Looking For Anything Specific?

ads header

பாம்புக்கும் தவளைக்கும் கல்யாணம்

மீண்டும் ஒரு முறை  சந்திப்பதில் மிக்க சந்தோசம்..கிடைத்த சொற்ப நேரத்தில் மனதில் தோன்றிய கிறுக்கல்களினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.



உண்மையில் எனக்கு கவிதை வராது.எதையாவது எழுதுவேன் சிலர் கவிதை நன்றாக உள்ளது என்பர்.இன்னும் சிலரோ இது என்னது..? என்பர்.இன்னும் கொஞ்ச பேர் கட்டுரை நன்றாக உள்ளது என்பர். உண்மையில் நான் எழுதுவது என்ன என்று எனக்கு சொல்லிதாருங்கள்..

சின்னதாக ஒரு வேண்டுகோள்...கடைசியாக நான் பதிவிட்ட முதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்...அய்யோ  
பதிவினை தவறுதலாக அழித்துவிட்டேன் மீட்பதற்கு வழியிருந்தால் சொல்லுங்கள்...

தொலைத்து விடுவர்...

மனிதனுக்கு மனிதன்
முகத்தினில் சிரிப்பினை வரவைத்து
சந்தோச நோக்கில் பழகும் போதும்...
இதயத்தின் கொடூரம்
மனதினில் பொறாமையின் கசிவு
அவர்களின் ஆன்மா கசப்பாக இருக்கும்
இறக்கும் வரை இது இருக்கும்
இறக்கும் வரை இது இருக்கும்
இப் போட்டியினில்
ஒன்றுமறியா சிறுவர்களும் கூட...

இறைவனின் படைப்பினில்
வடக்கை பாருங்கள்
கிழக்கிடம் வெளிச்சம் கேட்கவில்லை
தெற்கினை பாருங்கள்
மேற்கிடம் இருளினை கேட்கவில்லை
அந்த அனைத்தின் இதயத்திலும்
உண்மை உள்ளது
இறைவன் மிக அருகினில்
எமக்கு மிக மிக அருகினில்
விரைவில் அவன்பால்
திரும்பவுள்ளோம்

எதற்கு இந்த வேஷம்.
பாம்புக்கும் தவளைக்கும் கல்யாணமாம்
நாளிதழில்  பரபரப்பு
கானொளிகளும் சாட்சியம்
எவ்வளவு ஒற்றுமை 
மழை தேடி கழுதைக்கு  துனை தேடும் மனிதா
மழழையுடன் துனை தேடுபவளுக்கு
துனை தற மறுப்பது புதுமை

 அறிவுக்கு ஆணிவேர் அமைத்தவள் அன்னை
ஆழமரமாய் ஆயிரம் விழுதுகளுடன் நீ
அன்னைக்கு ஆறுதல் தர உன் வீட்டு கொல்லை
உன்னை பெற்றெடுக்க அவள் சுமந்த வலிக்கு
இது தான் நன்றி கடனோ


மனிதர்கள் எல்லோரும் இப்படித்தானோ
நன்பன் என்றாலும்  
எதிரி என்றாலும்
சமமாகவே பழகுகின்றனர்  
மனதினில் குரோதத்துடன்
அற்ப உலகினில்
எதற்கிந்த வஞ்சகம்

யார் இவர்கள்
தோல்களில் பைகளுடனும்
கைகளில் தட்டுக்களுடனும் வீதிகளில்
உணவுக்காக அலைபவர்களா?
அல்ல உணவுக்காக அல்ல
உறவுக்காக அலைகின்றனர்
தொலைத்த பொருளை
தேடித்தான் பெற வேண்டும்
அலைகின்றனர்....
தொடர்ந்தும் அலைகின்றனர்....
இறுதி மூச்சு வரை அலைகின்றனர்
தொலைத்தை திரும்பப் பெறவே இல்லை 

முடியாது...
இவர்களுடன் வாழ முடியாது...
சேர முடியாது...நண்பர்களாய்
சேர்க்க முடியாது
சில வேளைகளில்...
தொலைத்து விடுவர்
என்னையும் தொலைத்து விடுவர்.


விரும்பவில்லை..
இவர்களுடன் வாழ விருப்பமில்லை
விரும்புகிறேன்...
இருளின் கைப்பொம்மை நிலவுடன்
புன்னகையுடன் வரும் மூன்றாம் பிறையுடன்
வயதறியா வளரும் மூங்கில்களுடன்
பசுமையின் வாரிசான பச்சை புற்களுடன்
கம்பீர தொனியில் சப்தமிடும் நீரோடைகளுடன்
அமைதியான மலைகளுடன்
இவற்றின் நட்பை விரும்புகிறேன்
இவற்றின் உறவை விரும்புகிறேன் 
அவைகள் பற்றிய நல்லெண்ணத்தில்
அவற்றின் மனதில் வெறுப்பு இல்லை
பிறப்பில் இருந்தே அவற்றின் ஆன்மா
புனிதமானது.
ஒரு போதும் அவைகள்
என்னை தொலைத்து விடாது... 


Post a Comment

3 Comments

  1. kavithai arumai !
    padangal valu serkkirathu vaazhthukkal!

    ReplyDelete
  2. கவிதையில் நல்ல கருத்து.கொஞ்சம் நீண்டுவிட்டது.சொல்ல நினைப்பதை அப்படியே சொல்வதும் நல்லது !

    ReplyDelete