Looking For Anything Specific?

ads header

வலையுலகம் சாதித்தது என்ன......???

ப்ளாக் வைத்திருக்குறோம்....ஏன்? எமக்கு பிடித்த விடயங்களை நமக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என அனைத்து வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ளத்தான்.உண்மைதானே...?

ப்ளாக் இருக்கிறது என்பதற்காக எமக்கு தோன்றக் கூடிய/ எமது சிந்தனையில் உதிக்கக் கூடிய அனைத்து விடயங்களையும் பதிவிடுவது என்பது முட்டாள் தனம் என்றே நான் கூறுகிறேன்.

அண்மையில் மதங்கள் பற்றி பதிவர்கள் சிலரால் எழுதப்பட்ட பதிவுகளைப் படித்தேன்.படித்ததன் பின் ஏன் படித்தோம் ? ஏன் இந்த பதிவுலகிக்கு வந்தோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசியல்வாதிகள் கூட தங்களுக்குள் இப்படி அடித்துக் கொண்டதுமில்லை...பேசிக்கொண்டதுமில்லை...ஏன் இப்படி பித்து பிடித்து அலைகிறார்கள் என்றுதான் புரியவில்லை எனக்கு.

கொஞ்சப் பேர் நாங்கள் மதவாதத்தை எதிர்க்கிறோம் என்கிறார்கள் பின் மதங்களுக்கு சார்பாக மதவாதம் பேசுகிறார்கள். இன்னும் சிலர் தன்னுடைய மதம்தான் சிறந்தது என மார் தட்டுகிறார்கள். 

இன்னும் பார்க்கப் போனால் யாராவது ஒருவர் மதம் தொடர்பான பதிவு எழுதினால் அதற்கு விரைவாக பதியப்படும் மைனஸ் வோட்டுகள்...? மேலும் அப்பதிவுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பொருத்தமான விளக்கமில்லாமை...

என்ன சொல்வது இந்த பதிவுலகத்தைப் பற்றி...

பின்னூட்டங்களில் அசிங்கமாக பதியப்படும் கருத்துக்களால் தங்கள் பிறப்புக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் இன்னும் சிலர்.ஒரு பதிவுக்கு நாகரீகமான வார்த்தைகளால் பின்னூட்டம் இட தெரியாதவர்கள் இன்னும் வலையுலகில் இருக்கிறார்கள் என்பது புதுமை...

சொல்லவந்த கருத்தை தைரியமாக சொல்ல தெரியாமல் பதுங்கி (Anonymous) பதுங்கி தன்னுடைய முகத்தை, பெயரை மறைத்து கருத்து சொல்லும் தைரியமில்லாதவர்களை இன்னமும் பதிவுலகம் வைத்திருக்கிறது இதை என்னவென்று சொல்வது?

இன்னும் சிலர் போலி ஐடி களில் வலம் வருகின்றனர் மதவாதத்துக்கு உரம் போட...

மதத்தின் பெயரால் மனதை புன்படுத்தும் பதிவுகள் தேவையா...?
உள்ளத்து உணர்வுகளையும் தன்னுடைய திறமைகளையும் வெளியுலகிக்கு காட்டுவதுக்கு ஒரு சிறந்த மேடை பதிவுலகம்.ஒரு மேடையை வெளியுலகிக்கு கொண்டுவருவது அங்கு பரிமாறப்படும் கருத்துக்கள்.

சிலர் தன்னுடைய அறிவுத் திறமையால்  செய்யும் தொழில்நுட்ப சில்மிசங்கள்? பழிக்குப் பழிதான் முடிவு எனின் ஏன் இந்த கபடியாட்டம்..?


சில பதிவர்கள் அவர்கள் தொடர்பாக எழுதும் பதிவுகளுக்குள் விளக்கம் கொடுக்காமல் அதனை இன்னுமொரு இடத்திற்கு கொண்டுபோய் வாதிடுகின்றனர் அவர்களுக்குள் சந்தோசமும் அடைந்து கொள்கின்றனர்.


பிரச்சனைகள் எழும் இடத்திலேயே அதற்கான தீர்வு காணப்பட வேண்டும் மாறாக அந்த பிரச்சனையை வேறுவடிவிக்கு கொண்டு செல்ல கூடாது...ஆனால் வலையுலகில் நிறைய பதிவர்களிடம் இந்த தன்மை காணப்படுகிறது சர்ச்சைக்குறிய விடயத்தில்.

கருத்துக்கள் மோதும் போதுதான் தெளிவு கிடைக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கு பரிமாறப்படும் கருத்துகளினால் கொலைதான் விழும் என்பது தெளிவாக விளங்குகிறது. 

மாற்றம் வேண்டும் இது மாற வேண்டும்...
போலி வேசமிடுபவர்களினது வேசங்கள் கழையப்பட வேண்டும் மத வாதத்தை முன்நிறுத்துவது யார் என அறியப்பட்டு பதிவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

வேண்டுமென்றே ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தவரை குறை கூறுவது நிறுத்தப்பட வேண்டும்.
  
எந்த ஒரு மதத்திலும் ஏனைய மதங்களைப் பற்றி குறை கூறச்சொல்லி சொல்லவில்லை (நான் அறிந்த வகையில்)
மதத்துக்காக போராடும் பெரிய பெரிய தலைவர்கள் கூட ஒன்றாக சந்திக்கின்றனர் தங்களுக்குள் சந்தோசமாக பேசுகின்றனர் சர்வ மத மாநாடுகளில்... நாம்...?

