Looking For Anything Specific?

ads header

பட்டறிவு...

முகநூல் என்பது எம்முடைய நண்பர்கள் வட்டத்தை அதிகப்படுத்துவதில் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது.
அந்த வகையில் முகநூல் மூலம்  என்னுடன் நண்பராக இணைந்து கொண்டவர்தான் காரைதீவு ரமேஸ்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம்தான் காரைதீவு தமிழ் மக்கள் மத்தியில் இவ்வூர் மிகவும் பிரபல்யம் பெற்றுக் காணப்படுகிறது காரணம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தா அடிகளார் அவர்கள் பிறந்த இடம்தான் இந்த காரைதீவு.

ஆரம்ப காலத்தில் கலைத்துறையில் மிகவும் பிரபல்யம்பெற்ற காரைதீவில் பின் வந்த காலங்களில் சொல்லக்கூடிய அளவுக்கு கலையை வளர்க்கக்கூடியவர்களின் செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்தது.ஆனாலும் பாடசாலை மாணவர்களின் மத்தியில் வைக்கப்படும் கலைத்திறன் போட்டிகளில் அதிகமான பரிசுகளை இவ்வூர் மாணவர்களே தட்டிச்செல்வது வழமையாக உள்ளது.

இருந்த போதிலும் இந்த ஊரில் கலைஞர்கள் தேவையான அளவு இருந்தாலும் இவர்களால் வெளிவுலகிக்கு எந்த விதமான கலைப்படைப்புக்களையும் கொடுக்க முடியாமல் இருப்பது இவ்வூர் கலைஞர்களின் பெரும் கவலைக்குறிய விடயமாகத்தான் இருந்தது. இந்த கவலைக்கு பெரியதொரு முற்றுப்புள்ளியை வைத்தார் என் முகநூல் நண்பன் காரைதீவு ரமேஸ்.

தொழில் நிமித்தம் சவுதிஅராபியா சென்றுவந்த ரமேஸின் சிந்தனைக்கு இந்த குறை தென்படவே அவர் தன் உறவுக்காரரும் கெமராவினை கையாள்வதில் அப்பிரதேச மக்களால் பல விருதுகளை வாங்கியவருமான கோபால் என்பவரின் உதவியுடனும் தயாரித்த குறும்படம்தான் பட்டறிவு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (2012.05.06) பட்டறிவு குறுந்திரைப்பட வெளியீட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் காரைதீவில் அமைந்திருக்கும் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமானது.
தயாரிப்பாளர் ரமேஷ் மங்கள விளக்கு ஏற்றும் போது
இந்த குறும்பட வெளியீட்டு நிகழ்வுக்கு என்னையும்  கலந்துகொள்ளுமாறு நண்பன் ரமேஸ் இட்ட அன்புக்கட்டளைக்கு அடிபனிந்து நிகழ்வினில் நானும் கலந்துகொண்டேன்.ஆனாலும் என்னுள் ஒரு சிறிய வருத்தம் இருக்கத்தான் செய்கிறது,நிகழ்வு முடியும் வரையும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை.

விசேட அதிதியாக கலந்துகொண்ட கௌரவ ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு இனியபாரதியின் மங்கள விளக்கு ஏற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அப்பிரதேச பிரபல்யங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சமய அனுஷ்டானத்தின் போது

சுமார் 350க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் குறும்படம் வெளியிடப்பட்டது.அப்பிரதேச கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் வெளியாகும் கண்ணி வெளிவீடு என்பதால் மண்டபம் எங்கும் ஒரே கைதட்டலாகவே இருந்தது.

இனி படத்தின் கதையைப் பார்ப்போம்.

தாய் தந்தையருக்கு கட்டுப்பட்டாமல் தான் போன போக்கில் திரியும் ஒரு இளைஞர் கூட்டத்தினை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் செய்யச் சொல்லும் வேலைகளை செய்ய முடியாது எனக்கு வேற வேலை இருக்கிறது எனக் கூறிக் கொண்டு தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தச் செல்லும் இரண்டு நண்பர்கள்.

அப்பிரதேசத்தில் வசிக்கும் வேறு ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பினுள் ஆறு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு மது அருந்திவிட்டு தங்களுடைய வருங்களால மனைவியர்கள் பற்றியும் இப்போதைய காதலிகள் பற்றியும் மது வெறியுடன் நகைச்சுவை கலந்ததாக உரையாடிக்கொண்டிக்கின்றனர்.
படப்பிடிப்பின் போது

அப்போது அந்த வழியாக வரும் தோட்டத்து உரிமையாளர் இவர்களின் செயற்பாட்டை உணர்ந்து ஒரு சில புத்திமதிகளை இவர்களுக்கு கூறுகிறார்.அதனை ஒரு காதில் வாங்கி மற்றிய காதால் விட்டுவிட்டு மேலும் போதையை ஏற்றுவதற்காக பணம் தேடுகின்றனர் கையில் பணம் இல்லாததால் தன் அப்பாவுடைய நண்பர் ஒருவரிடம் அப்பா கேட்டதாக சொல்லி பணம் வாங்கிவருவதற்காக இரண்டு நண்பர்கள் ஒரு மேட்டார் சைக்கிளில் செல்கின்றனர்.


