Looking For Anything Specific?

ads header

நண்பன் சுவனப் பிரியனுக்கு ஒரு மடல்

இந்த பதிவினை நீண்ட சிந்தனைக்கு பிற்பாடுதான் எழுதுகிறேன்.நான் இப் பதிவின் மூலம் சொல்லவரும் கருத்துக்களில் ஏதேனும் பிழைகள்
இருப்பின் முதலில் நண்பன் சுவனப்பிரியன் என்னை மன்னிக்க வேண்டும் அதன் மூலம் அல்லாஹுத்தாலா என்னை மன்னிப்பான்.

சுவனப் பிரியனுக்கும் எனக்கும் பதிவுலகில் அதிக தொடர்பு கிடையாது ஏன் அவருடைய பதிவுகளுக்கு கூட நான் பின்னூட்டமிட்டதில்லை அவர் பதிவுலகில் அதிக அனுபவம் மிக்கவராகவும் காணப்படுகிறார் ஆகவே இந்த கடைசி தம்பியின் சின்ன ஒரு ஆலோசனையாகத்தான் இந்த பதிவு.

அண்மைக்காலமாக நான் உங்களுடைய பதிவுகளை படித்து வருகிறேன் நல்ல ஒரு முயற்சிதான் அதற்கான கூலியை அல்லாஹுத்தாலாவிடம் எதிர்பாருங்கள்.

இஸ்லாம் மார்க்கமானது நபிகளாரின் அழகிய குணங்களாலும் அவர்களின் அழகிய செயற்பாடுகளாலும் தான் விரைவாக பரப்பப்பட்டது என்பதை தாங்கள் அறிவீர்கள்.இதற்கு மேலதிக விளக்கமும் ஆதாரமாக ஹதீஸ்களும் தேவையில்லை என நான் நினைக்கிறேன் என்னை விட மார்க்கத்தில் உங்களுக்கு அதிக ஆர்வமும் அறிவும் இருப்பதனால் இவற்றை எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நான் நல்லெண்ணம் கொள்கிறேன்.

உங்களின் அண்மைய பதிவுகள் அதிகப்படியான விமர்சனங்களுக்கு உள்ளானதை நான் அறிந்து கொண்டேன் அதன் மூலமாகத்தான் உங்களுடைய தளத்திற்கு வாசகராக நான் ஆகிவிட்டேன். நீங்கள் உங்களுடைய பதிவுகளில் பல நல்ல விடயங்களை பதிந்துள்ளீர்கள் அந்த நல்ல விடயங்களிலும் ஒரு சிலவற்றை நீங்கள் தவிர்த்திருக்கலாம் என நான் பின்பு உணர்ந்து கொண்டேன்.

பிற மதங்கள் பற்றிய உங்கள் பதிவுகள் இந்த கால கட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என நான் நினைக்கின்றேன்.

காரணம் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டும் முஸ்லிம் பெயர்களை வைத்துக் கொண்டும் எம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் நிறையப் பேர் இஸ்லாத்துக்கு முறனாக செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எத்தனையோ இஸ்லாமிய சகோதரர்களுக்கு தொழுகை என்றால் என்னவென்று கூட தெரியாத காலமாக இந்த நவீன உலகமுள்ளது.

இந்தோனேசியா ரஷ்யா போன்ற நாடுகளில் ஷகாதத் கலிமா கூட தெரியாத எத்தனையோ முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் சகோதர மதத்தவர்களுக்கு முஸ்லிம்களாகவே தென்படுவார்கள்.மேலும் பல நாடுகளில் எம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் பிற மதங்களுக்கு மாறும் நிலையில் இருக்கின்றார்கள் ( தற்போது நிறைய சகோதர மதத்தவர்கள் இஸ்லாமுக்குள் வருவதை நீங்கள் அறிவீர்கள்..?)

மேலும் பிற மதத்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய எம் சமூகத்தினரிடையே பல பிளவுகள் பல பிரிவுகள் காணப்படுகின்றன.

