சொல்லும் போது அப்படி செய்யும் போது இப்படி

இன்னைக்கு பழங்காலத்து அரசர்களின் பக்கம் போவோம் ரெடியா இருக்கீங்களா?

நான் பின்னால கூறப்போகும் சம்பவத்தில்  இருக்கும் ஒரு மேட்டர் அரசர்கள் காலத்தில் மட்டுமல்ல இப்பவும் தான் நம்மல்ல கொஞ்சப் பேர்ல இருக்கு.
அது இருக்குறதும் சில சந்தர்ப்பத்தில நல்லதுதான்.

சரி நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை....மேட்டருக்கே வாரன்.

முன்னொரு காலத்தில ஒரு அரசன் ஒரு ஊரை ஆட்சி செய்து வந்தான் ( அத தான்யா முதல்லே சொல்லிட்ட மேட்டருக்கு வா...)

அக்காலத்து அரசர்கள் எண்டா சொல்லவா வேணும் நீதி... நேர்மை... எல்லாம் அவங்ககிட்ட நிறம்பி வழியும். அது மட்டுமா நாட்டு மக்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்னு பார்ப்பதற்காக நகர் வலமும் போவாங்க

இப்படிதான் நம்ம அரசரும் அமைச்சர கூட்டிட்டு ஒரு நாள் நகர் வலம் போனார்.வழியில அரசரக் காணுகிற மக்கள் எல்லாம் அரசருக்கு ஒரு மரியாதை கலந்த வணக்கம் போட்டனர் அரசரும் அதனை பெருமனதுடன் ஏற்றுக் கொண்டார்.

அப்படியே இருவரும் போகிரச்சே..:))))... ஒரு தெரு மூலையில ஒரு குட்டி கடை ஒன்னு இருந்திச்சு அரசரும் அக்கடைக்கிட்ட போய் பார்த்தாரு அது ஒரு கஞ்சி விற்கிற கடை கடையில ஒரு வயதானவர் இருந்தார்.

அரசரைக் கண்டதும் வயதானவர் அரசரை வரவேற்று குடிப்பதற்கு கொஞ்சம் கஞ்சியும் கொடுத்தார்.
அரசரும் வயோதிபரின் பாசத்துக்கு அடிபணிந்து அந்த கஞ்சியை வாங்கிக் குடித்தார்.
சிறு துளியும் மீதம் வைக்காமல்  கஞ்சியை  குடித்த அரசரைப்பார்த்து அமைச்சர்..
அரசே ஆச்சரியமாக இருக்கிறதே...
நீங்கள் இப்படி ஒரு நாளும் எந்த உணவும் உண்டதில்லையே என வியப்புடன் கேட்டார்.

ஆமாம் அமைச்சரே இந்த கஞ்சி மிகவும் சுவையாக இருக்கிறது நீண்ட காலத்துக்கு பிறகு சுவையான ஒரு உணவினை சாப்பிட்டுள்ளேன் என சொன்னார்.

பின் அரசர் வயோதிபரைப் பார்த்து முதியவரே இந்த கஞ்சி மிகவும் சுவையாக இருக்கின்றதே... இதனை நீர் எப்படி செய்கின்றீர் எனக் கேட்டார்

உஷாரான வயோதிபர்... கஞ்சி செய்யும் முறைகளைக் கூறினார்... ( ஆமினா அக்கா இம் முறைகளை பின் பற்றுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது)

முதலில்
என்னிடமுள்ள தங்கப் பாயை விரித்து  
கஞ்சிக்கு தேவையான பொருட்களை எல்லாம் தயார் செய்து  அப் பாயின் மீது வைத்து விட்டு அடுப்பினை தயார் செய்வேன்,

பின் என்னிடமுள்ள தங்கப் பானையை எடுத்து அதனை விறகுகள் நிறைந்த அடுப்பின் மேல் வைத்து தயார் செய்த அனைத்து பொருட்களையும் அதனுள் இட்டு நன்றாக பதமாகும் வரை அடுப்பினில் வைத்துவிடுவேன்.

