Looking For Anything Specific?

ads header

குறுகிய காலத்தில் சிறந்த பதிவராகுவது எப்படி?

நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ப்ளாக் தொடங்கினேன் என்னு உங்க எல்லாத்துக்கிட்டையும் முன்னாடியே சொல்லிப்புட்டன் மறுபடியும் அந்த சோக கதை வேனாம் என்னு நெனைக்கிறன்.


சரி தலைப்பப் பார்த்து எல்லாரும் மூக்குல வெரல வச்சிக்கனுமே... இவன் வலையுலகிக்கு வந்தே ஒரு வருசம் ஆகல்ல அதுக்குள்ள சிறந்த பதிவராக இவன் டிப்ஸ் சொல்லுரானே என்னு நீங்க யோசிக்கத்தான் வேணும்.

பின்ன நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் மத்தவங்கட டிப்ஸ்ஸ படிச்சிக் கொண்டு இருக்குற... எங்களுக்கு என்னு ஒரு கௌரவம் இருக்கில்ல.......

சரி கஷ்டப்பட்டு???ப்ளாக் தொடங்கியாச்சு அதில என்னத்த எழுதுற என்னு ஒன்னும் தெரியாம இருக்கிறச்சே....

ஒரு ஐடியா தோனிச்சு...திடீர்னு இணையத்தில சேர்ச் பண்னிப் பார்த்தன்...அப்பதான் நம்மட பிரபல தமிழ் பதிவர்களான சசி அண்ணர்...பிரபு அண்ணர்...நிரூபன் அண்ணர்...
இவங்கட டிப்ஸ்கள்  தென்பட்டிச்சி சரி அவங்க என்ன சொல்லுராங்க என்னுபார்த்து அவங்கட ஐடியாக்கள பின்பத்தலாம் என்னு ஒரு முடிவுக்கு வந்தன்.

அவங்க எல்லாருமே முதலாவதாக நாம என்ன பதிவிடப்பொறோம் என்பதை சரியாக புரிஞ்சி வச்சிருக்கனும் என்னு சொல்லியிருந்தாங்க...ஏன்னா அதுதான் பதிவோட கருப்பொருள் அதுல நாம தெளிவா இருந்தாத்தான் முழு பதிவும் சரியான சிறந்த பதிவாக வரும் என்னு சொல்லியிருந்தாங்க...

நாமலும் வலையுலகிக்கு புதுசாச்சே.... கொஞ்ச காலத்துல பிரபல பதிவர் ஆகிடலாம் என்ற பேராசையில கருப்பொருள் விசயத்துல கொஞ்சம் ம்ம்ம்ம் அதிகமாத்தான்  அக்கரை எடுத்துக் கொண்டன்...

அப்புறமாத்தான் புரிஞ்சிச்சு முதலாவது டிப்ஸ்சே மாட்டுல மலையேத்துர அளவுக்கு கஸ்டமா இருக்குன்னு (ஹி..ஹி.. அது மலையில மாடு ஏத்துரதுப்பா என்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது...விடுங்கப்பா..மாட்டுல மலை ஏத்தினாலும் மலையில மாட்ட ஏத்தினாலும் கஷ்ட்டம் மாடு மேய்க்கிறவனுக்குத்தான்)

நமக்கு இந்த யோசிச்சி முடிவெடுக்குர மேட்டர் எல்லாம் சரிப்பட்டே வராது...ஆனாலும் ப்ளாக்க ஆரம்பிச்சி அத சும்மா விடலாமா??? அதுக்காக ஒரு பதிவு போட கருப்பொருளுக்கு யோசிச்சன்...

இங்க ஒரு ரகசியம் சொல்லுறன்  அத யாருக்கிட்டயும் சொல்லிடாதயுங்க..நமக்கு கருப்பொருள் எண்டா என்னவெண்டே தெரியாது.. ஹி..ஹி..ஹி.

இந்த கருப்பொருள் என்னவாயிருக்கும் என்னு படுத்துக் கொண்ணு யோசிச்சன். கருப்பொருள் வரல்ல ஆனா....
கருப்பு கலர்ல சூப்பரான கனவுகள் தான் வந்திச்சு.

