இணையதளம் ஆரம்பிக்க ஆசையாயிருக்கு உதவி பண்ணுங்கப்பா

ப்ளாக் தொடர்பாக எந்த வித அடிப்படை அறிவும் இல்லாத நான் எவ்வாறு எனக்கென்று ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன் என்பதனை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்படுகின்றேன்.


பாடசாலையில் படிக்கும் போது  புதிய நோட்டு புக் வாங்குவேன் அதில் ஈமெயில் மற்றும் இணையத்தள முகவரிகள் கேட்டிருக்கும் அதில் ஏதோ என்னுடைய மனதிற்கு தோன்றிய முகவரிகளை எழுதுவேன்.சில வேளைகளில் ஈமெயில் முகவரியை www எனவும் ஆரம்பிப்பேன்.

அப்பவிருந்தே எனக்கென ஒரு இணையத்தளம் உருவாக்க வேண்டும் அதன் முகவரியை என்னுடைய பாடசாலை நோட்டுக்களிலும் அதேபோன்று வருட ஆரம்பத்தில் கைகளில் கிடைக்கும் டயரிகளில் எழுதவேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவேன்.

அப்பருவங்களில்  எனக்கு வெறுமனே இனையத்தளம் என்பது செய்திகளுக்காகத்தான் இருக்கின்றன என்பது மட்டும் தெரியும். அதிலும் தமிழ் செய்திகளுக்காக இணையத்தளம் இருக்கின்றது என்று கொஞ்சமும் தெரியாது.அதுவே தெரியாது எனும் போது ப்ளாக்கர் என்ற ஒன்று பற்றி சொல்லவா வேணும்.

பாடசாலை படிப்பை முடித்தவருடமே ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்ததனால் பின் வந்த காலங்களில் இந்த சொந்த இணையத்தள சிந்தனை படிப்படியாக குறைந்து விட்டது. ஆனாலும் அலுவலக தேவைகளுக்காகவும் எனது சொந்த தேவைக்காகவும் (படம் பார்த்தல் தான் எனது சொந்த தேவை ) கணனி ஒன்றினை வாங்கி இணைய இணைப்பினையும் பெற்றுக் கொண்டேன்

மட்டுப்படுத்திய தேவைகளுக்காக மட்டுமே இனையத்தினை பாவித்தேன் காரணம் இணைய பாவணைக்காக அதிகமாக தேவைப்படும் பணத்தினால் தான்.இந்த சந்தர்ப்பங்களில் தான் தமிழ் செய்தி இணையத்தளத்தின் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டேன். அது என்ன இணையத்தளம் என்பதினை பிறகு சொல்கிறேன். இவ்வாறு மெல்ல மெல்ல எனது இணையத்தள அறிவினை வளர்த்துக் கொண்டேன்

நிறுத்துப்பா உன் மொக்கை அறிமுகத்தை....

ஓ கே மெட்டருக்கு வருவோம்....

எனது அண்ணன் எனக்கு  சகல வசதிகளுடன் கூடிய ஒரு மொபைல் போன் வாங்கித்தந்தார். அதன் மூலமாகவே நான் முதன் முதலாக முகநூலினை (பேஸ் புக்) பாவிக்க தொடங்கினேன். இவ்வாறு சில வாரங்கள்.இல்ல மாதங்கள் போயிருக்கலாம்....

ஒரு நாள் முகநூலினை பாவிக்கும் போது ப்ளாக்கர் தொடர்பான வீடியோ ஒன்று "இலவசமாக உங்களுக்கென்று இனையத்தளம் உருவாக்க" எனும் தலைப்பில் காணப்பட்டது. என்னையறியாமலேஅந்த வீடியோவை பார்ப்பதற்கு என் மனம் துள்ளியது.

