Looking For Anything Specific?

ads header

முஸ்லிம் பெண்கள் முகம் மறைப்பது சரியா ? தவறா ?

இந்த பதிவை நான் எழுதுவதுக்கு ஒதுக்கிய நேரத்தை விட இதை எழுதலாமா...? இல்லையா..?என்று முடிவெடுக்க ஒதுக்கிய நேரமோ மிக அதிகம்.
காரணம் இது என்னுடைய மார்க்கம் பற்றியது நான் ஏதோ ஒரு விடயத்தைப் பற்றி தெளிவுபடுத்தப் போய் என்னையும் அறியாமல் இடம்பெறும் தவறுகளால் அதுவே எனது மார்க்கம் பற்றிய சகோதர மதத்தவர்கள் கொண்டுள்ள தப்பான எண்ணத்துக்கு மேலும் மேலும் மெருகேற்றிடுமோ என அஞ்சியதனாலாகும்.

நான் ஒரு முஸ்லிம் எனும் அடிப்படியில் அண்மைக்காலமாக சகோதர மதத்தவர்கள் முஸ்ஸிம் பெண்கள் மீது கொண்டுள்ள தப்பான அபிப்பிராயத்துக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய தெளிவினைக் கொடுப்பதன் முதல்கட்ட முயற்சியே இந்த பதிவாகும்.

இது மதம் சார்ந்த பதிவாக இருந்தாலும் இப் பதிவில் நான் எந்த மதத்தினது ஆதாரங்களையும், சான்றுகளையும் எடுக்காமல் எல்லோருக்கும் பொதுவான விடயங்களையே எடுத்துக் கொள்கிறேன்.

இந்த பதிவை வாசிக்கும் அனைவரிடமும் நான் சில வேண்டுகோள்களைவிடுக்கிறேன்.
தயவு செய்து இந்த பதிவு ஒரு மதம் சார்ந்த பதிவு எனக் கருதி மதக் கொள்கையில் நம்பிக்கையற்ற எவரும் இதனை வாசிக்காமல் போக வேண்டாம்.

அடுத்து இந்த பதிவை வாசிப்பதுக்கு முன் உங்களுடைய மனதினை (உள்ளத்தினை) வெறுமையாக வைத்துக் கொள்ளவும்.

வாசிக்கும் நீங்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் உங்களுடைய மதம் பற்றிய கொள்கைகளை இப் பதிவினை பூரணமாக வாசித்து முடிக்கும் வரை சற்று உங்கள் மனதில் இருந்து எடுத்து விடுங்கள்.

நான் இங்கு சொல்ல வரும் விடயங்களில் ஏதாவது சறுகல்கள் ....பூசி மொழுகுதல் ஏதும் இருக்கிறது என உங்கள் மனதுக்கு தோன்றின் அதனை தெளிவாகவும் நாகரீகமான முறையிலும் உங்களுக்குறிய உரிமையுடன் எடுத்து சொல்லுங்கள்.

இந்த பதிவை எழுதும் நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரணமானவனே தவிர என்னிடம் விசேடமான அறிவோ,ஏதும் விசேட தன்மைகளோ இல்லை.என்னுடைய அறிவுக்கு பட்ட வற்றினை உங்களுக்காக ஒரு தெளிவுக்காக இதனை எழுதுகின்றேன்.என்னைவிட அறிவில் சிறந்தவர்களும் உங்களில் இருக்கின்றனர். எல்லோரையும் விட அறிவில் சிறந்தவன் அந்த இறைவன் ஒருவனே,அவனே எனக்குப் போதுமானவன்.

இறுதியாக இந்த பதிவினை ஒரு விவாதவிடயமாகவோ அல்லது நகைச்சுவை எனும் விடயமாகவோ அல்லது ஒரு பொழுது போக்கிக்காகவோ எடுக்க வேண்டாம். மேலதிக தெளிவு தேவைப்படுவோர் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் நாற்று குழுமத்தில் சகோதர மதத்தவர் ஒருவர் அல்லது பலராலோ சகோதர மதத்து பெண் ஒருவரினை நடிகையாகக் கொண்டு எடுக்கபட்ட ஒரு குறும்படம் ஒன்றினை ( மறை பொருள்) நாற்று குழும உறுப்பினர் ஒருவர் பதிவாக இட்டார். அப் பதிவினை காரணமாக வைத்து அதனை விவாத மேடையாக ஆக்கிவிட்டனர் இன்னும் சிலர்.


அக் குறும்படத்தின் மையப் பொருளினைப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் அழகுக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையானது ஒரு முட்டுக் கட்டையாக இருக்கின்றது என்பதினை எடுத்து சொல்கின்றது.

முதலில் நான் அவ் விடயத்தினை ஒரு விவாதமாக எடுத்துக் கொண்டதை வண்மையாக கண்டிக்கிறேன். காரணம் நமக்கு ஒரு விடயத்தில் தெளிவு தேவை எனில் முதலில் அவ் விடயத்தில்  தேர்ச்சி பெற்ற ஒருவரிடம்  தான் அதனை எடுத்துச் செல்ல வேண்டும் அதன் மூலம்தான் நாம் சரியான விளக்கத்தினை பெற முடியும்.

அதனை விட்டுவிட்டு நாம் கேளிக்கைக்காக ஒன்றுகூடும் ஒரு இடத்தில் அதனை விவாத விடயமாக எடுத்துக் கொண்டோம் எனில் அவ்விடயமும் கேளிக்கைக்குறிய விடயமாகத்தான் இருக்கும்

இன்னும் சொல்லப் போனால் தெருவோரத்தில் கூடும் நண்பர்கூட்டம் பேசும் ஒரு விடயத்தினைப் போல்தான் இருக்கும்.தெருவோர நண்பர்கள் எடுத்துக் கொள்ளும் விடயங்களில் பெரும்பாலானவை கேளிக்கைக்குறிய விடயங்களே.

ஆகவே தான் நான் அவ்விடயத்தை நாற்று குழுமத்தில் எடுத்துக் கொண்டமைக்கு முதலில் வருந்துகிறேன்.

மேலும் அந்த விடயத்தில் சுமார் ஐந்துக்கும் அதிகமான சகோதர மதத்தவர்களும் ஒரே ஒரு முஸ்லிம் சகோதரருமே கலந்து கொண்டிருந்தனர்.நான் கேட்கிறேன் நீங்கள் ஐந்து பேருமாக சேர்ந்து ஒருவரிடம் இஸ்லாம் அல்லாத வேறு ஒரு விடயத்தைப் பற்றி விவாதித்து இருந்தாலும் அவரால் அதற்கு சரியான விளக்கத்தினை தற முடியாது.நிச்சயமாக முடியாது.அவ்வாறு அவர் விளக்கம் தரக் கூடியவர் என்றால் அவருக்கு இறைவன் விசேடமான சில விடயங்களை கொடுத்திருக்க வேண்டும்.
இறைவன் அவ்வாறு விசேடமான சில விடயங்களை கொடுக்க வேண்டும் எனில் அவருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு அதிகமாக இருக்க வேண்டும்.அந்த வகையில் அந்த விவாதத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதரருக்கு விசேடமாக இறைவனின் அருள் இருக்க வாய்ப்பில்லை (இறைவனே மிக அறிந்தவன்).

தற்போது நான் விடயத்திக்கு வருகிறேன் ஏற்கனவே பதிவு நீண்டுவிட்டதால் இன்னும் அதனை நீட்ட விரும்பவில்லை.

அன்றைய நாற்றுவில் இடம்பெற்ற மொக்குத்தனமான விவாதத்தில் முஸ்லிம் பெண்களைப் பற்றியும்  இஸ்ஸாம் மதத்தைப் பற்றியும் மிகவும் கேவலமாகவும் கருத்துக்களை சகோதரர்கள் பகிர்ந்து கொண்டனர்.இதிலிருந்து  இஸ்லாத்தைப் பற்றி சகோதரர்கள் அறிந்து கொண்டது மிகவும் குறைவே என புரிகிறது. அதை நான் தவறு என கூறவில்லை.