நாம் பிற மதங்களைப் பற்றி விமர்சித்து பதிவிடும் போது அவர்கள் எம்முடைய மதத்தில் கூறப்பட்டதை பார்க்க மாட்டார்கள் நம்முடையவர்களின் தற்போதைய நடைமுறைகளை வைத்துதான் எம்மை எடைபோட்டு பின் சரியான மார்க்கம் என்று கூறக்கூடிய நீங்களே இவ்வாறு இவ்வாறெல்லாம் இருக்கிறீர்கள் என்று எம்மவர்களின் கெட்ட விடயங்களை சுட்டிக்காட்டுவார்கள்.

நபியவர்களின் தஃவாப் பணிபற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.அவர்கள் மக்கள் மத்தியில் ஏகத்துவக் கொள்கையை பரப்புறை செய்ததுடன் தன்னுடைய நல்ல செயற்பாடுகளினால் மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். நான் அறிந்த வகையில் நபியவர்கள் எந்த மதத்தயும் பகிரங்கமாக விமர்சிக்க வில்லை.ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சஹாபக்களிடமும் அவர்கள் விடயத்தில் இரகசியத்தை பேணச் சொன்னார்கள்.இதன் மூலம் நபியவர்கள் சமூகத்தில் குழப்பத்தை உருவாக்குவதை விரும்பவில்லை என்பது தெளிவாக புரிகின்றது.

நீங்கள் பதிவிட்ட பதிவுகளின் மூலம் பதிவுலக வட்டத்தில ஒரு குழப்ப நிலையே உருவானது குழப்பத்தை உருவாக்குவதுதான் உங்கள் நோக்கமா?அப்படியெனில் அவ்வாறாக பதிவுகளை தவிர்த்துவிடுங்கள். இந்து மதத்தைப் பற்றி ஒரு பதிவில் தவறாக பதிவிடுகிறீர்கள் அடுத்த பதிவில் இந்து மக்களுக்காக தன்னை அர்பணித்த ஒரு பெண் பற்றியும் தமிழ் மக்களுக்காக அவர் செய்த சேவைகள் பற்றியும் பதிவிடுகிறீர் இப்படிப்பட்ட பதிவுகளின் மூலம் நீங்கள் எதனை எய்த எண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட பதிவின் மூலம்  பிற மத நன்பர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தப்பான எண்ணம் ஏற்படத்தான் வாய்ப்புக்கள் உள்ளன என எனக்குத்தோன்றுகிறது.

எல்லா காலகட்டங்களுக்கும் பொருத்தமான மார்க்கம் இஸ்லாம் என்பது எமக்குத்தெரியும் அதே போன்று அவர்களுடைய மார்க்ம்தான் அவர்களுக்கு சிறந்தது என்று அவர்களும் இருப்பார்கள் அவர்களின் மதம் மீது கொண்ட நம்பிக்கையினை நாங்கள் வலுவிலக்க செய்யும் போது அழகிய நடைமுறைகளைக் கையால வேண்டும். அதே போன்று அவர்களும் தான்.

நபியவர்களின் அழகிய முன் மாதிரியை உங்களுடைய முன் மாதிரியாகக் கொண்டவர் நீங்கள் என நான் நினைக்கின்றேன்.நபியவர்களின் தஃவா பணிபற்றி நீங்கள் என்னை விட அதிகமாக அறிந்திருப்பீர்கள் என மறுபடியும் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது பெரும் பாவங்களில் ஒன்றாக உள்ளது.அண்மைக்காலமாக பதிவுலகில் நடந்த அனைத்தையும் தாங்கள் உட்பட அனைவரும் அறிந்திருப்பார்கள்.

