Looking For Anything Specific?

ads header

கனவுகளுக்கு உயிர் கொடுத்தால்...

கவிதை என்பதா...? காதல் என்பதா..? கனவு என்பதா..? புரியவில்லை எனக்கு...
அதே சிரிப்பு... அதே அழகு... பத்து வருடத்துக்கு முன் நான் பார்த்த அதே முகம் கொஞ்சமும் மாற்றமில்லாமல்...



நிஜம் என்பதா...கனவு என்பதா... கடவுளே கனவாக மட்டும் இருந்திரக் கூடாது.கனவில் கூட சந்திக்க மாட்டேன் என்று நினைத்த அவளை இன்று சந்தித்தேன்.

ஒன்றாகத்தான் பள்ளியில் கற்றோம் வேறு வேறு வகுப்பறைகளில், அவளைப் பார்த்து நான் புன்னகைத்ததும் கிடையாது. அவள் என்னைப் பார்த்து கதைத்ததும் கிடையாது.

இருந்தும் அவள் முகம் என்னுள் ஆழமாக பதிந்து விட்டது.காரணம் தெரியவில்லை.
அவளின் குடும்பம் வறியது என்பதனால் என்னுள் எழுந்த அனுதாபமா ? அல்லது அவள் அழகாக இருக்கிறாள் என்பதனால் என்னுள் எழுந்த காதலா ?
காரணம் தெரியவில்லை

பின்னர் பத்திலிருந்து பதினொன்று வரை ஒரே வகுப்பில் கற்றோம்...அப்போதும் நான் அவளிடம் கதைத்தது கிடையாது. வகுப்பில் எல்லோரும் என்னை கெட்டிக்காரன் என்றனர்.இதனால் எழுந்த பெருமையா நான் அவளிடம் கதைக்காமல் விட்டதற்குக் காரணம். புரியவில்லையே...

இருவரும் பதினொன்று பாஸாகிவிட்டோம்....மேல் படிப்புக்கு நான் வேறு கல்லூரியில் சேர்ந்தேன்.ஆனால் அவள் பதினொன்றுடன் படிப்பை நிறுத்திக் கொண்டாள்.

புது கல்லூரி புது நட்பு அவளுடைய ஞாபகங்களை என்னிலிருந்து மறக்கடிக்கச் செய்து விட்டன.

இரண்டு வருடத்திற்குப் பின் என்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பினேன்.
அவள் வெளியூர் காரர் ஒருவருடன் திருமணம் முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டதாக  நண்பன் ஒருவன் சொன்னான். மொத்தமாகவே மறந்து விட்டேன் அவளை...

அப்போ... என்னுள் உதித்தது காதலா....? வினாவும் தெரியாது விடையும் தெரியாது.
மீண்டும் நான் அவளை சந்தித்தேன். அது கனவாக இருந்து விடக் கூடாது. நிச்சயமாக அது கனவாக இருந்துவிடக் கூடாது.

நான் அவளை சந்தித்தபோது அவள் என்னை அடையாளம் கண்டாள்.சந்தித்த இடமோ அவளது வீட்டில் உள்ள சின்னக் கடையில் ஒரு வியாபாரியாக...


என்னுடைய பெயரைச் சரியாகச் சொன்னாள்...
என்னுள் அவள் முகம் ஆழமாக பதிந்ததனால் ஞாபகப் படுத்தும் அளவுக்கு நான் அவள் முகத்தை மறந்துவிட வில்லை.

அதே முகம் அழகில் கொஞ்சமும் கிழிசல் இல்லை.  இளமையும் கூட மாறவில்லை. பத்துவருடத்துக்கு முன்னால் பார்த்தது போன்றே இன்றும் இருந்தாள்.

அருகினில் இரண்டு ஆண்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பார்த்தால் அவள் உறவுக்காரர்கள் போன்றுதான் தோன்றியது. அவர்களில் வயதான ஒருவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பத்து வருடத்துக்கு முன்னால் இருந்த மௌனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். இருவரும் நன்றாகவே பேசினோம்.

அவள் பேச்சிலிருந்து அவள் சந்தோசமாகத்தான் இருக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது.
எந்தவித கவலையும் இல்லாமல் என்னுடன் பேசிக் கொண்டாள். இடையிடையே அருகில் இருக்கும் இருவரையும் ஓரக் கண்னால் அவள் பார்ப்பதை நான் பார்க்கத் தவறவில்லை.

உறவுக்காரர் தானே அதுதான் பார்க்கிறாள் போலும் என நான் நினைத்துக் கொண்டேன்.

வயதானவர் எழுந்து என்னருகினில் வந்தார்... தம்பிக்கு எந்த ஊர் எனக் கேட்டார். நானும் இந்த ஊர்தானுங்க என்றேன்.

தம்பிய எப்பிடி தெரியும் என அவளிடம் கேட்டார். நாங்க ஒண்னாக படிச்சோம் என்றாள் அவள்.
ஒண்னாகவே என்னா?
பதினொன்னுவரைக்கும் படிச்சோம் என்றாள் அவள்.