உண்மையில் எமக்கு எந்த ஒரு விடயத்தில் தெளிவு அல்லது போதிய அறிவு இல்லையோ நாம் அந்த விடயத்தை பற்றி விவாதிக்கக் கூடாது என்பதனை மறுபடியும் இவ்விடத்தில் கூறிக்கொள்கிறேன்.

உதாரணத்துக்கு எனக்கு கணக்குப் பாடத்தில் சந்தேகங்கள் இருப்பின் அச் சந்தேகங்களைத் தீர்க்க நான் கணக்கில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம்தான் செல்ல வேண்டும். அதனை விடுத்து தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் அதனை எடுத்துச் சென்றால் அதற்கான சரியான தீர்வினைப் பெற முடியாது. 
ஆகவே தான் நான் கூறுகிறேன் நாம் போட்டிபோடும் நபர் அல்லது விவாதிக்கும் நபர் நாம் எடுத்துக் கொண்ட விடயத்தில் எந்தளவு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதனை நாம் அறிய வேண்டும்.

நான் இவ்விடத்தில் இஸ்லாம் மதத்தைப் பற்றிய ஒரு சிறிய தகவலை தரலாம் என நினைக்கிறேன்,அடிப்படையில் இஸ்லாம் மிக எளிமையான மார்க்கமாகும் அது எளிமையைத்தான் விரும்புகிறது.இஸ்லாத்தில் பெருமை என்ற சொல்லிற்கு இடமே இல்லை.பெருமைத்தனத்துடன் இருப்பவர்களை இறைவனுடன் யுத்தம் செய்ய தயாராகுப்பவர்கள் என இறைவன் கூறுகிறான்.

அன்றைய மொக்கை விவாதத்தில் சகோதர மத நண்பர்கள் முஸ்லிம்கள் பெண்களை ஒரு போதை தரும் பொருளாகவும்,வெறும் இன்பத்துக்காகவும் பயன்படுத்துகிறார்கள் என்றும்,முஸ்லிம் ஆண்கள் அனைவரும் காமத்துக்கு அடிபணிந்தவர்கள் என்ற கருத்துப்படவும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டனர்.



பொதுவாக இறைவன் பெண்களை ஆண்களுக்கு துனையாகவே படைத்துள்ளான்.இங்கு துணை என்பது எல்லா வித துணைகளையும் குறிக்கின்றது. இதில் எந்த மதத்தவரும் விதி விலக்கில்லை.


இன்று இணையத்தில் அதிகமாக பேசப்படும் விடயங்களில் ஒன்று தகாத உறவு பற்றியது. தகாத உறவு எனும் போது,
மகளை கற்பழித்த தந்தை..................
அன்னனுடன் தகாத முறையில் உறவு வைத்த தங்கை.........
அம்மாவும் மகனும் திருட்டு கல்யாணம்.........
மாமியாருடன் உறவு வைத்த மருமகன்..........
இப்படி ஏறாழமான செய்திகளை இணையத்தில் வாரம் இருமுறையாவது படிக்கிறோம்.

இந்த சம்பங்களை நோக்கும் போது அனைத்தும் சகோதர மதங்களில் நடைபெற்றவையாக இருக்கின்றன.அவற்றை வெளிக்கொண்டு வருவதும் சகோதர மத இணையங்களே.இத் தகாத உறவு விடயத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு.


ஆகவே நான் இங்கு கேட்கும் விடயம் என்ன்வென்றால் முஸ்லிம்கள் மட்டும்தான் காமத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றால் மேலே நான் கூறிய சம்பவங்களில் தொடர்பு பட்டவர்களை எவ்வாறு அழைப்பது.???
இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மனிதர்கள் என்றே கூறமுடியாது.

இந்த தவறுகளை செய்யாமல் இருக்கத்தான் இஸ்லாம் ஒரு பெண் தன்னுடைய வீட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதினை சொல்கின்றது.அதன் அடிப்படையிலேயேதான் முஸ்லிமான பெண் ஒருவள் தன்னுடைய வீட்டிலும் அழகான முறையில் உடையணிந்து தனது அங்கங்களை மறைத்து இருக்கின்றாள்.


இந்த தப்புகள் நடைபெறாமல் இருக்கத்தான் இஸ்லாம் அன்றே கூறி  விட்டது. உங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட ஒரு வயதை அடைந்தால் அவர்களை தனியான படுக்கைகளில் (ஆண் வேறு பெண் வேறு என ) படுக்க வையுங்கள். என்று


மேலும்  எவறொருவருக்கு பெண் பிள்ளைகள் இருந்து அவர்கள் பருவ வயதை அடைந்ததும் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிராறோ.அத் தகப்பனை இறைவன் (அல்லாஹ்) சுவர்க்கத்தில் நுழைவிப்பதக வாக்களித்துள்ளான்.


பதிவு நீண்டு விட்டது என நினைக்கின்றேன். மிகுதியை அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.

Post a Comment

72 Comments

  1. நாற்று குழுமம் பற்றீய உங்களது கருத்துக்கு என் வண்மையான கண்டனங்கள்..

    நாற்று குழுமம் என்பது வெறும் கேளிக்கை குழுமம் அல்ல.. நாற்றின் முக்கிய உறுப்பினராக இருந்துகொண்டு இந்த கருத்தை தாங்கள் சொன்னது தவறு..

    நாற்றில் இதுவரை இடம்பெற்ற உருப்படியான விடயங்கள் எதுவுமே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா இம்ரான். நீங்கள் கேளிக்கைகளில் மட்டும் கலந்துகொண்டுவிட்டு அங்கு கேளிக்கைகள் மட்டும்தான் நடக்கின்றது என்று சொன்னால் அது கீழ்த்தரமான செயல்...

    நாற்று ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஏராளமான விவாதங்கள், போட்டிகள், நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.. அவை உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் தயவு செய்து பழைய பதிவுகளை தேடி பாருங்கள்.. அதை விடுத்து கண்ணை மூடிய பூனை கணக்கில் கருத்து சொல்லவேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. நண்பா உம்முடைய கருத்துக்கு மிக்க நன்றி....

      நான் இங்கு கேளிக்கை என்று கூறியிருப்பது உங்கள் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக முதலில் மன்னிப்பு க்ற்ட்டுக் கொள்கிறேன்.

      நான் இங்கு கேளிக்கை என்று கூறியிருப்பது...இணையத்தில் பொதுவாக எடுத்த்க்கொள்ளும் விடயங்களில் அதிகமானவை கேளிக்கைக்குறியதே....

      அதே போன்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். தெளிவு பெற வேண்டிய ஒரு விடயத்தை நாம் உண்மையில் தெளிவு பெற வேண்டும் எனில் அதனை தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் தான் நாம் கொண்டு செல்ல வேண்டும்...

      மீண்டும் ஒரு முறை நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..

      நாற்றுவில் அதிகப்படியான கலைஞர்களை ஊக்குவிக்கும் விடயங்களை நான் பார்த்திருக்கிறேன்.கலந்து கொண்டும் இருக்கிறேன். எதிர்வரும் தினங்களில் நடக்கக் கூடிய மின் நூல்வெலியீடும் அதில் ஒரு அம்சமாகும்.

      Delete
    2. ஆகவேதான் மீண்டும் கூறுகிறேன்...
      நாமில் அதிகமானோர் அதில் பகிரும் விடயங்களில் கேளிக்கை முக்கிய இடத்தை பெறுகின்றது....

      அது மட்டுமில்லாமல் அந்த முஸ்லிம் சகோதரரும் கூட கேலிக்கை தரும் விதமாகத்தான் பதில் சொல்லியிருந்தார். அவர் சொன்ன பதில்களில் மற்றவர்கள் தெளிவு பெறுவார்கள் என்பது என்னால் கூற முடியாத ஒன்று..