ஆனால் எமது மூத்த பதிவர்கள் கூட இதற்கு பொருத்தமான ஒரு தீர்வினை சொல்லாமல் அவர்களும் ஒரு கும்பலுடன் சேர்ந்து கொண்டு மதவாதம் பேசுகின்றனர்.

இதனால் பதிவுலகம் சாதித்தது என்ன?

எனக்கு இதனை எப்படி சொல்வது என்று புரியவேயில்லை....புரிந்தாலும் எப்படி சொல்வது என்று கூட தெரியவில்லை..
 
எங்கே போய் முடியப்போகிறது இந்த பதிவுலகம் ? கவலையாக இருக்கிறது மூன்றாம் உலக மகா யுத்தம் என்பது பதிவுலக நண்பர்கள் மத்தியில் இருந்துதான் ஆரம்பமாகப்போகிறதோ ? பயமாக இருக்கிறது எனக்கு

மேட்டர்  க..க...க....க.....க.....போ...:)....:(

Post a Comment

17 Comments

  1. //வேண்டுமென்றே ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தவரை குறை கூறுவது நிறுத்தப்பட வேண்டும்.// உண்மை நண்பா

    அருமையான படிப்பு அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. பதிவுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத உலகமும் அப்படித் தானே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. /////பதிவுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத உலகமும் அப்படித் தானே இருக்கிறது.////

      கருத்துக்கு மிக்க நன்றி நண்பா....:)

      Delete
  2. நீ யாருயா நாட்டாமை பண்ண..
    //எனக்கு இதனை எப்படி சொல்வது என்று புரியவேயில்லை....புரிந்தாலும் எப்படி சொல்வது என்று கூட தெரியவில்லை..//
    ஏன் ரகுவரன் மாதிரி பேசுற..
    உனக்கு தான் ஏதுவுமே புரியலே அப்புறம் எந்த ...........துக்கு பதிவு போடுற...

    உன்னோட http://citukuruvi.blogspot.com/2012/04/blog-post_20.html

    பதிவே சொல்லுது..நீ யாருன்னு...???

    //இதனால் பதிவுலகம் சாதித்தது என்ன?//
    உன்ன மாதிரி டபுள் கேமர்களை உருவாக்குனது தான் பதிவு உலகம் செஞ்ச தப்பு...

    //எந்த ஒரு மதத்திலும் ஏனைய மதங்களைப் பற்றி குறை கூறச்சொல்லி சொல்லவில்லை (நான் அறிந்த வகையில்)//
    http://vanjoor-vanjoor.blogspot.in/
    http://manithaabimaani.blogspot.com/2012/02/blog-post_17.html
    suvanappiriyan.blogspot.com
    http://sunmarkam.blogspot.in/2012/05/2178.html
    http://www.naanmuslim.com/

    இவணுக பதிவு எல்லாம் நீ படிச்சு இருக்கையா ??

    ReplyDelete
    Replies
    1. மச்சான் நீ நல்லா யோசி அதுக்கப்புறம் கமண்ட் போடு.....

      Delete
  3. யார் எப்படி கருத்துரைதாலும் மதங்களின் மதம் மாறுவதில்லை . மனிதநேயம் வெல்கின்ற மதங்கள் தேவையா ? மனம் கேள்வி கேட்கிறது .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....அக்கா

      Delete
  4. mana vethanaiyai-
    sollideenga!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...:)

      Delete
  5. தைரியமாக எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  6. Problem with some people is that they cannot think beyond religion. Islam is modern parpaneeyam, claiming they are better than others. You think we need them?

    ReplyDelete
  7. நல்ல ஆதங்கம் சகோ. ஆனால் அப் போரை ஆரம்பித்தவர் இதைப்பற்றி சிந்திக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. சரி நண்பா...

      எல்லா மதங்களிலும் நல்ல விடயங்கள் இருக்கு அது பற்றி அம் மதத்தவன் பதிவிடுகிறான் உனக்கு அதை படிக்கனும் என்று தோன்றினால் படித்துவிட்டு போ...

      மாற்றமாக... உன்கருத்தை அவனுடைய பதிவில் திணிக்க வேண்டுமெனில் அழகிய முறையில் சுட்டிக்காட்டு...

      உன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவனிடமிருந்தால் அவனும் ஏற்றுக் கொள்வான்..

      மாறாக அதே விடயத்தை நீ அவனிடம் கூறாமல் வேறு மேடைக்கு கொண்டு போய் அதனைப்பற்றி உனக்குள்ளே நீ விவாதிப்பாயென்றால் அதில் தெளிவு கிடைக்காது நண்பா...

      நான் கூறவந்தது உமக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்...

      Delete
  8. ம்...நானும் தொடர்ந்து கவனிக்கிறேன்.சளைக்கவில்லை யாரும்.ஆனால் ஏன் என்று மட்டும் விளங்கவில்லை !

    ReplyDelete
  9. சிலர் தங்கள் தரத்தை வலைப்பதிவு வழியாக புடம் இட்டு காட்டுகின்றனர்

    ReplyDelete
  10. மனிதநேயம் இல்லாத மத வெறிகொண்டவர்களிடம் போய் மனித நேயத்தை பற்றி கேள்வி கேட்டால் அவர்களிடம் நல்ல பதில்தான் கிடைக்குமா? விட்டுத் தள்ளுங்க நண்பா....மதத்தைவிட மனித நேயத்தை நேசியுங்கள்

    ReplyDelete