அப்படியெண்டா உங்களுக்குள்ள ஏதாவது நடந்திருக்க வேணுமே என்றார் அவர்.
சரியான லூசாக இருப்பானோ என நான் நினைத்துக் கொண்டு
என்ன ஐயா இப்படி அசிங்கமா கதைக்கிரீங்க... என்றேன்.
இல்ல தம்பி சும்மாதான் கேட்டேன் என்னு சொல்லிவிட்டு போய் அமர்ந்துவிட்டார்.

எனக்குள் சரியான குழப்பம்...
நாங்கள் பேசிய விதத்தைப் பார்த்து எங்களை தப்பாக எடை போட்டிருப்பாரோ.
இதற்க்கு மேலும் நான் இவ் விடத்தில் இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை,

நான் அவளிடமிருந்து விடை பெற்றேன். அவளுடைய முகத்தில் சோகத்தின் எந்த அடையாளமும் இல்லை.
அதே அழகிய சிரிப்பில் என்னிடமிருந்து அவளும் விடை பெற்றாள்.

விடைபெற முன்னால் என்னிடம் தனியாகத்தான் வந்தியா எனக் கேட்டாள். ஆம் என்றேன் நான்.
பரவாயில்லை போகும் போது கவணமாகப் போ என்றாள். அவள் சொல்லிய விதம் எனக்கு மிகவும் அச்சத்தைத தந்தது. என் மீது கொண்ட அக்கறையில் சொல்கிறாளா ? அல்லது எல்லோரும் சொல்வது போன்று இவளும் சொல்கிறாளா? எனக்குப் புரியவில்லை...

இருந்தும் அவள் சொன்னதிலிருந்து எனக்குள் ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்பட்டது.

வீதிக்கு வந்து அவள் கடையை ஒருமுறை பார்த்தேன்.
எனக்குள் அதிர்ச்சி...அந்த வயோதிபன் அவளைப் பிடித்து அடித்துக் கொண்டிருந்தான். ஆனாள் அவள் எந்த வித எதிர்ப்புமின்றி அவனுடைய அடியைத்தாங்கியவளாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



மனதில் குழப்பத்துடனே வீதியில் நடந்தேன் யாராக இருப்பான் அந்த வயோதிபன்... வழியில் சந்தித்த நண்பனிடம் விசாரித்தேன் அவனை பற்றி..

அவந்தான் அவளுடைய புருஷனாம்...என்றனர் என்னுடைய நண்பன்.

தினமும் இப்படித்தானாம். அவன் சரியான சந்தேகப்பேர்வழியாம்...தினமும் அவளை தொந்தரவு படுத்துவானாம். பணத்துக்கு ஆசைப்பட்டு அவளுடைய பெற்றோர் வெளியூர் காரன் என்றாலும் பரவாயில்லை இந்த கிழவனுக்கு அவளை  கட்டிக்கொடுத்து விட்டனர். என்று நண்பர்களும் சோகம் பாடினர் என்னுடன் சேர்ந்து.


கடவுளே இது கனவாக இருக்கக் கூடாதா??? அவள் நிம்மதியாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நிஜமாக இருக்கக் கூடாது .

இல்லை இது நிச்சயம் கனவு தான்... இல்லையென்றால் பத்து வருடமாக அவளுடைய அழகில் எந்த குறைவும் இல்லாதது ஏன்..?

நிச்சயமாக இது கனவாகத்தான் இருக்க வேண்டும்...

வேண்டாம் இந்த கனவுக்கு யாரும் உயிர் கொடுக்க வேண்டாம்...

மேட்டர்.... நேற்று இரவு நான் கண்ட கனவினை மையப் பொருளாக வைத்து எழுதிய பதிவு இது...ஏதோ உங்களுக்கிட்ட சொல்லனும் என்னு தோனிச்சி சொல்லிப்புட்டன். கனவு எப்பிடி என்னு பின்னால நீங்கதான் சொல்லனும் ஓ கே வா...


படங்கள் யாவும் கூகுளில் பொறுக்கியவை

Post a Comment

20 Comments

  1. எனக்கும் இது மாதிரி கனவுகள் வந்திருக்கின்றன ... கொஞ்சம் ஒருபடி மேலாக சென்று. உங்களுடையது அருமையான பதிவு (கனவு). இது கனவாகவே இருந்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. //எனக்கும் இது மாதிரி கனவுகள் வந்திருக்கின்றன ... கொஞ்சம் ஒருபடி மேலாக சென்று. உங்களுடையது அருமையான பதிவு (கனவு). இது கனவாகவே இருந்தால் நலம்.//

      ஐயோ இந்த கனவு சரியான மோசம்....உங்களுக்கும் வருகுது எனக்கும் வருகுது....இனி கனவே கானப்படாது...

      நன்றி நண்பா....