      ஆகவே தான் அவரும் அவ்விடயத்தில் சரியான பதிலை கூறியிருப்பின் அது நல்ல ஒரு விவாதமாக அமைந்திருக்கும்.

      Delete
    3. மீண்டும் நான் சொல்கிறேன்....
      அன்றைய விவாதத்தில் நாங்கள் மிகவும் கன்னியமாக மதிக்கும் எங்கள் மாநபி (ஸல்) அவர்களைப் பற்றியும் சகோதரர்கள் விவாதிட்டனர்...

      அந்த விடயம் நிச்சயமாக எனக்குப் பிடிக்கவில்லை...
      யாரும் எந்த மத தலைவர்களையும் கடவுளையும் பிடிக்காத வார்த்தைகளால் விமர்சிப்பது வெறுக்கத்தக்க விடயமாக எனக்குத் தோன்றும்...

      அந்த விவாதத்தை வேறு ஒரு இடத்தில் எல்லோருடைய முகமும் தெரியும் விதமாக நாம் செய்திருந்தால் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் இடம் பெற்றிருக்காது...

      அதுவும் இல்லாமல் எந்த ஒரு மதம் தொடர்பான பிரச்சனைகளையும் நாம் புனிதமான இங்கு நான் புனிதம் என்று சொல்வது அனைவரும் ஒன்றுகூடி பிரார்த்திக்கும் இடங்களாக கோயிள்கள் பல்ளிவாசல்கள் போன்றவற்றில் எடுத்துக் கொல்ளும் போதுதான் அதன் பெறுமதி எமக்குப் புரியும்....

      ஆகவே என்னுடைய பார்வையில் பெருமதியன விடயங்களை அதற்குறிய கண்னியத்தைக் கொடுத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.

      சகோதர நண்பர்களுக்கு எழுந்த சந்தேகங்கள் மிகவும் சாதாரணமானவையே... ஆனால் அதனில் தெளிவு பெற வேண்டும் எனில் நாம் அதற்குறியவர்களை நாட வேண்டும்.அதற்குறியவர்கள் எங்கு இருக்கிறார்களோ அவ்விடம் நாம் செல்ல வேண்டும்....நான் இங்கு இடம் என்று குறிப்பிடுவது அந்த சந்தேகங்களை தீர்க்கக் கூடிய அனைத்து இடங்களும்...

      அப்போதுதான் அதன் பெறுமதி எமக்குப் புரியும்.

      Delete
    4. அசலாமு அழைக்கும் சகோதரரே.. முதல் சில வரிகளில் தங்களது இறை அச்சத்தை உணரமுடிந்தது, அல்லாஹ் நன்கு அறிந்தவன் . புகழ் அனைத்தும் இறைவனுக்கே, தெளிவான பதிவு... மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள், நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்களில், ஒருவர் மற்றொருவரின் நம்பிக்கைகளை (மதம் என்று இல்லை எதுவாக இருப்பினும்) எளிதாக கேளிக்கைக்கு உள்ளாகி விட முடியும். ஆனால் இதனால் ஆக்க பூர்வமான நிகழ்வுகள் நடைபெற வாய்புகள் உண்டா என்றால் இல்லை. படித்த சகோதர்கள் இதுபோன்ற நம்பிக்கைகளையும் பின்பற்றுதல்களையும் கேளிக்கைக்கு உரியதாக்குவது வருத்தமளிக்கிறது.

      அல்லாஹ் குர்-ஆனில் கூறுகிறான்,

      குர்-ஆன் 3:66. உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

      குர்-ஆன் 18:54. இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம்செய்பவனாகவே இருக்கின்றான்.

      குர்-ஆன் 22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்

      " உதாரணத்துக்கு எனக்கு கணக்குப் பாடத்தில் சந்தேகங்கள் இருப்பின் அச் சந்தேகங்களைத் தீர்க்க நான் கணக்கில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம்தான் செல்ல வேண்டும். அதனை விடுத்து தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் அதனை எடுத்துச் சென்றால் அதற்கான சரியான தீர்வினைப் பெற முடியாது.
      ஆகவே தான் நான் கூறுகிறேன் நாம் போட்டிபோடும் நபர் அல்லது விவாதிக்கும் நபர் நாம் எடுத்துக் கொண்ட விடயத்தில் எந்தளவு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதனை நாம் அறிய வேண்டும். "

      இவ்வாறு மேலே குறிப்பிட்டது போல் துறைசார்பான அறிவின்றி இவ்வாறு விவாதம் செய்வது படித்தவர்களுக்கு அழகல்ல.

      சிட்டுக் குருவி அவர்களே நீஙகள் இவர்களிடம் இதை தெளிவுபடுத்த முயற்சிப்பது நல்ல விஷயம் இருப்பினும் எந்த அளவு அவர்களுக்கு இது பயனளிக்கும் என்பதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் அவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக.

      அழகிய முறைகள் பதில் அளிப்பது பயனளிக்காது என்னும் பட்சத்தில் பின் வரும் வசனத்தை நினைவு கூறுவீராக

      குர்-ஆன் 29:46. இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித்தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.

      குர்-ஆன் 109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

      அவர்களுக்காக பிராதிப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.
      அல்லாஹ் தங்களுக்கு அமைதியையும், அருளையும் பரக்கத் செய்வானாக..!

      Delete
  2. மற்றும்படி உங்கள் பதிவு சம்மந்தமாக கருத்து எதுவும் இல்லை. நீங்கள் பேசுவது மதம் பற்றி.. நாங்கள் பேசுவது மனிதாபிமானம் பற்றி, மனிதர்களின் உணர்வுகள் பற்றி

    ReplyDelete
  3. சகோ உங்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த விவாதம் என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது.
    என்னுடைய கருத்து மதம் சார்ந்தது அல்ல பொதுவானது.

    உடல் சுகம் என்பது ஒரு வகை பசி.
    மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இது பொதுவானது.
    பசிக்கு உணவை எவ்வாறு பெற வேண்டும்?. உழைத்து சம்பாதித்து பசியை போக்கி கொள்ள வேண்டும்.
    இதுதான் ஒழுக்கம் உள்ளவர்கள் செய்யும் செயல்.

    திருடர்கள் ஒழுக்கமற்றவர்கள். திருட வேண்டும் என்பவன் எப்படி மூடி இருந்தாலும் திருடத்தான் செய்வான்.

    மக்கள் மனதில் ஒழுக்கத்தை, நீதியை, நியாயத்தை ,மனிதாபிமானத்தை விதைக்க வேண்டும். இதுவே அனைத்து திருடர்களையும் திருத்தும் மற்றும் திருடர்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் உன்னத வழியாகும்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே........

      Delete
  4. ''''முதலில் நான் அவ் விடயத்தினை ஒரு விவாதமாக எடுத்துக் கொண்டதை வண்மையாக கண்டிக்கிறேன். காரணம் நமக்கு ஒரு விடயத்தில் தெளிவு தேவை எனில் முதலில் அவ் விடயத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் தான் அதனை எடுத்துச் செல்ல வேண்டும் அதன் மூலம்தான் நாம் சரியான விளக்கத்தினை பெற முடியும்.

    அதனை விட்டுவிட்டு நாம் கேளிக்கைக்காக ஒன்றுகூடும் ஒரு இடத்தில் அதனை விவாத விடயமாக எடுத்துக் கொண்டோம் எனில் அவ்விடயமும் கேளிக்கைக்குறிய விடயமாகத்தான் இருக்கும்''''' ///////

    அந்த விவாதத்தில் கேக்கப்பட்ட முக்கிய கேள்வியே முஸ்லிம் சகோதரிகள் பர்தா அணிவதன் நோக்கம் என்ன என்பதே'''' இக் கேள்விக்கான விடையினை சொல்வதற்கு எந்த துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தேவை என நீங்கள் நினைக்கிறீர்கள்....