உரிய நபரிடமிருந்து பணத்தை வாங்கிவரும் போது ஏற்கனவே போதையில் இருந்த இருவரும் இன்னுமொரு போதையில் வருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு மோட்டர் சைக்கிளை மிக வேகமாக செலுத்துகின்றனர். முன்னால் வந்து மணல் லொறி ஒன்றுடன் விபத்துக்குள்ளாகி ஒருவர் தனது காலை இழக்க மற்றவர் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொள்கின்றார்கள்.
படத்தின் இறுதிக் கட்டத்தில்

தொலைபேசி அழைப்பினை பணம் வாங்க சென்ற நண்பர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் நண்பர்களுக்கு நடந்த விபத்துபற்றி தோட்டத்தில் இருக்கும் நண்பர்களும் அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு போதையுடன் விரைகிறார்கள் (இவ்விடத்தில் நண்பர்களின் நடிப்பு பாரட்டதக்க வகையில் அமைந்துள்ளது.) அவ்விடத்திலிருந்து நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள் எனும் தகவல் அறிந்து வைத்தியசாலைக்கு விரைகின்றார்கள்.


வைத்தியரின் அறிவுரைகளையும் நண்பர்களுக்கு ஏற்பட்ட நிலமையையும் உணர்ந்து எல்லோரும் இனிமேல் மது அருந்துவதில்லை எனும் முடிவுக்கு வருவதினை பட்டறிவு பட கதை உள்ளடக்கியிருக்கின்றது.


நண்பன் ரமேசின் தயாரிப்பில் படத்தினை இ .கோபால் இயக்கியுள்ளார்.இ.கோபால் இயக்கம் தவிர பாடல் இசை பின்ணணி இசை மற்றும் எடிட்டிங் வேலைகளையும் மிக துல்லியமாக செய்திருப்பது பாராட்டத்தக்கது.


அழகிய பாடல் ஒன்றினையும் உள்ளடக்கி 25 நிமிடங்களைக் கொண்ட இக் குறும் படம் படக்குழுவின் கடின உழைப்பு கிடைத்த வெற்றியே என நான் கூறுவேன்.காரைதீவு பிரதேச சபையின் உதவித்தவிசாளர் திரு தட்சனா மூர்த்தி அவர்களின் சிறப்புத்தோற்ற காட்சியின் மூலம் காரைதீவின் அரசியலில் கலைத்துறைக்குள்ள வரவேற்பு வெளிப்படையாகவே விளங்குகிறது.


சுட்டிக்காட்டுவதுக்கு நிறைய பிழைகள் இருந்தாலும் ப்ரியா மூவீஸின் கண்ணிவெளியீடு என்பதனால் அவற்றை தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கூறலாம் என முடிவெடுத்துள்ளேன்.

 என்னால இப்படத்தின் முழு பகுதியையும் உங்களுக்கு தற முடியாமைக்கு வருந்துகிறேன்


மேட்டர்  எல்லோருக்கும் ஒரு வருத்தமான செய்தி நான் தயாரித்து இயக்கி நடித்த குறும்படமான குறிஞ்சியை வெளியிடுவதாக இல்லை ஏனெனில் அதனது உரிமையை ஒரு வெளிநாட்டவனுக்கு விற்றுவிட்டேன் என் படம் இப்போது சுவீஸ்...மலேசியா...ஈரான்...கென்யா போன்ற நாடுகளில் வெற்றிநடை போடுவதாக அன்மையில் என்னிடம் கூறினார்....

(ரொம்ப ஓவராத்தான் சொல்லுரனோ..என்ன பன்ன உண்மைய சொல்லித்தான ஆகனும் இருந்தும் சின்ன கிளிப் ஒன்னு இருக்கு விரைவில அப்லோட் பன்னுறன்)

Post a Comment

10 Comments

  1. நீங்களும் ஒரு குரும்பட இயனுனர் என்பதை அறிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா. நீங்கள் கூறியுள்ள பட்ட அறிவான பட்டறிவு படத்தின் கதை அருமையாக உள்ளது.

    உங்கள் குறும்பட கான்ஒளிக்காக காத்திருக்கிறேன். நீங்கள் ஏன் விழ முழுவதிலும் இருக்க வில்லை என்பதற்க்கான காரணம் சொல்லவே இல்லையே.

    பதிவு அருமை நண்பா

    படித்துப் பாருங்களேன்


    சென்னையில் வாங்கலாம் வாங்க

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா..............கேட்ட கேள்விக்கான காரணத்தை இப்ப்வே சொல்லவா...இல்ல அதையும் ஒரு பதிவாக போடவா..??

      Delete
  2. ட்ரெயிலர் சூப்பர் பாஸ்...!!

    குறும்படம் லிங்க் எப்ப தருவீங்க.. வெயிட்டிங்

    ReplyDelete
    Replies
    1. வாங்க மது..அது ஒரு போட்டிக்காக தயார் செய்யப்பட்டது போட்டி முடிந்ததும் விரைவில் எல்லோருடனும் பகிரப்படும்

      Delete
  3. உங்கள் அடுத்த குறும் படத்தை இந்தியாவில் வெளியிடவும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா...

      நிச்சயமாக உங்களைப்போன்றவர்களின் ஆதரவு இருந்தால் அதையும் விரைவில் செய்யலாம்.....:::::::)))

      Delete
  4. nalla karuththu konda padampola vaalththukkal moosaa!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாம்ஸ் நீண்டா நாளைக்கப்புறமா கருத்து சொல்லுரீங்க...::))))

      Delete
  5. nalla kathai kalam!

    ungal nanparin thiramaiyai paaraattum-
    unglukku nalla manasu!

    ReplyDelete
  6. படத்தை முழுமையாகத் தந்திருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்.வாழ்த்துகள் உங்களுக்கு !

    ReplyDelete