பத்து நிமிட வீடியோ மனசக் கல்லாக்கி கொண்டு அந்த வீடியோவை டவுன்லோட் பண்னினன்...இவன் என்னத்துக்குடா மனசக்கல்லாக்கனும் என்னு உங்களுக்கு சிந்திக்க தோனுதா...ஐயோ அத டவுன்லோட் பன்னுறத்துக்கு  மொபைல்ல ஒரு தொகை வெட்டுவான் இல்ல அதுதான்.

அத டவுன்லோட் பண்ணி அந்த வீடியோவைப் பின்பற்றித்தான் இன்னைக்கு நான் எனக்கென ஒரு ப்ளாக் வச்சிருக்குறன்.அந்த வீடியோ யாருடையது என்பது பற்றி பின்னாடி ஒரு பதிவே எழுதுகிறேன்.

இந்த ப்ளாக்குக்கு ஏன் சிட்டுகுருவி என்று பெயர் வச்சிருக்குறன் என்றால்
அட இதுல ஒரு பெரிய விசயமும் இல்லப்பா ...ப்ளாக்கர் கணக்கினை ஆரம்பிக்கும் போது ப்ளாக்கினுடைய தலைப்பு கேட்கப்பட்டிருந்தது.அப்போது என்னுடைய ஞாபகத்துக்கு சிட்டுகுருவி முத்தம் கொடுத்து என்றபாடல் ஞாபகத்துக்கு வந்தது. உடனே சிட்டுகுருவி என்னு வச்சிட்டன்.

இதற்கு முதல் யாராவது இந்த பெயருடன் ப்ளாக் வச்சிருக்குறார்களா என்று எனக்கு இன்றுவரை தெரியாது.அப்படி யாரவது வச்சிருந்தால்....நான் என்ன பன்ன...ஒன்னும் பண்ண முடியாதே...

என்னுடைய இந்த இணைய அறிமுகத்துக்கு வித்திட்ட ஒரு சிலர் இருக்குறார்கள்.அதாவது, பதிவுகள் தொடர்பான டிப்ஸ் தந்துதவியவர்கள்,தமிழில் எழுதுவதற்கு ஆலோசானை தந்தவர்கள்,பதிவுகளி பிரபலப்படுத்த வழி அமைத்து தந்தவர்கள் என பலர் உள்ளனர்.அவர்கள் பற்றியும் அவர்களுக்கு நான் வழங்கவிருக்கும் பட்டங்கள் பற்றியும் விரைவில் பதிவிட இருக்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல் நான் முதலில் ப்ளாகர் தொடர்பாக படித்த இணையத்தளமும் இருக்கின்றது. அது பற்றியும் கூறவுள்ளேன்.பதிவு மொக்கையா இருக்கு என்னு நெனக்கிறன் சரி ஏசிட்டு போங்க.....

9 கருத்துரைகள்

சிட்டு குருவி ரொம்ப உயரத்தில் பறக்கணும்னு வேண்டிக்கிறேன்

Reply

anupavam !
pakirungal ungalukko-
matrvangakukko mokkaiyaa
theriyalaam- yaarukkaavayhu
saathikka uthavalaam-
aathalaal nantraaka pakinthu kollungal
ungal anupavaththai!

Reply

இங்கப் பார்ரா நம்ம மாதிரியே

Reply

உங்கள் நல்ல சிந்தனைக்கு நன்றி

Reply

நம்ம மாதிரியே என்பதின் பொருள்....தானே

Reply

நல்ல அனுபவ பகிர்வு!
சொன்னா நம்ப மாட்டீங்க என்னுடைய தளத்தை இதுவரை கணினியில் பார்த்ததே இல்லை. எழுதுறது பதிவிடுறது எல்லாமே Nokia 2700 உபயத்திலதான்.

Reply

நன்றி சகோ விரைவில் கணனியில் பார்ப்பீர்கள்....

Reply

நன்றி நண்பரே என் அனுபவம் போலவே இருக்கிறது.

Reply

Post a Comment