மறுபிறப்பாக பிறந்தவர்கள்...

மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்துக்கும் சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள் ஏற்படத்தான் செய்கின்றன.


நாம் வசிக்கும் சூழலில் அல்லது வேலை செய்யும் இடங்களில் என மறக்க முடியாத சில நிகழ்வுகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது.

சிலருக்கு அந்நிகழ்வுகளே அவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியினை வைக்கின்றது,இன்னும் சிலர் அவற்றிலிருந்து மீள்கின்றனர்.மீள்கின்ற அனைவருக்கும் அது அவர்களின் மறு பிறப்பாகத்தான் இருக்கும்.

பிரயாணத்தின் போதும், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடும் போதும், குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சந்தர்ப்பத்திலும்.ஏன் வீட்டினில் வேலை செய்யும் போதும், பிரசவத்தின் போதும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படலாம்.

பயணிகளை தாங்கிச் சென்ற விமானம் ஒன்று  ஒரு அடர்ந்த காட்டினில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த  ஒருத்தர் தவிர அனைவரும் இறக்கின்றனர்.

உயிர் தப்பியவர் உண்ணுவதற்கும் குடிப்பதற்கும் ஏதுமில்லாமல் புளூ பூச்சிகளை உண்டு தன்னுடைய உயிரினை காத்துக் கொள்கிறார் அதிர்ஷ்ட வசமாக சில நாட்களின் பின் மீட்புப் பணியினரால் அல்லது வேறு சிலரால் அவர் உயிருடன் மீட்கப்படுகின்றார். இது இணையத்தில் அண்மைக் காலமாக அதிகமாக பேசப்பட்ட சம்பவம் ஒன்றின் சாரம்.

அதே போன்று இலங்கை மீனவர்கள் சிலர்  படகின்  இயந்திரக் கோளாரினால் நடுக்கடலில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.படகில் சென்றவர்கள் தினந்தினம் ஒவ்வொருவராக இறக்கின்றனர்.ஆனால் ஒருவர் மட்டும் உயிர்பிழைக்கின்றார். தன்னோடு வந்தவர்கள் தன் கண்முன்னே உண்பதற்கு எந்தவித உணவுப் பொருளுமில்லால் ஒருவர் பின் ஒருவராக இறப்பதைப் பார்த்த அவருடைய மனது எவ்வாறு பேதலித்திருக்கும்.

இச் சப்பவங்கள் பற்றி பின்னர் அவரிகளிடம் யாராவது கேட்டால் அவர்கள் அது தங்களுடைய மறு பிறப்பே என்று கூறுவார்கள். நிச்சயமாக  இவர்களினால் அச் சம்பவங்களை  மறக்க முடியாது.

அதிர்ஷ்டவசமாக இவ்வாறான சம்பவங்களில் இருந்து பிழைப்பவர்கள் நிச்சயமாக அவர்களின் சொந்த முயற்சிகொண்டு அவர்களாகவே தப்பவில்லை.அவர்களின் சக்தியையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது அதுதான் அவர்கள் தப்புவதற்கு உறுதுனையாக அமைந்தது. அதுதான் இறைவனுடைய விதி.

விதியை விஞ்சிய செயல் என்று எதுவும் இல்லை இந்த பூவுலகில்.

எனவே இந்த பூவுலகில் (பூமியில்) மறுபிறப்பாக நாம் பிறப்பதற்கு மரணிக்கத் தேவையில்லை .அது நாம் உயிருடன் இருக்கும் போதே நிகழ்கின்றது.அணுதினமும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் மூலம் மறுபிறப்பாக பிறக்கின்றோம்.

உண்மையில் மறுபிறப்பு என்பது உண்டு ஆனால் அப்பிறப்பின் மூலம் மனிதனோ அல்லது விலங்குகளோ இந்த பூமிக்குத் திரும்புவதில்லை. 

நாம் மறுபிறப்பின் மூலம் திரும்பும் உலகிக்கு செல்வதற்கு இரண்டு விதமான செயல்கள் தேவை அவைதான் நன்மையும் தீமையும் நன்மை அதிகமாக செய்தவர்கள் சொர்க்கம் எனும் உலகிக்கு மறுபிறப்பாகவும் தீமையினை அதிகமாக செய்தவர்கள் நரகம் எனும் உலகிக்கு மறு பிறப்பாகவும் அனுப்பப்படுகின்றனர்.

இதுதான் இறைவனின் விதி.


ஆனால் இறைவன் நரகம் எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிட்டு ......அப்படிப்பட்ட நரகிற்கு மனிதர்கள் செல்வதை  அவன் விரும்பவில்லை.....

அதற்காகவேதான் மனிதனுக்கு என விசேடமான ஒரு சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறான்.அந்த சக்திக்குப் பெயர்தான் பகுத்தறிவு என்று சொல்லப்படும் ஆறாவது அறிவு.

ஆனால் மனிதனோ அவன் படைக்கப்பட்ட நோக்கத்தினை மறந்து  இந்த ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஏழாவது அறிவு எனும் எட்டாக் கனியினை பறிக்க முற்படுகிறான்.

இறைவனின் விதியை நம்பி தீய செயல்களில் ஈடுபட்டு நரகத்திற்குச் செல்ல தன்னை தாயார்படுத்தும் நண்பர்களே...இறைவன் நமக்கு தந்திருக்கும் ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி இப் பூமியை விட இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்திற்கு நாம் மறு பிறப்பாக செல்ல   தயாராகுவோம்.23 கருத்துரைகள்

வணக்கம் நண்பா,
சாவின் விளிம்பு வரை சென்று வந்தோரின் உணர்வுகளை உள்ளடக்கி ஓர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

விதியை வென்ற மனித மனங்களுடன் இறைவன் எப்போதும் உள்ளான் என்பதனை இப் பதிவு சொல்லி நிற்கிறது.