மேலும் பதிவுலகில் பிற மதத்தவர்கள் எவரும் உங்களிடம் இஸ்லாம் பற்றிய தெளிவுகளை கேட்கவில்லை என எண்ணுகிறேன் அவ்வாறு யாரும் கேட்டால் அவருடைய பெயரை சுட்டி நீங்கள் பதிவிடுங்கள் ஒட்டுமொத்த இந்துக்களுக்கோ கிரிஸ்தவர்களுக்கோ பதிவிடாமல். மேலும் யாரும் தெளிவு பெற விரும்பினால் அவருக்கு தனிப்பட்ட முறையில் தெளிபடுத்துவதுக்கு முனையுங்கள். மேலும் உங்களை விடவும் என்னிவிடவும் சிறந்தவர்களான மார்க்க அறிஞர்களிடம் அவரை கூட்டிச்செல்லுங்கள்.

ஆகவே இந்த தம்பியின் சின்ன ஆலோசனைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்ளவில்லை.உங்கள் மனதின் ஒரு மூலையிலாவது இந்த ஆலோசனையை வைத்திருங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.

இனிமேலும் பதிவுலகில் குழப்பத்தை ஏற்படுத்தும் பதிவுகளை பதிவிடாமல் இருந்தால் நல்லது என்பது தான் என்னுடைய ஆலோசனை.இதன் மூலம் நிறைய பிரச்ச்னைகளே உருவாகுது தவிர தெளிவு என்ற ஒன்று யாரிடமும் வரவில்லை என்பதுதான் நிஜம்.

மேலும் இந்த பதிவினை வாசிக்கும் எல்லோரிடமும் கேட்டுக் கொள்கிறேன் ஒவ்வொரு மதத்தவர்களும் கண்ணியம் கொடுக்கும் பெரியவர்களைப் பற்றியும் அவர்களது கடவுள்களைப் பற்றியும் நீங்கள் தவறாக பேச வேண்டாம். இது உங்களுக்கு சிறந்ததாகவும் இல்லை. அவரவரின் நம்பிக்கையில் அவரவரை விட்டு விடுங்கள் இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு அவன் அறிவைக் கொடுக்கின்றான்.

ஒவ்வொரு மத போதகர்களும் எல்லோருக்கும் நல்ல வழியைத்தான் காட்டிச்சென்றுள்ளார்கள் அப்படிப்பட்ட கண்ணியத்துக்குறியவர்களைப் பற்றி தவறாக கதைக்க எமக்கு என்ன தகுதியிருக்கிறது? தவறிலும் பாவத்திலும் வாழும் நாம் புணிதமானவர்களைப் பற்றி ஒரு நாளும் தவறாக பேசவே கூடாது.

மேலும் யாருக்கு இறைவன் நலவை நாடுகிறானோ அந்த நலவிலிருந்து அவரை கெடுதிக்கு கொண்டு செல்பவர் யாருமில்லை.மேலும் அவன் யாருக்கு கெடுதியை நாடுகிறானோ அந்த கெடுதியில் இருந்து யாராலும் அவரை பாது காக்க முடியாது.

Post a Comment

17 Comments

  1. ஐடியா மணி இதே மாதிரி தான் "தமிழ்மணம்" கும்மி குரூப் + சாந்தி சமாதானம் பிரச்சனை ஆன போது, சமரசம் பண்ணுகிறேன் என்று டபுள் கேம் ஆடி, வெறும் ஹிட்ஸ் மட்டும் அள்ளி கொண்டு போய் விட்டான். இது கூட அதே போல் டபுள் கேம் மாதிரி தான் தெரியுது. உங்கள மாதிரி ஆளுங்க பேசாம வாய மூடிட்டு இருந்தாலே போதும் பிரச்னை இல்லாம இருக்கும். நீங்க கொஞ்சம் வாயை முடுரேலா

    ReplyDelete
    Replies
    1. நண்பா அனானி....??? உங்களைப் பற்றியெல்லாம் முன்னர் ஒரு பதிவில் சொல்லிவிட்டேன்.. சொல்லவந்த கருத்தை தைரியமாக சொல்லத்தெரியாமல் அனானி என்னுவந்து கருத்து சொல்வது உமக்கு அழகாக இருக்கிறதா????