    நாற்று குழுமத்தை கேளிக்கைக்காக மட்டுமே ஒன்று கூடும் இடம் எனவே உங்கள் பதிவில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இதனை உங்கள் பதிவை இரண்டு நாள் கழித்து நீங்கள் மீண்டும் வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்... அல்லது பிறிதொருவர் சத்தமாக வாசிக்க நீங்கள் கேளுங்கள் அப்போது தான் உங்களுக்கு அது விளங்கும்.....

    நாற்றில் நான் இணைந்து கொண்ட குறுகிய காலத்தில் தெரியாத விடயங்கள் சிலவற்றை அறிந்திருக்கிறேன்... மேலும் பல அறிவுபூர்வமான நல்ல பல விடயங்கள் நடந்த குழுமத்தை கேளிக்கை மட்டுமே நிறைந்த இடமாக நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது..

    கேளிக்கை என்பது நகைச்சுவை, நகைச்சுவையுடன் இணைந்த விளையாட்டான செயற்பாடுகளைக் குறிக்கும்..... அப்படிப்பாத்தால் நாற்று குழுமத்திற்கு நீங்கள் தரும் வரைவிலக்கணம் என்ன?

    உங்கள் பதிவில் ஒவ்வொரு கருத்துக்களும் பல எதிர்க் கருத்துக்களை தூண்டுகின்றன. கடமையில் இருக்கிறேன் மீண்டும் இணைந்து கொள்கிறேன்..... ஓர் சாதாரண வாசகனாக

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா......
      எனது வலையுலக பிரவேசத்தில் அதிகமாக எனக்கு ஆதரவு தந்தவர்கள் நாற்று குழுமத்தினரே....நான் அவர்களையும் குழுமத்தையும் பிழையாக சொல்லவில்லை...

      மதம் தொடர்பான சந்தேகங்களுக்கு நாம் விளக்கம் காண முயலும்போது அதற்கென ஒரு மரியாதையை கொடுக்க வேண்டும் எந்த மதமாக இருந்தாலும் சரி....

      ஆனால் அன்றைய விவாதத்தில் பரிமாறப்பட்ட கருத்துக்களும் நடைமுறைகளும் எனக்கு கேளிக்கைக்குறியதாகவே தோன்றியது...

      மேலும் நான் இங்கு ////நல்ல பல விடயங்கள் நடந்த குழுமத்தை கேளிக்கை மட்டுமே நிறைந்த இடமாக /// என்று கூறவில்லை.

      கேளிக்கைகளும் பரிமாரப்படும் இடம்தான் நாற்று.

      அதனால் தான் சொன்னேன் எடுத்துக் கொண்ட விடயத்தின் ஆழத்தையும் அதில் தொடர்பு பட்டவர்கள் அதற்குக் கொடுக்கும் மரியாதையையும் நாம் புரிந்து அதற்குத்தக்கவாறு நாம் நடந்துகொள்ள வேண்டும்.

      அதற்காகத்தான் நான் அவ்விடயத்தினை நாற்றுவில் எடுத்துக் கொண்டமைக்கு வருந்தினேன்.

      Delete
  5. சகோதரர் Imran Moosa,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தொடருங்கள். முழு பதிவையும் பார்த்துவிட்டு கருத்தை பதிகின்றேன். இப்போதைக்கு சில. முகத்தை மறைப்பது இஸ்லாம் சொல்லித்தந்தது அல்ல. தன்னுடைய மேலதிக பாதுகாப்பை கருதி அப்படியாக யாரும் செய்தால் அது அந்த சகோதரிக்கும் இறைவனுக்குமான விசயம். இதில் சர்ச்சை கொள்ள ஒன்றுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதர்...

      இதற்கு நான் உங்களுக்கு பின் வரும் காலங்களில் பதில் சொல்கிறேன்

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

      Delete
  6. வேல் குத்துவதை பற்றியும் ஒரு முஸ்லிம் பெண் கிண்டலாக எழுதினார் நீங்கள் அதில் சொல்லி இருக்கலாமே மாற்று மத நம்பிக்கைகளை அவமதிக்காதீர்கள் என்று.. அதன் தொடர்சிதான் இந்த குறும்படம் உங்களுக்கு ஒப்ரு நியதி மற்றவர்களுக்கு ஒரு நியதி அல்ல.. ஏன் உங்களுக்கு எவனையுமே பிடிப்பதில்லை? யாரோடும் சேர்ந்து ஒற்றுமையாக வாழ தெரியாதா உங்களுக்கு,

    ReplyDelete
    Replies
    1. நான் அந்த பதிவினில் நீங்கள் சொன்ன விடயத்தைக் கண்டிருந்தால் நிச்சயமாக நான் அவ்வாறு கூறியிருப்பேன்...

      மேலும் நான் ஒரு தெளிவுக்காகத்தான் இந்த பதிவினை இடுகிறேன் தொடர்ந்துவரும் பதிவுகளையும் பாருங்கள் அதில் இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன.

      Delete
    2. மாம்ஸ் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோஸ் பர்தா குறித்த இந்த ஆக்கம் இன்னும் சரியாக விளக்கப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்.

    ஏனெனில் பர்தா என்ற வார்த்தைக்கு விளக்கமாய் இருகண்கள் மட்டும் தெரிய உடல் முழுவதும் போர்த்தப்பட்டிருக்கும் கருப்பு நிற அங்கி என்ற பொதுப்பார்வையில் அறியப்பட்டிருக்கிறது.
    இதுவல்ல பர்தா... ?

    முதலில் இஸ்லாம் கூறும் பர்தா என்னவென்று விவாதிக்க முற்படும் நாம் அதுக்குறித்து முதலில் அறிந்திருக்க வேண்டும்.

    நமது சிந்தனைக்கு தவறாக தெரியும் போதிய தெளிவில்லாத ஒரு விசயத்தை முன்முடிவுகளோடு அணுகுவதென்பது அறிவார்ந்த செயல் அல்ல. விவாதிக்கும் மூலத்தின் கருப்பொருளை தெளிவாக நாம் அறிந்திருந்தால் ஒழிய!

    பர்தா என்பது பெண்களுக்காக ஒன்று மட்டுமல்ல. இருபாலருக்கும் தான்.
    ஆனால் அவர்கள் படைக்கப்பட்ட தன்மைகளுக்கேற்ப அவர்களுக்கான பர்தா முறை வித்தியாசப்படுத்த படுகிறது.

    குர்-ஆனில் ஒரு வசனம்.
    (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)

    இப்படி இருபாலருக்கும் சேர்த்தே (அதுவும் முதலில் ஆண்களுக்கே) கட்டளையிடுகிறது
    இஸ்லாம் கூறும் பர்தா முறையை அறிந்தவர்கள் -அது பெண் சமூகத்திற்கு பொருந்தாது என்றால் இன்ஷா அல்லாஹ் அதுக்குறித்து கருத்துக்கள் பரிமாறலாம்.

    மேலும் பர்தா குறித்த தெளிவாக அறிய இந்த தளத்தை பார்வையிடுங்கள்
    விவாத பொருளின் மையமாக கொண்ட சகோ பொன் சுதா இயற்றிய மறைபொருள் குறும்படத்திற்கும் சேர்த்தே அங்கே விளக்கம் தரப்பட்டுள்ளது.
    http://islamicdress.blogspot.com/

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதரரே....