பின் அடுப்பினில் இருந்து இறக்கிய கஞ்சியினை அதனை விற்பனைக்காக கொண்டு செல்லும் என்னுடைய மற்றய தங்கப் பானையினுள் இட்டு அதனை சந்தைக்கு கொண்டு வருவேன். அதைத்தான் நீங்களும் இப்போது குடிச்சீங்க.. என்றார்

அரசருக்கு வியப்பாப் போச்சு என்னடா இவன் தங்கப் பாய் என்கிறான் தங்கப் பானை என்கிறான் இதெல்லாம் வித்தாலே இவன் பெரிய பணக்காரன் ஆகிடுவானே ஏன் இப்படி கஞ்சி விக்கிறான். என்னு மனசுக்குள்ள ஒரே குழப்பம்,

சரி இவன் வீட்டுக்கு போய் பார்ப்போம் என்னுட்டு...
சரி முதியவரே நான் உங்கள் வீட்டிக்கு வந்து நீங்கள் செய்வதை பார்க்க வேண்டும் என்றார் அரசர்.
தாராளமாக நீங்கள் வரலாம் உங்கள் காலடி இந்த ஏழையின் வீட்டில் படுவதற்க்கு மிகவும் பாக்கியம் பெற்றது என்று கூறிஅழைத்துச் சென்றார்.

முதியவரும் கஞ்சியினை தாயாரித்தார் ஆனால் முதியவர் கூறிய
போன்று அங்கு தங்கப் பாயும், பானையும் போன்றவற்றை பயன்படுத்த வில்லை. 
எல்லாம் சாதாரண பொருட்களாகவே காணப்பட்டது.


இதனைப் பார்த்த அரசருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது.கோபத்தை அடக்கிக் கொண்ட அரசர் முதியவரிடம் நீங்கள் கூறும் போது இப்படியேல்லாம் கூறினீர்களே ஆனால் இங்கே எல்லாம் சாதாரணமாகவே இருக்கின்றதே என்றார்.

இதனைக் கேட்ட முதியவர் அரசரே நீங்கள் கேட்டது என்னுடைய தொழிலைப்பற்றி...
கேட்ட நீங்களோ மிகவும் மரியாதைக்குறியவர் என்னுடைய தொழிலோ எனக்கு மிகவும் உயர்ந்தது. 
அது மட்டுமல்லாமல் நான் தொழில் செய்ய பயன்படுத்தும் பொருட்களோ  மிகவும் பெறுமதி வாய்ந்ததாக  எனக்கு தோன்றுகின்றது.  
அதனால் தான் நான் முன்னர் அப்படி கூறினேன் என்றார் அமைதியாக.

மேட்டர்...... இது மணியம் கஃபே ஓனருக்கு நடந்த மேட்டர் இல்ல என்னுறத சொல்லிப்புட்டன். யாராச்சும் அப்படி நெனைச்சா அதற்க்கு நான் பொருப்பில்ல...24 கருத்துரைகள்

வணக்கம் நண்பா, அருமையான நீதிக் கதை சொல்லும் பதிவு, செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுவார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்றும் கூறுவார்கள். அது போல...அவரவர்க்கு அவரவர் தொழிலே மூலோபாயம் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது இக் கதை!

அருமையாக எழுதி, ஆமினா அக்கா, மற்றும் மணியம் கபே ஓனரின் காலை வாரியமைக்கு நன்றிகள்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Reply

மிக்க நன்றி நண்பா.....

Reply

avar avar thozhil-
avarkalukku pidiththamaanathe!

nalla karu!

Reply

மனதில் பதிய வைக்கவேண்டிய கதை.குழந்தைகளுக்குக்கூடச் சொல்லிக்கொடுத்தால் நல்லது !

மணியம் கஃபேல இருக்கிறதெல்லாம் களவெடுத்த பொருட்களாம்.இது பூஸாரின்ர ரேடியோவில கேட்டது !

Reply

கருத்து நிறைந்த கதை .

