குரங்கு போல் நடந்து சாதனை படைத்த இளைஞன்

எம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.........

மனிதன் சாதனைக்காக எதையெதையோ செய்து தன்னுடைய பெயரையும் புகழையும் இந்த உலகிக்கு வெளிக்காட்டுகிறான்.
சில மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளையும் செய்வதுக்கு அப்படிப்பட்டவர்கள் தயங்கமாட்டார்கள் தன்னுடைய உயிரையும் ஒரு பொருட்டாக கருதாமல் சாதனைக்காக பெரிய முயற்சியில் மனிதன் ஈடுபடுவது மனிதனால் ஒரு சில விடயங்கள் தவிர மற்ற எதனையும் சாதிக்க முடியும் என்பதனை காட்டுகிறது.

சிலர் சாதனைக்காக தன்னையே அர்ப்பணிக்கிறார்கள் இன்னும் சிலருக்கு சாதனையே அவர்களைத்தேடி வருகிறது.இப்படிப்பட்டவர்கள் உலகில் மிகவும் அரிதாகவே உள்ளனர்.

நன் இங்கு கூறப்போவது அவ்வாறான அரிதான ஒருவருடைய வாழ்வை பற்றித்தான்.

ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த kenichi ito என்பவர்தான் அவர் 29 வயதான இவர் தன்னுடைய கைகளையும் கால்களைப் போன்றே நடப்பதற்காக பயன்படுத்துகிறார் என்றால் எம்மால் நம்பமுடியுமா..?இது கற்பனையில்லை

உடலில் குறையுள்ளவர்கள்தான் இவ்வாறு செய்வார்கள் ஆனால் இவர் உடலில் எந்தவித குறையுமில்லாதவர் ஆனால் மனதில் ஏற்பட்ட சிறிய தளம்பலினால் இவ்வாறான ஒரு உலக சாதனைக்கு வித்திட்டுள்ளார்.

தன்னுடைய உடலமைப்பு குரங்கினுடையதைப் போன்று உள்ளது என தன்னுடைய நண்பர்கள் மூலம் கிண்டலடிக்கபட்டு பின் நாமளே நமக்கென ஒரு பாணியை எடுத்துக் கொண்டால் என்ன என தன்னுள் ஒரு வைராக்கியத்தை எடுத்து அதனை தன்னுடைய வாழ்நாள் சாதனையாகவும் நிகழ்த்தியுள்ளார் இவர்.

ஆனாலும் நண்பர்களினுடைய கேளிக்கைகளினால் இவர் ஒரு போதும் பாதிக்கப்படவில்லை எனக் கூறும் இவர் அவற்றையே தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார்.

சுமார் 9 வருடங்களாக இவர் தன்னுடைய கைகளையும் கால்களாக பாவித்து வாழ்ந்து வருகிறார்.
 

மேட்டர் :  யாரும் தன்னுடைய குறைகளை நினைத்து வருந்தாமல் நமக்குள்ளும் இருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தி உலகம் போற்றக்கூடிய ஒருவராக நாமும் மாற முயற்சிப்போம்.( இங்க பார்ரா தத்துவம் எல்லாம் சொல்லுறாரு)

30 கருத்துரைகள்

வரலாறு முக்கியம் மன்னா .., வரலாறு முக்கியம் ..!

Reply

இது சாதனையா இல்லை வேதனையா?

Reply

ஐயோ முக்கியமா ஒன்ன சொல்ல மறந்துட்டேன் உலக சாதனையாக இது பதிவு செய்யப்பட்டுவிட்டது

Reply

ஆமா ரெம்ப முக்கியம்

Reply

ஓ...உலக சாதனையா.அந்த இளைஞனின் உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.ஆனாலும் சிலர் கின்னஸ் சாதனை என்று ஆபத்தான,அருவருப்பான விஷயங்கள் செய்வதில் எனக்கு என்னமோ உடன்பாடு இல்லை குருவியாரே !

Reply

சரியாக சொன்னீர்கள்...உண்மையில் இப்போது நிறைய விதங்களில் உலக சாதனைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Reply

காணொளியும் பதிவும் அருமை
குறிப்பாக மேட்டர்
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்

Reply

வாங்க நண்பா....உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

Reply

பெங்களூரில் வசிக்கும் தமிழர் ஒருவரின் சுவர் மீது கரங்களின் துணையாலே ஏறி விடும் செயலை இந்திய தொலைக்காட்சி ஒன்றில் கண்டேன்.

Reply

இதுவொரு வித்தியாசமான உலகம். TM2

Reply

அந்த இளைஞனின் உழைப்புக்கு பாராட்டுக்கள்...Wish he had spent this on something more useful...

Reply

//எம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.........

மனிதன் சாதனைக்காக எதையெதையோ செய்து தன்னுடைய பெயரையும் புகழையும் இந்த உலகிக்கு வெளிக்காட்டுகிறான்.////

ஏன் சிட்டால முடியாதோ?:))

Reply

//( இங்க பார்ரா தத்துவம் எல்லாம் சொல்லுறாரு)//
அதானே?:)) அவரா இவர்?:))))

Reply

வாங்க நண்பா...இந்த நபர்தான் அச் செயலை செய்தவரா..?

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

வாங்க ரசிகரே நீண்டநாளைக்கப்புறமா வந்திருக்கிரீங்க..தொடருங்கள் உங்கள் பயணம் இனிதாய் முடியும்.....::))

Reply

நன்றி ரெவெரி....உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் பாராட்டக் கூடிய மனதுக்கும்.

Reply

ஏன் சிட்டால முடியாதோ?:))

சின்ன பசங்களோட சமத்தா விளையாடச் சொன்னா விளையாடுவோமே தவிர....சாதனையா மூச்சு வாங்குது இப்பவே...

Reply

அன்பரே!
இது சாதனையாகத் தெரியவில்லை வேதனை
யாகத்தான் தெரிகிறது.

த ம ஒ4
சா இராமாநுசம்

Reply

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

கைய காலா நினச்சிக்கிறேன் என்பது இதுதானோ?

Reply

நானும் மனிதனாக இருந்தால் இந்தச் சாதனை எனக்குத் தான் கிடைத்திருக்கும்...

Reply

அட இங்க பார்ரா...........

வாங்க சார்..உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

ஏன் இந்தள்வுக்கு...அப்ப நீங்க யாரு...???

Reply

சாதனை புரிந்தவருக்கு வாழ்த்துக்கள். குரங்கு போல நடக்குறேன்னு அம்மா சொல்லுவாங்க. அப்போ நானும் கின்னஸ்ல இடம் பிடிப்பேனா?

Reply

:::))))))))) tnx for ur visit and comment

Reply

அருமையான பதிவு ...
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

Reply

சாதனைகளில் இதுவும் ஒன்றாய் படிக்கப்படுகிறது.

Reply

வாங்க சார்....உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Reply

உங்க ஆலோசனைக்கு மிக்க நன்றி...

Reply

Post a Comment