
நல வாழ்த்துக்கள்

சா இராமாநுசம்

Reply

ஆங்.., கவிதை நல்லாத்தான் இருக்கு நண்பா ..!

Reply

சிட்டுகுருவி சார் இந்த கவிதையை தானே அன்னைக்கு பதிவில போட்டுட்டு பின்ன நீக்கிட்டேங்க?....

பனித்துளி வைத்து எழுதிய முதல் கவிதைக்கு வாழ்த்துகள் :)

Reply

உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.... அப்படியே ஆவலா இருங்கோ...:)

Reply

வாங்க ஐயா..உங்களின் வாழ்த்துக்களும் கருத்துகளும் தான் எங்களுக்கு ஒரு உற்சாகத்தை தருகிறது.

Reply

ஐயோ சாரா....? ஓவரா இல்ல..

பதிவின் ஆரம்பத்திலே கேட்டுவிட்டேன்...நீங்க பெரிய மனிசனா..?

கருத்துக்கு நன்றி

Reply

உங்களுக்கே கவிதை வருவது கஷ்டமா? அப்போ எங்களை எல்லாம் என்ன சொல்வது. கவிதை மிக அருமையாகவே இருக்கிறது நண்பரே.

Reply

ஐயோ....:) ரொம்ப நன்றி சார்...

Reply

கன்னிக்கவிதையோ சிட்டு? கலக்கிட்டீங்க... உண்மையிலேயே நன்றாக இருக்கு.. கீப் இட் அப்...

Reply

////காலைச்சூரினுக்கு ///

ஆஆஆஆ றீச்சர் ஓடிவாங்கோ..ஸ்பெல்லிங் மிசுரேக்கு:)))

Reply

அட.. கவிதை நல்ல சொல்றீகளே

வாழ்த்துக்கள் உங்களின் கவிக்கும் புதிய பகுதிக்கும்

தொடர்கிறேன்

Reply

சிறிய வேண்டுகோள்

கலர்கலரா போடுங்க தப்பே இல்லைங்கோ - அந்த மஞ்சள் நிற எழுத்து தெரியலைங்கோ அத என்னன்னு கொஞ்சம் பாருங்கோ

Reply

ஐயோ...:) மிக்க நன்றி மெடம்

Reply

நாங்கெல்லாம் காலைக்கு அடுத்ததா..சூ..வ கண்டாலே காலைச்சூரியன் என்னுதான் வாசிப்போம்..//

அவ்வளவு டீப்பாவா படிக்கிறீங்க....அவ்வ்வ்வ்வ்

Reply

வாங்க பாஸ்...உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

நீங்கெல்லாம் இப்படி சுட்டி காட்டினாத்தானே எதிர்காலத்துல இந்த தமிழ் உலகம் மிகப்பெரிய ஒரு கவிஞசனை பெற்றுக்கொள்ளும்.//

திருத்திவிடுகிறேன்

Reply

சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி திருத்திவிடுகிறேன்

Reply

அறிமுகம்தான் முதல் முயற்சி என்கிறது
கவிதையில் முதிர்ச்சி தெரிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Reply

பனி நீர் பிறப்பித்த கவிதை,அப்பனிநீர் போல் மறையாத கவிதை.நன்று.

Reply

இனிக் கவிதைகளும் பிரசவிப்பார் சிட்டுக்குருவியார்.வாழ்த்துகள்.முடியும் என்றால் எதுவும் முடியும் !

Reply

கவிதைக்ள்லாம் பிரமாதம்

Reply

கைய குடுங்க..கலக்கிட்டீங்க...

Reply

ரொம்ப நன்றி சார்....

Reply

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா...தொடர்ந்தும் உங்கள் ஆதரவைத்தாருங்கள்

Reply

ஐயோ ...கவிதையில பிரபலமானவங்க நீங்க..உங்க கவிக்கும் எங்க கவிக்கும் வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்...

ரொம்ப நன்றி

Reply

வாங்க சகோ...உங்க கருத்துக்கு மிக்க நன்றி

Reply

உங்களுக்கிட்ட கைய தந்தா நீங்க அப்பிடியே ஆட்டைய போட்டீங்கன்னா என்னபன்றது நான்..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

சிட்டுக்குருவி....
பிரயாணம் போகணுமின்ன முதல் அடி எடுத்து வைத்துத் தான் ஆகவேண்டும்.
அப்படித் தான் கவிதை எழுதுவதும்.
அடிவெடுத்து வைத்து விட்டீர்கள்.
தொடர்ந்து நடங்கள். நீங்கள் போக வேண்டிய இடம் தானாக வரும்.

வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.

Reply

ஐயோ...இவ்வலவு பெரிய உதாரணத்தோட வந்து கருத்து சொல்லியிருக்கிறீங்க ரொம்ப நன்றிங்க...தொடர்ந்தும் உங்கள் ஆதரவைத்தாருங்க..

Reply

பனித்துளி கவிதை ரசிப்புமிக்கது தொடருங்கள் கவிஞரே சிட்டுக்குருவிக்கு இல்லை கவிதை தட்டுப்பாடு.

Reply

கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

Reply

உங்கள் கவிதையைப் படிக்கும் பொழுது, இது உங்களின் முதல் கவிதை போல் தோன்றவில்லை.சூப்பர்.............

தன்குறை போக்க
தரணியில் நீங்கள்
இருப்பதை எண்ணி
பனித்துளிகள்
தன் கண்ணீர் துடைத்தன ........

Reply

ஆஹா அழகான கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ப்ரோ...

Reply

Post a Comment