      தைரியமில்லாத நீங்களெல்லாம் ஏன் தான் வலையுலகில் உள்ளீர்களோ..??::(((

      Delete
    2. //தைரியமில்லாத நீங்களெல்லாம் ஏன் தான் வலையுலகில் உள்ளீர்களோ..??::((( //
      உன்ன மாதிரி டபுள் கேம்ர் பதிவுலகில் இருக்கும் போது, நான் ஏன் இருக்க கூடாது.

      நான் சொன்ன கருத்துக்கு பதில் சொல்லாம சம்பந்தா சம்பந்தா இல்லாம ஏன்யா பதில் சொல்லுற.
      அனானி கமெண்ட் வேண்டாம் என்றல் "அனானி" அப்ஷன் எடுத்து விட வேண்டியது தானே...
      "அனானி" அப்ஷன் வச்சுக்கிட்டு அனானி கமெண்ட் போட கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம் ?

      Delete
    3. ?????????????????????.................வேஸ்ட்......:((((((((((((( ஆமா என்னப்பா அது டபுள் கேமு......???

      Delete
  2. நான் சொல்ல வந்த விஷயங்களை உங்கள் ஸ்டைலில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.. புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி....

    ReplyDelete
  4. // டபுள் கேம் ஆடி, வெறும் ஹிட்ஸ் மட்டும் அள்ளி கொண்டு போய் விட்டான்.//

    அனானி அண்ணே அந்த ஹிட்ஸ் எல்லாம் வெச்சுக்கிட்டு ஒரு சிங்கில் டீயாவது வாங்க முடியுமா..? இப்ப எங்கண்ணே அவரு....? ரொம்ப ஆடினா ரொம்ப சீக்கிரமே அடங்கிருவாங்கனா..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இது டூ மச்! நான் ஒன்றும் அடங்கவும் இல்லை! மடங்கவும் இல்லை! பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருக்கேன்! இது என் நண்பர்களுக்குத் தெரியும்! நாற்று குரூபில் வந்து பாரும் ஐசே நான் அடங்கியிருக்கிறேனா இல்லையா என்று தெரியும்!

      Delete
    2. இதெல்லாம் ஒரு பொளப்பாகவே வைச்சிருக்கானுகள் போல.....

      Delete
  5. ungal manakumuralai-
    sollideenga!

    yosikka vendiya visayam!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நீங்க சுவனப்பிரியனோட பதிவை படிச்ச அளவிற்கு மற்ற(வர்கள்) பதிவுகளை படிக்கவில்லை என்றே என்னால் நினைக்க தோனுது . :-( .

    ReplyDelete
  8. நீங்க நிஜாயம தான் கேட்டிருக்கீங்க. ஆனா உங்க தரப்பு பதில்?
    //Aashiq Ahamed ‎said,
    இந்த பதிவில் உடன்பட முடியவில்லை.
    முஸ்லிம்களிடம் இருக்கும் மூட பழக்கங்களை ஒழித்த பின்னர் தான் மற்ற மத மக்களிடம் தாவாஹ் செய்ய வேண்டும் என்றால் நாம் தாவாஹ்வே செய்ய முடியாது//
    ஸோ இஸ்லாம் மதத்தின் பெயரால் தொடர்ந்தும் பிற மதத்தவரின் மனதை புண்படுத்த போகிறார்கள். பிற மதத்தவங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே இவர்கள் மதிப்பதில்லை.ஏன் இப்படி மத வெறி பிடித்து அலைகிறார்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. முதலில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...காரணம் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க முடியாமைக்கு...எங்கள் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் மின்னல் முழக்கத்தின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டு போனதனால் பின்னூட்டங்களை தொடர முடியாமல் போய்விட்டது.


