பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை

பாலஸ்தீன நாட்டு விடுதலைப் போராளிப் பெண் ஒருவரின் கதை இது. இவரின் பெயர் ரீம் அல் ரியாஸி. 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். காஸா நகரத்தைச் சேர்ந்தவர். ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சின்னக் குழந்தைகள் இருவரின் அம்மா.

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இவரது தற்கொலைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டன்ர்.

பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த 08 ஆவது பெண் போராளி இவர்.

ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த இரண்டாவது தாய் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

ஹமாஸ் இயக்கத்தில் பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகளில் அநேகர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.

இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சிய வேட்கையாக இருந்து வந்தது.

பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப் போராளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

- கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை தந்து உள்ளார். நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது - இவ்வாறு அடிக்கடிச் சொல்லிக் கொண்டார்.

தாக்குதல் தினத்தன்று காலையில் இவர் இரண்டு கிலோ குண்டை அணிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை நோக்கிச் சென்றார். காஸாவில் இருந்து இக்கட்டிடத்துக்கு வந்துதான் பாலஸ்தீனர்கள் கைத்தொழில் வலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இங்கு ஒவ்வொரு நாளும் திரள்வார்கள். சோதனைச் சாவடியில் சோதனைகள் செய்யப்பட்ட பிற்பாடே கைத்தொழில் வலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவர் இஸ்ரேலிய இராணுவத்தை நோக்கி முன் நகர்ந்தார். எச்சரிக்கை ஒலி எழுப்பியது சோதனையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினரின் கருவி . இவர் சமயோசிதமாக செயல்பட்டார். முடவரைப் போல் நடித்தார்.

காலில் பொருத்தப்பட்டு இருக்கின்ற உலோகத் தகடுகள் காரணமாகவே கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது என இராணுவத்தினருக்கு சொன்னார்.

முழுமையாக இவரை சோதனை செய்ய வேண்டும் என்று இராணுவத்தினர் முடிவெடுத்தனர். வேறு ஒரு பகுதிக்கு இவரை கொண்டு சென்றனர். இப்பகுதியில் இராணுவத்தினர் சிலரும், பொலிஸாரும் பாலஸ்தீனர்களின் பைகளை சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.

பெண் ஒருவர் வந்து சோதிப்பார் என்றும் அது வரை காத்திருக்க வேண்டும் என்றும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. உடலில் பொருத்தி வைத்து இருந்த குண்டை இவர் தகுந்த தருணம் பார்த்து வெடிக்க வைத்தார்.

இவரது இத்தாக்குதலில் இஸ்ரேலிய சிப்பாய்கள் இருவர், பொலிஸ் ஒருவர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டமையுடன் இஸ்ரேலியர்கள் ஏழு பேரும், பாலஸ்தீனியர்கள் நான்கு பேரும் காயம் அடைந்தனர்.
Post a Comment