Reply

அழகான விளக்கமான பதிவு.

படங்கள் அருமை, அதிலும் அந்த தப்பிக்க நினைத்து மாட்டிக் கொண்டிருக்கும் மாட்டின் படங்கள் செம காமெடி.

Reply

விதியை வென்ற மனித மனங்களுடன் இறைவன் எப்போதும் உள்ளான் என்பதனை இப் பதிவு சொல்லி நிற்கிறது.//

அனுபவபட்டவர்களின் சிறிது உரையாடினேன் அவற்றின் மூலம் பிறந்தது தான் இப் பதிவு..

நன்றி நண்பா

Reply

நீங்க ரொம்ப நல்லவங்களா.....???

Reply

azhakaana padangal!
arumaiyaana visayangal!

Reply

இறைவனின் நாட்டங்கள் அனைத்தும் அற்புதங்கள்

Reply

இறைவனின் நாட்டங்கள் அனைத்தும் அற்புதங்கள்

Reply

azhakaana padangal!
arumaiyaana visayangal//

நன்றி நண்பா

Reply

வாங்க சபீர்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உங்கள் வருகை தொடரட்டும்

Reply

இங்கே நீங்கள் பகிர்ந்திருக்கும் தருணங்கள்
மிகையாகத் தெரிந்தாலும் ..
அத்தகைய தருணங்கள் சிலசமயங்களில்
வாழ்வில் நிகழ்ந்திடுகையில்
மனம் தவிக்கும் பரிதவிப்புக்கு
அளவே இல்லை....

Reply

இங்கே நீங்கள் பகிர்ந்திருக்கும் தருணங்கள்
மிகையாகத் தெரிந்தாலும் ..
அத்தகைய தருணங்கள் சிலசமயங்களில்
வாழ்வில் நிகழ்ந்திடுகையில்
மனம் தவிக்கும் பரிதவிப்புக்கு
அளவே இல்லை....//


உண்மையைச் சொன்னீர்கள்....நன்றி சார்

Reply

please see my web; www.ravichainthrin.com

Reply

சிட்டுக்குருவி...நம்பிக்கையில்லாவிட்டாலும் பதிவு சிந்திக்க வைக்கிறது !

Reply

படங்கள் அருமை...நல்ல சிந்தனையும் கூட...

Reply

சிட்டுக்குருவி...நம்பிக்கையில்லாவிட்டாலும் பதிவு சிந்திக்க வைக்கிறது !//.........................நம்பிக்கை இல்லையா???

Reply

படங்கள் அருமை...நல்ல சிந்தனையும் கூட...//..........//
மிக்க நன்றி சகோ....நல்ல சிந்தனை எங்கிறீங்க...அது எனக்கு வராது என்னு எங்க ஆத்த சொல்லுவாவே....நெசமாலுமே நல்ல சிந்தனையா இது

Reply

மனிதனுக்கு என விசேடமான ஒரு சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறான்.அந்த சக்திக்குப் பெயர்தான் பகுத்தறிவு//
ஆமா சிட்டுக்குருவி மனிதனுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் இந்த பகுத்தறிவை பலரும் மூட்டைகட்டி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மூடத்தனமாக செயற்படுவது வேதனையாக இருக்கிறது.

Reply

அப்பாடா இப்பதான் பதிவை ஒழுங்காக படிக்க முடிஞ்சுது ;-)

Reply

அப்பாடா இப்பதான் பதிவை ஒழுங்காக படிக்க முடிஞ்சுது ;-)//.............//
நீங்க எல்லாருமா சேர்ந்து என் ப்ளாக்குக்கு பில்லி சூனியம் செய்து போட்டு கத விடுரயலா....விடுவேனா..

Reply

இந்த பகுத்தறிவை பலரும் மூட்டைகட்டி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மூடத்தனமாக செயற்படுவது வேதனையாக இருக்கிறது.//////////////////

நல்லது தான் ஆனா நல்லதுக்குத்தான் காலம் இல்ல என்கிறதே உலகம்.....மூட நம்பிக்கைகள் இருக்குமட்டும் அறிவாளிகளின் பேச்சுக்கு எந்த ஆதர்வும் இருக்காது கருத்துக்கு மிக்க நன்றி ஐயா...

Reply

முதல் வருகை தந்திருக்கிறேன். விதி என்பது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதரை ஆட்டிப் படைக்கத்தான் செய்கிறது, இறை நம்பிக்கை உள்ளவர்கள் இம்மட்டில் பாக்கியசாலிகள். விதி எனும் கடலைக் கடக்க அது சிலசமயம் தோணியாகிறது. சிந்திக்க வைத்த அருமையான பகிர்வு. பாராசூட்டில் வந்து முதலைகளிடம் மாட்டிக் கொள்ளும் படம் அருமை.

Reply

முதல் வருகை தந்திருக்கிறேன்............//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.......உங்கள் வருகை தொடரட்டும்

Reply

ஆய்வுகள் செய்து பிறகு சொந்த கருத்துகளால் உங்களின் பகிர்வுகளைக் கொண்டுவருவதுதான் இங்கே சிறப்பு. தொடருங்கள் வாழ்த்துகள்.

Reply

Post a Comment