      Delete
  2. nalla velai kanavu!

    unmaiyil antha pennukku
    nadanthaal ennai vida unagalukku
    kasdamAaka manam irukkum!
    nalla ezhuththu oottam

    ReplyDelete
    Replies
    1. //nalla velai kanavu!

      unmaiyil antha pennukku
      nadanthaal ennai vida unagalukku
      kasdamAaka manam irukkum!
      nalla ezhuththu oottam//

      உண்மைதான் நண்பா....அவள் என் தோழி அல்லவோ....

      நன்றி நண்பா

      Delete
  3. சகோ

    //படங்கள் யாவும் கூகுளில் பொறுக்கியவை///

    இந்த புகைபபடத்துக்கும் பதிவுக்கும் சமபந்தமில்லை அப்படித்தானே தெளிவாக சொல்லுங்கோ ராசா

    ReplyDelete
    Replies
    1. இந்த புகைபபடத்துக்கும் பதிவுக்கும் சமபந்தமில்லை அப்படித்தானே தெளிவாக சொல்லுங்கோ ராசா//

      நம்மாளு சரியான் வெவரம் தெரிஞ்சவர் போலிருப்பார் போல...//
      என்ன பன்ன சகோ உண்மைய சொல்லித்தான ஆகனும்

      Delete
  4. புகைப்படம் என்று வாசிக்கவும் ஆரம்பத்தில் புள்ளியை விட்டு விட்டேன் இப்படித்தான் எதையாவது விட்டு விடுவேன்

    ReplyDelete
    Replies
    1. புகைப்படம் என்று வாசிக்கவும் ஆரம்பத்தில் புள்ளியை விட்டு விட்டேன் இப்படித்தான் எதையாவது விட்டு விடுவேன்//

      ஹைதர் அண்ணா...முக்கியமான டைம்ல முக்கியமானத விட்டிடப் போறீங்க..கவணம்

      Delete
    2. புகைப்படம் என்று வாசிக்கவும் ஆரம்பத்தில் புள்ளியை விட்டு விட்டேன் இப்படித்தான் எதையாவது விட்டு விடுவேன்//

      அதுதான் போன வாரம் கோழியையும் விட்டுடீங்களா...?

      Delete
  5. நல்ல இருந்தது எல்லாமே கனவாப் போனது சந்தோசம் ....


    எனக்கே அழுகாச்சியா வந்துடுச்சி அந்தப் புள்ள அடி வாங்குரச்ச ,,,சரி விடுங்க ....

    ReplyDelete
    Replies
    1. எனக்கே அழுகாச்சியா வந்துடுச்சி அந்தப் புள்ள அடி வாங்குரச்ச ,,,சரி விடுங்க ....//

      அது சரி ஒரு பெண்ட கஷ்ட்டம் பெண்னுக்குத்தான் புரியும் என்பாங்க..ஏன் உங்களுக்கு புரிஞ்சிச்சு...???

      Delete
  6. வகுப்பில் எல்லோரும் என்னை கெட்டிக்காரன் என்றனர்.//////////////

    இதுல இருந்து என்ன சொல்ல வாராங்கன்ன சிட்டுக் குருவி சுப்பீரா படிப்பனகலாம்
    அவ்வவ் ..இது தான் சைக்கிள் கேப் ல ஏறோப்லான் ஓட்டுறதுன்னு சொல்லுவாங்களோ ...

    ReplyDelete
    Replies
    1. .//இது தான் சைக்கிள் கேப் ல ஏறோப்லான் ஓட்டுறதுன்னு சொல்லுவாங்களோ ..//

      இல்லப்பா குண்டச் சட்டில குதிரை ஓட்டுரது...

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. எனக்கென்னவோ உண்மை என்றே படுகிறது...கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறீர்கள்...உண்மை தானே...

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ உண்மை என்றே படுகிறது...கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறீர்கள்...உண்மை தானே..//

      எதுக்குப்பா வம்ப வளக்கிரீங்க........நெசமாவே கனவுதான்பா...

      Delete
  9. உண்மை அல்லது சிறுகதை என்றே நினச்சு வாசிச்சன்.கனவா...ஒரு வேளை முந்திப் பழகினா ஆரையோ சந்திக்கப்போறீங்கள்போல !

    ReplyDelete
    Replies
    1. உண்மை அல்லது சிறுகதை என்றே நினச்சு வாசிச்சன்.கனவா...ஒரு வேளை முந்திப் பழகினா ஆரையோ சந்திக்கப்போறீங்கள்போல !//

      சில வேளை உண்மையாக இருக்கலாம் நீங்கள் சொல்வது...அவ்வாறு நடந்தால் மிகவும் சந்தோசப்படுவேன்...

      Delete
  10. ஓஓ இப்பிடி ஒரு கதையா??ஃசிட்டுக்குருவி இதுக்கு பிறகும் கடைபக்கம் போவீங்க??அங்கிருக்கிற பொண்ணோட பேசுவீங்க???யாரோ கோவக்கார பய புள்ள கனவுல சூனியம் வச்சிட்டான் போல....பாத்து சார்;;

    ReplyDelete
  11. நல்ல பதிவு.உங்களுக்கு நன்றாக கதை வருகிறது. கதை என நம்ப முடியவில்லை

    ReplyDelete