      என்னுடைய அடுத்த பதிவுகளையும் படியுங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  8. முதலில் நான் அவ் விடயத்தினை ஒரு விவாதமாக எடுத்துக் கொண்டதை வண்மையாக கண்டிக்கிறேன். காரணம் நமக்கு ஒரு விடயத்தில் தெளிவு தேவை எனில் முதலில் அவ் விடயத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் தான் அதனை எடுத்துச் செல்ல வேண்டும் அதன் மூலம்தான் நாம் சரியான விளக்கத்தினை பெற முடியும்.//

    உங்களுடம் அந்த கேள்விக்கு பதில் இல்லை என்றதுக்காக இப்படி ஒரு விளக்கமா? ஏன் அன்று விவாதம் நடந்துகொண்டு இருக்கும் போது வந்து இதை சொல்லியிருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா....
      கேள்விக்குப் பதில் இருக்கிறது...

      நான் அந்த அரைவாசிப் பகுதி போகும் போதுதான் அதனைப் பார்த்தேன்...அங்கு பரிமாறப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக இருந்தது...

      அது மட்டுமில்லாமல் நான் மரியாதைக்கு உரியவராக முன் மாதிரியாக கருதும் நபி பற்றியும் அவ்விடத்தில் மோசமாக கருத்துக்களை தெரிவித்தனர். நான் ஒரு கருத்தினை சொல்ல முற்படும் போது வார்த்தைகள் வேறுதிசையில் திரும்பியது...
      மேலும் நீங்கள் அன்று இருந்த மன நிலையில் (மச்சான் ஒருவன் சிக்கியிருக்காண்டா)என்னுடைய கருத்தை நான் வெளிப்படுத்தினால் அதற்கு சரியான பின்னூட்டம் கிடைக்காது என நான் கருதினேன்...அதனால் தான் நான் அங்கு வரவில்லை.

      Delete
    2. ஏன், ஹைதர் அலி அவர்கள் அங்கெ "நாயே, மயிர்" என்ற நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியது பற்றியும் இங்கே சொல்லியிருக்கலாமே? உங்களுக்கு வந்தா மட்டும் தான் ரத்தமா?

      Delete
    3. நான் இதில் பொதுப்படையாகத்தான் சொன்னேன் அங்கு பரிமாறப்பட்ட கருத்துக்கள் அநாகரீகமான முறையில் இருந்தது என்று....யாரையும் சுட்டிக்காட்டி பேசவில்லை

      Delete
  9. ஆகவே தான் நான் கூறுகிறேன் நாம் போட்டிபோடும் நபர் அல்லது விவாதிக்கும் நபர் நாம் எடுத்துக் கொண்ட விடயத்தில் எந்தளவு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதனை நாம் அறிய வேண்டும்.//

    என்ன சொல்ல வாரீங்க , அன்று நம்முடன் விவாதித்த ஹைதர் அலிக்கு இஸ்லாம் பற்றிய போதிய அறிவு இல்லை என்றா???

    அப்படியெனில் அதை அவர் அன்றே ஒத்துக்கொண்டு இருக்கலாமே! இல்லை நீங்களாவது வந்து சொல்லியிருக்கலாமே ஹைதர் அலிக்கு இஸ்லாம் பற்றிய விளக்கம் குறைவு என்று!

    ReplyDelete
    Replies
    1. நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை ...எல்லோரும் முஸ்லிம்கள்தான் அவர்களுக்கு எல்லாவிடயமும் தெரியும் என நீங்கள் கருதி எல்லோரிடமும் விவாதத்துக்கு சென்றால் நான் என்ன பன்னுவது...

      நான் மறுபடியும் சொல்கிறேன் நான் இதனை ஒரு விவாதத்துக்காக எழுதவில்லை

      Delete
    2. /////எல்லோரும் முஸ்லிம்கள்தான் அவர்களுக்கு எல்லாவிடயமும் தெரியும்/// அப்புறம் எதுக்கு சொன்னீங்க "ஆகவே தான் நான் கூறுகிறேன் நாம் போட்டிபோடும் நபர் அல்லது விவாதிக்கும் நபர் நாம் எடுத்துக் கொண்ட விடயத்தில் எந்தளவு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதனை நாம் அறிய வேண்டும் " என்று ??? இதுக்கு அர்த்தம் அந்த விவாதத்தில் பங்குபற்றியவர் இஸ்லாம் பற்றிய போதிய அறிவு இல்லாதவர் என்பது தானே! அப்படியெனில் அவர் அதை அன்றே ஒத்துக்கொண்டிருக்கலாமே

      சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க

      Delete
    3. எல்லாவிடயமும் தெரியும் என நீங்கள் கருதி எல்லோரிடமும் விவாதத்துக்கு சென்றால் நான் என்ன பன்னுவது...//

      அதேடு நாம் அவருடன் விவாதத்துக்கு போகவில்லை ,அவர் தான் 'தான் விளக்கம் அளிப்பதாக' கூறி விவாதத்துக்கு வந்தார்.. ஆனால் இறுதி வரை 'நாயே மயிர்' என்ற நாகரிகமான வார்த்தைகளை தவிர வேறு ஏது விளக்கமும் கொடுக்கவில்லை(முடிந்தால் தானே)

      முதலில் நடந்ததை முழுமையாக அறிந்த பின் எழுத தொடங்கினால் நல்லது!

      Delete
    4. உண்மைதான் அவர் எல்லாவிடயமும் அறிந்தவர் என்றிருந்தால் அதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும்.....வெறுமென எதையும் கூறாமல் தொடங்கிவிட்டு அப்படியே விட்டுவிட்டது முட்டாள் தனமான செயல்..

      Delete
  10. .இத் தகாத உறவு விடயத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு.//

    எப்பா குண்டு சட்டிக்க குதிர ஓட்டாதிங்க, கொஞ்சம் மேற்குலகு பக்கமும் வந்து பாருங்க ,முக்கியமா யூரோப்பா பக்கம் வாங்க,இங்க உள்ள நாடுகளை குட்டி சுவராக்குவது யார் என்று தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. முஸ்லிம் என்று பெயரில் மட்டும் இருந்தால் போதாது...அவர்களுடைய செயற்பாட்டில் முஸ்லிமாக காட்டவேண்டும்.

      உண்மையான முஸ்லிம் எந்தவொரு கெட்ட செயலிலும் ஈடுபட மாட்டான். தவறுதலாக ஒருமுறை இடம்பெற்றால் அதற்காக இறைவனிடம் பிரார்த்தித்து மீண்டு கொள்வான்.

      இங்கு நான் பெயரள்வில் முஸ்லிமாக இருப்பவர்களை குறிப்பிட வில்லை...

      Delete
    2. 'நல்லவன் எல்லாம் முஸ்லீம்' எண்டது போலவெல்லோ உங்க கருத்து.. சும்மா காமெடி பண்ணாதீங்க..அப்போ உலகில் உள்ள முஸ்லீம்களின் தொகையை சாதாரணமாக விரல் விட்டு எண்ணிடலாம் போல !

      Delete
  11. இந்த தவறுகளை செய்யாமல் இருக்கத்தான் இஸ்லாம் ஒரு பெண் தன்னுடைய வீட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதினை சொல்கின்றது.அதன் அடிப்படையிலேயேதான் முஸ்லிமான பெண் ஒருவள் தன்னுடைய வீட்டிலும் அழகான முறையில் உடையணிந்து தனது அங்கங்களை மறைத்து இருக்கின்றாள்.///

    நீங்கள் மேற் குறிப்பிட்ட உதாரணங்களில் ஆண்கள் தானே தப்பு செய்துள்ளதாக உள்ளது.. ஆகவே கட்டுப்பாடுகளை போடா வேண்டியது ஆண்கள் மீதல்லவா ,ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது மட்டும் இந்த கட்டுப்பாடுகளை விதிப்பதை காரணத்தை தான் கேட்கிறோம்.

    குற்றம் செய்தவனை சுதந்திரமாக விட்டு பாதிக்கப்பட்டவருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது கீழ்த்தரமாக இல்லையா? இதுக்கு மத கட்டுப்பாடு என்ற பெயர் வேறு...