      தங்கள் காத்திரமான கருத்துக்களை பதிந்த...நண்பன் பாலா....ரியாஸ் ...சீனி...ஜெய்லானி ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நண்பன் ரியாஸ் ஒரு பின்னூட்டமிட்டு அதனை அழித்துள்ளார் என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை.

      Delete
    2. நான் இந்த பதிவின் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்தவேனும் என்று இலக்கு கொள்ளவில்லை. மதம் தொடர்பான பதிவிடும் சகோதரர்கள் அனைவரும் ஒரு சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை பதிவிட்டேன்.

      என்னுடைய மதத்தில் இருக்கும் நல்லவிடயங்களை நான் எவரிடத்திலும் எடுத்துச் சொல்வதற்கு எனக்கு உரிமையிருக்கிறது.நான் பின்பற்றும் ஒன்றின் மூலம் எனக்கு 100 வீதம் நலவு கிடைக்கின்றது எனின் அதனை நான் என்னுடைய குடும்பம் என்னுடைய நண்பர்கள் என அனைவரிடமும் கூறி அவர்களையும் அதன் பால் அழைக்க எனக்கு உரிமையிருக்கிறது.

      என்னுடைய அந்த விடயம் அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்களும் அதனை தொடர்வார்கள் இல்லாவிட்டால் விட்டுவிடுவார்கள்.

      உதாரணத்துக்கு நான் சாப்பிட்ட ஒரு உணவின் பெருமை பற்றி என் நண்பர்கள் அனைவரிடமும் கூறி அதனை அவர்களும் சாப்பிட்டு அந்த சுவையை அடைய வேண்டும் என நான் நல்லெண்ணம் கொள்வது என்னைப்பொருத்த வரையில் சரியான விடயமே.

      என்னுடைய மதத்தில் இருக்கும் நல்ல விடயங்களை நான் என் நண்பர்களுக்கு சொல்வது எனக்கு எவ்வாறு நல்லதாகப் படுகிறதோ அதே போன்று என் நண்பர்கள் நான் பின்பற்றும் விடயத்தில் ஏதாவது பிழைகளை காண்பார்கள் எனின் அதனை அழகிய முறையில் சுட்டிக்காட்டி அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக் கூற வேண்டும்

      ...............இந்த பின்னூட்டம் ஒரு சகோதரரின் வினாவுக்கான விடையாக அமையவேண்டும் எனக்கருதி எழுதினேன்.....இடையில் இதனை நிறுத்திவிட்டேன் காரணம் அவர்கேட்ட கேள்விக்கான பதிலை தனிப்பட்ட முறையில் அவரிடம் நான் சொல்லிவிட்டேன்.

      Delete
  9. சிட்டுக்குருவி எல்லாரும் இவ்வாறு இருந்து விட்டால் எவ்வளவு நலம்...தன் மதத்தை நேசித்து பிறர் மதத்தையும் மதித்தால் வினையேதுமில்லை..

    ReplyDelete
  10. முழுமையாக உடன்படுகிறேன். இதற்கு பதிலை சுவனப்ரியன் சொல்வது கொஞ்சம் கஷ்டம் தான். இதே விஷயத்தை நான் சொல்லியிருந்தால், பதிலுரைத்திருப்பார். நீங்க கேட்டிருக்கீங்க. பதிலளிப்பது கஷ்டம் தான்.

    "உதாரணத்துக்கு நான் சாப்பிட்ட ஒரு உணவின் பெருமை பற்றி என் நண்பர்கள் அனைவரிடமும் கூறி அதனை அவர்களும் சாப்பிட்டு அந்த சுவையை அடைய வேண்டும் என நான் நல்லெண்ணம் கொள்வது என்னைப்பொருத்த வரையில் சரியான விடயமே."

    இது நியாயமான விஷயம். நீ சாப்பிடுற சாம்பார் ரொம்ப மோசமான உணவு. பிரியாணி தான் உலகத்துலயே சிறந்த உணவு என்று வாதங்கள் வைக்கும் போது பிரச்சினையே !

    ReplyDelete