சரி ரோட்டோரமா நடந்து யோசிப்பம் என்னுட்டு ரோட்டுல நடந்தன்..
கருப்பொருள் வாரத்துக்கு பதிலா கருப்பு பொகை தான் வந்திச்சு... 

சரி கருப்பொருள்தான் வரல்ல..ஒரு காப்பியாவது குடிப்போம் எண்டு காப்பி கடக்கி போய் காப்பி சொன்னன்...பையன் காப்பிய கொண்டாந்தான்..சரி இவங்கிட்டயாச்சும் கேட்டு பார்ப்போமே என்னு கேட்டா பாவிப் பயல் தெரியாது என்னு சொல்லிப்புட்டான்.

என்ன எளவுடா இது...ப்ளாக் ஒன்னு தொடங்கியாச்சு இன்னும் பதிவு ஒன்னும் போடல்ல..எப்பிடியாவது ஒரு பதிவு எழுதனுமே என்னு யோசிச்சு கொண்டே பீச்சுப் பக்கம் போனன் தனிமையில இருந்து யோசிச்சா தானாம் அந்த எளவு வருமாமே அதான் பீச்சுப் பக்கம் போனன்.

ஆனா பீச்சுல கலர் கலரா டிரஸ் பண்ணிட்டு ஐட்டம் தான் நின்னிச்சுகள்...அதிலயும் கருப்பு கலர் ட்ரஸ் போட்ட ஐட்டம் ஒன்னு என்னையே பார்த்திட்டு இருந்திச்சு இனிமே இங்க இருந்தா கருப்பொருள் வராது கருப்பு கலர் ஐட்டம் தான் வரும் என்னுட்டு ஊட்டுக்கு வந்திட்டன்



பதிவு எழுதுரத நெனச்சா வயித்த கலக்குது... 
அட மெய்யாலுமே வயித்த கலக்குதப்பா..சரி அங்க போயாவது யோசிப்போமே பெரிய பெரிய கவிஞன் எல்லாம் அதுக்குள்ள இருந்து தானாம் யோசிக்கிறாங்க என்னு சொன்னானுகள்.. அதுக்குள்ள போய் யோசிச்சு கொண்டிருந்தன்... கருப்பொருள் வருகுதோ இல்லயோ வெளியே இருந்து சீக்கிரம் வெளிய வாடா சனியனே... என்னு அப்பாட சத்தம்தான் கேட்டுச்சு...

என்ன பண்ணுரது என்னு ஊட்டுக்கு முன்னாடி இருக்கிற தென்னங்குத்தியில குந்திட்டு இருந்தன்..அப்பதான் என்னோட ஆறாம் வகுப்பு தமிழ் பாட வாத்தியார் அந்த பக்கமா வந்தாரு..இதுதான் சந்தர்ப்பம் என்னு அவருகிட்ட கேட்டன்...

அடே இந்த கேள்விய நீ படிக்கும் போதே கேட்டிருந்தாயென்டா தமிழ் சப்யெக்டுல பாஸ் ஆகியிருப்பயே..என்னு கலாய்க்க தொடங்கினான்.. 

வாத்தியா அவன் ஆறாம் வகுப்புல அவன் அடிச்ச அடிதாங்காமத் தான் படிப்பே விட்டுட்டன்...பரவல்ல சார் எல்லாம் அவன் செயல்.. இப்ப வெசயத்த சொல்லுங்க சார் என்னன்.. அந்தாலும் இது தாண்டா கருப்பொருள் என்னு ஒரு உதாரணத்தோட என்னவெல்லாம் சொன்னான் ஆனா...எனக்கு ஒன்னும் புரியல்ல.. 


நெசமாலுமே எனக்கு இன்னும் கருப்பொருள் எண்டா என்னவெண்டு தெரியாதுப்பா.......நீங்களாச்சும் சொல்லித்தாங்களேன் எங்க ஆத்தாக்கிட்ட நான் விட்ட சபதத்த நெறைவேத்த வேனும்....

மேட்டர்...முதல் முறையா கிராமத்துப் பாணியில ஒரு பதிவிட்டுள்ளேன்... ஏதாவது பிழைகள் இருப்பின் என்னை நீங்கள் மன்னிச்சு..........சூசூசூ

ஐட்டம் = இள வயது பெண்கள்

Post a Comment

25 Comments

  1. பதிவு எழுதுறதுக்காக முயச்சித்த விஷயங்களை வெச்சே... பதிவு எழுதிட்டீங்க... இதிலிருந்தே தெரியுது... பதிவு எழுத வேண்டிய விஷயங்கள் எங்கும் இருக்கு... எதிலும் இருக்குங்கிறது...
    தினமும் தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தினமும் தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்...//

      நன்றி பாஸ்....