    ReplyDelete
    Replies
    1. பதிவின் நீளம் கருதித்தான் நான் அவற்றை பதிவிட வில்லை.... தொடர்ந்தும் படியுங்கள் எதிர்காலத்தில் வெளிவரும் பதிவுகளை

      Delete
  12. இந்த தப்புகள் நடைபெறாமல் இருக்கத்தான் இஸ்லாம் அன்றே கூறி விட்டது. உங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட ஒரு வயதை அடைந்தால் அவர்களை தனியான படுக்கைகளில் (ஆண் வேறு பெண் வேறு என ) படுக்க வையுங்கள். என்று//

    இஸ்லாமியர்கள் அல்லாத வீடுகளில் குறிப்பிட்ட குறித்த வயசை தாண்டிய போதும் கூட ஒன்றாகவா படுக்கைகளில் படுக்கிறார்கள்..?

    உங்களுக்கு ஒரு போதும் ஒரு விடயத்தை மதத்தை தாண்டி சிந்திக்க முடியாது என்பதற்கு இது ஒன்றே போதும்...

    ReplyDelete
    Replies
    1. நான் ஒரு உதாரணத்திக்குத்தான் அதனை கூறினேன்...

      நான் நிறைய சகோதர மதத்தவர்களுடன் பழகியுள்ளேன்..வீடுகளுக்கு சென்றுமுள்ளேன்...
      நான் பார்த்த வகையில் அவர்கள் வீட்டிலே நடந்து கொள்ளும் முறையானது மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது என்னுடைய பார்வையில்...

      வெளிநாட்டு கலாசாரத்தில் பெரும்பாலும் இவ்வாறு நிகழ்வதில்லை...எமது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தான் அதிகமான தகாத உறவுகள் பற்றி நான் அறிந்துள்ளேன்.

      Delete
  13. தங்கள் பதிவினை தொடர்வதன் மூலம் நிறைய செய்திகளை படித்து தெளிவு பெற விரும்புகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்தும் எதிர்பார்த்திருங்கள்...

      Delete
  14. சகோ இம்ரான்

    மற்ற கருத்துக்களை படிக்க எனக்கு நேரம் இல்லை...

    அதனால் சொல்ல வந்ததை மட்டும் சொல்லிவிட்டு போறேன்.

    முதலில் இந்த பதிவில் நாற்று குழுமத்தை இணைத்தது தேவையில்லாதது. உங்கள் கருபொருளை விட்டு விலகி செல்கிறது. இந்த பதிவு ஹிஜாப்பை பற்றி யென்றாலும் இது முந்தையை சண்டையின் தொடர்ச்சியாகவே தான் இருக்கும். தயவு செய்து இனி வரும் காலங்களீலாவது கவனத்தில் கொள்ளுங்கள்.

    எங்கே பிரச்சனை நடக்குதோ அங்கேயே விவாதித்து தீர்வு காண வழிபாருங்க. அமெரிக்கால நடக்குற சண்டைக்கு தமிழ்நாட்ல இருந்துக்கிட்டு சண்டை போடணும்னா முடியாத விஷயம் :-)


    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி...
      பதிவின் நீளம் கருதித்தான் நான் மற்ற விடயங்களை பதிவிட வில்லை.... இன்னும் இருக்கிறது...

      Delete
    2. சரியான கருது சகோதரி

      Delete
  15. மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
    (அல்குர்ஆன் 24:31)

    இதுதான் குர் ஆனில் கூறப்பட்ட கண்ணிய உடைக்கான வசனம். முகத்தை மூட வேண்டும் என எங்கும் சொன்னதில்லை.

    தனிநபர் கட்டுப்பாட்டுக்கும் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்கும் வித்தியாம் புரிந்துக்கொண்டாலே பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும்.

    அந்த யூடூப் லிங்க் பற்றி என் கருத்து :-

    ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்கும் போது அதை பற்றிய புரிதல் தெளிவு இருக்க வேண்டும்.


    இஸ்லாம் கண்ணை மூடுவதை பரிந்துரைக்கவே இல்லை.

    சோ எதை பற்றியும் ஆராயாமல் எடுக்கப்பட்ட அந்த படம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளதேவையில்லை என்பது என் கருத்து.

    அடுத்ததாக
    நேற்று ஒரு சகோதரர் பேஸ்புக்கில் "முட்டாக் என்பது இஸ்லாமிய கலாசாரத்தின் ஓர் அங்கம் அதை எப்படி நாம் சுதந்திரத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க முடியும்" என கூறினார். எவ்வளவு அழகான புரிதல் இது? ஆடையில் மட்டுமேதான் சுதந்திரம் இருக்குன்னு பலர் நெனைக்கிறாங்க

    தன்னை மதத்திற்கு எதிரானவர், மதம் பிடிக்காதவர், மனிதாபிமானி என சொல்வர்கள் ஹிஜாப்பை வெறுப்பார்களானால், உண்மையாக அவர்கள் நடுநிலையோட நடந்துக்கொள்வார்களேயானால் ஹிஜாப்பை தவிர்த்து

    1. விதவையை ஒதுக்குதல் இஸ்லாத்தில் இல்லை
    2. ஒரு பெண்ணின் சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்ய முடியும் என்ற இஸ்லாமிய சட்டம்
    3. விதவையோ விவாகரத்தானவரோ மறுமணம் செய்யும் உரிமை
    4. வரதட்சணை இல்லை. மணப்பெண் கேட்கும் தொகையை தான் மாப்பிள்ளை கொடுக்கணும்.
    5. தன் கணவனோடு வாழபிடிக்கவில்லை எனில் திருமணத்தை ரத்து செய்யும் உரிமை

    என்றெல்லாம் பெண்களுக்கு நெறையா விஷயங்கள் சலுகை,உரிமை கொடுத்திருக்கு

    அதை பற்றி பேச தயாரா??

    இல்லை இதெல்லாம் சுதந்திரம் இல்லையா???

    அவரவர்க்கு இறைவன் ஒரு விஷயத்தை பற்றி சிந்திக்கும் திறன் கொடுத்திருகிறான். சோ சிந்திப்போம்.

    உண்மையான சுதந்திரம் ஆடையிலா அல்லது நான் அடுக்கிய விஷயங்களீலா என்று??!!!

    ReplyDelete
    Replies
    1. பதிவின் ஆரம்ப விளக்கம் தான் இவை நான் இன்னும் கருப்பொருளினுள் நுழைய வில்லை அதனை அடுத்த பதிவில் சொல்லவுள்ளேன்....

      மேலும் என்னுடைய எடுகோள்களுக்கு சமமாகவே நீங்கள் கருத்து சொல்லியுள்ளீர்கள்...

      Delete
  16. ஆமினாவின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். நல்லதும் கெட்டதும் எல்லா இடங்களிலும் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்க வேண்டும்...

    ஒருவன் ஒரு குறை சொல்கிறான் என்பதற்காக மற்றவன் மீது மேலும் பல குறைகளை அடுக்கிக் கொண்டு செல்வதால் பயனில்லை.

    அந்த வீடியோவில் அப் பெண்ணின் ஆசைகள் மழுங்கடிக்கப்படுவதாகவே நான் பார்த்தேன், போகட்டுக்கும்.

    இம்ரான் நீங்கள் இந்தப் பதிவை தொடரப் போவதாக எழுதியிருக்கிறீர்கள்... ஆனாலும் இப்பதிவை எழுதுவதற்கு எத்தணித்த உங்கள் மனதில் தோன்றிய எண்ணம் பதிவில் பிரதிபலிக்கவில்லை என நான் நினைக்கிறேன்..

    ஆனாலும் பதிவை தொடர்வதால் நன்மை இருப்பதாக உணரவில்லை.. ஆமினாவின் கருத்தும் அதுவாகத் தான் இருக்கு..... நல்ல நட்புள்ளத்துடன் சொல்கிறேன்

    மதம் எல்லாம் மனிதனுக்காகவே உருவாக்கப்பட்டவை. முட்டிமோதி என்ன பலன்.....

