இவள் இல்லாட்டி இன்னொருவள்

நீண்ட இடைவெளிக்குப் பின் இப் பதிவின் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். exam கு படிச்சிக் கொண்டு இருந்ததால பதிவிடுவதில் பெரிதாக அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை.

exam  கு படிச்சுக்க் கொண்டிருக்கும் போது என்னுடைய மனதில் உதித்த ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒலிம்பிக்கும் சில மர்ம விடயங்களும்.

லண்டன் மாநகரம் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தற்போது மும்முரமகாக ஆயத்தமாகி வருகிறது.இதில் மிக முக்கியமான அம்சமான ஒலிம்பிக் தீப்பந்தமும் அதைச் சுமந்த ஓட்டமும் 2012 மே 18 இல் இடம்பெற இருக்கிறது

சிட்டுக்குருவியின் வேண்டுகோள்

கொஞசம் போல என்னை மன்னித்துடுங்கப்பா... கிட்டதட்ட ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் சந்தோசமடைகிறேன். சின்ன சின்ன தடங்களால பதிவுகள் எழுதுவதற்கு??? நேரம் கிடைக்காமல் போய் விட்டது இனிமேல் தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

ஆதி வாசிகளுடன் ஒரு நாள்....

ஆதிவாசிகளின் தலைவருடன்


எழில் மிகு  நாடாம் இலங்கையின் உவா மாகாணத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் மகியங்கன. இதில் பெரும்பாலான பகுதிகள் காடு சார்ந்ததாக காணப்படுகின்றது.இங்குதான் இலங்கையின் ஆரம்ப  குடியேற்ற மனிதர்கள்  (ஆதிவாசிகள்) இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை கடந்த வராம் சிட்டுகுருவி குழுவினர் சென்று சந்தித்தனர்.

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை

பாலஸ்தீன நாட்டு விடுதலைப் போராளிப் பெண் ஒருவரின் கதை இது. இவரின் பெயர் ரீம் அல் ரியாஸி. 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். காஸா நகரத்தைச் சேர்ந்தவர். ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சின்னக் குழந்தைகள் இருவரின் அம்மா.

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இவரது தற்கொலைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டன்ர்.

பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த 08 ஆவது பெண் போராளி இவர்.

ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த இரண்டாவது தாய் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

ஹமாஸ் இயக்கத்தில் பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகளில் அநேகர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.

இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சிய வேட்கையாக இருந்து வந்தது.

பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப் போராளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

- கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை தந்து உள்ளார். நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது - இவ்வாறு அடிக்கடிச் சொல்லிக் கொண்டார்.

தாக்குதல் தினத்தன்று காலையில் இவர் இரண்டு கிலோ குண்டை அணிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை நோக்கிச் சென்றார். காஸாவில் இருந்து இக்கட்டிடத்துக்கு வந்துதான் பாலஸ்தீனர்கள் கைத்தொழில் வலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இங்கு ஒவ்வொரு நாளும் திரள்வார்கள். சோதனைச் சாவடியில் சோதனைகள் செய்யப்பட்ட பிற்பாடே கைத்தொழில் வலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவர் இஸ்ரேலிய இராணுவத்தை நோக்கி முன் நகர்ந்தார். எச்சரிக்கை ஒலி எழுப்பியது சோதனையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினரின் கருவி . இவர் சமயோசிதமாக செயல்பட்டார். முடவரைப் போல் நடித்தார்.

காலில் பொருத்தப்பட்டு இருக்கின்ற உலோகத் தகடுகள் காரணமாகவே கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது என இராணுவத்தினருக்கு சொன்னார்.

முழுமையாக இவரை சோதனை செய்ய வேண்டும் என்று இராணுவத்தினர் முடிவெடுத்தனர். வேறு ஒரு பகுதிக்கு இவரை கொண்டு சென்றனர். இப்பகுதியில் இராணுவத்தினர் சிலரும், பொலிஸாரும் பாலஸ்தீனர்களின் பைகளை சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.

பெண் ஒருவர் வந்து சோதிப்பார் என்றும் அது வரை காத்திருக்க வேண்டும் என்றும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. உடலில் பொருத்தி வைத்து இருந்த குண்டை இவர் தகுந்த தருணம் பார்த்து வெடிக்க வைத்தார்.

இவரது இத்தாக்குதலில் இஸ்ரேலிய சிப்பாய்கள் இருவர், பொலிஸ் ஒருவர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டமையுடன் இஸ்ரேலியர்கள் ஏழு பேரும், பாலஸ்தீனியர்கள் நான்கு பேரும் காயம் அடைந்தனர்.

என்னைப் பற்றி நானே சொன்ன பொய்கள்...

ரோட்டுல கிடக்குற சிறிய கல்லினால் மற்றவர்கள் துன்பப்படக் கூடாது என்று கல்லைத்தூக்கி ஓரமாகப் போட்டுச் செல்பவன் நான்........ எதுக்கு இவன் சம்பந்தமே இல்லாம இத சொல்லுறான் என்று யோசிக்கிறீங்களா...?அப்பிடியே யோசிச்சிட்டி இருங்க பக்கத்துல இருக்குறவங்க உங்களப் பார்த்து வேற மாதிரி பீல் பண்ணப் போறாங்க.... 

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசையிருக்கும் எனக்கும் தான் ஆசையிருக்கு ஏன்னா நானும் மனிசன் என்னு என் பிறண்டு ஒருத்தன் எப்பவோ சொன்னான். அப்படிப்பட்ட ஆசையில ஒன்னுதாங்க இந்த வலையுலக பிரவேசமும்.

அமைதி என்றால் ரொம்பப்பிடிக்கும் அந்த அமைதியில் கேட்கும் குழந்தையின் அழுகுரல் ரொம்ப ரொம்ப வெறிய கிளப்பும் உண்மைதாங்க குழந்தைகள் அழும் சத்தம் பிடிக்கவே பிடிக்காது.இப்போது பழக்கப்படுத்திக் கொண்டன் எப்பிடி என்னு பார்க்கிறீங்களா...? வீட்டுல அக்கா , அண்ணா குழந்தைகள் என ஒரு குட்டி பாராளுமன்றமே இருக்கு.

இப்ப அமைதிய விட குழந்தைகளை அழ வைப்பதே பொழுதுபோக்காகப் போச்சு.அவர்களை வேனுமென்றே அழவைத்து ரசிப்பது என்றால்....அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அடிக்கடி சின்ன சின்னதா கதைகள் நாடகங்கள் எழுதுவதும் நடிப்பதும் புத்தகங்கள் சஞ்சிகைகள் வெளியிடுவதும் வழக்கமாக இருக்கிறது.

யாரையும் எதிரி அல்லது கெட்டவன் என்னு பார்க்கமாட்டேன்.அவனிடத்தில் இருக்கிற நல்ல பழக்க வழக்கங்களை அவனுக்குத்தெரியாமலே கொப்பி பன்னிக்குவன்.

கவிதை எழுத ரொம்ப பிடிக்கும் ஆனால் எவ்வளவுதான் பீல் பன்னி யோசிச்சாலும் கவிதையே வராது.ஏதாவது வரும் அதனைக் கிறுக்குவேன் நிறையப் பேர் கேளிபன்னினாலும் ஒருத்தனாவது பாராட்ட வருவான் என காத்துக்கிடப்பேன்.ஏன்னா அவன் பாரட்டும் போது அவன நான் கலாய்க்கிறத்துக்குத்தான்.

படிக்கும் போதும் நிறைய நாடகங்கள் எழுதியும் நடிச்சும் இருக்கிறேன்.கணக்கு பாடம் எண்டா ஒரு மன்னும் புரியாது.இப்ப கூட அல்ஜீப்ரா பற்றி கதையக் கிளப்பினாலே...அந்த இடத்துக்கு ஒரு ஓ போட்டிட்டு போயிடுவன்.

ஊரப் பற்றி சொல்லனும்னா.... 
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில் நிறைந்த ஊர். பேரின சக்திகள் ஆட்டையப் போடப் பார்க்குறாங்க அந்த அளவுக்கு அழகானது.அது தான் பொத்துவில் எனும் சிற்றூர்.

விடுமுறை தினங்களில் உல்லாசப் பயணிகளின் வருகையால் நிறம்பிவழியும் எனது ஊரில் மேலைத்தேய நாட்டவர்கள் வாடிக்கையாக விடுதிகளில் தங்கியுள்ளது இலங்கைக்கான சுற்றுலாத்துறை வருமானத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது... 

கடல்சறுக்கல் விளையாட்டில் ஆசியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எனது ஊர் காணப்படுகிறது. உங்களுக்கும் கடல்ல விழுந்து சாகனும் என்னு தோனிச்சென்னா என் ஊர் பக்கம் வாங்க...


நிறைய கலைஞர்கள்,கல்விமான்களை உருவாக்கி வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் தத்துப் பிள்ளையாக கொடுத்துவிட்டு, தத்துக் கொண்டு போனவன் பிள்ளையை ஒரு நாளாவது கொண்டுவருவான் என வாயில விரல் வைத்துக் கொண்டு கதவோரமாக சாய்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயைப் போல் இருக்கிறது எனது ஊர்.போனவனுகளுக்கு தத்துத் தாய்தான் பெத்ததாயாய் மாறிவிட்டாள். இதுதான் என் ஊரின் நிலைப்பாடு

இன்னும் என்னப்பத்தி தெரிய வேனும்னா எங்க ஊரு போலீஸ் ஸ்டேசன்ல வந்து கேளுங்க.....இப்டி ஒருத்தன் ஊர்ல இருக்கானா என்றே தெரியாது என்னு சொல்லுவானுகள் ஏன்னா..........நான் ஒரு பிரச்சனைக்கும் (வம்புக்கும் ) போறது கிடையாது,......

என்னப்பத்தி நான் சொன்னது போதும் நீங்க என்னப்பத்தி என்ன சொல்லுறீங்க??? கீழ சொல்லிட்டு போங்க...


சகல தொடர்புகளுக்கும்...

என் பாசமிகு நண்பர்கள் என்னோடு கீழ்வரும் முறைகளில் தொடர்புகொள்ளலாம்.

மின்னஞ்சல் > byathma@gmail.com

பேஸ்புக் > https://www.facebook.com/moosa.imran

ட்விட்டர் > https://twitter.com/Imran_moosa


foxyform.com