      Delete
  2. சிட்டுக்குருவி....உங்க டிப்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கிறன்.அடுத்த என்னோட பதிவு இந்த டிப்ஸை வச்சுத்தான்.பார்க்கலாம் எப்பிடியெண்டு !

    ReplyDelete
    Replies
    1. அடுத்த என்னோட பதிவு இந்த டிப்ஸை வச்சுத்தான்.பார்க்கலாம் எப்பிடியெண்டு !//
      கட்டாயம் படிப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன்...

      Delete
  3. இப்ப என்ன தான் சொல்ல வாரீங்க hi hi

    ReplyDelete
    Replies
    1. ஐயோ....இன்னுமா புரியல்ல..........

      Delete
  4. இப்படி பதிவுகள் போட்டால் பிரபல பதிவர் ஆகிடலாம்னு சொல்ல வரீகளா?

    ReplyDelete
    Replies
    1. இப்படி பதிவுகள் போட்டால் பிரபல பதிவர் ஆகிடலாம்னு சொல்ல வரீகளா?//

      என்னத்த சொல்ல வாரது...சொல்லியேபுட்டம் இல்ல.......

      Delete
  5. சீக்கிரமா பிரபல பதிவராக வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. //சீக்கிரமா பிரபல பதிவராக வாழ்த்துக்கள்//

      நன்றி ராஜி....உங்கள் வருகை தொடரட்டும்

      Delete
  6. Replies
    1. ssss...
      mudiyala!//
      ரை பண்ணி பாரு நண்பா...எல்லாம் முடியும்...

      Delete
  7. Replies
    1. வாங்க சதீஸ் அன்னர்

      Delete
  8. நானும் பதிவுலகிற்க்கு புதியவன்... உங்கள் கருத்துக்கு நன்றி.....!

    ReplyDelete
    Replies
    1. நானும் பதிவுலகிற்க்கு புதியவன்... உங்கள் கருத்துக்கு நன்றி.....!//

      நன்றி நண்பா..உங்கள் வருகை தொடரட்டும்

      Delete
  9. வணக்கம் நண்பா.
    கலக்கிட்டீங்க போங்க..

    சைட் கேப்பில நம்மளையும் கடிச்சு..ஏதோ ஒரு மேட்டரில தொடங்கி...இடையில ஓர் திருப்பம் வைச்சு ரசிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சைட் கேப்பில நம்மளையும் கடிச்சு..ஏதோ ஒரு மேட்டரில தொடங்கி...இடையில ஓர் திருப்பம் வைச்சு ரசிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.//

      உங்களையும் கடிச்சோமா????...எதுக்கும் வைத்தியர பாருங்க...
      காயம் பெரிசாகிடும்

      நன்றி நண்பா

      Delete
  10. தலை சிறந்த பதிவராக வாழ்த்துக்கள் நண்பரே...PDF இணைச்சிட்டீங்க போல...

    ReplyDelete
    Replies
    1. தலை சிறந்த பதிவராக வாழ்த்துக்கள் நண்பரே...PDF இணைச்சிட்டீங்க போல...//

      நன்றி நண்பா...எல்லாம் உங்க ஆசிதேன்...

      Delete
  11. anupavaththai arumaijaha pahirnthullirkal...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நண்பா...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

      Delete
  12. உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா? http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்...

    ReplyDelete
  13. // ஐட்டம் = இள வயது பெண்கள் //

    இத நாங்களும் நம்பிட்டோம் பாஸ். வலைப் பூவிற்கு நான் மிக மிகப் புதியவன் நேரம் இருந்தால் வந்து பாருங்கள்

    ReplyDelete
  14. சிட்டுக்குருவி..என்ன ஆளுப்பா நீங்க..சூப்பர்..கருப்பொருளட தவிர கறுப்பில எல்லாத்தையும் தெரிஞ்சிருக்கீங'க....வாழ்த்துக்கள்

    ReplyDelete