    அன்றைய விவாதத்தில் ஈடுபட்டோரை தௌிவு படுத்துவதற்காகவே நீங்கள் இந்த ஆக்கத்தை எழுதியிருப்பின் இதனை தொடர்வதில் நன்மை உள்ளதாக எனது அறிவிற்கு தோன்றவில்லை

    ReplyDelete
    Replies
    1. தொடராமல் விடலாம்..........ஆனால் இன்னமும் கூட காட்டன் மாம்ஸ்
      //
      இங்கு அண்மையில் முகமட் என்பவர் 4சிறுவர்கள் உற்பட 7ஏழு பேரை குண்டு வைத்து கொன்றாரே.. அவரை இஸ்லாமோடு சம்பந்தப்படுத்தி இதுதான் இஸ்லாம் என்றால்? (மற்றவர்கள் வாஎகையில் குண்டு வைப்பது)ஏற்றுக்கொள்வீர்களா மூஸா? மற்ற மதங்களில் உள்ள குப்பையை கிழற முன்பு உங்களை நீங்கள் திருத்துங்கோ..?!//

      இப்படி சொல்லுறார் அப்போ இவர் இவ்வலவு நாளும் இவ்வாறுதான் எங்களுடன் பழகியிருக்குறார்....இவர் மட்டுமா இல்ல இன்னும் இருக்கின்றனரா????

      இதுக்கு நீங்க ஒரு முடிவு சொல்லுங்க....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  17. நோ கமெண்ட்ஸ் நண்பா

    ReplyDelete
  18. //இது மதம் சார்ந்த பதிவாக இருந்தாலும் இப் பதிவில் நான் எந்த மதத்தினது ஆதாரங்களையும், சான்றுகளையும் எடுக்காமல் எல்லோருக்கும் பொதுவான விடயங்களையே எடுத்துக் கொள்கிறேன்//

    உங்களால் மதத்தை தாண்டி சிந்திக்கவே முடியாது. அதனா தான் பெண்களை பர்தாவால் மூடி துன்புறுத்தி அதை வேறு சுதந்திரம் என்கிறீர்கள். மற்றய மதங்களிலேயும் கெட்ட விடயங்கள் இருந்தன. அவைகளைகைவிட்டு தங்களை சீர் திருத்தி கொண்டன. நீங்க மட்டும் இந்த பர்தா கொடுமையையே கைவிட மாட்டோம் என்று நிற்கிறீர்கள். அப்புறம் கற்பழிப்பு பெண்கள் மீதான துன்புறுத்தல்களிருக்கே அவைகள் பர்தா அணிவிக்கபடும் இஸ்லாமிய நாடுகளிலே பெரியளவில் நடைபெறுகிறது.

    ReplyDelete
  19. மூஸா எனது பின்னூட்டம் முழுவதையும் போட்டிருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. //மூஸா நான் சொன்னதில் சிறு பகுதியை எடுத்து போடுகிறீர்கள் (உங்களுக்கு பிடித்ததை மட்டும்) உங்கள் பதிவில் முழுவதும் போட்டிருக்கலாமே..? இங்கு நான் பார்கும் முஸ்லீம்களை வைத்து உங்கள் மதத்தை எடை போட முடியாது என்றும் அதற்கு விளக்கமும் தந்திருந்தேனே.. ஏன் போடவில்லை.? இது மட்டும் உங்கள் கண்ணுக்கு தெரிந்ததா.? அதைதாவது முழுமையாக போட்டிருக்கலாமே..?//

      எதை சொல்கிறீர் என புரியவில்லை எனக்கு...........

      Delete
  20. மதத்தை மதப்பெரியவர்களின் பொறுப்பான கைகளில் ஒப்படைத்துவிட்டு மனிதர்களாய் வாழப்பழகுவோம் என்பது மட்டும் தான் எனது வேண்டுதல்.

    .

    இது தான் முறுக்கிக்கொண்டு மதியிழந்து அலையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உடனடி தேவை...

    இது அத்தனை மதங்களுக்கும்...அத்தனை மனிதர்களுக்கும்...

    வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  21. Hmmm. What to say? Somebody wants to set the time back by 1500 years and still say it is the best. Ippadiyum irukkiraarkal.

    ReplyDelete
  22. இஸ்மத்April 21, 2012 at 6:27 AM

    குர்-ஆனில் ஒரு வசனம்.
    (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)
    என்று குரான் கூறுகிறது.
    அதனை முஸ்லீம் பெண்கள் பின்பற்றுகிறார்கள். அதனால் புர்கா அணிகிறார்கள்.
    உங்களுக்கு எங்கள் முஸ்லீம் பெண்களோடுபேச வேண்டுமா?
    அவர்களிடம் பாலருந்துங்கள். பிறகு நீங்கள் அவர்கள் பிள்ளைகளாக ஆகிவிடுவீர்கள்.
    அப்புறம் அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் கூறிய வழியில் அவர்களோடு பழகலாம்.

    http://onlinepj.com/sahih_muslim/athiyayam_17/%20
    பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது தொடர்பான சட்டம்.
    2878 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கி றேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் – மகன் உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், “அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, “அவர் பருவ வயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)” என்று கூறினார்கள். 14இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்” என்று அதிகப்படி யாக இடம்பெற்றுள்ளது.இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்” என்று இடம்பெற் றுள்ளது.

    ReplyDelete
  23. இப்படியான ஒரு விவாதத்துக்குறிய விடயத்தை தொடர்கதை போல் பகுதி பிரிக்காமல் ஒரு பதிவாக இடுவதுதான் முறை..

    சொல்ல வந்ததை சரியாக சொல்லாமல் குழப்பிக்கொண்டுள்ளீர்கள்.. சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் இஸ்லாத்தை பேச வேண்டுமென்பதில்லை!

    ஆமினா சொன்னது போன்று இதை அங்கேயே சொல்லியிருக்கலாம்... இது போன்று நிறைய விவாதங்களை பதிவுலகில் பார்த்தாயிற்று.. புரியாதவர்களுக்கு பல முறை சொல்லி பலன் ஏது.. லூஸ்ல விடுவதுதான் சரி..

    மற்ற மதங்களில் மட்டும்தான் தவறுகள் நடைபெறுகிறது என்பதோடு உடன்பட முடியவில்லை.. இவ்வாறான விடயங்களை பொதுவில் வைக்கும் போது கவனம் தேவை.. நம்மிடம் தகுந்த் ஆதாரம் இருக்க வேண்டும்,,

    துஷ்யந்தன், கந்தசாமி போன்ற அறிவுஜீவிகள் இஸ்லாத்தை விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டவர்கள்,, மற்ற மதங்களை,மற்றவர்களை விமர்சிக்கும் முன் கொஞ்சம் தங்களையும் சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்..

    ReplyDelete
  24. ஏன் நான் ஏதும் பிழையாச் சொல்லிடேனோ.நேற்றுப் பின்னூட்டம் போட்டேன்.காணேல்லையே !

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் போட்டீங்களா...? எனக்குகூட தெரியாமலா??? பின்னூட்டத்தை அழிக்கும் பழக்கம் எங்கள் வம்சத்துக்கே இல்லை.....

      Delete
  25. பின்னூட்டத்தை அழிக்கும் வழக்கமே இல்லைன்னு சொல்லிட்டு இருந்த ஒரு பின்னூட்டத்தை அழிச்சிட்டீங்களே..

    ஏனுங்க? அது நபிவழிதான்னு மேல இஸ்மத் சொன்னதை அழிக்கலையே..

    உங்க முஸ்லீம் பெண்ணுகளை எல்லோருக்கும் பால்கொடுக்க சொல்றாரு

    நீங்க ஏன் அத உங்க முஸ்லீம் பொண்ணுங்க பாலோ பண்ண சொல்லக்கூடாது?

