விழிப்பு


இந்த வருடத்தின் முதல் பதிவாக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன். நீண்ட கால இடைவெளியில் பல அனுவங்கள் சிக்கல்கள் அனைத்தையும் அனுபவித்த நான் அவற்றின் சாரம்சங்களை உங்களுடன் விரைவில் பகிரவிருக்கின்றேன்.

அதன் ஆரம்பமாகவும் வருட முதல் பதிவாகவும் சஞ்சிகை ஒன்றில் படித்த எனக்கு பிடித்த ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


விழிப்பு


மூன்றிலிரண்டு பகுதி இரவு கடந்து விட்டது
தூங்கு என் மகவே
எனது உள்ளங்கையில் தலை வைத்துக் கொள்
எனது தோல்களில் படுத்துக் கொள்
நான் தூங்கக் கத்திராதே
நான் விழித்திருக்க வேண்டும்
நான் தூங்க முடியாது

நீ படுத்தவுடன் தூங்கிப் போவாய்
இயற்கை கடின முகம் கொண்டது
அதன் மூச்சு கடினமானது

காற்றின் சப்தம்
மரங்களின் இரைச்சல்
மேகங்களின் உறுமல்
மழைத் தூறல்

கடவுளே -
உன்னை எழுப்பிவிடும் என்று நான் பயப்படுகிறேன்
கண்ணே உனது கனவுச் சங்கிலியின்
சின்ன இழைகளை அறுத்துவிடுமென...
தூங்கு என் மகவே
எனது உள்ளங்கையில் தலை வைத்துக் கொள்
எனது தோல்களில் படுத்துக் கொள்
நான் தூங்கக் கத்திராதே

உன்னைப் பாதுகாக்க
நான் தூங்காதிருக்க வேண்டும்
நான் துங்க முடியாது


2002 ஆம் வருடம் வெளியான
வானம் சஞ்சிகையில்
இடம்பெற்ற அப்துல்லா பௌசு வின் கவிதை   

2 கருத்துரைகள்

படம் பார்த்தவுடன் லேசான வலி கூடியது ,அருமையான பகிர்வு .

Reply

நன்றி நன்றி....@சசி

Reply

Post a Comment