Reply

//மணியம் கஃபேல இருக்கிறதெல்லாம் களவெடுத்த பொருட்களாம்.இது பூஸாரின்ர ரேடியோவில கேட்டது !//

அடி ஆத்தி இந்த செய்தி மணிஅன்னா வுக்கு தெரியுமா??? தெரியாட்டி சீக்கிரமா சொல்லுங்க சந்தோசப்படுவாரு......ஏன்னா..ரேடியோவில் அவர்ர கஃபே நியூஸ் வந்ததுக்கு..

Reply
This comment has been removed by the author.

சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் படித்த எஃபெக்டைக் கொடுத்தது சிறுகதை...

Reply

//சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் படித்த எஃபெக்டைக் கொடுத்தது சிறுகதை//

நன்றி நண்பா..........

Reply

நல்ல நீதிக்கதையை செம நக்களுடன் சொல்லி இருக்கிறீர்கள்.

Reply

ஹேமாMar 28, 2012 02:31 AM
மனதில் பதிய வைக்கவேண்டிய கதை.குழந்தைகளுக்குக்கூடச் சொல்லிக்கொடுத்தால் நல்லது !////////////////

ஓகே அக்கா ...நான் நல்ல சமத்துப் பொன்னா கேட்டக் கொண்டினம் ....

Reply

எங்களைப் போன்ற குட்டிஸ் களுக்கு மிகவூம் பயனுள்ள பதிவு ...

பகிர்ந்தமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Reply

மணியம் கஃபேல இருக்கிறதெல்லாம் களவெடுத்த பொருட்களாம்.இது பூஸாரின்ர ரேடியோவில கேட்டது !//////////////ஆரது எண்ட குரு அண்டார்ட்டிக்க போன நேரம் பார்த்து அவ்வவை பார்த்து என்னனாமோ கதைப்பது ....

எண்ட குரு தான் அந்த ரேடியோ காரர்களுக்கே சொல்லி கொடுத்தினம் ...
இண்டுப் பாருங்கோல் நேரத்தை அவைகள் குருவிடம் இருந்து கற்றுக் கொண்டு விட்டு இண்டு புஷ் ரேடியோவில் கேட்டவை எண்டுக் கதைக்கினம் ...இது தான் கலிகாலமோ

Reply

//நல்ல நீதிக்கதையை செம நக்களுடன் சொல்லி இருக்கிறீர்கள்.//
என்ன பன்ன சார் காலம் போற போக்குக்கு நாமளும் இப்படிப் போனாத்தான் பயப்புள்ளயள் கேக்குறானுகள்...ஹி..ஹி..ஹி

Reply

//சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் படித்த எஃபெக்டைக் கொடுத்தது சிறுகதை//

அடி ஆத்தி சிறுகதையே ஆக்கிப் புட்டீங்களா.....விடமாட்டாங்க போலிருக்க......

Reply

!//////////////ஆரது எண்ட குரு அண்டார்ட்டிக்க போன நேரம் பார்த்து அவ்வவை பார்த்து என்னனாமோ கதைப்பது ....
## ஏதோ நாங்க குரு களவடுத்தது என்னுதான் சொன்னோன் ஆனா நீங்க குருவே மாத்திப்போட்டீங்களே...அவ்வ்வ்வ் ..அந்தாட்டிக்காவுக்கு போன குரு என்ன ஆனாரோ...

Reply

//எங்களைப் போன்ற குட்டிஸ் களுக்கு மிகவூம் பயனுள்ள பதிவு ...

பகிர்ந்தமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்//
சொல்லவே இல்ல.... மிக்க நன்றி

Reply

தங்கள் பதிவு தங்கப் பதிவு

Reply

//தங்கள் பதிவு தங்கப் பதிவு//

மிக்க நன்றி சார்....உங்கள் வரவு எனக்கு அவசியமான ஒன்றாகும்...

Reply

இப்படியாக சொல்லி செல்கிற கதைகள் நம்மில் ஏராளமாகவே நிலவுகிறது,யதார்த்தங்களை மீறி சென்று விடாத நம் வாழ்வியல் நடை முறைகளும் கதையை ஒத்ததாக/நன்றி வணக்கம்.

Reply

நன்றி சார் உங்கள் வருகை தொடரட்டும்//

Reply

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Reply

Post a Comment