    தெருவில வர்ரவன் போறவன் எல்லோருக்கும் பால் கொடுத்திட்டா பர்தா போட வேண்டாமே?

    அப்படியே தெருவில உக்காந்துகிட்டு எவனாவது புதுசா வந்தா வாடா ராசா வந்து குடின்னு சொன்னா முடிஞ்சிச்சி..

    ..
    இதெல்லாம் ஒரு மதம். இதெல்லாம் ஒரு கொள்கை..
    தூ..
    இந்த லட்சணத்தில உங்க முஸ்லீம் பொண்ணுங்க மத்தவங்களுக்கு அறிவுரை வேற...
    வெக்கங்கெட்டவங்க..

    ReplyDelete
    Replies
    1. திரு,,,முகம் தெரியாத பெயர் சொல்ல விரும்பாத..Anonymous நண்பருக்கு....

      பின்னூட்டத்தை அழித்த விடயம் தவறுதலாக இடம்பெற்றதாகும்...எனது நண்பர் ஒருவரின் திருவிளையாடல்தான் அது..அவ்வாறு பின்னூட்டத்தை அழிக்க வேண்டிய அவசியம் இருப்பின் இந்த பின்னூட்டத்தையும் என்னால் அழிக்க முடியும்.

      பெயரில்லாமல் வந்து அசிங்க அசிங்கமாக பேசுகிற உம்மிடம் நான் இதற்கெல்லாம் விளக்கம் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன்.

      நண்பரே இனி மேலாவது சொல்ல வந்த கருத்தை தைரியமாக சொல்லவும்

      Delete
    2. இன்னும் அவர் இஸ்மத் கூறிய விடயத்தினை நீர் தவருதலாக புரிந்து விட்டீர்..விளக்கம் தேவை எனில் என்னை தொடர்புகொள்ளவும்...என்னல் இஸ்மத்தின் பின்னூட்டத்தையும் அழிக்க முடியும்

      Delete
    3. Mr.Anonymous,
      தங்களது வார்த்தை பயன்பாடு மற்றும் கருத்தும் தங்களது கொள்கைகளை அனைவருக்கும் விவரிக்கிறது.

      Delete
  26. Islam and parpaneeyam are evils of earth and have to be eradicated for betterment of the society.

    ReplyDelete
  27. சகோ அனானி
    உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக

    //தெருவில வர்ரவன் போறவன் எல்லோருக்கும் பால் கொடுத்திட்டா பர்தா போட வேண்டாமே?

    அப்படியே தெருவில உக்காந்துகிட்டு எவனாவது புதுசா வந்தா வாடா ராசா வந்து குடின்னு சொன்னா முடிஞ்சிச்சி..
    //

    நீங்கள் அசிங்கமாக பேசுவதாக நினைத்துகொண்டு பேசுகிறீர்கள். ஆனால் இது நபி வழிதான்.

    நவீன யுகத்தில் நெருங்கிய உறவுக்காரர்கள் அல்லாதவர்களிடம் முஸ்லீம் பெண்கள் பழகுவதற்கு இதனை பரிந்துரைக்கலாம் என்பது பல இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து.

    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அனானி மீதான கருத்துறைக்கும் மிக்க நன்றி ஆஷிக்

      Delete
  28. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills,videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துறைக்கும் மிக்க நன்றி

      Delete
  29. நல்ல பதிவு நன்பரே!
    பர்தா சம்பந்தமான பதிவு ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
    http://hussainamma.blogspot.in/2012/02/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
      நீங்கள் தந்த லிங்கில் எந்த பதிவும் இல்லை......

      Delete
  30. சிட்டுக்குரிவியாரே,
    அழகான பெண்கள் முகத்தை மறைத்துச் செல்வது நியாயமா? அதுவுமில்லாமல், அரேபிய தேசங்கள் அனைத்தும் பாலைவனம், அங்கே எப்போதும் புழுதி பறக்கும். அதனால் அங்கு முகத்தை மறைத்திருப்பார்கள். அது அவர்களது பழக்கம். அதுவே நமது வெப்ப தேசத்திலும் தொடர வேண்டும் என்பதில் எந்த அவசியமும் இல்லை. அவர்கள் பாவம் என்றே சொல்லத் தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த கருத்துரைக்கு தாங்கள் பதில் எழுதுவீர்கள் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன், தாங்கள் எழுதுவதாக எனக்கு தோன்றவில்லை... ஆதலால் நானே களத்தில் குதித்துவிட்டேன், எனக்கு மட்டும் தாங்கள் ஓர வஞ்சனை செய்கிறீர்கள் என்று தொருகிறது நண்பரே...

      Delete
    2. இந்த பதிவுக்கு பின்னர் இட்ட பதிவுகளுக்கும் அதற்கான மறுமொழிகளுக்குமாகவே கிடைக்கிற நேரத்தினை செலவிட்டதனால் உங்களுடைய இந்த கருத்துக்கு பதிலெழுதநேரமில்லாமல் போய் விட்டது சரி அது என்னுடைய தவறுதான் முதலில் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்........

      சுமார் ஒரு மாதத்திற்கு முன்னிட்ட கருத்துறைக்கு பதில் கருத்து கிடைத்துள்ளதா என மீண்டுமொருமுறை இப்பதிவிற்கு வருகை தந்து ஏமாந்து சென்றமைக்கு மறுபடியும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

      உங்களின் கருத்தான அழகான பெண்கள் ஏன் முகத்தை மறைக்கனும் எனும் கருத்தினைப் பார்க்கப் நோக்கப் போனால்

      இன்றைக்கு அதிகமான ஆண்கள் அதிகமான பெண்களின் அழகான முகங்களைக் கண்டுதான் அவர்கள் மீது ஆசை கொள்கின்றனர் அந்த ஆசையே அவர்களை தவறான வழியில் செல்லுவதற்குத் தூண்டுகிறது...

      ஒரு பெண் தன்னை யாரென அடையாளம் காட்டாமளிருப்பதற்குத்தான் இந்த ஹிஜாப் எனும் ஆடையினை முஸ்லிம் பெண்கள் விரும்பியிருக்கிறார்கள்...

      அரபுதேசத்தில் பாலைவனம் என்பதனால் புழுதியில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அன்றைய பெண்கள் முகங்களைத் திறையிட்டு மறைத்தார்கள் உண்மைதான். அந்த திரையிடலே அவர்களுக்கு பின்னர் வந்த காலகட்டங்களில் பிடித்து விட்டது......அதன் மூலம் அதிகப்படியான பாதுகாப்பை அவர்கள் உணர்ந்தார்கள் இதனால் அதனையே தங்கள் கலாச்சார உடையாகப் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்

      இங்கு நாம் முகம்மூடுவது தப்பா சரியா என்று நோக்குவதி விட முகம் மூடுவதனால் எவ்வகையான நலன்கள் பெண்களுக்கு கிடைக்கின்றன என்பதினை நோக்குவது சிறந்தது....இது தொடர்பான மேலதிக விளக்கங்களுடன் கூடிய அடுத்த பதிவினை வெளியிடலாம் என்றிருந்தேன் வலையுலகில் ஏற்பட்ட ஒரு சில முரண்பாடுகளினால் அவற்றினை தவிர்த்து விட்டேன்

      மேலும் இதற்கு முன்னார் இட்ட கருத்க்களையும் நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு தெளிவாகியிருக்கும் என நினைக்கிறேன்...

      அழகான வருகைக்கும் காத்திருப்பிற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
    3. எனக்கு மட்டும் தாங்கள் ஓர வஞ்சனை செய்கிறீர்கள் என்று தொருகிறது நண்பரே...////////////

      இல்லை நண்பரே உங்களின் கருத்துக்கு முன்னர் இன்னும் 3 நண்பர்களுடைய கருத்துக்களுக்கு கூட நான் பதிலிட வில்லை... காரணத்தி மேலே கூறிவிட்டேன் என் மீதான புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete